-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சிவந்த மண்
[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
'பேசும் படம்' ஜூலை 1969 இதழிலிருந்து அபூர்வ நிழற்படங்கள்
வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தச் சென்ற
"சிவந்த மண்" படக்குழுவினருக்கு வழியனுப்பு விழா
http://i1110.photobucket.com/albums/...GEDC5045-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5046-1.jpg
வெளிநாடுகளில் "சிவந்த மண்" படக்குழுவினர்
http://i1110.photobucket.com/albums/...GEDC5048-1.jpg
செழிக்கும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சிவந்த மண்
[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
"சிவந்த மண்" காவியத்திற்காக வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகள் பற்றி
அக்காவியத்தின் கதாநாயகனான நடிகர் திலகம் சிவாஜினோ தரும் ஐந்து பக்க பயண-படப்பிடிப்பு கட்டுரை
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஆகஸ்ட் 1969
முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...rite-Up1-1.jpg
இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...rite-Up2-1.jpg
மூன்றாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...rite-Up3-1.jpg
நான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...rite-Up4-1.jpg
ஐந்தாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...rite-Up5-1.jpg
செழிக்கும்...
பக்தியுடன்,
பம்மலாரனோ !
-
அன்பு பம்மலார் சார்,
http://i284.photobucket.com/albums/l...greatwork1.gif
சிவந்தமண்ணின் அடுத்த ஏவுகணையை ஏவி விட்டு இன்பத் தாக்குதல் நடத்தியுள்ளீர்கள். அபாரம்.
வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தச் சென்ற"சிவந்த மண்" படக்குழுவினருக்கு வழியனுப்பு விழா 'பேசும் படம்' அபூர்வ நிழற்படங்கள் அசத்துகின்றன. நம்ம தலைவர் படு ஸ்டைலாக காட்சியளிக்கிறார்.
"சிவந்த மண்" காவியத்திற்காக வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகள் பற்றி நடிகர் திலகம் தந்திருக்கும் ஐந்து பக்க பேசும்படம் இதழில் வந்த பயண-படப்பிடிப்புக் கட்டுரையை இடுகை செய்து நடிகர்திலகத்துடன் நேரிடையாக நாங்கள் அளவளாவியது போல மனம் மகிழச் செய்து விட்டீர்கள். படு கேஷூவலான பேட்டி.
சுமைதாங்கி படத்தில் திரு.ஜெமினி அவர்கள் சுமைதாங்கியாய் தாங்கிய கதாபாத்திரத்தை நினைவில் வைத்து சமயம் பார்த்து தலைவர் கோபுவை விமரிசித்தது அருமை.
இவ்வளவு பிரம்மாண்டமான படம் எடுத்தவர்கள் கையில் காசில்லாமல் தவித்திருக்கிறார்கள். அதையும் நடிகர்திலகம் நகைச்சுவை உணர்வுகளுடன் கூறியிருப்பது சூப்பர்.
சிகரெட் கேட்ட கோபுவுக்கு மனமே இல்லாமல் தான் வைத்திருந்த 'ஸ்டாக்'கிலிருந்து கர்ணனாய் சிகரெட் அளித்தது வயிறு குலுங்க வைத்தது.
மிளகாய் பொடியும் ஊறுகாயும் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு இருகண்கள் என்பது சிவந்தமண் படப்பிடிப்பு குழுவினருக்கும் மட்டுமென்ன விதிவிலக்கா? அரிசிச் சோறு பற்றியும் அவர் ஒரு குழந்தையைப் போல சிலாகித்திருந்தது ரசிக்கும்படியாக இருந்தது.
மொத்தத்தில் அற்புதமான கட்டுரையை இடுகை செய்தமைக்கு அளவில்லா நன்றிகள்.
இது போன்ற ஏவுகணைத் தாக்குதல்களை நாங்கள் தினமும் ஏற்றுக் கொள்ளத் தயார். தங்கள் இன்பத் தாக்குதல்களுக்கு தேங்க்ஸ்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்புள்ள பம்மலார்,
'சிவந்த மண்' மேளா முடிந்து விட்டதோ என்று எண்ணியிருந்த வேளையில், இன்னும் இன்னும் அதிகமான அன்றைய ஏடுகளை அள்ளித்தந்து பரவசத்தில் ஆழ்த்தி வருகிறீர்கள். இன்றைக்கு நூற்றுக்கணக்கான படங்கள் வெளிநாடுகளில் சரவசாதாரணமாக படமாக்கப்பட்டு வரும் வேளையில், முதல் தமிழ்ப்படத்தை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க சித்ராலயா யூனிட்டார் எவ்வளவு கஷ்ட்டப்பட்டுள்ளனர் என்பதை நடிகர்திலகம் மிக சுவையாக எடுத்துரைத்துள்ளார். கட்டுரை முழுவதிலும் அவரது குறும்பு பளிச்சிடுகிறது. முரளிசார் முன்பு மணியன் பற்றிய பதிவில் சொன்னதைப்போல, மிகக்குறைவான அந்நியச்செலாவணி மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த காலம். ஏனென்றால் அப்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியும் குறைவு, என்.ஆர்.ஐ. வருமானங்களும் சுத்தமாகக்கிடையாது. (வளைகுடா நாடுகளிலும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் துவங்கியிராத நேரம்).
இப்போது படத்தைப்பார்க்கும்போது, ஸ்ரீதர் இன்னும் வேறுவிதமாக வெளிநாட்டுக்காட்சிகளைப் படமாக்கியிருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது. தமிழ் மக்கள் வெளிநாட்டுக்காட்சிகள் என்றால் வானளாவிய நவீனக்கட்டிடங்கள், மற்றும் நவீனக்காட்சிகளையும் காண விரும்புவர். ஆனால் ஸ்ரீதர் பெரும்பாலும் அந்நாடுகளிலுள்ள புராதனச்சின்னங்களையே அதிகம் கவர் பண்ணியிருப்பார். ஏரியில் 'பெடல்-போட்' ஓட்டும் காட்சி பெரும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் பனிமலைக்காட்சிகள் அருமையாக இருக்கும்.
சிவந்த மண் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரானதாக நடிகர்திலகம் சொல்லியிருக்கிறார். அப்படீன்னா தெலுங்கில் நடித்தது யார் யார்?. இந்தியில் நடித்த ராஜேந்திரகுமார், வகீதா ரெகமான் ஆகியோர் இப்போது இருக்கிறார்களா?.
