ராகவேந்திரன் சார்,
அற்புத நடிகர் திலகத்தின் நிழற்படங்களுக்கு நன்றி! இதுவரை காணாதவை. தலைவர் பற்றிய பொக்கிஷங்களை அள்ளித்தரும் பொக்கிஷங்கள் நீங்கள், பம்மலார் மற்றும் தம்பி செந்திவேல்.
Printable View
ராகவேந்திரன் சார்,
அற்புத நடிகர் திலகத்தின் நிழற்படங்களுக்கு நன்றி! இதுவரை காணாதவை. தலைவர் பற்றிய பொக்கிஷங்களை அள்ளித்தரும் பொக்கிஷங்கள் நீங்கள், பம்மலார் மற்றும் தம்பி செந்திவேல்.
நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சிகள் தொடர்-14
http://i.ytimg.com/vi/T8uX0hsestI/0.jpg
படம்: ராணி லலிதாங்கி
http://i501.photobucket.com/albums/e...ps52720dc6.jpg
வெளியான வருடம்: 1957
ஸ்டன்ட் இயக்குனர்
http://i59.tinypic.com/14k8bpt.jpg
பட இயக்கம்: டி.ஆர்.ரகுநாத்
நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சிகள் தொடர் நடுவில் நீண்ட நாட்களாக நின்று போய் விட்டது.
இனி அது தொடரும்.
http://i62.tinypic.com/iw508i.jpghttp://i57.tinypic.com/bffer5.jpg
அழகாபுரிக்கு அடங்கிக் கப்பம் கட்டுவதை மனதில் கொண்டு, சினந்து, சதித்திட்டத்தோடு அங்கு நடைபெறும் வீரப் போட்டியில் தன் நாட்டு வீரர்களோடு கலந்து கொள்கிறான் மதிகெட்ட மலை நாட்டு மன்னன் காண்டீபன் (பி.எஸ்.வீரப்பா). மல்யுத்தம், வால்யுத்தம், வேல் யுத்தம் என்று பல போட்டிகள். அழகாபுரி ஆர்ப்பரிப்பு வெற்றி கொள்கிறது அனைத்திலும். அவமானம் தாங்கமாட்டாமல் சபையில் அறைகூவல் விடுக்கிறான் மலைநாட்டான்.
'வாளுக்கு வாள்... தோளுக்குத் தோள்... என்னுடன் எவரேனும் போரிடத் தயாரா?' என்று கொக்கரிக்கிறான். ஆனால் அனல் கக்கும் அவன் கோபம் முன்பு அவனை எதிர்க்கத் துணிவின்றி அமைதி காக்கின்றனர் அனைவரும்.
யாருமே தன்னுடன் போரிட வராததால் இறுமார்ந்து எக்காள இளிப்பு இளிக்கிறான் காண்டீபன். 'நானே வெற்றி வீரன்' என்று மார்தட்டிக் கொள்கிறான் தனக்குத்தானே.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலே உண்டல்லவா!
அழகாபுரியின் அழகு இளவரசன் அழகேசன் (நடிகர் திலகம்) அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து அமைதியாகவே எழுந்திருக்கிறான். காண்டீபனின் காட்டுக் கூச்சல் சவாலை சந்தோஷமாக எதிர் கொள்கிறான். காண்டீபன் காட்டாறாய் சீறுகிறான் என்றால் அழகேசன் அவனிடன் அனல் பொங்கும் நெருப்பாய் மாறிப் போரிடுகிறான்.
இறுதியில் அழகேசன் காண்டீபனின் கர்வத்தை தன் ஒப்பற்ற வீரத்தால் ஒடுக்குகிறான். தாய் நாட்டிற்கு பெருமை தேடித் தருகிறான்.
'ராணி லலிதாங்கி' படத்தில் வரும் வாள் சண்டைக் காட்சிக்கான முன் கதை இது.
