-
இதய வீணை படத்தில் இடம் பெற்ற '' காஷ்மீர் ...பாடல் மூலம் மக்கள் திலகம் அவர்கள்
ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தந்த விருந்தும் - தத்துவங்களும் மறக்க முடியாது .
இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீர் பகுதிகள்
ரோஜா மலர் தோட்டம் - காஷ்மீர் வீதிகள் -அழகிய ஓடை என்று பிரமாதமான சூழ் நிலையில்
கல்லூரி மாணவிகளுக்கு வழிகாட்டியாக புதுமையான தோற்றத்தில் மக்கள் திலகம்
அறிமுகமாகும் பாடலின் துவக்க வரிகளான வணக்கம் என்பதை பல மொழிகளில்
கூறிவிட்டு இயற்கை காட்சியிகளை அழகாக வர்ணித்து பாடும் மக்கள் திலகம் ''எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன் என்று பாடும்போது 1972ல் அரசியல் வெற்றிக்கு வித்திட்ட வரிகள் என்பதை உணரலாம் .
படத்தின் நாயகி மக்கள் திலகத்திடம்
"ஆமா , நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க ?" என்று கேட்கும் போது
மக்கள் திலகம் பாடும் வரிகள்
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
ஒலிக்கும்போது மக்கள் திலகத்தின் முக பாவமும் ,நடிப்பும் பிரமாதம் .
ஆடைகள் கூடைகள் கம்பளம் ஆயிரம் காணலாம் இவ்விடம்
கைத்தொழில் வேலை செய்யும் ஏழை கண்ணீரை மாற்றுகின்ற நாளை
நாமெல்லாம் சிந்தித்தால் நாடெல்லாம் முன்னேறும்
மண்ணெல்லாம் பொன்னாகும் பொற்காலம் உண்டாகும்
பாடலில் கூட தொழிலாளிகள் மேன்மை பற்றியம் அவர்கள் வாழும் முறை பற்றியும்
பழமொழி ஒன்றையும் அழகாக பாடியிருப்பார் .
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்
என்று நாட்டு பற்றையும் , ராணுவ வீர்களின் பற்றி பெருமையுடனும் , தேச தலைவரை
பற்றியும் தன்னுடைய தலைவரின் காஞ்சியின் பெருமை பற்றியும்
ஒரே பாடலில் இத்தனை இனிமையான கருத்துக்களை எடுத்து சொல்லி கண்ணுக்கும்
மனதிற்கும் விருந்து படைத்த மக்கள் திலகத்தின் ''இதய வீணை ''பாடல்
1972 அரசியல் - சினிமா வரலாற்றில் ஒரு புரட்சி உண்டாக்கி சாதனை புரிந்த
பாடல் . என்றென்றும் நினைவில் இருக்கும் இனிய பாடல் .
-
-
PROF Elan சொல்கிறார்:
http://i39.tinypic.com/sxjbbn.jpg
எம்ஜிஆர் ஒரு இயக்கம் மட்டுமல்ல ஒரு வித மயக்கம் எனக்கு மட்டுமல்ல எம்ஜிஆர் படங்கள் இன்றும் பாடங்களாகதான் பலருக்கும் தெரிகின்றன
இன்றும் நான் கல்லூரியில் உரை ஆற்றும்ரும்போது கூட அவரது பாடல்கள் உதவி புரிந்திருக்கின்றன நல்லதை பார்த்தவுடன் புரிவதற்க்கு அவருடைய தோற்றமும் செயலும் பெரிதும் துணை புரிந்திருக்கின்றன அவையனைத்தும் மிக கவனத்துடன் கையாளபட்டவை, ஒரு டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஒரு 100 பேருக்கு சாப்பாடு போட்டிருக்கலாம் அவரது சத்துணவு திட்டம் ஒரு தலைமுறைக்கு சாப்பாடு போட்டுவிட்டது என்பது உண்மை இப்பொழுது நடக்கும் அரசியல் நிலமைகளை பார்க்கும்போது அவருடிய ஆட்சி காலம் மிக சிறந்ததாகவே தெரிகிறது அதை பற்றி மிக விரிவாக பேசலாம்
மிகவும் பின் தங்கிய பகுதியில் பிறந்து வளர்ந்த என்னை போன்றவர்கள் பின்னாளில் IIT இல் படிபதர்க்கும் ஏபிஜஏ KALAM உடன் பணி புரியும் நிலை அடைவதற்க்கும் தூண்டுகோலஆக எம்ஜிஆர் படங்கள் இருந்தன என்பது நான் கண்ட உண்மை
courtesy- prof' elan sir
-
-
VETTAIKARAN - 1964
BANGALORE
5TH WEEK
SHARADHA
AJANTHA
MYSORE - RAJKAMAL
http://i44.tinypic.com/27yr8mu.jpg
-
-
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதுதான் என் அதிகபட்ச ஆசை. ஆனால் பரந்த அறிவு கிடைக்கும் என்ற காரணம் காட்டி மாநிலக் கல்லூரியில் சேர்த்துவிட்டார் என் சகோதரி (தூயநெஞ்சக் கல்லூரியிலேயே இருந்திருக்கலாம். ஏதோ தெரிந்ததை வைத்து நிம்மதியாக வாழ்க்கையைக் கழித்திருக்கலாம்..).
