நம் அண்ணலை ஈன்றெடுத்த அன்னையை வணங்கிப் போற்றுவோம். நினைவுப் பதிவுகளை, வரலாற்று ஆவணங்களை வெளியிட்ட திரு.பம்மலார், கிரஹப்பிரவேசம் காட்சி இணைப்பை அளித்த திரு.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.
Printable View
நம் அண்ணலை ஈன்றெடுத்த அன்னையை வணங்கிப் போற்றுவோம். நினைவுப் பதிவுகளை, வரலாற்று ஆவணங்களை வெளியிட்ட திரு.பம்மலார், கிரஹப்பிரவேசம் காட்சி இணைப்பை அளித்த திரு.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களின் உளப்பூர்வமான பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Dear pammalar Vasudevan, Raghavendra Sir
NANDRI
டியர் பம்மலார்,
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
அன்னை ராஜாமணி அம்மையாரின் நினைவுநாள் பதிவுகள் சோகத்தை ஏற்படுத்தின. நடிகர்திலகத்தின் மனத்திலிருந்து பீரிட்டெழும் அந்த தாய்ப்பாசம் கண்களில் கண்ணீர் சுரக்க வைத்தது. குறிப்பாக 'இந்த கண்கொள்ளாக் காட்சியை இனி காண்போமா?' என்ற வாசகத்துடன் கூடிய புகைப்படம் மனதை நெகிழ வைத்தது. நடிகர்திலகத்தின் கையில் இருக்கும் குழந்தை பேத்தி சத்யவதி என்று நினைக்கிறேன். (சத்யவதியை நினைக்கும்போதெல்லாம் 'கிளையை வளர்த்து.......' என்ற சொற்றொடர்தான் நினைவுக்கு வரும்).
அந்நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் வகிக்கும் திரு சின்ன அண்ணாமலையின் மரணமும் அதிர்ச்சியான ஒன்று. மணிவிழாவின்போது 60 குடம் தண்ணீர் ஊற்றியதில் மயக்கமடைந்து உயிர் துறந்தார். மணிவிழாவின் துவக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நடிகர் திலகத்துக்கு, அவர் வீடு வந்து சேருமுன்பே, சின்ன அண்ணாமலையின் மரணச்செய்தி காத்திருந்தது.
திரு. சின்ன அண்ணாமலையின் நினைவுநாளும் நினைவுகூறப்பட வேண்டிய ஒன்று.
டியர் வாசுதேவன்,
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
'கிரகப்பிரவேசம்' படத்தில் இடம்பெற்ற காட்சியை சரியான தருணத்தில், சரியான இடத்தில் இடம்பெறச்செய்துள்ளீர்கள். நடிகர்திலகம் தாய்ப்பாசத்தோடு பேசும் இடம் மனதை நெகிழ வைக்கிறது என்பதில் ஐயமில்லை. பதிவுக்கு மிக்க நன்றி.
திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களே,
மறைந்த நடிகர் திரு. சசிகுமார் பற்றிய நினைவுகளை மிகச் சரியாக அந்த நினைவு நாளில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள். கூடவே, திரு. வாசுதேவன் அவர்களும், பாரத விலாஸ் திரைக்காவியத்தில் இடம் பெற்ற பொருத்தமான காட்சியைப் பதிவிட்டு கண்களைக் குளமாக்கி விட்டார்.
சசிகுமாரும் அவரது துணைவியாரும் மறைந்த அந்த தினம் மிகச் சரியாக நினைவில் இருக்கிறது. அந்தக் காலத்தில் சசிகுமார் புகழ் ஏணியில் விரைவாக ஏறிக் கொண்டிருந்த நேரம். நடிகர் திலகத்தோடு தன்னையும் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டு, அவரது போர் வாட்களில் ஒருவராக மேடைகளில் முழங்கி கொண்டிருந்த நேரம் - எதிர்பாராத விதமாக அகால மரணம் அடைந்த போது - துணைவியாரோடு, அவர்களுடைய குழந்தைகளுக்கு பத்து வயது கூட நிரம்பியிருக்கவில்லை. பெரிய அளவில் வந்திருக்க வேண்டிய கலைஞர்.
இந்த மரணமும் 1975 அக்டோபர் முதல் தேதியிலிருந்து துவங்கி நடந்த நிகழ்வுகளும் (கர்மவீரரின் மறைவிலிருந்து துவங்கி...). விதி என்ற ஒன்றை நம்பாதவனும் நம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது. திரு. முரளி அவர்கள் மிகச் சரியாக நினைவு கூர்ந்திருந்தார்.
நடிகர் திலகத்தின் அன்னையாரின் நினைவு தினத்தை ஒட்டி தாங்கள் பதிவிட்ட அத்தனை படங்களும், கண்களை மறுபடியும் குளமாக்குகின்றன. தினத் தந்தியில், சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் தொடராக வந்த வரலாற்றுச் சுவடுகளில் இந்த வருடத்தைப் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. 1972-ஆம் வருடம் நடிகர் திலகத்தின் நடிப்புலக வாழ்க்கையில் சிகரத்தில் இருந்த நேரம். அந்த நேரம் பார்த்து, அவர் உயிரையே வைத்திருந்த அவரது அன்னையார் காலமானார். மிகச் சரியாக, கிரஹப்ரவேசம் திரைக்காவியத்தில் வரும் காட்சியைப் பதிவிட்டமைக்கு திரு. வாசுதேவன் அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
சாரதா மேடம் அவர்களே,
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்த உங்களிடம் மீண்டும் நிறைய கருத்துகளையும், ஆய்வுகளையும், உங்களுக்கேயுரிய நடையில் - எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
திரு. சசிகுமார் மற்றும் சின்ன அண்ணாமலை குறித்த பதிவுகள் அருமை.
குறிப்பாக சின்ன அண்ணாமலை அவர்களை ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் தமிழ் அறிஞர். 80 களின் இறுதியில் குமுதம் இதழின் இலவச இணைப்பாக “ சொன்னால் நம்ப மாட்டீர்கள் “ என்ற அவரது புத்தகத்தின் சில பகுதிகளை வெளியிட்டார்கள் . உண்மையான ஆனால் எளிதில் நம்ப முடியாத பல தகவல்களை சுவைபட எழுதியிருப்பார்.
