http://i57.tinypic.com/258xesw.jpg
Printable View
http://i61.tinypic.com/2vvs182.jpg
பறக்கும் பாவை பற்றிய புகைப்படங்கள், நோட்டிஸ்கள் , விளம்பரங்கள் , வசூல் செய்திகள் தொகுத்து வெளியிட்ட நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.
http://i61.tinypic.com/qoi0jb.jpg
ஊருக்கு உழைப்பவன் - வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவு ஆனது
வெளியான தேதி : 12/11/1976.
அருமையான தலைப்பு.
நண்பர் திரு. கலைவேந்தன் அவர்கள் குறிப்பிட்டது போல இப்போது வெளியாகும்
படத்தின் தலைப்புகள் நினைத்தால் வேதனை . தங்களின் விமர்சனமும் , நண்பர் திரு. வினோத் அவர்களின் பதிவுகள் அருமை . சுவையானது.
பாடல்கள் கேட்கும்படி இருந்தன .
1.இதுதான் முதல் ராத்திரி . 2. இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்
3.அழகெனும் ஓவியம் எங்கே . 4. பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் .
1975ல் நெருக்கடி நிலை பிரகடனம் ஆனதால் , மத்திய அரசின் உத்தரவின்படி
வன்முறை காட்சிகள் கூடாது என்கிற வகையில் சண்டை காட்சிகள் வெட்டப்பட்டன .மும்பை ஸ்டன்ட் நடிகர் ஷெட்டியுடன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மோதும் காட்சிகள் பலத்த எதிர்பார்ப்பில் இருந்தன. காட்சிகள் வெட்டப்பட்டதால் சுவாரஸ்யம் இல்லாமல் போனது.சண்டை காட்சிகள் நகைச்சுவையாக எடுக்கப்பட்டதால்
ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் .
முதல் பாடலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இளமை ததும்ப நடித்து இருந்தார்.
இரண்டாவது பாடலில் குழந்தையை தாலாட்டி தூங்க வைக்கும் பாட்டில் நெகிழ வைத்தார்.
மூன்றாவது பாடலில் நிர்மலாவுடன் இளமை துள்ளலோடு காதல் கனிரசத்தை பொழிந்தார்.
நான்காவது பாடலில் தன குழந்தையின் பிறந்த நாள் பாடலில் உணர்சிகரமாகவும்
தன் சோக நடிப்பினை மிக அழுத்தமாகவும் , முக பாவங்களில் மாற்றங்களை காண்பித்து ரசிகர்களை உருக வைத்தார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். துப்பறியும் அதிகாரியாகவும், தொழில் அதிபராகவும்
இரு வேடங்களில் அற்புதமாக நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருந்தார்.
இரு மனைவிகளிடையே மாட்டிக் கொண்டு தவிப்பது, அதிலிருந்து மீள்வது
வில்லன்களை ஹெலிகாப்டரில் துரத்துவது உள்பட பல சாகச வேலைகள் செய்து
நடித்தது நன்றாக இருந்தது.
நகைச்சுவையில் தேங்காய் ஸ்ரீநிவாசன் கலகலப்பு ஏற்படுத்தினார்.
பல கட்டங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உறுதுணையாக
இருந்து கலக்கலாக நடித்தார்.
இந்த பட வெளியீட்டின் சிறப்பு அம்சம் என்னவென்றால் புரட்சி தலைவர் எம்;ஜி.ஆர். அவர்கள் பைலட், மகாராணி, அபிராமி, கமலா ஆகிய 4 அரங்குகளுக்கும் விஜயம் செய்து , முதல் நாளில் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார்.
நான் முதல் நாளன்று மூலக்கடை ஓடியன்மணி அரங்கில் காலை காட்சி
பார்த்து ரசித்தேன் . பின்பு மகாராணி, அபிராமி அரங்குகளில் பார்த்து மகிழ்ந்தேன் .
அபிராமியில் 49 நாட்களும், மகாரானியில் 63 நாட்களும் ஓடிய சுமாரான வெற்றிப்படம் .
ஆர். லோகநாதன்.