Thanks for the Information Ravichandran Sir.
Printable View
மக்கள் தலைவர் தமிழக முதல்வராக இருந்த போது, சென்னையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முழங்கால் அளவு நீரில் சென்று, மக்களை சந்தித்து அறுதல் கூறிய போது :
http://i66.tinypic.com/m7qmhw.jpg
குறிப்பு : அப்போது மக்கள் பட்ட துயரம், நம் பொன்மனசெம்மலை பார்த்த மாத்திரத்தில் நீங்கி, அவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.
ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. கோயம்புத்தூரில் அருகருகே உள்ள தியேட்டர்களில் வெளியிடப்பட்ட வசூல் சக்கரவர்த்தியின் இரண்டு படங்களும் இந்த மழை சீசனில் வசூல் மழை பொழிந்திருக்கிறது. இரண்டு படங்களும் அடிக்கடி திரையிடப்பட்ட படங்கள். என்றாலும் இவ்வளவு வசூல் என்பது சந்தோசமாக உள்ளது. தகவல் சொன்ன ஹரிதாஸ் அவர்களுக்கும் நன்றி. எல்லாப் புகழும் தலைவருக்கே.
வேட்டியை மடித்து கட்டி முழங்கால் தண்ணீரில் நடந்து சென்று வெள்ள பாதிப்பை பார்வையிடும் ஏழைப் பங்காளரின் படத்தை பதிவிட்டதற்கு அன்பு சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
1986ம் ஆண்டு சென்னையில் மழையால் நமது தெய்வம் வாழ்ந்து வந்த ராமாவரம் தோட்டத்திலும் தண்ணீர் புகுந்தது. அப்படியும் ‘எல்லாருக்கும் ஆனது எனக்கும்’ என்று கூறி தோட்டத்தில் இருந்து வெளியேற மறுத்தார் புரட்சித் தலைவர். இத்தனைக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சமயம் வேறு. அவரை குடும்பத்தாரும் அதிகாரிகளும் வற்புறுத்தி ஓட்டலில் தங்க வைத்தனர். இந்த செய்தி பேப்பரில் அப்போது வந்தது.
கூட்டங்களில் பேசும்போது மழை பெய்தால், ‘மக்கள் நனையும்போது எனக்கு மட்டும் என்ன?’ என்று கூறி தானும் நனைந்தபடி பேசுவார். மயிலாப்பூர் மாங்கொல்லையில் அப்படி ஒரு கூட்டத்தில் நானும் நனைந்தபடி அவரை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அப்படிப்பட்ட பொன்மனத் தலைவனை இனி எப்போது பார்ப்போம்?
மதுரை மீனாட்சி மினி பாரடைசில் , இன்று (20/11/2015) முதல்
புரட்சி தலைவர் / பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த " நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது.
தகவல் உதவி : மதுரை எஸ். குமார்.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வரும் வெள்ளி முதல் (27/11/2015)
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் " ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட உள்ளது.
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
இன்று முதல் (20/11/2015)
சென்னை மகாலட்சுமியில், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக
மன்னன் எம்.ஜி.ஆர். வழங்கும் " சங்கே முழங்கு " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்.
20.11.1983
MAKKAL THILAGAM MGR HONOURED BY TAMIL CINE FIELD. GRAND GALA FUNCTION.
http://i65.tinypic.com/288rsq8.jpg