http://i160.photobucket.com/albums/t...psgvwgfk2b.jpg
http://dinaethal.epapr.in/577901/Din...2015#page/15/1
Printable View
Update of srimgr.com
http://mgrroop.blogspot.in/2015/09/c...ed-by-mgr.html
மக்கள் திலகத்தின் ''கலங்கரை விளக்கம் ''பொன்விழா [ 26.8.1965] நிறைவு நடந்த நேரத்தில் சென்னை - மவுண்ட் ரோடில் வெளியான வெலிங்டன் திரை அரங்கின் முகப்பு நிழற் படம் - இது வரை பார்க்காத அபூர்வ நிழற்படம் .
நன்றி திரு சைலேஷ் சார் .
http://i60.tinypic.com/qys58j.jpg
மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பரும் இயக்குனருமான ப .நீலகண்டனின் நினைவு நாள் இன்று .
சக்ரவர்த்தி திருமகள் 1957 முதல் நீதிக்கு தலைவணங்கு 1976 வரை 17 படங்களை இயக்கியவர் .
''ம'' வரிசையில் மக்கள் திலகத்தின் படங்களும் சாதனைகளும் .
மருத நாட்டு இளவரசி - “மருத நாட்டு இளவரசி” என்ற படத்திலும் எம்.ஜி.ஆர். கதா நாயகனாக நடித்து, அந்தப் படமும் தமிழக மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுச் சிறப்பாக ஓடியது.
மந்திரிகுமாரி -வீரமோகன் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். தன் நடிப்பாலும், சண்டைக் காட்சிகளில் தனது வாள் வீச்சாலும் புகழை வளர்த்துக் கொண்டார். அவருக்கு ஜோடியாக ஜி. சகுந்தலா. மந்திரிகுமாரி டைட்டில் ரோலில் நடித்த மாதுரிதேவி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்."உலவும் தென்றல் காற்றினிலே'. "அந்தி சாயிர நேரம்', "எருமைக் கன்னுக்குட்டி', "வாராய், நீ வாராய்', "அன்னமிட்ட வீட்டிலே' போன்ற அத்தனை பாடல்களும் இன்றைய கால கட்டத்திலும் விரும்பிக் கேட்கும் பாடல்களாகும்.தரமான படப்பிடிப்பும் திறமையான டைரக்ஷனும், வசனமும், பாடல்களும் நடிப்பும், ஒன்றோடு ஒன்று இணைந்து விட்டதால், மந்திரிகுமாரி மறக்க முடியாத படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துவிட்டது.
மர்மயோகி -தமிழ் சினிமாவின் முதல் பஞ்ச் டயலாக் mgr ன் மர்மயோகி - கரிகாலன் குறி வைக்க மாட்டான்.குறி வெச்சா தவறவிடமாட்டான்
மலைக்கள்ளன் -படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'. ரசிகர்கள் மத்தியில், சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்று கட்சி அடிப்படையில் உருவாகி இரு துருவங்களாக்கப்பட்டது இந்த படம் வெளியான பிறகுதான்.
மதுரை வீரன் -எம்.ஜி.ஆர். நடித்த "மதுரைவீரன்" 13_4_1956_ல் வெளிவந்து பல ஊர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி, மதுரையில் வெள்ளி விழா கண்டு, வசூலில் புரட்சி செய்தது. "மதுரை வீரன்" வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. ஏற்கனவே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தி.மு.கழகத்தில், சக்தி வாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். உருவாகத் தொடங்கினார்.
மகாதேவி - மக்கள் திலகம் எம்ஜிஆர் - சாவித்திரி இணைந்த நடித்த மாபெரும் வெற்றி படம் .
மன்னாதி மன்னன் -
1960 – ஆம் ஆண்டு கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களோடு வெளிவந்து, உன்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படமாய்த் திகழ்வதே நடேஷ் ஆர்ட் பிக்சர்சாரின் ‘மன்னாதி மன்னன்!’
இப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞரின் அனைத்துப் பாடல்களும் கருத்துச்சுவை நிரம்பிய பாடல்களே. இருப்பினும் தமிழக வரலாற்றிலேயே, எத்தனையோ சோடனைகளுக்கு நடுவிலும், தொடர்ந்து மூன்றுமுறை வீரத்திற்கும், புகழுக்கும் கட்டியங்கூறும் பாடலாக அமைந்த,
“அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு, நூறிலும் சாவு! தாயகம் காப்பது கடமையடா!”
என்று ஆரம்பமாகி, அனைவரது நாடி நரம்புகளிலும் வீரத்தையும், நெஞ்சங்களில் விவேகத்தையும் உண்டாக்கும் பாடலே உயர்ந்த இடத்தைப் பற்றிக் கொள்ளும் பாடலாகும்!
மாடபுறா - மக்கள் திலகம் நடித்த படம் . சுமாராக ஓடியது '
முகராசி - 12 நாட்களில் தயாரிக்கப்பட்டு 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம் .
மாட்டுக்கார வேலன் - 1970ல் வசூலில் சக்கை போடு போட்ட வெள்ளி விழா படம் .
மீனவ நண்பன் - தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் வந்த வெற்றி காவியம் .
மதரை மீட்ட சுந்தர பாண்டியன் .- மக்கள் திலகத்தின் கடைசி படம் . அவரே இயக்கிய பிரமாண்ட படம் . மக்கள் திலகத்தின் முழு திறமைகளையும் இப்படத்தில் காண முடியும் . மறக்க முடியாதபடம் .