அந்த நேரத்தில்தான் வயதில் மூத்த சில நண்பர்கள் மூலம் அவர் அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவராக இருந்தவர் என்ற தகவலையும், தர்மராஜா படத் தயாரிப்பாளர், காமராஜரின் தொண்டர், தன்னுடைய பிறந்த நாள் அன்றே ( மணிவிழா அன்று) மறைந்து விட்டார் என்ற தகவல்களையும் அறிந்தேன்.
அது மட்டுமல்ல 1971ம் ஆண்டு திராவிடர் கழகத்தவர் ஈ.வே.ரா அவர்கள் தலைமையில் சேலத்தில் இந்து கடவுளர்களின் உருவப்படங்களை அவமரியாதை செய்த செயலை சின்ன அண்ணாமலை வன்மையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார் . அன்றைய அரசு இந்த செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஒரு கண்டனச் சுவரொட்டி அச்சிட்டு வந்ததை அறிந்த அன்றைய அரசு, தேர்தல் நேரத்தில் இந்த சுவரொட்டி வருவதை விரும்பாமல் “மத விரோதத்தை தூண்டுகிறது” என்ற காரணம் காட்டி சுவரொட்டியை அச்சகத்தில் இருந்து பறிமுதல் செய்தபோது நீதி மன்றம் வரை சென்று ஆணித்தரமான வாதங்களுடன் போராடி சுவரொட்டிகளை திரும்பப் பெற்றார் என்பதையும் அறிந்தேன் .
சின்ன அண்ணாமலை, குமரி அனந்தன் போன்ற தமிழ் அறிஞர்கள் எல்லாம் சிவாஜி மன்றத் தலைவர்களாக இருந்தார்கள் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு
அவரையும், நடிகர் திலகத்தின் தீவிரத் தொண்டராக இருந்து மறைந்த சசிகுமார் அவர்களையும் நினைவு கூர்ந்த அனைவருக்கும் நன்றி.
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் இடுகை செய்த "கிரஹப்பிரவேசம்" வீடியோ காட்சி, தெய்வமகனை ஈன்றெடுத்த தெய்வத்திற்கு செலுத்தப்பட்ட சிறந்த அஞ்சலி.
டியர் சந்திரசேகரன் சார், கனிவான நன்றி !
டியர் குமரேசன்பிரபு சார், மிக்க நன்றி !
சகோதரி சாரதா,
மனமார்ந்த நன்றி ! ஜூன் மாதத்தில் வரும் தியாகி சின்ன அண்ணாமலை அவர்களின் பிறந்த-நினைவு தினங்கள் [இரண்டும் அவருக்கு ஒன்றே] அவசியம் போற்றப்படும்.
டியர் பார்த்தசாரதி சார். நெஞ்சார்ந்த நன்றி !
டியர் மகேஷ் சார், நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
welcome sarada madam hub throwing great guns day by day. homage to our NT's mother smt rajamani ammal by vasudevan is a touching ones. great lady who has given NADIGAR THILAGAM to the world well remembered.
அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி
வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 1.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4408.jpg
வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 15.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
[இக்கட்டுரையை வடித்த 'அப்பச்சி' என்பவர் திரு.சின்ன அண்ணாமலை அவர்களேதான்]
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4406.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4407.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4409.jpg
24.8.2011, கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்புக்கு நன்றி! அன்னை ராஜாமணி அம்மையாரின் 39வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தாங்கள் இடுகை செய்திருந்த பதிவுகள் அனைத்தும் நெஞ்சை பாரமாக்கின. நடிப்புலக வேந்தர் தன் தாயாரின் பூத உடல் அருகே துயரமே உருவாய் நிற்பதைக் கண்டதும் பேச நா எழவில்லை. இதயத்தின் மீது இமயமலையைத் தூக்கி வைத்தாற்போன்று அப்படி பாரமாய் வலிக்கிறது. அன்னைக்கு சிறப்பான அஞ்சலி செய்த தங்களுக்கு எங்கள் கண்ணீரால் நன்றி சொல்கிறோம்.
மரியாதைக்குரிய சாரதா மேடம் அவர்களே!
தங்களுக்கு எனது பணிவான நன்றி!
திரு.பார்த்தசாரதி சார் அவர்களே, தங்களுக்கு என் கனிவான நன்றி!
திரு.சுப்ரமணியன் ராமஜெயம் சார், தங்களுக்கு என் மனங் கனிந்த நன்றி!
திரு.குமரேசன்பிரபு சார், தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
திரு. மகேஷ் சார்,
மறைந்த திரு.சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றிய அரிய தகவல்களை அறிய வைத்ததற்கு மிகவும் நன்றி! (திரு.சின்ன அண்ணாமலை அவர்கள் நடிகர்திலகத்தை வைத்து மனிதனும் தெய்வமாகலாம், ஜெனரல் சக்கரவர்த்தி மற்றும் தர்ம ராஜா போன்ற படங்களை 'விஜயவேல் பிலிம்ஸ்' என்ற பட பேனரில் தயாரித்திருந்தார்கள்).
சிதறுண்டு கிடந்த ஆயிரக் கணக்கான சிவாஜி ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து, ஒழுங்குபடுத்தி, திரு.முரளி சார் சொன்னது போல எண்ணிக்கையிலும் செயல்திறனிலும் யாருமே நெருங்க முடியாத நிலையை உருவாக்கிய பெருமை திரு.சின்ன அண்ணாமலை அவர்களையே சாரும். நன்றி சார்!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : செப்டம்பர் 1959
அவதார புருஷனாக அவதரித்த தனது அருந்தவப்புதல்வன் குறித்து
அன்னையார் எழுதிய அருமையான-அரிய கட்டுரை
http://i1094.photobucket.com/albums/.../GEDC4410a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4412a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4414a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4415a.jpg
24.8.2011, கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களது பதிவைப் படித்ததும் எனக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது. மிக்க நன்றி !