வேண்டா வெறுப்போடு சென்னை வந்தாலும், மிகுந்த விருப்போடு நான் முதலில் பார்த்த இடங்கள் ராமாவரம் தோட்டம்… அடுத்து புரட்சித் தலைவரின் ஆற்காடு இல்லம். அப்போது அவர் முதல்வர். அவரைப் பார்க்க எங்கள் ஊர் எம்எல்ஏ அன்பழகனுடன் ராமாவரம் தோட்டத்துக்குப் போயிருந்தோம். சூரிய தரிசனம் என்பதற்கு நிகரான தரிசனம் அது!
அவரை ஒரு மாபெரும் அரசியல் தலைவர் என்று சொல்வது மன்னிக்க முடியாதது. அரசியல், தலைவருக்கான வரையறைகள் அனைத்தையும் தாண்டிய அவதார புருஷன் அவர். என் வாழ்நாளில் நான் பார்த்த ஒப்பில்லாத மனிதர். அந்த சந்திப்பு, ராமாவரம் தோட்டம், பின்னொரு நாளில் தலைவரை கோட்டையில் சந்தித்தது பற்றி பின்னொரு நாளில் எழுதுகிறேன்.
தலைவர் மறைந்த சில மாதங்கள் கழித்து, நினைவில்லமாக மாறிவிட்ட ஆற்காடு இல்லத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கண்ணீருடன் சுற்றிப் பார்த்த ஒரு மழை நாள் இன்னும் மனதில் இருக்கிறது. இல்லத்தின் காவலர் முத்து சொன்ன அத்தனையும்… ‘கடவுள் இருந்தார், எம்ஜிஆர் உருவில்’ என்ற எண்ணத்தை இன்னும் வலுப்படுத்தியது!
அரசியல், சினிமா, சமூக மதிப்பீடுகள் என அனைத்திலும் என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய மகாத்மாவாய் தெரிந்தார், தெரிகிறார் எம்ஜிஆர். வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வார்த்தைகளுக்கு, நூறு சதவீதம் உயிர் கொடுத்த பெருந்தகை இந்த புரட்சித் தலைவர்!
பத்திரிகையாளனான பிறகு, கிட்டத்தட்ட இருபது முறை நான் பார்த்தது அமரர் எம்ஜிஆர் இல்லத்தைத்தான். அவரது ஒவ்வொரு நினைவு நாள் அல்லது பிறந்த நாளில் என்னையும் அறியாமல் என் கால்கள் தேடிச் செல்வது அவர் சமாதியை அல்ல… இந்த ஆற்காடு இல்லத்தைத்தான்.. அந்த வீட்டை முழுசாய் பார்த்து முடித்து வெளியில் வரும்போதும், அத்தனை தன்னம்பிக்கை!
சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் இருக்கிறது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஒரு காலத்தில் பக்கத்து, பக்கத்து தெருக்காரர்கள். தெற்கு போக் ரோடு வழியாக சிவாஜியின் அன்னை இல்லத்தை கடந்து சென்றால் இடது பக்கமாக ஆற்காடு சாலையில் தலைவரின் இல்லம்.
தமிழ் சினிமாவின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆளுமை வாழ்ந்த இல்லம் இது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் யாராலும் நம்ப முடியாத எளிமையான இல்லம்.
1990ஆம் ஆண்டு ஜானகி எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தாலும், அதற்கு முன்பிருந்தே தலைவரின் ரசிகர்கள் திரளாக வந்து தரிசித்து சென்ற இல்லம் இது. தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்த பல முடிவுகள் பிறந்த இடமும் இதுதான்.