அதிகமதிகம் சிவந்த மண் ஆவணப்பதிவுகளைத்தேடித் தேடியெடுத்து வந்து பறிமாறும் உங்கள் ஆர்வத்துக்கு மனமார்ந்த நன்றிகள். சிவந்த மண் குழுவினரை வழியனுப்பும் காட்சிகளின் தொகுப்பும் காணக்கிடைக்காத அரிய பொக்கிஷம். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
-
டியர் பம்மலார் சார்,
"சிவந்த மண்" திரைப்படத்திற்காக வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகள் பற்றி ntஅவர்களின் நேரடியான பயணக்கட்டுரையை பதிவேற்றி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். மிக்க நன்றி!!!
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
காங்கிரஸ் கட்சியில் நடிகர்திலகத்தின் ரசிகர்மன்றங்களின் பெரும் பங்களிப்பு பற்றி ஜூனியர் விகடன் இதழில் வந்த செய்தித்தொகுப்பு பக்கங்களை பதிவிட்டதற்கு மிக்க நன்றி.
காங்கிரஸில் நடிகர்திலகத்தின் ரசிகர்படையினரின் உழைப்பு எப்படி காங்கிரஸாரால் நாளாவட்டத்திலும் உதாசீனப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை ப்லமுறை பல பாகங்களில் ராகவேந்தர் சார், முரளி சார், சாரதா, சந்திரசேகர் மற்றும் பல நண்பர்களால் அலசப்பட்டு வந்துள்ளது. நானும் சிலமுறை சொல்லியிருக்கிறேன். இவற்றையெல்லாம் ஊர்ஜிதப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்த ஜூனியர் விகடன் கட்டுரை.
ராகவேந்தர் சார் எப்போதும் சொல்லி வருவது போல, நடிகர்திலகத்தையும் அவரது ரசிகர் படையையும் புறக்கணித்ததால் காங்கிரஸ் தற்போது தமிழ்நாட்டில் முகவரியை தொலைத்து விட்டு, தேர்தல் பிரச்சாரம் செய்யவும், கூட்டத்துக்கு கொடி கட்டவும், அவ்வப்போது கூட்டணி சேரும் திராவிடக் கட்சித்தொண்டர்களின் தயவை நம்பியிருக்கிறது.
மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸை உயிர்ப்பிக்க நடிகர்திலகத்தின் ரசிகர்களால் மட்டுமே முடியும். அதற்கு கட்சி அவர்கள் கையில் வரவேண்டும். இல்லையேல் வெறும் தலைவர்கள் எத்தனை பேர் வந்தாலும் தொண்டர் படையின்றி, உதிரிக்கட்சிகளில் ஒன்றாகவே காங்கிரஸும் தமிழகத்தில் மதிக்கப்படும்.
சரியான நேரத்தில் சரியான பதிவையிட்ட தங்களுக்கு நன்றிகள்.
-
அன்புள்ள பம்மலார் சார்,
வெற்றிகரமாக இரண்டாயிரமாவது பதிவை நெருங்கும் தங்களுக்கு எங்கள் அனைவரது வாழ்த்துக்கள். இந்த இரண்டாயிரம் பதிவுகள், எத்தனை ஆயிரம் அரிய விஷயங்களைத்தாங்கி வந்துள்ளன என்ற உண்மை பிரமிக்க வைக்கிறது. அவற்றில் நீங்கள் அளித்த பல்வேறு புள்ளிவிவரப்பதிவுகள், நடிகர்திலகத்தின் சாதனைகளைப்பறைசாற்றும் சாட்சிகளாய் நிற்கும் ஆவணங்கள், கிடைத்தற்கரிய தகவல் களஞ்சியங்கள், இதுவரை பார்த்திராத ஏடுகளின் தொகுப்புக்கள் என அனைத்துமே தங்கச் சுரங்கத்திலிருந்து வெளிவந்த தங்கக்கட்டிகள்.
இந்த இரண்டாயிரம் இன்னும் பல ஆயிரமாக பல்கிப்பெருகி, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இளைப்பாறும் ஆலமரமாய் விரிந்து பரந்து புகழ் பரப்ப வேண்டும் என்று இதயம் நிறைய வாழ்த்துகிறோம்.
-
அன்பு நண்பர்களே,
மறுபடியும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்களை இந்தத்திரியின் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
நம் அன்பு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பங்களிப்பை நாள்தோறும் விடாமல் செய்து வருகிறார்கள். திரு. பம்மலார் (இவர் தான் நமது திரியின் சூப்பர் ஸ்டார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை), திரு. ராகவேந்தர் மற்றும் திரு. வாசுதேவன் அவர்கள் எங்கெங்கோ உள்ள ஆவணங்களையும், கட்டுரைகளையும், பாடல் காட்சிகளையும், புகைப்படங்களையும் இடுகை செய்து எல்லோரையும் பரவசப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
திரு. முரளி அவர்களின் சில கட்டுரைகள் அவருடைய வழக்கமான சரளமான நடையில் சுவைபட இருந்தது.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் சாரதா மேடத்தின் இடுகைகள் பரவசப் படுத்துகின்றன.
திரு. சந்திரசேகர் சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல நல்ல காரியங்களை, தொடர்ந்து செய்து ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் இறுமாந்து கொள்ள வைக்கின்றார்.
திரு. கார்த்திக் அவர்களும் அவருடைய பங்களிப்பைத் தொடர்ந்து நல்கி வருகின்றார்.
மேலும், நமது மற்ற நண்பர்களும் தொடர்ந்து ஏதோ ஒரு சிறிய விஷயத்தையாவது எழுதுகிறார்கள்.