பக்தியுடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
24.8.1961 அன்று ஜனித்த மருதநாட்டு வீரனுக்கு பொன்விழா நிறைவு
24.8.2011 அன்று 51வது ஜெயந்தி
வீரப் பொக்கிஷங்கள்
காவிய விளம்பரம் : கலைத்தோட்டம் : 15.6.1959
[15.6.1959 தேதியிட்ட 'கலைத்தோட்டம்' பருவ இதழ் சற்றேறக்குறைய அப்பொழுது ஒரு மாதத்திற்குமுன் வெளியாகி விண்ணை முட்டும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவிய சிறப்பு மலராக மலர்ந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.]
http://i1094.photobucket.com/albums/...EDC4416a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 24.8.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4417a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் 72- ஆவது வெற்றிப் படைப்பு "மருத நாட்டு வீரன்"
கேரளாவில் அமோக வெற்றி பெற்ற காவியம். 'ஸ்ரீ கணேஷ் பிரசாத் மூவீஸ்' தயாரிப்பில் 24.8.1961 அன்று வெளியான இப்படத்திற்கு இயக்குனர் திரு.T.R.ரகுநாத் அவர்கள். பல வெற்றிப் படங்களை உருவாக்கியவர்.
ஜமுனா, கண்ணாம்பா, சந்தியா, P.S.வீரப்பா, ஸ்ரீராம், A.கருணாநிதி ஆகியோர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்திருந்தனர்.
இசை திரு.SV. வெங்கடராமன் அவர்கள். நடிகர் திலகத்தின் அறிவாளி, இரும்புத் திரை (நெஞ்சில் குடியிருக்கும்... அன்பருக்கு நானிருக்கும்...) ,கண்கள், கோடீஸ்வரன் மற்றும் மனோகரா போன்ற பல படங்களுக்கு இசை அமைத்தவர்.
பாடல்களை இயற்றிவர்கள் திரு.மருதகாசி மற்றும் 'கவியரசர்' கண்ணதாசன்.
சமாதானமே தேவை....
புது இன்பம் ஒன்று..உருவாகி இன்று...
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா?...
விழியலை மேலே..செம்மீன் போலே...
அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது ....
போன்ற அற்புதமான பாடல்கள் இந்தத் திரைக் காவியத்தில்..
இது தவிர "எங்கே செல்கின்றாய்?" என்ற P.B.ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலில் சோகமான பின்னணியில் ஒலிக்கும் பாடல், நடிகர் திலகத்தின் இந்தப் படத்தில் ஒலிப்பது புதுமை.
"கேரள மக்கள் அமோக ஆதரவு அளித்த படம்" என்று நடிகர் திலகம் அவர்கள் தன் சொந்தக் கருத்தாக இப்படத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.
மருத நாட்டு வீரனாக, சீன கைரேகை நிபுணராக, சமையல்காரராக,வேதியராக இப்படி பல மாறுபட்ட வேடங்களில் தோன்றி நடிகர் திலகம் அசத்திய படம்.
'சமாதானமே தேவை'
கட்சி பேதங்கள் எதற்காக...
பல கலகமும் பகையும் எதற்காக...
ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்...
ஒரே கட்சியாய் இருந்திடுவோம்...
ஆம்..நடிகர் திலகத்தின் கட்சியாய் இருந்திடுவோம்.
இதோ நடிகர் திலகம் அவர்களின் குண நலன்களை விளக்கும் ஒரு ஒலி-ஒளிக் காட்சி....
http://www.youtube.com/watch?v=nDQW9...yer_detailpage
சமாதானத்தை விரும்பிய அந்த வெள்ளை மனம் கொண்ட மாசில்லா மாணிக்கம் நமக்கு அறிவுறித்திய "சமாதானமே தேவை" பாடல் ஒலி-ஒளிக் காட்சி வடிவில்...
http://www.youtube.com/watch?v=OPRjgxrPoDg&feature=player_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
51வது ஜெயந்தியை முன்னிட்டு தாங்கள் பதிவிட்டுள்ள "மருதநாட்டு வீரன்" குறித்த அருமையான தகவல்கள், அபாரமான ஒலி-ஒளிக்காட்சிகள், அட்ட்காசமான நிழற்படங்கள் எல்லாம் ஒரே அசத்தல் !
வீரத்திலகத்தின் வீரத்தளபதி நீங்கள் !!
பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !!!
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
தூக்கு தூக்கி
[26.8.1954 - 26.8.2011] : 58வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : செப்டம்பர் 1954
http://i1094.photobucket.com/albums/...EDC4418a-1.jpg
அரிய புகைப்படம் : ராஜகுமாரன் சுந்தராங்கதன்
http://i1094.photobucket.com/albums/...alar/TT1-1.jpg
இக்காவியம் மதுரை 'சென்ட்ரல்' திரையரங்கில் 3.9.1954 அன்று வெளியானது.
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
கூண்டுக்கிளி : இரு திலகங்கள் இணைந்த ஒரே காவியம்
[26.8.1954 - 26.8.2011] : 58வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 28.7.1954
http://i1094.photobucket.com/albums/...EDC4419a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்(சென்னை) : தினமணி : 9.9.1954
http://i1094.photobucket.com/albums/...EDC4420a-1.jpg
தென்னகமெங்கும் ஆகஸ்ட் 26 அன்று வெளியான இக்காவியம் சென்னையில் மட்டும் செப்டம்பர் 9 அன்று வெளியானது.
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
மங்கையர் திலகம் [100 நாள் பெருவெற்றிக் காவியம்]
[26.8.1955 - 26.8.2011] : 57வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/...EDC4422a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
தாயே உனக்காக [கௌரவத் தோற்றம்]
[26.8.1966 - 26.8.2011] : 46வது ஆரம்பதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 22.8.1966
http://i1094.photobucket.com/albums/...EDC4424a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
வருகிறார்.....
http://i1094.photobucket.com/albums/...EDC4423a-1.jpg
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்புக்கும், வாழ்த்துதல்களுக்கும் மனமார்ந்த நன்றி.
தூக்குத்தூக்கி, கூண்டுக்கிளி, மங்கையர் திலகம், தாயே உனக்காக போன்ற அற்புதப் படைப்புகளின் முதல் வெளியீட்டு விளம்பரங்களை வெளியிட்டு தலைவாழை இலை போட்டு விருந்து வைத்து விட்டீர்கள். சுவைகளுக்குக் கேட்க வேண்டுமா? அனைத்தும் முக்கனிகளின் சாராய் இனித்தன. விருந்துக்கு நன்றி. அடுத்த விருந்தான நம் தவப் புதல்வனுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
தூக்கு தூக்கி 58 -ஆவது ஜெயந்தி.
http://s1.postimage.org/y7z37xg4k/Th...tch_Online.jpg
அருணா பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக மன்னனின் 18- ஆவது படமாக வந்து வெற்றிக்கொடி நாட்டிய படம். நம் தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகள் எங்கும் தெருக் கூத்தாகவும், நாடகமாகவும் வெற்றி உலா வந்து, பின் நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பால் வீர உலா வந்தது.