வீரப்பா சபையில் 'நானே வெற்றி வீரன்' என்று வெற்று சவால் விட்டதும், 'நடிகர் திலகம்' ராஜ உடை தரித்து, அழகு இளவரசன் அழகேசனாக தொடை தட்டி, லேசான புன்முறுவலோடு இருக்கையிலிருந்து சவாலை எதிர்கொள்ள எழுந்திருப்பது நம்மை இருக்கையிலிருந்து எழ வைத்து விடும். பின் அங்கிருந்து வீரப்பா இருக்கும் இடம் நோக்கி ஒரு அருமையான அமைதி வீர நடை. (படிக்கட்டிலிருந்து சரியாக 17 ஸ்டெப்ஸ் வைத்து நடந்து வருவார்.) பின்னணி ஒலி எதுவுமே இல்லாமல் அரங்கமே நிசப்தமாய் இருக்க, வீரப்பாவை சில வினாடிகள் ஒரு அலட்சியப் பார்வை பார்ப்பார் கைகளை வீரமாக இடுப்பில் வைத்தபடி. உடலை லேசாக அசைத்தபடி.
'மலைநாட்டானுக்கு அழகாபுரியான் எந்த வகையிலும் இளைத்தவனல்ல'
என்று மக்களைப் பார்த்து வெண்கலக் குரலில் முழங்கி, சிறிது இடைவெளி தந்து,
'வாயால் வீரம் பேசுவதை விடுத்து காரியத்தில் இறங்கலாம். எந்த ஆயுதமானாலும் சரி!
(கண்கள் ஒரு நொடி ஆர்வத்தில் வெளிவந்து பின் உள்வாங்கும். கண்களிலாலேயே எந்த ஆயுதத்தையும் எதிர் கொள்ளத் தயாராய் இருப்பதைக் காட்டி விடுவார். பின் கண்களில் ஒன்றிரண்டு அழகான அலட்சிய சிமிட்டல்களை செய்து காண்பிப்பார்.)
பிறகு ஆயுதத்தைக் கொண்டுவரச் சொல்லி 'ம்' என்று காட்டும் கை செய்கை கைதட்டல்களை அள்ளும்.
http://i57.tinypic.com/5wje2r.jpghttp://i60.tinypic.com/8wf85y.jpghttp://i62.tinypic.com/t51xdz.jpghttp://i57.tinypic.com/9kxcg9.jpg
ஆயதங்களை ஆட்கள் கொண்டுவந்து கொடுத்ததும் அவற்றைப் பெற்றுக் கொண்டு ஒரு கையில் உள்ள வாளுக்கு முத்தம் தந்து, இன்னொரு கையில் உள்ள முட்குண்டு போன்ற ஆயுதத்துடன் வீரப்பாவுடன் மோதுவார். வலது கை கத்தி எதிரியின் கத்தியுடன் மோத, அப்படியே பக்கவாட்டில் வந்து ஒரு காலை லேசாக அழகாக உயர்த்தி, கண்கள் பக்கவாட்டில் வீரப்பா மீது பக்காவாகப் பதிந்திருக்க, மறுபடி ஒரு சிறு துள்ளலை எள்ளலாகக் காண்பித்து, தன் முட்குண்டு ஆயுதத்தால் வீரப்பாவின் அதே ஆயதத்துடன் ஒரு தட்டு தட்டுவார். பின் வீரப்பா கத்தியை ஆக்ரோஷமாக நடிகர் திலகத்தின் மீது வீச, வெகு லாவகமாக இலகுவாக அதைத் தடுத்து, இரு ஆயுதங்களையும் தலைக்கு மேல் ஓங்கி எதிர்தாக்குதல் நடத்துவார். இரு கைகளாலும் ஒரு கை தேர்ந்த வீரனாக அவர் வீரப்பாவின் ஆயுதங்களின் தாக்குதல்களை தாங்கி கத்திக்குக் கத்தி... முட்குண்டு