திரு. பம்மலார் அவர்கள் பதிவிட்ட "ஆலய மணி" படச் சாதனை விளம்பரங்கள் ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்துச் சென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. என் இதயத்திற்கு மிக நெருக்கமான முதல் பத்து படங்களில், "ஆலய மணி" தியாகு எப்போதும், ஒரு முக்கியமான இடத்தில் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்னும் போது, எனக்கு வார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே, ஆய்வுக்கட்டுரை வேறு எழுதி இருந்தேன். அந்த அளவிற்கு என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட கதா பாத்திரம் "தியாகு". நன்றி திரு. பம்மலார் அவர்களே. சிவந்த மண் பட சம்மந்தப் பட்ட ஆவணக் கட்டுரைகளும் நடிகர் திலகத்தின் பேட்டியும், வெளி நாடு செல்வதற்கு முன்னர், படக்குழுவினர் மற்றும் பிற கலைஞர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் மிக அருமை மற்றும் காணக்கிடைக்காத ஒன்று. இரண்டாயிரமாவது பதிவை நெருங்கிக் கொண்டிருக்கும் தங்களுக்கு முன் கூட்டியே வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
திரு. வாசுதேவன் அவர்களின் ஜூனியர் விகடன் இதழில் வெளி வந்த கட்டுரையும் மிக அருமை.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)
8. "அந்த நாள் ஞாபகம்"; படம்:- உயர்ந்த மனிதன் (1968); பாடல்:- வாலி; பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் மேஜர் சுந்தரராஜன் (வசன நடை); இசை:- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்; இயக்கம்:- கிருஷ்ணன்/பஞ்சு; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மேஜர் சுந்தரராஜன்.
இந்தப் பாடலை இயற்றியது வாலியா அல்லது கவியரசா என்றொரு குழப்பம் இருந்தது. அதைத் தீர்த்த டிக்ஷனரி திரு. முரளி அவர்களுக்கு முதற் கண் நன்றி தெரிவிக்கிறேன். இதற்கு முன் பதிவிட்ட "மாமா மாப்ளே" (பலே பாண்டியா படம்) பாடலில் நடிக வேளுக்குக் குரல் கொடுத்தது எம்.எஸ். ராஜு என்று கூறிய திரு. ராகவேந்தர் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இன்னும் எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும், ஒவ்வொரு தமிழனும், தன்னுடைய வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கும் போதும், கடந்த கால நினைவுகளை அசை போடுவது எந்த ஒரு ஊடகத்தில் விவாதிக்கப் பட்டாலும், மேற்கோள் காட்டப்பட்டாலும், மேற்கூறிய வரிகள் "அந்த நாள் ஞாபகம்" - உடனேயே ஒவ்வொருவராலும் எடுத்துரைக்கப்படும். ஒருவராலும் தப்பிக்க முடியாது. அந்த அளவுக்கு, காலத்தால் அழிக்க முடியாத வரிகள்.
இரு நண்பர்கள் - சமூகத்தில், அவர்கள் வேறு அந்தஸ்தில் இருந்தாலும், அடிப்படையில் நண்பர்கள். இதில், ஏழை டிரைவர் அந்த அளவுக்கு வாழ்க்கையில் அடிபடா விட்டாலும், பணக்காரன் மட்டும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அனுபவித்து விடுகிறான். அந்தப் பணக்காரன் பல வருடங்களுக்குப் பிறகு சிறு வயதில், அவனும் அவனது காதலியும் பழகிய ஊட்டிக்குச் செல்ல நேரும்போது (அந்தக் காதலியை ஒரு கோர தீ விபத்தில் இழந்து விடுகிறான் - அவனது பணக்காரத்தந்தை திட்டம் போட்டுச் செய்த கொலை - காரணம் ஏழை என்கிற அந்தஸ்து பேதம்!), தன்னை அறியாமல் அவனது கடந்த கால ஞாபகங்கள் அலை மோதுகிறது. அப்போது, அவன் அந்த நினைவுகளைக் கூறும்படியாக அமைகின்ற பாடல்.
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொருவரையும் சென்று சேரும் வரிகள். "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே; இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே; அது ஏன்? ஏன்? நண்பனே!" அவனது இந்த நாள் அனுபவங்கள் கசப்பாக உள்ளன என்பதை உடனே எடுத்துரைக்கும் வரிகள்!
முதல் சரணத்தில், பள்ளி வாழ்க்கையை இலேசான நகைச்சுவையுடன் எடுத்துரைக்கும் வரிகள் "உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்" அன்று போல் இன்று இந்த சமூகத்தில் பழக முடியவில்லையே எனும் ஏக்கம். அந்த மனிதனின் உண்மையான குணாதிசயத்தை இயம்பும் வரிகள்.
இரண்டாவது சரணம் இலேசான சோகம் - பள்ளிப்பருவம் முடிந்த பின்னர் நடந்த நிகழ்வுகள். கடமையும் வந்தது; கவலையும் வந்தது - என்ன ஒரு அனுபவபூர்வமான வரிகள். எல்லா வசதிகளும் எல்லா சொந்தங்களும் வந்த பின்பும் அமைதி மட்டும் இல்லை என்னும் கூற்று நிறைய பேருக்குப் பொருந்தும்.
மூன்றாவது சரணம் - பல நாட்கள் வானொலியில் வராமல் இருந்தது. இப்போதெல்லாம் வருகிறது. அந்த மனிதனின் கடந்த கால சோகம் தெறித்து விழும் வரிகள். "தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான்." தன் காதலியைக் காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்து நினைத்துத் துடிக்கும் அந்த மனிதனின் குமுறல்கள் வெடிக்கும் வரிகள். வாலி அவர்கள் எழுதிய அத்தனை பாடல்களிலும் இன்றளவும் அவர் பேர் சொல்லும் முதல் இரண்டு பாடல்களில் இது ஒன்று எனலாம்.
இப்போது பாடியவர். முதலில் நடிகர் திலகம் ஓட்டப் பந்தயம் வைத்து, ஓடி முடித்து, நின்று, மூச்சு வாங்கிக் கொண்டே பாடத் துவங்குவதாக ஆரம்பிக்கும் போது, அந்த மூச்சிரைப்பைக் கண் முன் நிறுத்த ஆரம்பிப்பவர், அந்தப் பாடலில் தெறிக்கும், அத்தனை உணர்வுகளையும், அற்புதமாக வடித்திருந்தார். மறுபடியும், நடிகர் திலகம் தான் பாடினார் என்கிற அளவுக்குப் பாடிய திரு. டி.எம்.எஸ்ஸைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
அடுத்தது இசை. கொஞ்சம் அசந்தாலும், வெறும் வசனமாகி விடக்கூடிய பாடல். இந்தப் பாடலின் தன்மையை அழகாகப் புரிந்து கொண்டு, நகைச்சுவை வரும்போது ஒரு இசை, சோகம் வரும்போது ஒரு இசை, மிடுக்கு வரும்போது ஒரு கம்பீர இசை என்று மிக லாகவமாக இசை அமைத்து, இடையிடையே, மேஜர் அவர்கள் பேசுவதைக் கொஞ்சம் கூட அந்த இசை பிசகா வண்ணம் அமைத்து, அவரையும் மிகச் சரியாக குரல் கொடுக்க வைத்து, இந்தப் பாடல் முழு வெற்றியடைய வைத்து விடுகிறார்.
