-
-
நவராத்திரி திரைப்படம் பற்றிய விக்கிபீடியா வில் முதல் பாராவை படித்து நொந்து நூலானேன்!
Navarathri ("Nine Nights") is a 1964 Tamil Drama film by A.P. Nagarajan. The film is well known for starring Sivaji Ganesan in nine distinct roles getting connected in nine nights within the film, thus the title. The record of playing most number of roles in one Tamil film was long held by Sivaji Ganesan until 2008 when it was broken by Kamal Hassan in Dasavathaaram.
இதையும் பிரேக் செய்ய,கேப்டனோ,சூர்யாவோ "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" ரீமேக் try செய்யலாமே!
அதற்கு பிறகு யாராவது "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" ரீமேக் எடுக்கும் வரை அதுதான் ரிகார்டாக இருக்கும்.
அனைவர்க்கும் தலைவர் பூஜை வாழ்த்துக்கள்!
-
வாசு சார்
நவராத்திரி வாழ்த்தினை இவ்வளவு சிறப்பாக வேறு யாராவது கூற முடியுமா என்பது தெரியவில்லை. மிகவும் அற்புதம். மிக்க நன்றி
-
விஜய தசமி நற்செய்தி.
நீண்ட நாட்களாக காத்திருந்த இளைய தலைமுறை திரைப்படம் தற்போது நெடுந்தகடாக வெளிவந்துள்ளது.
http://i1146.photobucket.com/albums/...ps2e60730b.jpg
http://i1146.photobucket.com/albums/...ps2f13d865.jpg
-
டியர் வாசுதேவன் சார்,
எதையும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் செய்யும் தங்கள் கைவண்ணத்தில் நவராத்திரி தொகுப்பு மிக அருமை. ஒன்பது ராத்திரி ஸ்டில்களையும் ஒரே சைஸில் வரிசைக்கிரமமாக பதித்து அழகூட்டியிருக்கிறீர்கள்.
எல்லா நிழற்படத்திலும் சாவித்திரி இருக்கிறார், சரி. ஆனால் ஒவ்வொரு நிழற்படத்திலும் அவரோடு இருக்கும் ஒன்பது வெவ்வேறு நடிகர்கள் யார் யார்?. ரொம்ப உற்றுப்பார்க்கும்போது நடிகர்திலகத்தின் சாயல் தெரிகிறது....
-
நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர் (5)
சி.ஐ.டி.சகுந்தலா (என்கிற) ஏ.சகுந்தலா
(எச்சரிக்கை : இது பராட்டுப்பதிவு அல்ல, கண்டனப்பதிவு)
1960- களில் குரூப் டான்சர்களில் ஒருவராக ஆடிக்கொண்டிருந்த ஏ.சகுந்தலாவுக்கு தனது திருமலை தென்குமரி, கண்காட்சி படங்களில் கொஞ்சம் சொல்லிக் கொள்கிறார்ற்போல ரோல்களைக் கொடுத்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஏ.பி.நாகராஜன். பின்னர் கே.பி.யின் புன்னகையில் வில்லியாக சின்ன வேடம் ஏற்றார்.
நடிகர்திலகத்தின் படங்களில் ஒரு ஐட்டம் நடிகை அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் வாய்ப்புப் பெற்றிருக்கிறார் என்றால் அது ஏ.சகுந்தலாதான். (ஜி.சகுந்தலா என்ற பெயரில் ஒரு குணசித்திர நடிகை இருக்கிறார். அவர் வேறு). ஏ.சகுந்தலா ஐட்டம் கேர்ள் கம் வில்லியாக பல படங்களில் நடித்துள்ளார். நடிகர்திலகத்தின் பொற்கால ஆண்டுகளில் ஒன்றான 1972-ல் தவப்புதல்வன், வசந்த மாளிகை, நீதி, 1973-ல் பாரதவிலாஸ், ராஜராஜசோழன், பொன்னூஞ்சல், எங்கள்தங்கராஜா என தொடர்ந்து அன்பைத்தேடி, ஜஸ்டிஸ் கோபிநாத், இமயம் உள்பட பல்வேறு படங்களில் வாய்ப்புப் பெற்றவர். 'அந்தப்பக்கம்' மணியான பத்திரிகையாளர் தயாரித்த காஷ்மீர் படம் தவிர வேறெதிலும் நடித்ததாக எனக்குத் தெரியவில்லை. (மீண்டும் சொல்கிறேன், எனக்குத்தெரியவில்லை அவ்வளவுதான்).
