Originally Posted by
KALAIVENTHAN
அறிவுரை வழங்க வந்துள்ள மாற்று முகாம் நண்பர்களுக்கு,
உங்கள் அபிமான நடிகரை நாங்கள் என்றைக்குமே எதிரியாகவோ போட்டியாகவோ நினைத்தது கிடையாது. காரணம் எங்களுக்கு போட்டி நீங்களே அல்ல. ‘நாளை நமதே’ திரைப்படத்தின் கிளைமாக்சில் நம்பியாரைப் பார்த்து தலைவர் ‘கணக்கு கேட்டான் என்பதற்காக கூட இருந்தவனையே வெளியே அனுப்பினியே’ என்று தலைவர் கேட்கும் போது கூரை இடிந்து விழ கைட்டினோமே, தலைவர் உங்கள் நடிகரை சொல்கிறார் என்று நினைத்தா? அப்போதே நாங்கள் அதையெல்லாம் கடந்து வந்து விட்டோம்.
தேவையில்லாமல் , ஆயிரத்தில் ஒருவன் படம் ஓட்டப்பட்டது என்று நீங்கள் (அதாவது உங்கள் முகாம்) கூறும்போதுதான் கர்ணனை இழுக்க வேண்டியுள்ளது. நீங்கள் ஓடாத படத்தை ஓடியதாக கூறிக் கொள்ளுங்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அனாவசியமாக எங்களை காயப்படுத்த வேண்டாமே? எத்தனை ஏச்சுக்கள் பேச்சுக்கள்? இப்போது ரோஷப்பட்டு பதில் சொல்ல வருகிறீர்களே? தலைவன் படத்தில் தலைவர் பறப்பது போன்று வரும் காட்சியை தேவையில்லாமல் கிண்டல் செய்கிறார் ஒருவர். அம்மனின் கண்களில் இருந்து வரும் ஒளியால் பார்வையற்றவருக்கு கண் பார்வை திரும்பும் என்றால், கலைவாணியின் அருளால் ஊமை பேச முடியுமென்றால் மனிதனால் பறக்கவும் முடியும். எனவே, அறிவுரையை கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்புவது நலம்.
1964 -65 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி தேர்தலில் வேட்டைக்காரனை குறிப்பிட்டு காமராஜர் பேசியது உண்மை. வரலாறு தெரிந்து மனசாட்சியும் உள்ளவர்கள் இதை மறுக்க மாட்டார்கள். உங்கள் மாடரேட்டர் உட்பட (அவருக்கு வரலாறு தெரிவதுடன் மனசாட்சியும் இருக்கும் என்று கருதுகிறோம்)
எல்லா ஊர்களிலும் வருடத்துக்கு ஒன்று அல்லது இருமுறையாவது ஆயிரத்தில் ஒருவன் வெளியிடப்படுவதுதான் மற்ற ஊர்களில் 100 நாட்கள் ஓடாததற்கு காரணம். இப்போதும் கோவையில் மறுவெளியீடு. சென்னையில் நீண்ட இடைவெளிக்கு பின் வெளியானது. இதில் மர்மத்துக்கு என்ன இருக்கிறது? புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்