அடுத்து இயக்கம். நண்பர்கள் ஊட்டிக்குச் செல்லுவதாகக் கதையமைத்து, உடனேயே, ஒரு பாடலையும் அமைத்து, பழைய நினைவுகளை அசை போடுவதாக வைத்து, அந்தப் படத்தின் சுவாரஸ்யம் மேலும் மெருகேற வழி வகுத்து, முழு வெற்றி அடைகிறார்கள் இயக்குனர் இரட்டையர்கள் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள். அப்போதெல்லாம், ஒரு படத்தின் இடைவேளைக்குப் பின் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தையும் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கச் செய்தன. ஆனால், இப்போதோ?
இப்போது நடிப்பு. இந்தப் பாடலைப் பொறுத்தவரையில் இயக்கமும் சற்றேறக்குறைய நடிகர் திலகம் தான் செய்தார் எனலாம் (இன்னும் இது போல் பட படங்கள்; காட்சிகள்; பாடல்கள் உண்டு என்றாலும்!). பல வருடங்களுக்கு முன்னர் ஒரு இதழில் வெளி வந்த கட்டுரையில் படித்தது. முதலில், இந்தப் பாடலை நடிகர் திலகமும் மற்றவர்களும் காரில் போய்க் கொண்டே பாடுவதாகத் தான் வைத்தார்களாம். நடிகர் திலகம் தான், "வேண்டாம் இந்தப் பாடல் சிறு வயது நினைவுகளை அசை போடுவதாக வருகிறது. சிறு வயது என்பதால், ஏதோ ஒரு விளையாட்டை விளையாடுவதாக வைத்தால் பொருத்தமாக இருக்கும். என்னைக் கேட்டால், ஓட்டப் பந்தயம் வைத்து, கடைசியில், மூச்சு வாங்கிக் கொண்டே பாடுவதாய் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்" என்று செட்டியாரிடம் சொல்ல, அவரும் தயங்காமல் ஒப்புக்கொண்டாராம்.
தனக்கேயுரிய ஸ்டைலில் ஓடத் துவங்கி, மூச்சு வாங்கிக் கையிலுள்ள தடியை ஒரு வித சுழற்று சுழற்றி அதை மேஜரின் மார்பில் வைத்து எடுக்கும் விதம் அற்புதம் என்றால்; முதல் சரணத்தில், புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே, பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே என்று சொல்லி சிரிக்கும் விதம் அதியற்புதம். நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் என்று சொல்லி வேகமாய் நடந்து அந்தப் பாடலின் டெம்போவை எகிறச்செய்யும் விதம்; உயர்ந்தவன் என்று சொல்லி தடியை வானுக்கு உயர்த்துபவர்; ஒரு வித ஸ்டைலுடன் தாழ்ந்தவன் என்னும் போது சிலிர்க்கும்!! (இந்த ஒரு விதத்தைப் பார்த்தால் தான் புரியும்!)
இரண்டாவது சரணம் - பாசமென்றும் - ஒரு வித ஸ்டைல்; நேசமென்றும் - வேறொன்று; வீடு என்றும் - இன்னும் ஓர் ஸ்டைல்; மனைவி என்றும் - பிய்த்து உதறுவார்; நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதி எங்கே என்று இலேசாக துயரத்தை வெளிப்படுத்துவார். உடனேயே, சமாளித்துக் கொண்டு வேகமாக அந்த நாள் ஞாபகம் என்று நடை போடத்துவங்கும் சரளம் பிரமாதமாக இருக்கும்.
மூன்றாவது சரணம் - பெரியவன், சின்னவன், நல்லவன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான பாவம், கடைசியில், கெட்டவன் என்னும்போது கையை ஒரு மாதிரி அசைப்பார் - மற்றொரு இலக்கணம். எண்ணமே சுமைகளாய் (வலது புருவத்தை தனக்கேயுரிய பாணியில் உயர்த்துவார்), இதயமே பாரமாய் - ஒரு மாதிரி. மறுபடியும், சோகம் - தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான், அழுகிறான் எனும்போது எப்படி அவர் முகத்தை சோகம் கவ்வுகிறது! மறுபடியும், சமாளித்து, பல்லவி, அந்த நாள் ஞாபகம் என்று கடைசியில், கைத்தடியை லாகவமாக சுழற்றியபடியே செல்லும்போது, மேஜர், சிவகுமார், பாரதி மட்டுமல்லாமல், பார்க்கும் அனைவரும் அல்லவா வியந்து மெய் மறக்கிறார்கள்!!
இந்தப் பாடலில், மேஜர் அவர்களும், நடிகர் திலகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து, இந்தப் பாடலுக்குப் பெருமை சேர்த்திருப்பார் என்பதை மறக்க முடியாது. எனக்குத் தெரிந்து, இப்படத்திற்குப் பின்னர் தான், இவர்களின் காம்பினேஷன் தொடர்ந்து வரத் துவங்கியது.
இந்தப் பாடலும், ஒரு சிறப்பான பாடலுக்குரிய அனைத்து அம்சங்களிலும் முதல் இடத்தைப் பிடித்து, பாடல் வெளி வந்த நாள் முதல், இன்று வரை, அனைவராலும் ஒரே மாதிரி ரசிக்கப் படுவதால், இந்தக் கட்டுரையில், அதாவது நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்களில் இடம் பெறுகிறது.
