-
பறக்கும் பாவை -1966 மற்றும் ஊருக்கு உழைப்பவன் -1976 படங்கள் பற்றிய அருமையான நினைவலைகளை நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .இரண்டு படமும் நமக்கு விருந்த படைத்த படங்கள் . மறக்க முடியாத காவியங்கள் .
15.11.1963 அன்று தீபாவளி விருந்தாக வந்த மக்கள் திலகத்தின் படம் ''பரிசு ''. அன்றைய தினம் நண்பர்கள் தங்கள் பரிசு படத்தை பற்றிய அனுபவங்களை நம்முடன் பகிரிந்து கொள்ளலாம் .
-
இன்று இசை அரசி சுசீலாவின் 80 வது பிறந்த நாள் . மக்கள் திலகம் எம்ஜியார் திரியின் சார்பாக அவருக்கு நம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுகிறோம் .
http://i58.tinypic.com/34sqxr6.jpg
-
-
-
-
-
பெரும்பாலான நகைச்சுவைக் கலைஞர்களின் இறுதிக்கால வாழ்க்கை , ஏனோ இன்பமாக இருந்ததில்லை...!
“கரகாட்டக்காரன்” படத்தில் இடம்பெற்ற வாழைப்பழக் காமெடியை நம்மில் யாரால் மறக்க முடியும்..?
நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் “கரகாட்டக்காரன்” படத்திற்குப் பின் கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பணமும் புகழும் குவிந்தது.
ஆனால் அந்தக் காட்சியை எழுதி உருவாக்கிய ஏ.வீரப்பன்....?
இதற்கு அவர் மனைவி பொற்கொடியின் வார்த்தைகளில் பதில் :
"அவரு எழுதுன வசனத்தப் பேசி நடிச்சவங்கள்ளாம் லட்சம் லட்சமா பணம் சம்பாதிச்சுக் குவிச்சிட்டாங்க. ஆனா அவரு கடைசி வரைக்கும் பொழைக்கத் தெரியாதவராத்தான் இருந்தாரு.
தயாரிப்பாளர்கள் கொடுக்கறத வாங்கிக்குவாரு. காமெடி நடிகர்களும் அவரை சரியா கண்டுக்கவே இல்ல. அவரும் அவங்ககிட்ட ஒரு உதவியையோ நன்றியையோ கடைசிவரைக்கும் எதிர்பாக்கவே இல்ல!
இதையெல்லாம் நீ யாருகிட்டேயும் வெளியே சொல்லக்கூடாதுன்னு எங்கிட்ட அடிக்கடி கண்டிப்பாரு!"
கவுண்டமணி காலத்தில் காமெடி காட்சிகளை எழுத மட்டுமே செய்த ஏ.வீரப்பன் ,நாகேஷ் காலத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்....
1964 -ல் "படகோட்டி" படப்பிடிப்பில் நாகேஷும் , வீரப்பனும் நடித்துக் கொண்டிருந்தார்களாம்.... நாகேஷுக்கு மீனவத் தலைவர் வேஷம். வீரப்பன் அவருக்கு உதவியாளர்.
ஒரு காட்சியில் அவர்கள் கடலில் மீன் பிடிக்கப் போய்க் கொண்டிருக்கும்போது .... படகின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் நாகேஷ் , சட்டென நிலை தடுமாறி கடலில் விழுந்து விடுவது போல காட்சி... பக்கத்தில் இருக்கும் வீரப்பன் உடனே எழுந்து, நாகேஷைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல்,
"அடுத்த தலைவர் நான்தான்!” என சந்தோஷமாக சத்தம் போட்டாராம்.....!
கரையில் நின்று படப்பிடிப்பைக் கவனித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் , ஏ.வீரப்பனின் அந்த டைமிங் காமெடி டயலாக்கை பார்த்து விட்டு ... கைதட்டி சிரித்து ரசித்தாராம்...
படப்பிடிப்பு முடிந்து படகு கரை திரும்பியது...
எம்.ஜி.ஆர். வீரப்பனின் கைகளைப் பிடித்துக் குலுக்கினார்.
" நாட்டுல நடக்குற அரசியல ஒரு சின்ன டயலாக்ல பளிச்சுன்னு சொல்லிட்டீங்க... பிரமாதம்!” ...என்று சொல்லி அள்ளிக் கொடுத்த தொகை 5,000 ரூபாயாம் ..
ஆனால் ..அதற்குப் பின் யாரும் இப்படி அள்ளி அள்ளி கொடுக்கவும் இல்லை...அவ்வப்போது கிடைக்கும் பணத்தை ஏ வீரப்பன் காப்பாற்றிக் கொள்ளவும் இல்லை...
முதுமை எட்டிப் பார்க்கும்போது தனக்கு சர்க்கரை நோய் இருப்பதை மிகவும் முற்றிய நிலையிலேயே தெரிந்து கொண்டாராம் ஏ.வீரப்பன்.. அப்போதும் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் கண் பார்வையை இழந்தார். பார்வை இழந்த நிலையிலும் சில காலம் உதவியாளரின் துணையுடன் சில திரைப்படங்களுக்கு நகைச்சுவை வசனம் எழுதினார்.
2005-ஆம் ஆண்டு ஏ. வீரப்பன் இறந்து போனார்...!
நாகேசுடன் இணைந்து வீரப்பன் இருக்கும் இந்தப் பழைய படத்தைப் பார்க்கும்போது நாகேஷ் படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது...!
“வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை"
-
வேலூர் ராமமூர்த்தி அவர்களின் பறக்கும் பாவை ஆவணங்கள் சூப்பர்
திரு லோகநாதன் அவர்களின் மதுரையில் தலைவரின் படங்களின் அணிவகுப்பு கண் கொள்ளா காட்சி
இப்படியே போனால் இந்த வார இறுதிக்குள் அடுத்த பாகத்தை ஆரம்பித்து விடலாம் வினோத் சார்
அடுத்த திரியின் ஆரம்பிக்க போவது யார் என்று முடிவெடுத்து விட்டிர்களா வினோத் சார்
என்னுடைய மோடம் connection ரிப்பேர் ஆகி உள்ளத்தால் என்னால் பதிவுகளை போடா முடிவதில்லை தொடர்ச்சியாக சிரமத்திற்கு மன்னிக்கவும்
-
-
‘இசையரசி’ பி. சுசீலா அவர்கள், தனது இனிமையான குரலால், தமிழ் மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’ ‘சிங்களம்’ என பல இந்திய மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்
. சுமார் 25,000-க்கும் மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள அவர், ‘ஐந்து முறை தேசிய விருதுகள்’, ‘ பத்து முறைக்கும் மேல் மாநில விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது மத்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தன்னுடைய வசீகரக் குரலால் இசை நெஞ்சங்களை வருடி, என்றென்றும் அழியா புகழ்பெற்று
விளங்கும் பி. சுசீலா அவர்களின் 79 வது பிறந்தநாள் இன்று !
## காலத்தால் அழியாத ' கவிக் குயில் '
முழு நலத்துடன் வாழிய பல்லாண்டு !
https://www.youtube.com/watch?v=FevCCrPz7Nc