இப்படத்தில் பாலையா, T.N.சிவதாணு, 'யதார்த்தம்' பொன்னுசாமிப் பிள்ளை, 'சட்டாம்பிள்ளை' வெங்கட்ராமன், லலிதா, பத்மினி, ராகினி, C.K.சரஸ்வதி, M.S.S.பாக்கியம் என்று மாபெரும் நட்சத்திரக் கூட்டம்.
சுந்தரபுரி இளவரசன் சுந்தராங்கதன் நாட்டின் பொருளாதார வழிகளைப் பெருக்க தன் தந்தையாகிய மன்னரின் ஆணைக்கேற்ப நாட்டைச் சுற்றி வரும் வேளையில், ஓலைச் சுவடிகளை ஆராய்ச்சி செய்யும் ஒரு ஆராய்ச்சி மன்றத்தில் அறிஞர்கள் மத்தியில் உரையாடநேருகிறது.
கொண்டு வந்தால் தந்தை...
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்...
சீர் கொண்டு வந்தால் சகோதரி...
கொலையும் செய்வாள் பத்தினி...
உயிர் காப்பான் தோழன்...
என்று முன்னோடிகள் ஓலைச்வடிகளில் அனுபவங்களால் எழுதி வைத்த குறிப்புகளைத் தவறென்று ஆராய்ச்சி மன்றத்தில் அறிஞர்கள் நடுவே ஆணித்தரமாக வாதாடுகிறான் சுந்தராங்கன். அந்தக் கருத்துக்கள் பொய்யானவை என்று நிரூபிப்பதாகவும் சவால் விடுகிறான்.
அதற்காக அவன் சந்தித்த சோதனைகள், துரோகங்கள்,வேதனைகள் ஏராளம்.
பொருள் கொண்டு செல்லாததால் தந்தையால் வெறுக்கப் பட்டு, அவராலேயே நாடு கடத்தப் படுகிறான் சுந்தராங்கன். ஆனால் தாயின் அன்பு என்றும் சாஸ்வதம் என்பதை உணருகிறான். சீர் கொண்டு செல்லாததால் தன் தங்கையால் வெறுக்கப் பட்டு வேதனையுறுகிறான். தன் மனைவியே தனக்கு நம்பிக்கை மோசம் செய்வதை நேரிடையாகக் காண்கிறான். கொலைக் குற்றம் சாட்டப் படுகிறான். தன் மனைவியாலும், அவளின் கள்ளக் காதலனாலும் தன் உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலையில் தன் உயிர்த் தோழனால் காப்பாற்றப் படுகிறான். நாட்டை விட்டே வெளியேறி வேற்று நாட்டு அரண்மனையில் தூக்குத் தூககியாய் வேடம் புனைந்து, அங்கு இளவரசிகளின் அன்புக்குப் பாத்திரமாகி, அரண்மனையில் பல சோதனைகளைக் கடந்து தான் குற்றவாளி அல்ல என்று நிரூபணம் செய்து, முன்னோர்கள் சொன்ன தத்துவங்கள் பொய்த்துப் போவது இல்லை என்பதனையும் தன் அனுபவங்களால் உணருகிறான்.
இளவரசன் சுந்தராங்கதானாக நம் நடிகர் திலகம். கேட்க வேண்டுமா..பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். குறிப்பாக அந்த பரத நாட்டியக் காட்சிகள்.. ஏறாத மலைதனிலே, அபாய அறிவிப்பு,பெண்களை நம்பாதே, சுந்தரி சௌந்தரி பாடல்களுக்கு அவர் நடனமாடுவது காலாகாலத்திற்கும் ரசிக்க வைக்கக் கூடியது. வழக்கம் போல வீறு கொண்ட வசனங்கள்...பலதரப் பட்ட முகபாவங்கள்..பாவனைகள்..இந்தப் படத்தின் மூலம் மேலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் நடிகர் திலகம்.
வசனங்களை ஏ.டி.கே மற்றும் V.N.சம்பந்தம் அவர்கள் இணைந்து எழுத, சங்கீத விற்பன்னர் ஜி.ராமநாதன் அவர்கள் எக்காலங்களிலேயும் ரசிக்க வைக்கும் ஜனரஞ்சகப் பாடல்களுக்கு இசை அமைக்க, டி.எம்.எஸ், M.L.வசந்தகுமாரி, P.லீலா, A.P.கோமளா போன்ற ஜாம்பவான்கள் பின்னணி பாட, அற்புதமான பொழுது போக்குப் படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் R.M.கிருஷ்ணசாமி அவர்கள்.
நடிகர் திலகத்திற்கு முதன் முதலாக திரு.T.M.S. அவர்கள் பின்னணிப் பாடல்கள் பாடிய பெருமை இந்தப் படத்தையே சாரும்.
வெங்கட்ராமன் என்ற நகைச்சுவை நடிகர் தன் அபார நகைச்சுவை நடிப்பால் இந்தப் படத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரிலேயே 'சட்டாம்பிள்ளை' வெங்கட்ராமன் என்று பெரும் பெயர் பெற்றார் என்பது இன்னொரு சிறப்பு.
பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டும் ரகம்..
A. மருதகாசி அவர்கள் இயற்றிய
இன்பநிலை காண ஏன் இன்னும் தாமதம்....
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த...
சுந்தரி சௌந்தரி....
திரு.உடுமலை நாராயணகவி அவர்கள் இயற்றிய
பியாரி நம்பள் மேலே...
பெண்களை நம்பாதே..கண்களே..பெண்களை நம்பாதே...
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்...
திரு.தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் இயற்றிய
அபாய அறிவிப்பு ...அய்யா!.. அபாய அறிவிப்பு...
ஏறாத மலைதனிலே....வெகு ஜோரான கௌதாரி ரெண்டு...
போன்ற காலத்தை வென்ற கானங்கள் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன.