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
-
டியர் பார்த்தசாரதி சார்,
தாங்கள் பதிவிட்டுள்ள 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' வரிசையில் இடம் பெற்றுள்ள "அந்த நாள் ஞாபகம்" பாடல் பற்றிய பதிவு பட்டையைக் கிளப்புகிறது. அருமையான சரளமான நடை. என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
பொதுவாகவே ஒரு புகழ் பெற்ற பாடலைப் பற்றி ஆய்வு செய்து எழுதும் போது அப்பாடலில் நடித்தவர் பெயரை ஒரு மரியதைக்காகக் குறிப்பிட்டு வைத்து அப்பாடலைப் பற்றி முழுமையாக அலசுவார்கள். ஆனால் நம் நடிகர் திலகம் விஷயத்தில் அவர் நடிப்பை முழுமையாக ஆய்வு செய்தால் தான் பாடலையே ஆய்வு செய்து ரசித்து எழுத முடியும்.அதை மிகப் பிரமாதமாக நீங்கள் கையாண்டுள்ள விதம் அருமை. மிகச் சிறப்பாக அவருடைய அசைவுகளை வர்ணித்துள்ளீர்கள். (பாடல் வரிகளையும் தான்) படிக்க மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி!
அன்பு பம்மலார் அவர்களை இத்திரியின் 'சூப்பர் ஸ்டார்' என்று புகழ்ந்துரைத்திருப்பது நூற்றுக்கு இருநூறு சதவீதம் உண்மை. அதற்காக தங்களுக்கு என் அன்பு நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
-
2000 தங்கப் பதிவுகள் என்ற அசுர சாதனைக்கு சொந்தமாகப் போகும் திரியின் பொக்கிஷப் பெட்டகமே! அன்புப் பம்மலார் அவர்களே! தங்கள் அற்புத சேவைகளுக்கு அடியேனின் மனம் நிரம்பிய வாழ்த்துக்கள்.
http://www.louisville.com/files/u402...20animated.gif http://teacherweb.com/CT/JFK_Milford...s_clapping.gif
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்பு கார்த்திக் சார்,
தங்கள் அன்பு பாராட்டுக்கு மனமுவந்த நன்றிகள்.
தாங்கள் காங்கிரஸை உயிர்ப்பிக்க நடிகர்திலகத்தின் ரசிகர்களால் மட்டுமே முடியும் என்று கூறியிருப்பது நம் அனைவரது எண்ணங்களின் பிரதிபலிப்பாகும். நாமும் ஊதுகிற சங்கை பல காலமாக ஊதிக் கொண்டுதான் இருக்கிறோம். எல்லாம் ......காதில் ஊதிய சங்காகத்தான் ஆகிக் கொண்டிருக்கிறது.. அப்பட்டமான இந்த உண்மைகள் காங்கிரசுக்குத் தெரிந்தும் அதனை அலட்சியப் படுத்தி அதல பாதாளத்தில் விழத் துடிக்கிறதே! அதன் தலைஎழுத்தை இனி யாராலும் மாற்ற முடியாது... நம்மவர் பாவங்களை மூட்டை மூட்டையாய் சுமந்து கொண்ட பெருமைக்குரிய காங்கிரஸ் இனி இங்கு காலாவதிதான்.
http://jamactors.com/jamactors/jamac...endrakumar.jpg
தாங்கள் கேட்டிருந்த ராஜேந்திரகுமார் புற்று நோயால் பாதிக்கப் பட்டு July 29, 1999 அன்று மும்பையில் காலமாகி விட்டார். 1957-இல் வெளிவந்த அற்புதக் காவியப் படமான "மதர் இந்தியா" ஹிந்திப் படத்தில்(தமிழில் நம்மவரின்" புண்ணிய பூமி") நர்கீஸின் மூத்த மகனாக நடித்து மிகவும் புகழ் பெற்றார். ராஜ்கபூரின் 'சங்கம்' அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.1969-இல் 'பத்மஸ்ரீ' அவார்டும் வாங்கியுள்ளார். 1981- இல் வெளிவந்த 'லவ்ஸ்டோரி' என்ற தன் சொந்தப் படத்தையும் இயக்கியிருந்தார்.
http://www.surfindia.com/celebrities...eda-rehman.jpg
வஹீதா ரஹ்மான் நல்லபடியாக இருக்கிறார். 1965-இல் வெளிவந்த தேவ்ஆனந்த் அவர்களின் காலத்தால் அழிக்க முடியாத காவியமான 'கைடு' திரைப்படம் மூலம் மிகுந்த புகழ் பெற்றவர். இவரும் 'பத்மஸ்ரீ' க்கு சொந்தக்காரர். 2009-இல் கூட 'டெல்லி 6' என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சிவந்த மண்
[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
அட்டைப்படம் : பேசும் படம் : அக்டோபர் 1969
http://i1110.photobucket.com/albums/...GEDC5054-1.jpg
செழிக்கும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சிவந்த மண்
[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
"சிவந்த மண்" காவியத்தை உருவாக்க ஏற்பட்ட செலவு (approx.)
வரலாற்று ஆவணம் : மதி ஒளி ("சிவந்த மண்" சிறப்பு மலர்) : 1.11.1969
http://i1110.photobucket.com/albums/...GEDC5090-1.jpg
செழிக்கும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சிவந்த மண்
[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்
சாதனைப் பொன்னேடுகள் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
முரசொலி : 31.10.1969
http://i1110.photobucket.com/albums/...GEDC5091-1.jpg
முரசொலி : 8.11.1969
http://i1110.photobucket.com/albums/...GEDC3804-1.jpg
அமுதசுரபி : தீபாவளி மலர் இணைப்பிதழ் : 1969
http://i1110.photobucket.com/albums/...GEDC5092-1.jpg
செழிக்கும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
பார்த்தசாரதி சார்,
உங்களின் ஆய்வுக்கட்டுரையான "அந்த நாள் ஞாபகம்" மிகவும் அருமையானதொரு ஆழமான சிந்தனைக் கட்டுரை.அதில் ஒவ்வொரு வரிக்கும் ஒரு முகபாவத்தைக் கையாண்டிருப்பார் நடிகர் திலகம் அவர்கள்!!!!
மிக நன்று.
Anm
-
Dear Vasudevan sir,
A very very Belated Happy Birthday!!!!!! As I was busy with my work and was in Chennai in last week could not view our thread and that is the reason for the delay.
Saluting for all the continued good work.
ANM
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சிவந்த மண்
[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்
ஆவணப் பொக்கிஷம் : சாதனைப் பொன்னேடு
50வது நாள் விளம்பரம் [நாகாஸ்திரம்] : தினத்தந்தி : 28.12.1969
http://i1110.photobucket.com/albums/...GEDC5093-1.jpg
எனது இரண்டாயிரமாவது பதிவான இந்தப்பதிவை மிகமிக அரியதொரு ஆவணப்பொக்கிஷமான "சிவந்த மண்" திரைக்காவியத்தின் 50வது நாள் விளம்பரத்தை இடுகை செய்யும் பதிவாக பதிவிட்டது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் !
