Today 3.00pm Watch Mega Tv
http://i62.tinypic.com/wgur7p.jpg
Printable View
Today 3.00pm Watch Mega Tv
http://i62.tinypic.com/wgur7p.jpg
சுனாமியால் சென்னை கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு (2006 ல் ).நல்லவேளை கடலை அகற்ற சொல்லவில்லை
The trial will start in the Supreme Court next month. The fate of the present govt leadership will be known shortly and
they will pay heavy price by touching the Acting God statue once again.
எலியைப்பிடிக்க எலிப்பொறியில் வைக்கப்பட்ட தீனிதான் மணிமண்டப அறிவிப்பு என்பதை நம்மவர்கள் புரிந்துகொண்டால் போதும்.
மேல்முறையீட்டுக்கு போனால் என்ன மாற்றம் வந்துவிட போகிறது?. இதே அரசு, இதே வக்கீலைக்கொண்டு, இதே பாயின்ட்களோடு வாதாடப் போகிறது. பிறகென்ன இதே தீர்ப்புதான் உறுதி செய்யப்பட போகிறது.
குடும்பத்தோடு போய் காலில் விழுந்தவர்களுக்கு மத்தியில், தனியொருவராக நின்று வாதாடிய சந்திரசேகர் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
சிலையை நிறுவி நடிகர்திலகத்தை அவமானப்படுத்தியவர் ஒழிக.
சிலையை அகற்றி நடிகர்திலகத்தை பெருமைப்படுத்துபவர் வாழ்க.
('தென்னிந்திய தடியர் சங்கம்' இது பற்றி கருத்து எதுவும் உளறவில்லையா?)
"அவள் பறந்து போனாளே"
மாடிப்பட்டுக்களில் இறங்கி வரும் நடிகர்திலகத்தின் பூட்ஸ்கால்களைமட்டும் காட்டும் அந்த ஆரம்ப காட்சியே வித்தியாசமானதுதான்.. பொதுவாக இந்த மாதிரி காட்சிகள் கதாநாயகனின் அறிமுக காட்சிக்கு
மட்டுமே காட்டப்பட்டு வந்த உத்தியை படத்தின் சோக பாடலுக்கு பயன்படுத்திய சிறப்பு இப்பாடலுக்கு உண்டு.
பூட்ஸ் கால் ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கி மெல்ல வரும்.அப்படியே காமிரா மெல்ல உயர்ந்து இடுப்பு,நெஞ்சு, முகம்னு நடிகர்திலகத்தின் உருவம் காட்டப்படும் என்று நெஞ்சு நிமிர உட்கார......
பின்னர் பார்த்தால் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஏமாற்றம்தான்.
இறங்கி வருகிற பூட்ஸ் கால்களோட தொடர்ச்சியா ,டீப்பாய் மேல வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிற வேற ஒரு கால்களை காண்பிப்பார்கள்.அந்தக் கால்களை தூக்கி நிலத்தில் நிற்கும் உருவத்தை காட்டும் காமிரா...
அது முத்துராமன் .
நடிகர்திலகத்தின் கால்களை மட்டும் காண்பித்து முகத்தை காட்டாமல் அதனின் தொடர்ச்சியாக வேறு கால்களை காண்பித்து அப்படியே முத்துராமனை காட்டுவது ஒரு வித சாதுர்யமான டெக்னிகல் உத்தி. இப்படி காட்டுவதால் அது ரசிகர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பின் சற்று ஏமாற்றத்தையும் அளிக்கும்.அதே சமயம் தேர்ந்த திறமை வாய்ந்த டைரக்டர் அந்த காட்சியை காண்பிக்கிறார் என்றால் பின்வரும் காட்சிகள் ஏதோ ஒரு பிரளயத்தை உண்டு பண்ணுவதாக இருக்கும் என்பதுதான் அந்த உத்தியின் மூல காரணமாக இருக்கலாம்.