மொத்தத்தில் அததனை பேர் மனதையும் கொள்ளை கொண்டு போகிறான் 'தூக்கு தூக்கி'.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இதோ.. ஒரே ஒரு சோறு.. ஒலி-ஒளி வடிவில்...
http://www.youtube.com/watch?v=WPi1I-X82uc&feature=player_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள் பம்மலாரின் கைவண்ணத்தில் உண்மையிலேயே அற்புதம்தான். திரு.வாசுதேவன் அவர்களின் ஒலி, ஒளி காட்சி இணைப்பு வேறு. கேட்கவேண்டுமா சுவைக்கு? நன்றிகள் கோடி. தவப்புதல்வனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
நடிகர்திலகத்தை பெற்றெடுத்த தெய்வத்தாய் ராஜாத்தி அம்மையார் மற்றும் நடிகர்திலகத்தின் போர்வாள் சசிகுமார் ஆகியோரது மறைவு குறித்த வரலாற்று ஆவணங்களின் தொகுப்பு கண்ணீரை வரவைத்து விட்டது.இந்த அற்புத தகவல்களை பதிவேற்றிய பம்மல் சாருக்கும் அதன் தொடர்ச்சியாக ஒலி ஒளி காட்சிகளை அளித்த வாசுதேவன் சாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
திரு குமரேசன் சார்,
புதிய பறவை வெளியீடு குறித்த லேட்டஸ்ட் தகவல் ஏதேனும் உண்டா?
A part of an interview by raghavendra rajkumar,second son of late actor rajkumar to radio mirchi which was published in the times of india,bangalore edition dated 23-8-11:
Which actor did he admire the most?
He greatly admired the legendary tamil actor SIVAJI GANESAN.He used to travel in local buses and watch sivajiganesan"s movies in theatres.
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்களில், தூக்குத்தூக்கி, கூண்டுக்கிளி, மங்கையர் திலகம் மற்றும் தவப்புதல்வன் திரைச் சித்திரங்களின் போட்டோ வடிவங்களைப் பதிவிட்டு வழக்கம் போல் அசத்தி விட்டீர்கள்.
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
இமைப் பொழுதும் சோராவண்ணம், தாங்களும் வழக்கம் போல் மின்னல் வேகத்தில், தூக்குத்தூக்கி திரைக்காவியத்தினை அலசி அறுசுவை விருந்து படைத்து விட்டீர்கள்.
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
நான் சில நாட்களுக்கு முன்னர் இட்ட ஒரு பதிவில், இந்த 1954-ஆம் வருடத்தின் சிறப்பினைக் குறிப்பிட்டிருந்தது போல், மேற்கூறிய படங்கள் அல்லாமல், மனோகரா, எதிர்பாராதது மற்றும் அந்த நாள், படங்களையும் குறிப்பிட்டிருந்தேன்.
தூக்குத்தூக்கி படத்தினைப் பற்றிய கூடுதல் தகவல்; நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்து தான். அந்த வருடத்தில் வெளி வந்த மற்ற படங்களிலும் அவர் அதியற்புதமாக நடித்திருந்தாலும், சினிமா ரசிகர்கள் சங்கத்தின் மூலமாக அந்த வருடத்தின் சிறந்த நடிகர் விருது அவருக்கு தூக்குத்தூக்கி படத்திற்குத் தான் வழங்கப்பட்டது - ஆல் ரவுண்டு பெர்பார்மன்சுக்காக.
படத்தின் ஆரம்பத்தில், ஒரு விதமான நடிப்பு, ஒவ்வொரு பழமொழியையும் ஆராயும் போது, ஒரு விதமான நடிப்பு, பாலைய்யாவிடம் வேலைக்காரனாக நடிக்கும் போது ஒரு விதமான நடிப்பு, (புடவே... புடவே... பாடல் காட்சி அபாரமாக இருக்கும்!), பெண்களை நம்பாதே பாடல் ஆரம்பித்து, கடைசியில், அரசு தர்பாரில், ராஜ துரோகத்திற்காக நிறுத்தப்படும் வரை, அதகளப்படுத்தும் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை/அசடு போல் பாத்திரத்தில் வரும் நடிப்பு. கடைசியில், தர்பாரில், தன்னுடைய மனைவியே தன்னுடைய கள்ளக்காதலுக்காக தன்னைக் கொல்லத் துணிந்து விட்டதை சபையில் சொல்லி அவமானம் மற்றும் ஆத்திரத்துடன் மடை திறந்த வெள்ளமென எரிமலையாய் வெடிக்கும் போது காட்டும் நடிப்பு - "மாசுண்டாள் உம் பெண்" என்று துவங்கி "தெய்வம் பொறுக்குமா உங்கள் திருக்கூத்தை?" என்று முடிக்கும் போது திரையரங்குகளில் எழும் கைத்தட்டல் இன்னும் அடங்கவில்லை.
இந்த ஆல் ரவுண்டு பெர்பார்மன்சுக்குத் தான் அவருக்குச் சிறந்த நடிகர் விருது சரியாகத் தரப்பட்டது.
மேற்கூறிய இரண்டு படங்களும் ஜனரஞ்சகமாகவும் அதே சமயம் தரமான படங்களாகவும் அமைய, கூண்டுக் கிளி மற்றும் அந்த நாள் படங்களில் unconventional பாத்திரங்களை ஏற்று நடித்தார் (ஒன்றில் நண்பனுக்கே துரோகம் இன்னொன்று தேச துரோகம்!).
அது மட்டுமா?, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் நகைச்சுவை கலந்த துணைக் கதாபாத்திரத்திலும், எதிர்பாராதது படத்தில், காதலில் தோல்வி அடைந்து அவர் தன்னுடைய தந்தைக்கே இரண்டாம் தாரமானதைத் தாங்கும் (கடைசியில், அவரை அடையத் துடித்தாலும்) பாத்திரத்திலும், துளி விஷம் படத்தில் வில்லனாகவும், இல்லற ஜோதியில் எழுத்தாளனாகவும் (திருமணம் ஆனபின்னும் வேறொரு பெண்ணை நாடி கடைசியில், மனம் திருந்தி மனைவியிடமே வருவார்), நடித்தார்.