எம்.ஜி.ஆர் மறைந்து இருபத்தி ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இல்லத்துக்கு வந்து கண்ணீர் மல்க அவரை நினைத்து அஞ்சலி செலுத்துவதைப் பார்க்க முடிகிறது
.http://i40.tinypic.com/16job6c.jpg
இனி இல்லத்தைச் சுற்றி வருவோம்…
நினைவு இல்லத்தின் தரை தளப் பகுதியில் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் வைக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் 90 சதவிகிதப் படங்களுக்கு நூறாவது நாள் விழா கேடயமும் நினைவுப் பரிசும் கொடுத்திருக்கிறார்கள். கீழ் தளத்தின் மையத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய 4777 எண்ணுள்ள, சைரன் பொருத்தப்பட்ட அம்பாஸிடர் கார் புதுமெருகோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே மைக்குகள், செயற்கைக் கோள் ரேடியோ வசதி. இப்போதும் நல்ல கண்டிஷனுடன் இருக்கும் கார் இது என்றார்கள் பாதுகாவலர்கள். இது தலைவரின் சொந்தக் கார். கடைசி வரை அவர் அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தவில்லை!
முதல் தளத்தில் எம்ஜிஆர் பெற்ற பரிசுகள், டாக்டர் பட்டம் பெற்றபோது அணிந்த அங்கி, இடுப்பில் செருகும் குறுவாள், சாட்டை, மெகா சைஸ் பேனாக்கள், கூலர்ஸ், அந்த பிரத்யேக ஷூ என்று அவர் பயன்படுத்திய பொருட்கள் பெருமளவு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தலைவர் வளர்த்த சிங்கமான ராஜாவின் பதம் செய்யப்பட்ட பிரம்மாண்ட உடலைப் பார்க்கும்போதே பிரமிப்பாக உள்ளது.
பெருந்தலைவரைப் போலவே இந்த புரட்சித் தலைவரும் ஒரு படிக்காத மேதைதான். அவரது நூலகம் இன்னொரு ஆச்சர்யம். கிட்டத்தட்ட ஐயாயிரம் நூல்கள்… பெரும்பாலும் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ் இலக்கியம் மற்றும் ஆங்கில நூல்கள் இடம்பெற்ற அந்த நூலகம், எம்ஜிஆரின் அறிவுப் பசிக்கு சின்னமாக நிற்கிறது.
எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அந்த சிறிய அலுவல் அறை அப்படியே இருக்கிறது. மேஜையில் அவரது தொப்பி, கண்ணாடிகள், பேனாக்கள்.
அலுவல் அறை வழியாக மீண்டும் கீழ்தளத்தின் முன்பக்கத்துக்கு படிக்கட்டுகள் வழியாக வந்தால், அங்குள்ள அறைகளில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் ஸ்டில்கள் வரிசையாக – சதிலீலாவதியிலிருந்து, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (136 படங்கள்) பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலம் தமிழ் சினிமாவில் அவர்தான் ராஜாதி ராஜா. பெரும்பான்மையான படங்கள் நூறு நாட்கள் அல்லது வெள்ளி விழா அல்லது அதற்கும் மேல் நிறைந்த மக்கள் திரள், குறையாத வசூலுடன் ஓடியவை.
வெளியில் வந்தால், புரட்சித் தலைவர் பற்றிய புத்தகக்கள், சிடிக்கள், கேசட்டுகள், டிவிடிக்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எத்தனை முறை கேட்டாலும் சிலிர்ப்பூட்டும் அவரது மணிக்குரலில் வெளியான பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள், டிவிடிக்களுக்கு அத்தனை மவுசு… இவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த நூற்றாண்டிலும்!
குறிப்பு: சென்னையில் என் மனம் லயித்த இடங்களைப் பற்றி தொடர்ச்சியாக எழுத ஒரு விருப்பம். முடிந்த வரை பெரிய இடை வெளி விடாமல் எழுத முயற்சிக்கிறேன். இஷ்ட தெய்வத்தை வணங்கி முதல் அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற வழக்கை நானும் மீற விரும்பவில்லை. அமரர் எம்ஜிஆரை வணங்கி முதல் பகுதியை எழுதியுள்ளேன்!!
Courtesy- vino - net
-
Quote:
Originally Posted by
kaliaperumal vinayagam
வண்ணமிகு கானகத்தில் மக்கள் திலகம்..
அருமையான படம்...
பதிவுக்கு நன்றி...கலியபெருமாள் ஸார்.
-
-