http://i60.tinypic.com/2i2a2wl.jpg
http://epaper.maalaimalar.com/epaper...x?issue=492014
Printable View
ஆள் அம்பு சேனை கட்சி ஆட்சி அதிகாரம் எல்லாவற்றையும் வைத்திருந்தாலும் இது எதுவுமே இல்லாதவருடைய சாதனையை குறி வைத்து இயங்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பதுவே அந்த எதுவுமே இல்லாதவரின் மகத்துவத்தை உணர்த்துகிறது தோழர்களே !
நடிகர் திலகத்தை நக்கல் செய்ய வேண்டிய நோக்கம் உங்களுக்கில்லாதிருந்தால் ஆயிரத்தில் ஒருவன் வெற்றிக்கும் ஆலவட்டம் கட்டியிருப்பேன் .
கர்ணனை மிஞ்ச வேண்டும் என்ற கட்டயாத்தில் நீங்கள் அடித்த குட்டி கர்ணங்களை நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது . என்னைப் போன்ற அரசியல் சாராத சிவாஜி ரசிகர்களுக்கு சிவாஜி என்னும் கலைஞன் அரசியலைத் தாண்டி மக்களிடம் வாழ்கிறான் என மறு உறுதி கிடைப்பது எத்தனை ஆனந்தம் ?
ஆயிரத்தில் ஒருவன் இரு திரையரங்கங்களில் வெள்ளி விழாவை பதிவு செய்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன் .. கர்ணனை விட அதிக நாட்கள் ஓடியிருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம் .மகிழ்ச்சி ..கொண்டாடுங்கள் . அதோடு நிறுத்தியிருக்கலாம்.
மறு வெளியீட்டில் தமிழகம் முழுவதும் கர்ணன் வசூலித்ததும் ஆயிரத்தில் ஒருவன் வசூலித்ததும் ஒப்ப்பிட்டு பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறது என்பதை நாடு அறியும் .
சென்னையில் 200 நாள் ஓட முடிகிற படம் வேறெங்கும் 20 நாள் கூட ஓட முடியாத மர்மம் என்ன தோழர்களே ?சிந்தித்துப் பாருங்கள் .
கர்ணன் கோடியில் ஒருவன்.
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=PqV5...ature=youtu.be
அறிவுரை வழங்க வந்துள்ள மாற்று முகாம் நண்பர்களுக்கு,
உங்கள் அபிமான நடிகரை நாங்கள் என்றைக்குமே எதிரியாகவோ போட்டியாகவோ நினைத்தது கிடையாது. காரணம் எங்களுக்கு போட்டி நீங்களே அல்ல. ‘நாளை நமதே’ திரைப்படத்தின் கிளைமாக்சில் நம்பியாரைப் பார்த்து தலைவர் ‘கணக்கு கேட்டான் என்பதற்காக கூட இருந்தவனையே வெளியே அனுப்பினியே’ என்று தலைவர் கேட்கும் போது கூரை இடிந்து விழ கைட்டினோமே, தலைவர் உங்கள் நடிகரை சொல்கிறார் என்று நினைத்தா? அப்போதே நாங்கள் அதையெல்லாம் கடந்து வந்து விட்டோம்.
தேவையில்லாமல் , ஆயிரத்தில் ஒருவன் படம் ஓட்டப்பட்டது என்று நீங்கள் (அதாவது உங்கள் முகாம்) கூறும்போதுதான் கர்ணனை இழுக்க வேண்டியுள்ளது. நீங்கள் ஓடாத படத்தை ஓடியதாக கூறிக் கொள்ளுங்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அனாவசியமாக எங்களை காயப்படுத்த வேண்டாமே? எத்தனை ஏச்சுக்கள் பேச்சுக்கள்? இப்போது ரோஷப்பட்டு பதில் சொல்ல வருகிறீர்களே? தலைவன் படத்தில் தலைவர் பறப்பது போன்று வரும் காட்சியை தேவையில்லாமல் கிண்டல் செய்கிறார் ஒருவர். அம்மனின் கண்களில் இருந்து வரும் ஒளியால் பார்வையற்றவருக்கு கண் பார்வை திரும்பும் என்றால், கலைவாணியின் அருளால் ஊமை பேச முடியுமென்றால் மனிதனால் பறக்கவும் முடியும். எனவே, அறிவுரையை கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்புவது நலம்.
1964 -65 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி தேர்தலில் வேட்டைக்காரனை குறிப்பிட்டு காமராஜர் பேசியது உண்மை. வரலாறு தெரிந்து மனசாட்சியும் உள்ளவர்கள் இதை மறுக்க மாட்டார்கள். உங்கள் மாடரேட்டர் உட்பட (அவருக்கு வரலாறு தெரிவதுடன் மனசாட்சியும் இருக்கும் என்று கருதுகிறோம்)
எல்லா ஊர்களிலும் வருடத்துக்கு ஒன்று அல்லது இருமுறையாவது ஆயிரத்தில் ஒருவன் வெளியிடப்படுவதுதான் மற்ற ஊர்களில் 100 நாட்கள் ஓடாததற்கு காரணம். இப்போதும் கோவையில் மறுவெளியீடு. சென்னையில் நீண்ட இடைவெளிக்கு பின் வெளியானது. இதில் மர்மத்துக்கு என்ன இருக்கிறது? புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளிவிழா புகைப்படங்கள் தொடர்ச்சி.
http://i57.tinypic.com/25g5wr9.jpg
நடிகர் திரு. கே.ராஜன், நடிகர் திரு. ராஜ்கிரண் , திருமதி பி.சுசீலா , நடிகர் சங்க தலைவர் திரு. சரத்குமார் , மெல்லிசை மன்னர் திரு. எம். எஸ்.விஸ்வநாதன் , நடிகை ராஜஸ்ரீ ,
திருமதி சாந்தி சொக்கலிங்கம் , திரு . லஷ்மண் , திரு. எஸ். ராஜ்குமார் , திரு. கோபால் ஆகியோர்
நிகழ்ச்சியின் துவக்கத்தில் குத்து விளக்கு ஏற்றப்படுகிறது.
சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மத்தியில் ரசிகர்களை
நோக்கி வணக்கம் தெரிவிக்கிறார் மெல்லிசை மன்னர்
திரு. எம்.எஸ். விஸ்வநாதன்.
http://i59.tinypic.com/2gvooiu.jpg
நடிகர் திரு. கே.ராஜன்,திரு பி.எஸ்.ராஜு (உரிமைக்குரல் ஆசிரியர் ) நடிகர் திரு. ராஜ்கிரண் , நடிகர் திரு. சத்யராஜ் ,நடிகை ராஜஸ்ரீ , நடிகர் சங்க தலைவர் திரு. சரத்குமார் , மெல்லிசை மன்னர் திரு. எம். எஸ்.விஸ்வநாதன் , திருமதி சாந்தி சொக்கலிங்கம் , திரு . லஷ்மண் , திரு. கோபால் ஆகியோர்
http://i62.tinypic.com/28sx62t.jpg
http://i60.tinypic.com/r6yeiv.jpg
நீ அனுபவத்தில் குழந்தை என்பதால் நீ என்ன சொன்னாலும் அதையெல்லாம் கணக்கில் வைப்பது இல்லை. உனக்கு நீ உயர்தவன் சிறந்தவன் என்ற உறுதி வேண்டும், வாழ்த்துக்கள். நான் ஆயிரத்தில் ஒருவன் மட்டும் அல்ல நண்பரே - மனித சக்தியின் ஏக பிரதிநிதி
https://www.youtube.com/watch?v=mXi3Vb0Z7AU