என்ன ஒரு டெக்னிகலான காட்சியமைப்பு.கறுப்பு வெள்ளை காலகட்டத்தில் உதித்த அந்த ஐடியா
பாராட்டப்பபவேண்டிய அம்சம்.சரி பீம்சிங் காரணமில்லாம இந்த ஷாட்டுகளை காண்பிக்கமாட்டாருன்னு நமக்கு நாமே அப்போது தேற்றிக்கொண்டோம் என்பதே உண்மை
முத்துராமனுமஅவள் பறந்து போனாளே பாடலின் பல்லவியைவீட்டிற்குள் பாடுவது போல் காட்சி.
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே
அந்தப் பல்லவியும் முடிஞ்சு இப்ப பிண்ணணி இசை ஓடிக்கொண்டு இருக்கும்.இப்ப இடம் வேற.பாறைகள் நிரம்பிய இடத்தில் நுரைகள் பொங்க
நீர் பெருக்கெடுத்து ஓடும் இடம்.பயத்தையும்,ஆச்சரியத்தையும்,ரசிப்பையும் கொண்ட இடம் அது.
"சந்திராராராரா"
ஓர் உரத்த கணீரெண்ற குரல் மட்டும் தான் இப்போது கேட்கும்.
அட TMS குரல் கேட்டாச்சு. தலைவரோட அதகளம் ஆரம்பிக்குப்போகுதுன்னு நிமிர்ந்து உட்காருவோம். திரும்பி நிற்கும் உருவ அமைப்பும் ஸ்டைலும் மறுபடியும் ஏமாற்றத்தை தரும்.
ஆனாலும் அதன் பின் வரும்காமிரா பதிவுகள் அசத்தல்.
அணைகட்டு நீரில் அலைகளாட,
அதில் முத்துராமனும் விஜய குமாரியும் ஆடும் காட்சி மிக்ஸிங்செய்யப்பட்டு DOUBLE EXPOSE'பாணியில் படமாக்கப்பட்டிருக்கும்.
முத்துராமன் நடந்து செல்லும் பாலைவன காட்சி யில் ஒளிப்பதிவு பிரமாதம்.
முத்துவோட நிழலைக் காண்பித்து அந்த நிழலிருந்து நிஜத்திற்கு மாறும் ஷாட் பிரமாதமாயிருக்கும்.
அப்போது திரையில் ஒலிக்கும் வரிகள்.
"என் நிழலுக்கு உறக்கமில்லை"
முத்துவின் பக்கமிருந்துஅப்படியே லாங்சாட்டுக்கு மாறி பாலைவனத்தை
காட்டுவது சிறப்பான ஒளிப்பதிவு.
பீம்சிங் படங்களில் ஒளிப்பதிவு தனி அம்சமாக விளங்கும்.
பல்லவி ,முதல் சரணம் முத்துராமனின் நடிப்பில் நிறைவு பெறுகிறது.
http://i1065.photobucket.com/albums/...psi3gosmon.jpg
திடீரென்று எரிமலை வெடித்துச் சிதறுவதை விட அந்த எரிமலை இப்ப வெடிக்கும் அப்பறம் வெடிக்கும் என்று பார்த்திருந்து,பார்த்திருந்து,
காத்திருந்து,காத்திருந்து ,ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெடித்துச்சிதறும் எரிமலை போல்
தான் இந்தக் காட்சியை இன்றும் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.
மாடிப்படிக்கட்டுகளில் நிற்கும் நடிகர்திலகம் இந்த வீட்டுக்கு விளக்கில்லை என்று முதல் வரியை பாடி திரும்பி நிற்பார்.அப்போது வீட்டின் விளக்குகள்அணைந்து இருட்டில்
சில் ஹவுட்டாகநடிகர்திலகத்தின் உருவம் தெரியும்.
திரும்பிநிற்கும் நடிகர்திலகத்தைஅடுத்த ஷாட்டில் முன்பக்கம் காண்பிக்கும் அந்தக்கணம்எல்லா விளக்குகளும் எரியும்.அப்பொழுதே இது போன்ற டெக்னிகல் உத்திகளில் அதுவும் கறுப்பு வெள்ளையில் தெளிவான காட்சிகள் படம் பிடிக்கப்படிருப்பது பெருமையான விஷயம்.தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்த பிற்காலங்களில் சில திரைப்படங்கள் இந்தப்பாடலில் வருவது போன்ற காட்சிகள் அமைந்து ரசிகர்களை பிரமிக்க வைத்தது.ஆனால் பழமையான அந்தக்காலகட்டத்திலேயே கறுப்பு வெள்ளைகளில் சிறப்பான ஒளிப்பதிவுகள் தமிழ்சினிமாவில் கையாளப்படிருக்கிறது என்கிற வரலாற்றைத்தான் பிற்கால ரசிகர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.