ஆயுதத்திற்கு அதுவென்று அனாயாசமாக மோதுவார். ஆயதங்களின் அழுத்தங்களைத் தாங்கியவாறே பின்பக்கமாக சுழன்று சென்று, முழங்காலிட்டு அமர்ந்து, வீரப்பாவின் கத்தி வீச்சை தடுத்தாள்வார். அடுத்த காட்சியில் வீரப்பா தாவி இந்தப் பக்கமாக சுழல, நடிகர் திலகம் அதற்கு இணையாக அந்தப் பக்கம் கால் தூக்கிய அலட்சியமான ஒரு அரைவட்ட சுழலில் அமர்க்களம் புரிவார். (ரொம்ப அழகாக சைடு வாங்கி வருவார். அற்புதம்.) வீரப்பா கத்தி வீச, இவர் பதிலுக்கு தடுப்பதற்காக வீச, வினாடி நேரத்தில் கத்தி வீச்சு மிஸ் ஆவது கூட அழகாகவே இருக்கும். இயற்கையும் அதுதானே! பின் கைகளில் உள்ள ஆயதங்களால் தலைக்கு மேலும், பின் கீழிறக்கி உள்பக்கம் வாங்கியவாறும் வீரப்பாவுடன் மோதுவது கொள்ளை அழகு. நீள் மேஜையில் படுத்தவாறு வீரப்பாவின் மார்புகளில் கால்கள் வைத்து உதைத்துத் தள்ளி, பின் அவரை பின்னுக்குத் துரத்தியபடியே பக்கவாட்டுகளில் கத்திகளை வீசிச் சென்று பின் ஓங்கி வீசுவார்.
(வாட்போரைப் பார்த்துக் கொண்டிருக்கும் 'சித்ரபுரி' மகாராணி பானுமதி இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு 'அட!' என்று ஆச்சர்யப்படும் பாணியில் அலட்சியமாய்த் சிரித்துத் தரும் எக்ஸ்பிரஷனும் எக்ஸலென்ட்.)
பின் வீரப்பாவின் ஆயுதங்களைத் தட்டிவிட்டு, அவரை நிராயுதபாணியாக்கி, தன் கைவசம் உள்ள ஆயுதங்களை ஓங்கி நிற்பது அருமை.
சில லாங் ஷாட்களில் அப்போதைய வழக்கம் போல 'டூப்'கள் சண்டைக் காட்சிக்கு பயன்படுத்தப்பட்டிருப்பார்கள். மற்ற காட்சிகளில் குளோஸ்-அப், மற்றும் மிடில் ஷாட்களில் நடிகர் திலகம் வெகு லாவகமாக இந்த சண்டையை செய்திருப்பார். அதில் முக்கியமானது வாள் பயற்சியில் சிறந்த வீரப்பாவின் முரட்டுத் தாக்குதல்களை தடுத்து ஆட்கொள்வது. அவ்வளவு அழகாகத் தடுப்பார். கத்திகளை தலைக்கு மேல் ஓங்கியவாறு மோதும் போதும் பழுத்த அனுபவசாலி போல கைகள் பேசும்.
http://i57.tinypic.com/35aljzk.jpg
பின் வெற்றி வீரனாக சபையோர் முன்னும், மக்களின் முன்னும் அவர் வலது கையை உயர்த்தி, வாகை சூடிய சிரிப்புடன் நடந்து வருவது கொள்ளை அழகு.
நம்மில் பலர் இந்த சண்டைக் காட்சியை மறந்திருப்போம். இப்போது நினைவு படுத்திக் கொள்வோம். இதுபோன்ற நடிகர் திலகத்தின் நிறைய சண்டைக் காட்சிகளுடன் சண்டை சச்சரவுகள் இல்லாமல் தொடர்வோம்.