செழிக்கும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சிவந்த மண்
[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்
ஆவணப் பொக்கிஷம் : சாதனைப் பொன்னேடு
100வது நாள் விளம்பரம் [பிரம்மாஸ்திரம்] : தினத்தந்தி : 16.2.1970
http://i1110.photobucket.com/albums/...GEDC5094-1.jpg
குறிப்பு:
நமது தாய்த்திருநாட்டில் வசூல் சாதனைகளை உருவாக்கி இமாலய வெற்றி பெற்ற "சிவந்த மண்", வெளிநாடான இலங்கையிலும், 'கெப்பிடல்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி பெரும் வெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது.
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் mr_karthik,
தங்களின் பாராட்டுக்கு நன்றி !
நடிகர் திலகம் எழுதியுள்ள "சிவந்த மண்" வெளிநாட்டுப் படப்பிடிப்புக் கட்டுரையில், அக்கட்டுரை முழுவதுமே, அவரது குறும்பு பளிச்சிடுவதாக எழுதியிருந்தீர்கள், நூறு சதம் உண்மை. அவர் மிகுந்த Sense of Humour கொண்டவர் என்பதனை இக்கட்டுரை மூலம் மீண்டும் ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.
தாங்கள் கேட்டவுடன், ராஜேந்திரகுமார் மற்றும் வஹீதா ரஹ்மான் குறித்த அரிய தகவல்களை அள்ளி வழங்கிய ரசிகமாமணிக்கு நமது நன்றிகள் ! நடிகை வஹீதா ரஹ்மான அவர்களுக்கு இந்த ஆண்டான 2011, பிறந்தநாள் பவளவிழா ஆண்டாகும். அவருக்கு நமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !
தெலுங்கு "சிவந்த மண்" பற்றி கூடிய விரைவில் அறிந்து பதில் தருகிறேன்.
2000 பதிவுகளை இந்த எளியேன் நெருங்கியதற்காக பாராட்டுத் தெரிவித்து தாங்கள் வெளியிட்டிருந்த பதிவு என்னை உணர்ச்சிபிழம்பாக்கிவிட்டது. தங்களைப் போன்றவர்கள் அளிக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் எப்பொழுதும் இருக்கும்போது எனக்கு என்ன குறை இருக்கப் போகிறது ! தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் !
பாசத்துடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
"சிவந்த மண்" வெளிநாடுகளில் படமாக்கப்பட்டதை, மிகவும் அனுபவித்து ரசித்து, சிறிதும் சுவை குன்றாமல், கட்டுரையாக வழங்கியிருந்தார் நமது நடிகர் திலகம். அதனைத் தாங்களும் மிகமிக ரசித்து வாசித்திருக்கிறீர்கள் என்பது தங்களது பதில் பதிவிலிருந்து புலனாகிறது. தங்களது பாராட்டுக்கு எனது பாசமான நன்றி !
2000 பதிவுகளை அடியேன் அளித்துள்ளதை பாராட்டும் விதமாக, தாங்கள் பதிவிட்டுள்ள, வாழ்த்துக்களுடன் கூடிய ஜொலிஜொலிக்கும் பாராட்டுப்பதிவைப் பார்க்கும் போதெல்லாம் எனது கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தங்களுக்கு எனது உணர்வுபூர்வமான, உயிர்ப்பான நன்றிகள் !
பாசப்பெருக்கில்,
பம்மலார்.
-
டியர் ஜேயார் சார்,
தங்கள் மகிழ்ச்சி என் பாக்கியம் ! பாராட்டுக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் பார்த்தசாரதி சார்,
திறனாய்வு சூப்பர் ஸ்டாரான தங்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றது எனது பேறு. தங்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !
தங்களின் 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' கலக்கல் நெடுந்தொடரில், லேட்டஸ்ட் பதிவாக வெளிவந்துள்ள "உயர்ந்த மனிதன்" காவியப்பாடலான 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடலின் அலசல் அசத்தலோ அசத்தல் ! நடிகர் திலகத்தின் மறைவுக்குப்பின் நடந்த ஒரு அஞ்சலிக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த திரு.குமரி அனந்தன் பேசும் போது இந்தப்பாடல்காட்சியைக் குறிப்பிட்டு ஒரு வாசகம் சொன்னார். அது ஒரு வாசகமானாலும் திருவாசகம் போல் என் மனதில் நிலை பெற்றுவிட்டது. அப்படி அவர் என்னதான் சொன்னார் என்றுதானே கேட்கிறீர்கள்?, 'அந்த நாள் ஞாபகம்' பாடலைக் குறிப்பிட்டு. "இப்பாடலில் நடிகர்திலகத்தின் உடம்பில் ஓடுகின்ற நரம்பும் நடிக்கும், அவர் கையில் ஆடுகின்ற பிரம்பும் நடிக்கும்" என்றாரே பார்க்கலாம், அரங்கமே அதிர்ந்து ஆர்ப்பரித்தது.
மணியான பாடலைப் பற்றி மணிமணியாக தகவல்களை வழங்கி ஆய்வு செய்தமைக்காக தங்களுக்கு எனது பொன்னான பாராட்டுக்களுடன் கூடிய கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
-
பார்த்தசாரதி சார் அருமையாக ஆய்வு செய்து இடுகை செய்த உயர்ந்தமனிதனின் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் இப்போது நம் எல்லோருடைய நெஞ்சிலும் ஞாபகமாக நிழலாடிக் கொண்டிருப்பதால் சில அற்புதமான காட்சிகளோடு அந்தக் காவியப் பாடலில் நடிகர் திலகத்தை கண்டு பூரிக்கலாம்.
http://www.youtube.com/watch?feature...&v=WrivDNF8CoA
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்பு ஆனந்த் அவர்களே!
தங்களுடைய அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றிகள். உங்களின் உளப்பூர்வமான பாராட்டுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகள் வரவில்லை. மீண்டும் என்னுடைய அன்பான நன்றிகள். தங்கள் அன்பு உள்ளத்திற்காக இதோ ஓர் அன்புப் பரிசு.
http://i1087.photobucket.com/albums/...g?t=1322276572
அன்புடன்,
வாசுதேவன்.