இத்தனை இளம் வயதில், நடிக்க வந்த மூன்றாவது வருடத்திலேயே (1952 - ஆம் வருடக்கடைசியில் தான் பராசக்தி வெளிவந்தது என்பதால், இரண்டாவது வருடம் என்றும் சொல்லலாம்!) இத்தனை கனமான, ஜனரஞ்சகமான, மற்றும் நகைச்சுவை கலந்த பாத்திரங்களில் நடிப்பதற்கு, எத்தனை நம்பிக்கையும், அனுபவமும், மெச்சூரிட்டியும் வேண்டும்? அவர் மனிதப் பிறவி தானா? இல்லையில்லை, தெய்வம் நடிப்பதற்கென்றே சிருஷ்டித்த தெய்வக் கலைஞன் - தெய்வ மகன்!
அந்த வருடத்தில் வெளி வந்த நடிகர் திலகத்தின் அத்தனை படங்களிலும், தூக்குத்தூக்கி மற்றும் மனோகரா வசூல் சாதனையே புரிந்தன. அதில்லாமல், மேற்கூறிய வித்தியாசமான நடிப்புச் சாதனையை நெருங்கக்கூட முடியுமா வேறு ஒரு நடிகனால் எத்தனை வருடங்கள் ஆனாலும்?
மாற்று முகாமில் வெளி வந்த ஒரே ஒரு படம் மட்டும் வசூல் சாதனை புரிந்ததை இன்றளவும் ஊதிப் பெரிதாக்குபவர்கள், ஒரே வருடத்தில், இரண்டு ப்ளாக் பஸ்டர்களைத் தந்ததை (மனோகரா, தூக்குத்தூக்கி) ஏன் இருட்டடிப்பு செய்கிறார்கள்?
"தெய்வம் பொறுக்குமா இவர்களின் திருக்கூத்தை?"
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Guys,
Meetings you all from Madurai, hot news at Ram theatre NT's super duper hit Tyagam from today.
Cheers,
Sathsih
டியர் பார்த்தசாரதி சார்,
தங்கள் அன்புக்கு என் பணிவான நன்றி!
'தூக்கு தூக்கி' படத்தைப் பற்றியும், நடிகர் திலகத்தின் அபார நடிப்புத் திறமையையும் அற்புதமாக வர்ணித்துள்ளீர்கள். சூப்பர். உங்களுக்கு ஏற்பட்ட அதே ஆதங்கம் தான் எனக்கும் ஏற்பட்டது. தூக்கு தூக்கி ஓரளவு தான் வெற்றி பெற்றது என்ற மாயை உங்கள் கட்டுரையைப் படித்தால் உடைபட்டுப் போகும். அந்தப் படத்தின் வெற்றி பற்றிய விளம்பரங்களை அன்பு பம்மலார் அவர்கள் பதிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அந்த அற்புதக் கலைஞனின் அபார வெற்றிகளை அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை மூடி மறைத்து ஆனந்தப் படக்கூடிய ஒரு கூட்டம் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி செய்வதில் அவர்களுக்கு கிடைக்கும் சந்தோஷம் தான் என்ன என்று எவ்வளவோ யோசித்தும் எனக்குப் புரியவில்லை. தெரியவில்லை.சரி. விடுங்கள்.. போற்றுவார் போற்றினாலும் தூற்றுவோர் தூற்றினாலும் சிங்கத் தமிழனின் வெற்றிகளை யாரும் மறைத்து விட முடியாது... மறுத்து விடவும் முடியாது.
தூக்கு தூக்கி படத்திற்கு இன்னொரு சிறப்பு உண்டு. தமிழகத்தில் நாம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடும் போது இரவு தூங்காமல் கண் விழிப்பதற்காக எல்லா தியேட்டர்களிலும் நடுநிசிக் காட்சி என்ற ஒரு காட்சியை இரவு ஒரு மணிக்கு திரையிடுவார்கள். அந்த நடுநிசிக் காட்சிகளில் அதிகம் திரையிடப் பட்ட படம் அநேகமாக தூக்கு தூக்கியாகத்தான் இருக்கும்.அப்படி பலமுறை கடலூரில் நண்பர்களோடு தூக்கு தூக்கிக்கு சென்று, அளப்பரை செய்து, நடு இரவுகளில் ரசித்துப் பார்த்துவிட்டு அதிகாலைகளில் வீடு போய் சேர்ந்தது பசுமையாக நினைவில் நிற்கிறது. நன்றி!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்
BLAST FROM THE PAST - RANDOR GUY - THE HINDU
Thookku Thookki 1954
Sivaji Ganesan, T. S. Balaiah, Lalitha, Padmini, Ragini, P. B. Rangachari, C. K. Saraswathi, M.S.S. Bhagyam and T. N. Sivathanu
Great success Thookku Thookki
Thookku Thookki was a popular folk tale and stage play. It was brought to the screen in 1935 by the famous Madurai-based Rayal Talkie Distributors with the movie pioneer R. Prakash directing it and handling the camera.
Noted star of that era C.V.V. Panthulu played the title role with K. T. Rukmini in the female lead. K. N. Kamalam and ‘Clown' Sundaram formed part of the cast. R. M. Krishnaswami (RMK), a young, talented camera assistant, was working with Prakash. This film was embedded in his mind. He turned producer in the 1950s with his Aruna Films and made his directorial debut with Rajambal. He took up Thookku Thookki as his next production, which turned out to be the biggest success of his career.
The tale was all about five maxims — 1. A father cares only for the riches earned by his son; 2. Only a mother stands by the son through thick and thin; 3. A sister values her brother only for the gifts he brings her; 4. A wife should never be relied on for she will even murder her husband; and 5. A friend in need is always a friend indeed. A prince (Sivaji Ganesan) listens to the maxims in a religious discourse and sets out to prove them wrong. He undergoes several adventures and finds more than a grain of truth in the maxims.
Sivaji as the hero came up with a fine performance, while T.S. Balaiah in the role of a North Indian Seth was superb. The scenes featuring Balaiah speaking Sowcarpet Tamil with his mistress (Lalitha, the hero's wife) were great.
What elevated this film to great success was its scintillating music composed by G. Ramanathan. The lyrics were by A. Marudhakasi, Thanjai Ramaiah Das and Udumalai Narayana Kavi.