இதோ உங்களுக்காக இன்று 'youtube' ல் தரவேற்றி.
https://youtu.be/atsL-duJvdI
Mr Neyveliar
I am extremely happy to hear from you that the series of NT's Fighting qualities started with Rani Lalithangi. Kindly
start the other series of NT's Dressing that you have stopped.
Regards
பதிவுகளின் எண்ணிக்கைக்காக
பாராட்டிய நல் இதயங்கள்
ராவேந்திரா அவர்கள்
வாசு அவர்கள்
சிவாஜி செந்தில் அவர்கள்
ஆதவன் அவர்கள்
மற்றும்
திரி நண்பர்கள் அனைவருக்கும்
என்
நன்றிகள்
வாசு சார்
ராணி லலிதாங்கி சண்டைக்காட்சியை இனி எப்போது பார்த்தாலும் உங்கள் எழுத்துக்கள் மனதில் வந்து நிற்கும்.
அருமை.
வாசு,
ஒவ்வொரு முறை சவாலுக்கு இழுக்கப்படும் சண்டை காட்சிகளில் , முதலில் அவர் நடந்து வரும் முறை,reaction ,ஸ்டைல் எப்படி வேறு படும்? ராணி லலிதாங்கி,காத்தவராயன்,என் தம்பி,கர்ணன் என்று. ஜெயித்ததும் நடக்கும் முறை வேறு.
ராஜசுலோச்சனாவிற்கு ஐந்தாறு close up கிடைத்தும் நீ சொன்ன மாதிரி ஜெயித்தது 2 சான்ஸ் கிடைத்த பானுமதியே.
என்னவொரு ரசனை தோய்ந்த எழுத்து? என்னை திருப்பி எழுதும் ஆசை இருந்தாலும் ,வர விடாமல் இப்படி பதிவால் மிரட்டுகிறாயே,படவா ...ராஸ்கல்....
நண்பன் சாகலாம்.நட்பு சாகாதப்பா. என்ன படம் தெரியுதா....CLUE கொடுத்தாச்சி ல்ல ..
வாசு சார்
http://i33.photobucket.com/albums/d9...9/welldone.gif
சண்டை நடுவிலே கொஞ்சம் ஓய்ந்திருந்தது.. இப்போது மீண்டும் ஆரம்பித்து விட்டது..
ஆனால் இந்த சண்டை
http://www.animatedimages.org/data/m...image-0291.gif
நடிப்பில் நடிகர் திலகத்தின் அத்தனை பரிமாணங்களையும் இத்திரியில் கொண்டு வர வேண்டும். எந்தத் துறையிலும் முதன்மையானவர் என்பதை அடுத்த தலைமுறை மட்டுமின்றி நம் ரசிகர்களுக்கே கூட தெரிவிக்க வேண்டியுள்ளது. இதனை செய்யும் பணியில் தங்கள் பங்கு தலையாயதாகும்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
1500 பதிவுகள் செய்த என் அன்பு நண்பர் செந்திலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
http://i62.tinypic.com/6zo3ti.jpg
“நடப்பது சுகமென நடத்து”
டியர் வாசு சார்,
இந்தப்பாடல் பற்றிய தங்கள் ஆய்வுக்கு போவதற்கு முன், முரசு தொலைக்காட்சிக்கு நன்றி. இப்படத்தின் எல்லா பாடல்களையும் ( இது போன்ற பல்வேறு படங்களின் அபூர்வ பாடல்களையும்) அடிக்கடி ஒளிபரப்பி, 'இப்படியும் அருமையான பாடல்கள் தமிழ்படங்களில் வந்துள்ளன' என்பதை மக்களுக்கு காண்பித்து வருவதற்காக.