-
பதிவு 2000 பம்மலார் சார்,
என்னுடைய பாசமான பாராட்டுக்கள். 2000 20000 ஆக உயரவும்,தாங்கள் மென்மேலும் உயர்ந்து மேன்மை அடையவும் சிவாஜினோ துணையிருப்பாராக.
'சிவந்த மண்' பேசும் படம் அட்டைப்படம் விழிகள் சிவக்க சிவக்க பார்க்க வைக்கிறது.
'சிவந்த மண்' காவியத்தை உருவாக்க ஏற்பட்ட செலவு பற்றிய மதி ஒளி செய்தி ஒரு புதுமையான வரலாறு.
'சிவந்த மண்' சாதனைப் பொன்னேடுகள் சரித்திரப் பதிவுகள்.
'சிவந்த மண்' 50வது நாள் விளம்பரம் (தங்களது 2000-மாவது மைல்கல் நாகாஸ்திர பொற்பதிவு) 'நச்'. அந்த விளம்பரத்தில் எங்கள் கடலூர் 'ரமேஷ்' திரையரங்கு இடம் பெற்றிருப்பது காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளச் செய்கிறது.
'சிவந்த மண்' 100வது நாள் விளம்பரம் [பிரம்மாஸ்திரம்] பிரம்மாண்டம்.
நம் 'சிவந்த மண்' இலங்கை மண்ணிலும் கலந்து அந்த மண்ணையும் செழிப்படையச் செய்தது பெருமிதம்.
அரிய ஆவணங்கள் இவை எல்லாவற்றையும் அள்ளித் தந்த தங்கள் பணி தன்னிகரில்லாதது.
அனைத்திற்கும் ஆயிரமாயிரம் நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
Hearty congrats pammalar sir for the landmark achieved. We expect more pammalars to keep our nt fame and glory alive. Really you are great.
-
-
அன்புள்ள பார்த்தசாரதி சார்,
சிறிது இடைவெளிக்குப்பின் உங்கள் 'காவியப்பாடல்கள்' சீரியலில் நீங்கள் ஆய்வு செய்திருக்கும் 'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் விவரிப்பு மிக மிக அருமை. என்ன ஒரு முழுமையான ஆய்வு. (அதை உடனே ரெஃபர் செய்துகொள்ளும் வண்ணம் பாடல் காட்சியைப்பதிப்பித்த வாசுதேவருக்கு நன்றி).
நிச்சயம் இரு ஒரு சாகாவரம் பெற்ற பாடல்தான். ஏனென்றால் இப்பாடலில் பங்கேற்ற பலரே இப்பாடலைப்பற்றி விரிவாகப்பேசியிருக்கிறார்கள்.
மெல்லிசை மன்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்பாடல் உருவான விதம் பற்றியும் அது நடிகர்திலகத்தின் சீரிய நடிப்பால் சிறப்பாக அமைந்தது பற்றியும் சொல்லியிருக்கிறார்.
அதுபோல கவிஞர் வாலியும், நடிகர்திலகத்துக்கு தான் எழுதிய பாடல்களைப்பற்றிப்பேசும்போது, மறக்காமல் இப்பாடலைப் பற்றிச்சொல்வார். சமீபத்தில் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வாலிப வாலி' நிகழ்ச்சியில்கூட இப்பாடலைப்பற்றி மிகவும் விரிவாக சொன்னார்.
அதுபோல டி.எஸ்.சௌந்தர்ராஜன் அவர்களும், தான் பாடிய மிகவும் சிறந்த பாடல்களைப்பற்றிச்சொல்லும்போது 'அந்தநாள்' பாடலை மறக்காமல் சொல்வார். மூச்சிரைக்கப்பாடுவது தத்ரூபமாக இருக்க வேண்டுமென்பதற்காக பாடல் துவங்குமுன் ரெக்கார்டிங் தியேட்டரைச்சுற்றி நான்கு ரவுண்ட் ஓடி வந்து, மெல்லிசை மன்னரிடம் பாடலைத்துவங்கும்படி சைகை செய்தாராம்.
சிறப்பு தேன்கிண்ணம் வழங்கும் விருந்தினர்களும் சரி, பாடல்களைத் தொகுத்து வழங்கும் காம்பியர்களும் சரி, இப்பாடலை குறிப்பாக நடிகர்திலகத்தின் அபார பெர்ஃபாமன்ஸை ரொம்பவே விரிவாக, உயர்வாக சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதை இன்னும் ஒரு படி உயர்த்தும் வண்ணம் நீங்களும் மிக அருமையாக ஆய்வு செய்துள்ளீர்கள்.
நிச்சயம் இது காலங்களைக் கடந்த சாதனைப் பாடல்தான். அருமையாக திறனாய்வு செய்த தங்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.
-
அன்புள்ள வாசுதேவன் அவர்களே,
ராஜேந்திர குமார் பற்றியும், வகீதா ரகுமான் பற்றியும் நான் கேட்டதும் விரிவாக (அவர்களின் புகைப்படத்துடன்) விடையளித்தமைக்கு மிக்க நன்றி. ராஜேந்திர குமார் அவர்கள், நடிகர்திலகத்துக்கு முன்பே இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி இப்போதுதான் தெரிகிறது. வகீதா நலமுடன் இருக்கிறார் என்ற விவரம் ஆறுதல் அளிக்கிறது. (அவருக்கு இது பவள விழா ஆண்டு என்று நினைவூட்டிய பம்மலாருக்கு நன்றி. இறைவன் நீண்ட ஆயுளைக்கொடுக்கட்டும்).
(அவ்விருவரையும் பற்றி நீங்களும் பம்மலாரும் அளித்திருக்கும் விவரங்கள், நடிகர்திலகத்தின் ரசிகர்கள், நடிகர்திலகத்தின் படங்களைப்பற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலக வரலாற்றையே கைக்குள் வைத்திருப்பவர்கள் என்று நிரூபிக்கிறது).
'அந்தநாள் ஞாபகம்' வீடியோ இணைப்புக்கும் மிக்க நன்றி.
-
அன்புள்ள பம்மலார் சார்,
அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக வந்துகொண்டிருக்கும் 'சிவந்த மண்' ஆவணப்பதிவுகளுக்கு மிக்க நன்றி.