An interesting back story about the song composing… Udumalai Narayana Kavi based in Coimbatore reached Madras by the Blue Mountain Express on the morning of the day scheduled for the song composing and recording. He was to leave by the same train from Central Station around eight in the night. In less than 12 hours, Narayana Kavi wrote five of the eight songs, which were composed immediately by G. Ramanathan, rehearsed by T. M. Soundararajan and others. An amazing feat of creativity, it vouches for the musical genius of G. Ramanathan, the poetic talent of Narayana Kavi and the captivating singing of TMS.
Many of the songs rendered by Soundararajan became popular and it was this film that laid the foundation for his glorious career. Female singers M. L. Vasanthakumari, M. S. Rajeswari, P. Leela and A. P. Komala also contributed to the richness of the music. Noted singer and actor V. N. Sundaram lent his voice to one of the songs along with TMS and others.
Remembered for: the impressive performance of Sivaji Ganesan and the songs rendered by TMS.
One Q: What happened in the hamsadhwani function? Did anyone apologise? If no one else, atleast the man being honoured - who presumably MUST have seen the invitation - did he voice out?
“காதலிக்க நேரமில்லை“(1964). புத்தகத்திலிருந்து சிறு பகுதி…......
பரணி ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்ட்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் (sridhar) சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டுடியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி.”அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு” என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். “அண்ணே வாங்க வாங்க… எங்க இவ்வளவு தூரம்?” என்றார் சிவாஜி. தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி “இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?” என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , “என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க” என்றார்.
சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா?
Article from Kalyanamalai Magazine :
Today, when we hear the name Sasikumar, we’ll immediately think of Sasikumar of the film ‘Naadodigal’. But there was a Sasikumar of yesteryears, who had found a permanent place in the hearts of the cine-goers … some interesting titbits about the hero of yesterday …
Sasikumar was an army man before entering the celluloid world. He was born on 8-12-1944 to the couple Radhakrishnan – Savithri in Kumpakonam. Radhakrishnan had worked as a Hindi professor in Trichy National College. From his early years, Sasikumar displayed staunch loyalty and love to the nation, Tamil Nadu and fine arts. After completing B. Sc., he joined the army, served for ten years and rose to the rank of captain. He won medals for his gallantry during the war with China in the year 1962 and with Pakistan in 1965. After these wars, he resigned from the army and founded a drama troupe of his own and started acting in his own stage plays. Director A. P. Nagarajan, who happened to watch one of his plays, introduced him to cinema through his film ‘Thirumalai thenkumari’. Then followed ‘Arangetram’, ‘Punnakai’, ‘Aval’, ‘Malai naattu mangai’, ‘Vellikkizhamai viratham’, ‘Bharatha vilas’, ‘Kaasethaan katavulataa’, ‘Kalyaanamaam kalyaanam’, ‘Samarpanam’, ‘Pirayachitham’, ‘Suriyakaanthi’, ‘Thirutan’, ‘Rajapart Rangadurai’ etc. he was dear to all in the industry.
He used to visit his parents and relatives at Kumpakonam. My native place is also Kumpakonam and I wanted to meet Sasikumar there during one of his visits. I was studying in the 11th Std. (SSLC) and I met Sasikumar with the help of his relatives. He was happy when I reviewed his films. But when he noticed my school-books and notebooks, he understood that I came to see him during my class hours. He advised me very strongly that it was not correct to sacrifice classes for the sake of seeing film people or watching movies and that education should be the first priority. I met him again at the premises of Nadigar Sangam in Chennai. When I reminded him about the Kumpakonam incident, he repeated his advice in a warm tone. When I asked him for some details about his personal life and career, he asked me whether I had joined any cinema magazine. I told him that after finishing my studies, I intended joining the print media.
Excerpts from his talk:
“My given name is Vijaykumar. My father is a staunch follower of ‘Thanthai’ Periyar. Periyar named me ‘Vetriselvan’. When I was in the army, my name was ‘Vetriselvan’ only. I changed my name to Sasikumar when I entered cinema. I am a patriot and I am a member of the Congress Party. I’ll strive hard for the welfare of the party as well as for the nation till my end. I don’t expect anything in return. Cinema is the live-wire of my life. I’ll not leave cinema till my last breath.”
When I met his son Vijayasarathi recently, I recalled these words of his father with excitement. When I asked him whether he remembered the incident in which both his parents died of fire accident, he started crying and narrated the incident in between sobs. “My father was preparing to attend the Congress Party’s public meeting at Ennore. He wanted to take milk before leaving for the meeting. When my mother lit the pump stove to warm the milk for all of us, the stove exploded. My mother’s sari caught fire. My sister and I, who were playing outside the house rushed into the house on hearing the noise. I was just four and my sister was six at that time. When my father rushed to the kitchen and tried to put down the fire by hugging my mother tightly, the fire caught hold of him also. Both rushed to the bathroom and opened the shower to douse the fire.
Both were admitted to the hospital with the help of our neighbors. My father signaled to me and Nandini to tell that they would be back safely. They were admitted to the Royapettah Hospital. Leading actors including MGR, Sivaji Ganesan, Gemini Ganesan and Major Sunderrajan came and spoke to the doctors. K. R. Vijaya madam and AVM Saravanan both brought air-coolers and kept them in the room of my parents. Many helped by donating blood. Intense treatment was given for three days.
My father requested everyone to sing ‘Janaganamana’ and chant ‘Vande matharam’ during his last hours.
On 24-8-1974, both died, not responding to the treatment. My mother died two hours after my father died. The last rites were performed at Kannammapet with military honors. Kamaraj Aiyah paid his last homage. The entire film industry was present. Sivaji Ganesan raised the slogan “Jai Hind” with others accompanying him.
Our grandmother brought us up amid great difficulties. Almost daily, some channel or other will be telecasting one of my father’s films. Whenever I watch them, my eyes well up with tears of joy. “
Sasikumar’s attractive personality and distinct talent will always remain fresh in our hearts!
http://www.youtube.com/watch?v=Beta3ehxcFA
can any one upload "Ulagin Muthal Isai" Song ?
Plum,
I got following response from Hamsadhwani.
Date: Thu, 25 Aug 2011 08:05:32 +0500
> From: hamsadhwani@vsnl.net
> Subject: Re: Clarification about your invitation to felicitate KB
> To: sathish
> CC: gopalans@airtelmail.in
>
> Dear Sir,
> We sincerely regret the error and apologise.