நடிகர்திலகத்தை காட்டும்விதம்
ஒன்று போதும்.அந்தப்பாடலின்
சிறப்புக்கு.லைட்டிங் டெக்னாலஜியைப்பொறுத்தமட்டில் அந்தக்காலகட்டத்திலேயே இந்த மாதிரி டெக்னிகல் எபக்ட்ஸ் பயன்படுத்தப்பட்டு விட்டதால்
பிற்காலத்தில் வந்த சில படங்களை
சொல்வதில் புதுமையில்லை.
இல்லை என்பதில் முடியும் இரண்டாவது சரணத்தின் வரிகள்.
அதுபி.பி.எஸ்க்கு.
மூன்றாவது சரணத்தின் வரிகளும்
இல்லை என்ற வார்த்தையில் முடியும்
இது TMSக்கு.
இல்லை இல்லை என்று சொன்னாலும் அதில் இல்லாதது எதுவும் இல்லை.
சிறந்த நடிப்பு சிறந்த இசை சிறந்த ஒளிப்பதிவு சிறந்த லொகேஷன்
சிறந்த உடையமைப்புசிறந்த குரல்.etc...
http://i1065.photobucket.com/albums/...psxmpn7iuy.jpg
மறுபடியும் அந்த பாலைவனத்தில் அடுத்த சரணம்.முத்துராமன் பாடுவதாக இருக்கும்.சூறைக்காற்று வீச,புழுதிப்படலத்தின் பிண்ணணியில் அந்தக் காட்சி செல்லும்.இப்படியொரு பாடல் பாலைவனத்தில் எடுக்கப்பட்டிருப்பது வித்தியாசமான யோசனை. புதுமையும் கூட.
.....தன் சிறகை விரித்தாளே.
http://i1065.photobucket.com/albums/...psafgrndam.jpg
http://i1065.photobucket.com/albums/...pskgdjvbna.jpg
(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜி ரசிகனே...
நீ
நினைத்ததை
உன் தலைவன்
நிறைவேற்றாத
காட்சி
எதிலேனும்
உண்டா?)
(எது நடக்க வேண்டும் என்று சிவாஜி ரசிகன் நினைத்தானோ அது நன்றாகவேநடந்திருக்கும் பாடலின் முடிவில்.)
நடிகர்திலத்தின் விழிகளை பார்த்து பேசுவது பெரும் கலைஞர்களுக்கே
சிரமம் என்று சொல்வதுண்டு.அவருடைய இந்த விழிகளைப் பார்த்தால் அதை என்னவென்று சொல்வது?
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு விழிகள் மேல் நோக்கி நிலைத்த நிலையில்
எந்த அசைவையும் காட்டாமல்
உட்கார்ந்திருக்கும் அந்தப் போஸ்
பார்ப்பவர்களை மிரளவே செய்யும்.
http://i1065.photobucket.com/albums/...psry7yyu3t.jpg
"அவள் எனக்கா மகளானாள்"
"நான் அவளுக்கு மகனானேன்"
"என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்."
என்று முடியும் பாடல்.
ட்ரிக்ஷாட்டில் எடுக்கப்பட்ட கடைசி வரிகளுக்கான படப்பதிவுகள்.
http://i1065.photobucket.com/albums/...psnfib7017.jpg
(பி.பி. எஸ்
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே
பி.பி. எஸ்
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
டி.எம்.எஸ்
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே
பி.பி.எஸ்
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே
டி.எம்.எஸ்
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்
இருவரும்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே
Aval Paranthu Ponale: http://youtu.be/utaMgFouiF4
விலையே இல்லாத சிலையை
நிலையில்லாமல் செய்து
நிர்மூலமாக்க்க நினைக்கும் நீசர்களே!