50-வது நாள் விளம்பரம் என்ற நாகாஸ்திரத்தையும், 100-வது நாள் விளம்பரப்பதிவு என்ற பிரம்மாஸ்திரத்தையும் பார்த்ததும் முதல் வேலையாக, இந்தச் சாதனைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் பற்றி குறை சொல்லியிருந்த இரண்டு வலைப்பூக்களைத் தேடிப்பிடித்து அவற்றின் பின்னூட்டத்தில், நமது திரியின் இந்தப்பக்கத்துக்கான இணைப்பைக்கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்த்தேன். இன்னும் எங்கெங்கே எந்தெந்த பிரகஸ்பதிகள் உளறி வைத்திருக்கிறார்கள் என்று தேட வேண்டும்.
இரண்டு விளம்பரங்களிலும் அனைத்துத் திரையரங்கங்களின் பெயர்களையும் இடம்பெறச்செய்த 'சித்ராலயா' நிறுவனத்துக்கு முதல் நன்றி.
சென்னையில் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி திரையரங்குகளில் திரையிடாததன்மூலம் மேலும் சில வாய்களுக்கு ஆப்பு வைத்த, சித்ராலயா மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இரண்டாவது நன்றி.
தங்களின் மகத்தான ஆதரவின் மூலம், இக்காவியத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய தமிழக மக்களுக்கு ஏராளமான நன்றிகள்.
அவற்றை இங்கே பதிப்பித்து நடிகர்திலகத்தின் ரசிகர்கள் கைகளில் ஏ.கே.47 களைக்கொடுத்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
அக்டோபர் 1969 'பேசும்படம்' அட்டைப்படம் சூப்பரோ சூப்பர். இந்த இதழ் என்னிடம் வெகுநாட்கள் இருந்தது. இதில் ஒரு விசேஷம். முதல் நான்கு பக்கங்களையும் புரட்டப்புரட்ட நடிகர்திலகத்தின் பட விளம்பரங்கலாகவே வரும். அட்டைப்படத்தில் சிவந்த மண். அட்டையைப்புரட்டியதும் முதல் பக்கத்தில் 'இப்பொழுது நடைபெறுகிறது நிறைகுடம்' விளம்பரம், அதைப்புரட்டியதும் அடுத்த தாளில் 'இப்பொழுது நடைபெறுகிறது தெய்வ மகன்' விளம்பரம், அடுத்த பக்கத்தில் வெற்றிநடைபோடுகிறது 'திருடன்' விளம்பரம். எந்தக்கதாநாயகனுக்கும் இந்த தைரியம் இருக்காதுங்க.
அடுத்த மாதம் (நவம்பர் 1969) பேசும் படம் அட்டைப்படமும் 'சிவந்த மண்' தான் இடம்பெற்றிருந்தது. பின் அட்டையில் இன்னொரு தீபாவளி வெளியீடான 'செல்லப்பெண்' இடம்பெற்றிருக்க, 'போட்டிப்படம்' உள்பக்கத்தில் கருப்புவெள்ளை விளம்பரமாக இடம்பெற்றிருந்தது.
தாங்கள் இப்போது வெளியிட்டுள்ள 'ரிசர்வ் செய்யப்படுகிறது' விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கும் சிம்மாசனத்தில் பம்மலார் என்று பொறிக்கப்பட்டிருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மாமன்னர் நீங்கள் என்பதை பொருத்தமாகச் சொல்கிறது. (அதுபோல முன்பு நீங்கள் தந்த சிவந்த மண் Helecopter படப்பிடிப்பு பற்றிய பொம்மை கவரேஜில், நடிகர்திலகத்தின் இதயப்பகுதியில் 'பம்மலார்' என்று பொறித்திருந்தீர்கள். நடிகர்திலகத்தின் இதயத்தில் இடம்பெறப் பொருத்தமானவர் நீங்கள் என்பதை சொல்லாமல் சொல்லியது மிகவும் சந்தோஷமாக இருந்தது).
மதிஒளியில் வெளியான 'சிவந்த மண்' செலவினம் பற்றிய ஏட்டில் ஒரு அதிசயம் பார்த்தீர்களா?. 1972-க்குப்பின் 'சிலருக்கு' சூட்டப்பட்ட பட்டத்தை 1969-லேயே மதிஒளி, நமது நடிகர்திலகத்துக்கு சூட்டிவிட்டது. நடிகர்திலகம் மறைந்திருக்கும் இடம் பற்றிய செட்டைப்பற்றிக் குறிப்பிடும் வரி "புரட்சித்தலைவன் வீடு".
-
-
ரசிகவேந்தர் ராகவேந்திரன் சார்,
தங்களது வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுப்பதிவுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது செழுமையான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் ராமஜெயம் சார்,
தங்களின் புகழுரைக்கு எனது பணிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
Dear kumareshanprabhu Sir,
Thank You So Much !
Regards,
Pammalar.
-
Dear Chandrashekaran Sir,
Thanks a lot !
Regards,
Pammalar.
-
டியர் mr_karthik,
தங்களின் தூய உள்ளத்திலிருந்து தாங்கள் அளிக்கும் தொடர்ச்சியான பாராட்டுக்களுக்கு எனது தூய்மையான நன்றிகள் !
நடிகர் திலகத்தின் பாக்ஸ்-ஆபீஸ் சாதனைகளை இருட்டடிப்பு செய்யும் நபர்களின் வலைப்பூக்களையெல்லாம் தேடிப் பிடித்து, அங்கே நமது ஆவணப் பொக்கிஷங்களை அளித்து, அவர்கள் அனைவரையும் உண்மையை உணர்ந்து கொள்ளச் செய்யும், தங்களது அளப்பரிய சேவை மிகுந்த பாராட்டுக்குரிய ஒன்று. தங்களுக்கு நமது திரியின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் !
தாங்கள் குறிப்பிட்டு எழுதிய 'பேசும் படம்' நவம்பர் 1969 இதழின் "சிவந்த மண்" அட்டைப்பட விளம்பரம் ஆவணப்பொக்கிஷமாக அடுத்த பதிவில் !
அன்புடன்,
பம்மலார்.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சிவந்த மண்
[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
அட்டைப்படம் : பேசும் படம் : நவம்பர் 1969
http://i1110.photobucket.com/albums/...GEDC5108-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.