-
இணைந்த 50 வது நாளை நோக்கி தொடர்கிறது
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " வெற்றிகரமான
இணைந்த 7 வது வாரம் .
11/11/2016 வெள்ளி முதல் திருவொற்றியூர் எம்.எஸ். எம் .திரையரங்கில்
தினசரி 2 காட்சிகள் (மாலை மற்றும் இரவு )
http://i64.tinypic.com/95rk0y.jpg
தகவல் உதவி : எம்.ஜி.ஆர். பக்தர் - மணலி திரு. சங்கரன் .
-
வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி , சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில்
நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள்
இடம் பெறும் . அதன் விளம்பர பேனரை காண்க .
http://i63.tinypic.com/ok4pwy.jpg
-
-
தகவலுக்கு நன்றி சுந்தர பாண்டியன் சார்.
http://i67.tinypic.com/2q9j95w.jpg
-
'' பரிசு'' -
மக்கள் திலகத்தின் ''பரிசு '' திரைப்படம் இன்று வெளிவந்த நாள் .
15.11.1963.
54வது ஆண்டு துவக்கம் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் , இனிய பாடல்கள் மற்றும் சிறந்த பொழுது போக்கு சித்திரமாக ரசிகர்களுக்கு விருந்து தந்த படம் .
தன்னுடைய ரசிகர்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் தந்த ''பரிசு ''- திரைப்படம் .
ரசிகர்கள் எம்ஜிஆருக்கு தந்த'' பரிசு'' - எங்க வீட்டு பிள்ளை '' எம்ஜிஆர்..
மக்கள் தந்த ''பரிசு'' - தமிழக கோட்டை .
திரை உலகம் தந்த '' பரிசு''' - திரை உலக முடிசூடா மன்னன் எம்ஜிஆர் .
மத்திய அரசு தந்த ''பரிசு'' - பாரத் மற்றும் பாரத ரத்னா
இனைய தளம் தந்த '' பரிசு'' - மையத்தின் ''மக்கள் திலகம் எம்ஜிஆர் -எம்ஜிஆர் படங்கள் ''
எம்ஜிஆர் திரிக்கு கிடைத்த'' பரிசு'' - எம்ஜிஆர் நட்பு வட்டம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முன்னிட்டு நமக்கு கிடைக்க உள்ள ''பரிசு '' ஏராளம் .
காத்திருப்போம் .....வரவேற்போம்.
-
ராஜ் டிவியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் - மூன்றெழுத்து - புதிய தொடர் விரைவில் ஆரம்பம் என்று விளம்பரம் வந்துள்ளது .
-
தமிழகம் எம்.ஜி.ஆர் பக்கம்,
தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வுகள் என்று புரட்டிப் பார்த்தால் வேலூர் சிப்பாய் போராட்டம், 1950–ல் சென்னை மாகாணம் அமைப்பு, 1968 தமிழகம் என்ற மாநில அந்தஸ்து, 1960களில் இந்தி எதிர்ப்பு, தேதிய அளவில் தமிழகத்தை புதிய கோணத்தில் பார்க்க வைத்தது.
பிறகு 1972–ல் எம்.ஜி.ஆர். தி.மு.கவில் இருந்து நீக்கப்படுகிறார். அதற்கு முன்பு கட்சியை விட்டு இந்திரா காந்தியை வெளியேற்றியவுடன் நாடு முழுவதும் மிகப்பரபரப்பாக பேசப்பட்டது போல் எம்.ஜி.ஆர் நீக்கப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் விவாதிக்கப்பட்டது. தேசம் முழுவதும் எதிரொலித்தது.
அதுவரை அரசியலில் ஒரு கட்சியை துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்று எண்ணியிராத எம்.ஜி.ஆர் நாடு தன் மீது வைத்து இருந்த நம்பிக்கை, அன்பு, பாசத்தை புரிந்து கொண்டு ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு மகத்தான இயகத்தை துவக்க முன்வந்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். மீது பாசம்
அன்று எம்.ஜி.ஆர் மீது வைத்திருந்த அன்பும் பாசமும் அவரது தலைமைக்கு பாராட்டாக, அவரது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கோட்பாடுகளுக்கு கிடைத்த வரவேற்பு அபரீதமானது.
அறிஞர் அண்ணாவின் ‘இதயக் கனி’ என்றும் பாராட்டப்பட்டார்.
மக்களுக்காக களம் இறங்கி ஓர் உன்னதமான மக்கள் ஆட்சி நடத்தினார். அதன் பலனாக தமிழகத்தில் ஏழை எளியோருக்கு புது வாழ்வு தரும் மகத்தான ஆட்சியை கண்டோம்.
1972–ல் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றகழகம், 1987–ல் எம்.ஜி.ஆரின் மறைவு வரை 15 ஆண்டுகளுக்கு அவரது தலைமையில் இயங்கியது.
1977–ல் 155 இடங்களில் தமிழகத்தில் போட்டியிட்டு 132 இடங்களில் வென்று அண்ணா தி.மு.க தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் பதவியில் அமர்ந்தார். பிறகு மீண்டும் இரண்டே ஆண்டுகளில் 1980–ல் 177 இடங்களில் நின்று 129 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்.
எதிர்கட்சியாக இருந்த தி.மு.கவை தன் வசமாக்கி கொண்ட கருணாநிதி கும்பலை மீண்டும் தலைநிமிர முடியாமல் வீழ்த்தியவர் எம்.ஜி.ஆர் ஆவார். பிறகு 1984–ல் மீண்டும் தமிழகத்தில் 134 இடங்களை பிடித்து மூன்றாவது முறையாகவும் தொடர்ந்து ஆட்சி செய்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தை எம்.ஜி.ஆரின் வழியில் நடத்திச் செல்ல முன் வந்த திறமைசாலி ஜெயலலிதா என்பதை தமிழகம் அடையாளம் கண்டு கொண்ட பிறகு அண்ணா தி.மு.கவை முழுமையாக அவர் வசம் ஒப்படைத்ததுடன் தமிழகத்தில் நல்லாட்சியை தந்தது.
தேசிய அரசியலில் தமிழகம்
தமிழகம் தேசிய அரசியலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற ஆவலுடன் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அண்ணா தி.மு.க கட்சிக்கு ‘அனைத்து இந்திய’ என்ற அடை மொழியையும் சேர்த்துக்கொண்டு அண்ணா தி.மு.க என்று உருவாக்கினார்.
இப்படி தமிழகத்தில் மக்கள் வளர்ச்சிக்காக பாடுபட்ட எம்.ஜி.ஆரை அன்று தமிழகம் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் அமர்த்தி 11 ஆண்டுகளுக்கு கருணாநிதி மீண்டும் எழ முடியாத நிலையை உருவாக்கி தந்தது தமிழகம்.
1979–ல் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் இருந்து இரு எம்.பிகள் மத்திய அமைச்சர்களாக பணியாற்றும் வாய்ப்பையும் எம்.ஜி.ஆர் ஏற்படுத்தினார். அதுவே காங்கிரஸ் அல்லாத திராவிட இயக்கத்தினர் மத்திய அமைச்சரவையில் முதல் முறையாக இடம் பிடித்த நிகழ்வாகும்.
-
தற்போது திருச்சி பேலஸில் ,நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "அரச கட்டளை "
வெற்றி நடை போடுகிறது .
http://i65.tinypic.com/30t5k09.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
-
இன்று பிற்பகல் 3 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த " மந்திரி குமாரி "
பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/azb6op.jpg
-
நாளை (16/11/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். " எங்கள் தங்கம் " ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/nmz13n.jpg