> The error that crept in was because of agencies write up .
> Thanks for your understanding.
> regards
> Hamsadhwani
அன்புள்ள பம்மலார் சார் மற்றும் ராகவேந்தர் சார்,
காங்கிரஸ் பேரியக்கத்தின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய தேசீய நடிகர் கேப்டன் சசிகுமார் அவர்களின் நினைவஞ்சலி நெஞ்சை நெகிழ வைத்தது. அது தொடர்பான பல்வேறு பத்திரிகைகளின் ஒரிஜினல் பதிப்புகளை இங்கே வெளியிட்டு நாட்டுக்காக உழைத்த அந்த நல்ல மனிதருக்கு சிறப்பான நினைவஞ்சலியை நிறைவேற்றியிருக்கிறீர்கள். பெருந்தலைவரின் தொண்டர்கள் மற்றும் நடிகர்திலகத்தின் ரசிக உள்ளங்கள் சார்பில் இதயம் நிறைந்த நன்றிகள்.
ராகவேந்தர் அவர்கள் சொன்னது போல சசிகுமார், பிரேம் ஆனந்த் ஆகியோருக்குப்பின் திரையுலகில் நடிகர்திலகத்தை அந்தரங்க சுத்தியோடு நேசிக்கக்கூடியவர் ஒய்.ஜி.ம்கேந்திரன் அவர்கள்தான். நாலு வரி பேசினால் அதில் இரண்டு வரிகள் நடிகர்திலகம் பற்றியதாகத்தான் இருக்கும். சமீபத்தில் கூட மெல்லிசை மன்னரின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துச்சொன்னபோது மறக்காமல் நடிகர் திலகத்தை நினைவு கூர்ந்தார். ஆனால் முன்னிருவர் போல இவர் நடிகர்திலகத்தோடு அரசியலில் தோள்கொடுத்து நிற்கவில்லை. தனது கலையுலகத் தந்தையாக மதித்து வருகிறார். சசி, பிரேம் இவர்களுக்குப்பின் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய இன்னொரு நல்ல உள்ளம் மறைந்த திரு. ஜெய்கணேஷ் அவர்கள். அவர் காங்கிரஸ் பேரியக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
நான் சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் புகுமுக வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ஃபைன் ஆர்ட்ஸ் கழகத்தின் சார்பில் சிறப்புறையாற்ற சசிகுமாரை அழைத்திருந்தனர். ஷூட்டிங்கில் இருந்து நேரடியாக கல்லூரிக்கு வந்திருந்தார். பேச்சு முழுவதும் தேசீயத்தைப்பற்றியேதான் பேசினார். பள்ளி நாடகங்களில் பெண்வேடம் போட்டு நடித்ததைப் பார்த்த ஒருவர் அவரை நிஜமான பெண்ணென்று நினைத்து காதல் கடிதம் கொடுத்ததை நகைச்சுவையோடு சொன்னார். முடிவில் நாட்டுப்பற்றை வலியுறுத்தி என்று முடித்தார்.
விழா முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் அவரைச்சூழ்ந்து நின்று குரூப் குரூப்பாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அனைவரிடமும் அன்பாகப்பேசினார். அப்போதும் கூட 'கிளாஸை கட் அடித்து விட்டு படம் பார்க்கப்போகாதீர்கள்' என்று கேட்டுக்கொண்டார். விழா முடிந்தபின்னும் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் மாணவர்களுடன் உரையாடிய பின்னர் அன்போடு விடைபெற்றார். இது நடந்தது 1974 மார்ச் மாதம். ஆனால் நாங்கள் பி.காம். முதலாம் ஆண்டு துவங்கிய சிறிது நாட்களிலேயே 1974 ஆகஸ்ட் அன்று தீ விபத்தில் மனைவியைக் காப்பாற்றப் போராடியதில் சசிகுமாரும்ரும் தீயில் சிக்கி ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு பார்க்க ஓடினோம். பொதுமக்களை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. திரையுலகினரும் காங்கிரஸ் தலைவர்களும் வந்து பார்த்துச்சென்ற வண்ணம் இருந்தனர். மருத்துவ மனைக்கு வெளியில் நின்றவாறே அவரும் மனைவியும் குணமடைய பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். ஆனால் எல்லோரின் பிரார்த்தனையும் பலனற்றுப்போனது.
சசிகுமார் தம்பதிகள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்த செய்தி பேரிடியாகத் தாக்கியது. புதுக்கல்லூரி மாணவர்கள் பெரும்பாலோர் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டோம். மாணவர்கள் பலர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவர்கள் சொன்ன விவரத்தைக்கேட்டு, நான் சசிகுமார் அவர்களின் உடலைப்பார்க்க விரும்பவில்லை. திரைப்படங்களிலும், கல்லூரி விழாவிலும் பார்த்த அந்த அழகான சிரித்த முகமே நெஞ்சில் நிலைத்திருக்கட்டும் என்று எண்ணி, தீயில் வெந்த அவரது முகத்தைப்பார்க்காமல் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டேன்.
இளம் வயதிலேயே மனைவியைக்காப்பாற்ற தன் இன்னுயிரை ஈந்த தியாகச்செம்மல், தேசிய வீரன், பெருந்தலைவரின் அன்புத்தொண்டன் எங்கள் சசிகுமாரை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. அவரது நினைவைப்போற்றும் வகையில் நமது தளத்தில் சிறப்பான அஞ்சலி செலுத்திய உங்கள் அனைவருக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றிகள்.
hats of to my bangalorean, vasudevan , pammalar , raghavendra, murali sir can any one of u please put engamama film song ellorum nallum valla naan padigirane.Which is one of the favorite song in Cantonment area in Bangalore
regards
kumar
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள் !
"தூக்கு தூக்கி" காவியக் கண்ணோட்டம் தூக்கல் என்றால் 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' ஒலி-ஒளிக்காட்சி அசத்தல் !
தாங்கள் விரும்பியது போல் வசூல் பிரளயத்தை ஏற்படுத்திய பெருவெற்றிக்காவியமான "தூக்கு தூக்கி"யின் வெற்றி விளம்பரங்களை-புள்ளிவிவரங்களை விரைவில் இங்கே பதிவிடுகிறேன்.
அன்புடன்,
பம்மலார்.