கலைத் தெய்வமாம் கடவுளுக்கு
மலையளவு புகழ் கொண்ட
மனித தெய்வத்திற்கு தமிழன்
தரும் மரியாதை இதுதானா?
தலைமகனின் சிலை தொட்டால்
உங்கள் தலை வெடித்துச் சிதறாதோ!
தமிழினம் வெட்கித் தலைகுனியாதோ!
தரங்கெட்ட தறுக்கர்களே!
தமிழனுக்குத் தமிழனே துரோகியா?
சிங்கத்தின் சிலையை சீண்டிப் பார்க்கவும் துணிவு வந்ததோ?
அகற்றினால் அசிங்கப்படுவது நீங்களே! அவரல்ல!
கழற்றினால் களங்கப்படுவது நீங்களே! அவரல்ல!
சிலை சாய்த்து சந்தோஷப்படப் போகும்
சிறுமதியாளர்களே!
பின்னால் உங்கள் நிலையென்ன
என்று நீங்கள் அறிவீர்களோ!
சிவன் சொத்து குலநாசம்
எங்கள் சிவாஜி சிலை தொட்டால் சர்வமும் நாசம்
அகற்ற அகற்ற அன்புதான் பெருகும்
எடுக்க எடுக்க எண்ணம்தான் வளரும்
மாசற்ற மனிதனின் மாபெரும் கூட்டத்திற்கு
மானங்கெட்ட மாந்தர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டமே!
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
தெருக்குப் பத்து சிலை உரு இருக்க
கருவான சிலையை மட்டும் கணக்கில் கொண்டதேன்?
உருக்குலைக்க எண்ணுவதேன்?
கேட்பார் இல்லையென்றுதானே?
கேள்விமுறையற்ற இந்த ஆட்டம்
ஆடுங்கள் ஆடுங்கள்
ஆகட்டும் பார்க்கிறோம்
ஆட்டத்தின் முடிவிலே
சிலையை சிதறடிக்கலாம்
சிவாஜி மேல் கொண்ட
எங்கள் சிந்தையை எங்கள் அன்பை
சிதறடிக்க முடியுமோ?
பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம் இருண்டு விடுமா?
பூச்சாண்டி காட்டியவர்களெல்லாம்
ஓட்டாண்டிதான் ஆகியிருக்கிறார்கள்
ஒடுங்கித்தான் போய் இருக்கிறார்கள்
நயவஞ்சகம் புரிந்தவர்கள் எல்லாம்
நடுங்கி நாசமாகித்தான் இருக்கிறார்கள்
தொட்டுப் பாருங்கள் தொட்டுப் பாருங்கள்
தொட்ட மறுகணமே பலனை
அனுபவிக்க ஆரம்பிப்பீர்கள்
அது சிலையல்ல சிம்மம்
சிறு நரிகளின் ஓலத்திற்கா
சிவாஜியின் சிறுத்தைகள் அஞ்சும்
சிலை தொட்டால் பாழாகிப் போவீர்கள்
கூழாகிப் போவீர்கள்
இது பத்தினி சாபமல்ல
சிவாஜி பக்தர்களின் சாபம்
சிவாஜி வெறியர்களின் கோபம்
பத்தினிகள் சாபம் பலித்ததோ என்னவோ
உண்மை ரசிகனின் சாபம் உடனே பலிக்கும்
பார்க்கத்தானே போகிறோம்
நீங்கள் அனைவரும் பரிதவித்து நிற்பதை
தமிழகத்தை பிடித்திருக்கும் தரித்திர ஆட்சி முடிய இன்னும் சில மாதங்கள் ! இறைவனிடம் வேண்டுவதெல்லாம்...இந்த தரித்திர ஆட்சி நடைபெறும் இந்த ஆட்டத்தோடு ஒரேடியாக ஒழிந்து தொலைந்து மறைந்து நசித்து போகவேண்டும் !
நேற்று பாண்டியில் இருந்து பஸ் பயணம் மேற்கண்ட்போது இருவர் பேசிகொண்டது - ஏம்பா இந்த ஊர்ல இருக்கற சிவாஜி சிலைய எடுக்க சொல்லலியா ?