ஆணுக்குப் பெண் வேஷம் போட்டதுபோன்ற முகம், கனிவாகச்சிரிக்க நினைத்தாலும் கள்ளத்தனமான சிரிப்பே எட்டிப்பார்க்கும் முக அமைப்பு. எந்த வகையிலும் சேர்க்க முடியாத உடலமைப்பு, நளினமே தென்படாத செயற்கையான நடன அசைவுகள், பேச்சிலும் செயற்கைத்தனம் இப்படி எந்த வித வசீகரமும் இல்லாத ஒரு செயற்கை நடிகை.
பொதுவாக திரையுலகம் என்பது நன்றியோடு இருப்பவர்கள் மைனாரிட்டியாகவும், நன்றி மறந்தவர்கள் மெஜாரிட்டியாகவும் இடம் பெறக்கூடிய ஒரு உலகம். அதில் ஏ.சகுந்தலா மெஜாரிட்டி கூட்டத்தில் இடம் பெற்றிருப்பதுதான் துரதிஷ்டம். நடிகர்திலகத்தின் படங்களில் எந்த ஐட்டம் நடிகைக்கும் கிடைக்காத தொடர் வாய்ப்புக்கள் கிடைத்தும் அவரை முற்றிலும் மறந்து போனார். எந்த நிகழ்ச்சியிலும் அவரை நினைவு கூர்வதே கிடையாது, என்பது மட்டுமல்ல தனக்கு திரைப்படங்களில் வாய்ப்பே தராதவர்களைப் பற்றி 'ஆஹா.. ஊஹூ..' என்று புகழ்வதும், அவர்கள் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில்மட்டும் கலந்துகொள்வதுமாக, தன் நன்றி மறந்த நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்திக்கொள்கிறார்.
தான் பங்கேற்ற 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கூட வசந்தமாளிகை படம் பற்றிக் குறிப்பிட்டபோது நடிகர்த்திலகத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், 'வசந்தமாளிகையே நான்தான் என்று எல்லோரும் சொல்வார்கள். அந்த அளவுக்கு நான் இல்லையேல் வசந்தமாளிகை இல்லை எனலாம்' என்கிற ரீதியில் பிதற்றியிருந்தார். இத்தனைக்கும் அந்தப்படத்தில் இவர் வந்தது ஒரே ஒரே பாடலுக்கு மட்டுமே. ஈஸ்வரியின் குரலுக்கு வாயசைத்தது தவிர சொந்தக்குரலால் ஒரு வசனம் கூட பேசவில்லை. 'குடிமகனே' என்ற அந்தப்பாடலை வெட்டியெடுத்து விட்டால்கூட படத்துக்கு எந்தப்பாதிப்பும் வந்திருக்கப் போவதில்லை.
தவிர நடிகர்திலகத்தின் எந்த நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொள்வதில்லை. மாறாக மாற்றுமுகாம் நிகழ்ச்சிகள் அனைத்திலும் இவரது அட்டெண்டன்ஸ் உண்டு. நடிகர்திலகத்தின்மீது நன்றி மறந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஏ.சகுந்தலாவுக்கும் இடம் உண்டு....
-
The other day my daughter was doing her home work and she asked me a doubt. " Appa, portrait' na enna ? " .
Without hesitating for a second, I immediately replied, " Pasa Malar padathula Sivaji kannathula kai vecha madhiri or padam varumla, adhudhan portrait ". Instinct !!!
Raghavendra sir's present avtar reminded me of this incident.
-
கார்த்திக் சார்
நடிகர் திலகத்தின் படங்களில் ஏ.சகுந்தலாவும் இடம் பெற்றிருந்தார் என்ற ஒற்றை வரியோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் கூட போதும். தங்களுடைய பொன்னான நேரம், உழைப்பு, ஆற்றல் அனைத்தையும் இவருக்காக செலவழி்த்திருக்க வேண்டாம்.
-
பயணம் திரைப்படத்தில் ஓரிரு காட்சியில் ஒரு இடத்தில் நடிகர் திலகத்தின் வெற்றிக் காவியமான கௌரவம் திரைப்படத்தின் போஸ்டர் இடம் பெற்றுள்ளது. அதன் நிழற்படம் நம் பார்வைக்கு
http://i1146.photobucket.com/albums/...ps14e810c1.jpg
http://i1146.photobucket.com/albums/...psf132cfae.jpg
http://i1146.photobucket.com/albums/...psa479995a.jpg
-
டியர் வாசுதேவன் சார்,
கார்த்திக் சார் குறிப்பிட்டமாதிரி நவராத்திரியை வித்தியாசமாக புகைப்படங்களை வரிசைப்படுத்தியிருந்தது அருமை. நன்றி.