Originally Posted by venkkiram
நேற்றைய ஒளிபரப்பில் ஐவர் குழு யுவனை சந்தித்தது இனிமை. அவரின் ஒலிக்கூடத்திலேயே பாடியது நன்றாக இருந்தது.
"ஆடிமாசம் காத்தடிக்க" என கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நச்சென்று ஆணி அடித்தாற்போல பாடி விட்ட பிரசன்னாவிற்கு பாராட்டுக்கள். பிரசன்னா தனது பலத்தை சரியான முன்னிறுத்தி இனி வரும் சுற்றுக்களில் பாடினால், மற்ற நால்வரையும் ஓரங்கட்டி விடலாம். ஏனெனில் பிரசன்னா போகும் பாதையில் போட்டியே கிடையாது..
இறுதிக்களம் நிச்சயம் அதிரடியாக இருக்கப் போகிறது என கணிக்கிறேன்.
ரவி, ரேணு, அஜீஸ் மற்றும் ரஞ்சனிக்கும் வாழ்த்துக்கள்! ஜமாயுங்கள்!