முன்னமும் சேனல்கள் பாடல்களை ஒளிபரப்பினர். ஆனால் அவைகளைபொருத்தவரை ‘மூன்று தெய்வங்கள்’ படத்தில் ஒரேஒரு பாடல்தான். அது “வசந்தத்தில் ஓர் நாள்” மட்டும்தான் என்று கடிவாளம் கட்டிய குதிரைகளாக இருந்துவந்தனர். வருஷத்துக்கு ஒருமுறை தீபாவளிக்கு மட்டும் “தாயெனும் செல்வங்கள்” பாடலை தேடிஎடுத்து ஒளிபரப்புவர். மற்ற பாடல்கள் அம்போ.
ஆனால் தற்போது முரசு தொலைக்காட்சியில் இப்படத்தின் எல்லா பாடல்களையும் அடிக்கடி பார்க்க முடிகிறது. அவற்றில் ராட்சசி கலக்கியிருக்கும் “நீயொரு செல்லப்பிள்ளை” பாடலில் (சரணம் மெட்டு அட்டகாசம்) சிவகுமார், சந்திரகலா காதலை விட நான் ரசிப்பது வெண்ணிற ஆடை மூர்த்தியின் சேட்டைகளையே.
தற்போது நீங்கள் ஆய்ந்திருக்கும் “நடப்பது சுகமென நடத்து” பாடல் செம்மையான பாடல். மூவரும் நன்றாக என்ஜாய் பண்ணி ஆடியிருப்பார்கள். சொன்னால் நம்பவே மாட்டீர்கள். இந்த பாடலை உங்களை ஆய்வு செய்யச்சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். நீங்கள் உங்களை ரொம்ப வருத்திக்கொள்வீர்கள் என்பதால் கோரிக்கையை கைவிட்டேன். இப்போது சொலாமலே உங்களை வருத்திக்கொண்டுள்ளீர்கள்..
ஆய்வு படு சூப்பர். அழகாக, அருமையாக, அற்புதமாக, அட்டகாசமாக அமைந்துள்ளது. வழக்கம்போல ஆழ்ந்த, கூர்ந்த கவனிப்பு. பாலு, சாய்பாபா குரல் மாற்றத்தை நானும் கவனித்ததுண்டு. (இதேபோல ‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் “பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா”' பாடலில் ஜெயலலிதாவுக்கு சுசீலாவும், லக்ஷ்மிக்கு ஈஸ்வரியும் பாடியிருப்பார்கள். ஆனால் ஒரு பல்லவியில் சுசீலாவின் குரலுக்கு லக்ஷ்மி வாயசைத்துக் கொண்டிருப்பார்.).
‘நடப்பது சுகமென நடத்து’ பாடலில் மூவரும் அருமையாக செய்திருந்தாலும் நம்ம தலைவர் ரொம்ப டாப். சிறிய பொம்மை சாக்சபோனைக்கூட எவ்வளவு சிரத்தையாக பாவத்தோடு வாசிப்பார்.
இன்னொரு சர்ப்ரைஸ் நாகேஷை விட முத்துராமன் நன்றாக ஆடியிருப்பார். பெரும்பாலான படங்களின் பாடல் காட்சிகளில் அட்டென்ஷன் பொசிஷனில் நிற்கும் முத்துவா இந்த அளவுக்கு ஸ்டைல் நடை போட்டிருக்கிறார் என்று ஆச்சரியப்படுவோம். முகத்தில் சிரிப்பும் அப்படியே. இப்பாடலில் நாகேஷுக்கு மூன்றாவது இடமே.
பார்க், பீச் என்று போகாமல் சூப்பரான லொக்கேஷன் செலக்ட் பண்ணியிருப்பார்கள். படத்தின் முதல் விளம்பரமே இந்த பாடல் காட்சியுடன் கூடிய கேள்விக்குறி விளம்பரம்தான் (நண்பர் செந்தில்வேல் அழகாக தந்துள்ளார். அவருக்கு நன்றி).
தொடரை தொடருங்கள். நடப்பது அனைத்தும் சுகமென நடத்துங்கள்.
வாழ்த்துக்கள்.