-
மருத்துவம், பொறியியல், வேளாண்மை முதலிய அறிவியல் கலைகளைத் தமிழில் கற்பிக்க முறையான முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. பட்டப் படிப்பு அளவில் தமிழில் கற்பிக்கபபடும் இயற்பியல், வேதியியல், விலங்கியல் முதலிய அறிவியல் பாடங்கள் கூட, பட்ட மேற்படிப்பில், தமிழில் கற்பிக்கப் படுவதில்லை. அதனால்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கமானது, தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பெற வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், கட்டுரைகள் மூலம் வலியுறுத்தியும் வந்தது.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கனவானது, அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னர், 1981 ஆம் ஆண்டில், அன்றைய முதல்வர் மாண்புமிகு டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் நிறைவேறியது. உமாமகேசுவரனார் கூட, தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திருச்சியில் நிறுவிட வேண்டும் என்றுதான் தீர்மானம் இயற்றினார். ஆனால் உமாமகேசுவரனார் வாழ்ந்த தஞ்சையிலேயே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையினையும், பெருந்தன்மையினையும் நாடே அறியும். தமிழுக்காக ஒர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கியதோடு, அப்பல்கலைக் கழகத்திற்கு இடம் ஒதுக்கிய நிகழ்விலும், தான் வள்ளல்தான் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சையில் நிறுவுவது என்று முடிவு செய்த அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், அப்பணி தொடர்பாக தமிழறிஞர்களின் கூட்டம் ஒன்றினைக் கூட்டினார். தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு எவ்வளவு இடம் தேவை? என தமிழறிஞர்களிடம் வினவினார். ஒரு தமிழறிஞர் 50 ஏக்கர் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். மற்றொருவார் தயங்கியவாறே 100 ஏக்கர் ஒதுக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். பெருவள்ளல், பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புன்னகைத்தவாறே, தமிழுக்கு என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம் சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். எனவே இப் பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர் இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார். கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தினை ஒதுக்கி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருந்தகை எம்.ஜி.ஆர்.
http://i39.tinypic.com/sdg07t.jpg
மேலும் தமிழுக்கு என்று தனியே ஓர் பல்கலைக் கழகம் தேவை என்று முதன் முதலில் குரல் எழுப்பிய, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டும் வகையில், தமிழ்ப் பல்கலைக் கழக சட்டப் பிரிவு 18(a) வகுப்பு II (6) ன் படி, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு என்று நிரந்தரமாக, ஓர் இடத்தினையும் வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்களாவார்.
courtesy- karanthai pakkam
-
MAKKAL THILAGAM MGR IN '' NAAN YEN PIRANTHEN '' COMBINED 13 TH WEEK AT BANGALORE -VILAMBARAM
http://i39.tinypic.com/2na2q80.jpg
-
1964
BANGALORE
THOZHILALI
2ND WEEK-VILAMBARAM
http://i43.tinypic.com/20iols.jpg
http://i43.tinypic.com/2eold09.jpg
MATTUKKARA VELAN MUSIC BY K.V.MAHADEVAN .BUT IN THE ADVERTISEMENT WRONGLY PUTM.S.V. NAME .http://i42.tinypic.com/2vd40hk.jpg
-
MATTUKKARA VELAN 5TH WEEK VILAMBARAM .
http://i40.tinypic.com/2v32bzr.jpg
-
14-1-1978
MADURAYAI MEETTA SUNDARAPANDIYAN
BANGALORE
http://i41.tinypic.com/infqms.jpg
-
Quote:
Originally Posted by
ravichandrran
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்த எங்கள்
தங்கமாம் தரணி போற்றும் எங்கள் தலைவனின் அழகை
தங்கப்பதக்கத்தில் தனிப்புன்னகைத் தவழ பதித்திட்ட
தங்க மனம் கொண்ட திருப்பூர் ரவி! தழைக்க உம் பணி!
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..
-
-
Kaliyaperumal Sir
Congratulations on your 1000th post.
-
அன்புச் சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு,
புரட்சித்தலைவர் புகழ் பரப்புவதையே குறிக்கோளாக கொண்டு, அதன்படி செயல் பட்டு, இத்திரியினில், மிகக் குறுகிய காலத்தில், முத்தான 1000 பதிவுகளை வழங்கி, சாதனை படைத்து, மக்கள் திலகத்துக்கு பெருமை சேர்த்து, சிறப்பித்த தங்களுக்கு என் சார்பாகவும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி.ஆர். பொது நலச் சங்கம் (பதிவெண் : 304 / 2007) சார்பாகவும், பாராட்டுக்கள் பல.
தொடரட்டும் தங்களின் சீரிய பணி !
ஒங்குக எங்கள் குல தெய்வம்
எம்.ஜி ஆர். புகழ் !
http://i44.tinypic.com/2ugfbww.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-