பதில் உரைப்பவர் - யோவ் அதுக்கு இந்த ஊர்ல ஒரு நாணயமான முதலமைச்சர் இருகாருய்ய. மக்கள் பிரச்சன என்னதோ அததான் மொதல்ல கவனிப்பாரு, இங்க நம்ம ஊரு மாதிரி கெடயாது பா ! சிலைய எடுகரதாய முக்கிய பிரச்சன இப்போ நம்ம ஊருல ?
கேள்வி கேட்டவர் - கரீட்டு பா ...எதுக்கு சிவாஜிக்கு மொதல்ல சில வெச்சாங்க ?
பதில் உரைப்பவர் - எதுக்கு அண்ணாவுக்கு சிலை வெச்சாங்க ? எதுக்கு mgr உக்கு வெச்சாங்க ? எதுக்கு பெரியாருக்கு வெச்சாங்க சொல்லேன் பாப்போம் ?
கேள்வி கேட்டவர் : அவங்க தமிழ்நாட்ட ஆண்டாங்க இல்லியா...?
பதில் உரைப்பவர் : பெரியார் எப்போய ஆண்டாரு?
கேள்வி கேட்டவர் : இல்லியா ? அப்போ ஆள்லியா அவரு ? சரி விடுப்பா வயசான ஒருத்தரு போயிட்டு போவுது...
பதில் உரைப்பவர் : யோவ்...( தூ ...) அவங்கோ முதலைமசரு...இவரு பகுத்தறிவு தந்தை ...!
கேள்வி கேட்டவர் : பகுத்தறிவு நா ?
பதில் உரைப்பவர் : தலையில் அடித்தவாறு ....சாயங்காலம் ஆச்சுனா கோட்டர் உடற பாரு ....அதுதான் அது ! யோவ் !
கேள்வி கேட்டவர் : சிரித்துக்கொண்டே....எனக்கு தெரிஞ்சு போச்சுயா எதுக்கு சிலைய எடுகராங்கன்னு ...
பதில் உரைப்பவர் : அவ்ளோ பெரிய அப்பா டக்கரா நீ...எதுக்கு சொல்லேன் ?
கேள்வி கேட்டவர் : இவங்கோ பூட்ட கேஸ் ஆனவுடனே ....அந்த இடத்துல இவங்க சிலைய கட்சிகாரங்க வேக்காலம்ல ....சூப்பர் எடம் அது ! அதுல இவங்க சில இருந்தா எவ்ளோ சூப்பர் எ இருக்கும் அதுக்குதான் இந்த பிளான் !
பதில் உரைப்பவர் : அதானே பாத்தேன்...! ஆனா ஒன்னு கவுனிச்சிய ? என்னிக்குமே சிவாஜி கடிச்சு துப்பின மிச்சம் இருக்கற எச்சிதான் இவங்க எடுத்து துன்றாங்கோ ! அந்தாளே செத்தா கூட நிம்மதியா இருக்க வுடமாடாங்க போலியே !
கேள்வி கேட்பவர் : அம்மாவ கொக்கா ! (பெருமையுடன் )
பதில் உரைப்பவர் : நீ தான் மெச்சிக்கணும் ! ஆனா மவனே....ஒன்னு நிச்சயம் மாமு ......இத்தோட உங்க ஆட்சி....உங்க கட்சி ..ரெண்டயுமே ஏற கட்டபோறாங்க பாதுனே இரு வேடிகைய !
இருவரும் கல்பாக்கம் வந்தவுடன் இறங்கி சென்றனர் !
சென்னை உயர்நீதி மன்றத்திலும் ஒரு குமாரசாமியா..!!!!!!!
இறைவா... காப்பாற்று.
ஏற்கெனவே ஒரு குமாரசாமி 'கணக்கில்' செய்த தப்பு எங்கெல்லாம் வந்து 'இடிக்கிறது'.
" சரி, தமிழ்நாட்டுல மத்த எடத்துல இருக்குற சிவாஜி செலையெ ஏன் எடுக்கலே?"
"அதுகள்ள கருணாநிதி பேரு இல்லையே"
"அப்படீன்னா மதுரை செலைக்கு கீழே மு.க.அழகிரி பேரு இருக்கே"
"அவங்களோட அடுத்த டார்கெட் அதுதான்"