-
hi all good morning
இன்னும் வீட்டுக்கம்ப்யூட்டருக்கு குணமாகவில்லை..எனில்..எழுத இயலவில்லை..பள்ஸ் ஊரிலிருந்துசகோதரிஅண்ட்குடும்பம் வந்திருக்கிறார்கள்.. எனில் விரைவில் வருவேன்..
ஓ ஓ வெண்ணிலா பிடிக்கும்.. மன்னவாஆ வா மன்னவா.. அந்தராகம் பிடிக்கும்.. நன்றி கல் நாயக்
ராஜ் ராஜ் சார்.. மியாவ் மியாவ் பூனைக்குட்டியும் பிடிக்கும்.. தாங்க்ஸ்..
-
-
நிலாப் பாடல் 45: "நிலவென்ன பேசும், குயிலென்ன பாடும்"
---------------------------------------------------------------------------------------
மீண்டும் மக்கள் திலகமும், நாட்டியப் பேரொளியும் இந்த நிலாப் பாடலுக்கு தோன்றுகிறார்கள். படத்திருகொரு நிலாப் பாடல் இருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. காதல் பாடல் என்றால் நிலா, மலர், இயற்கை, காற்று என்று போவார்கள். எனவே இரண்டாவது காதல் பாடலுக்கு முதல் பாடலில் சொன்னதை திரும்பவும் சொல்லாமல் வேறொன்றை தேடுவார்கள். இந்த பாடலுக்கு கவியரசர் அதை நினைக்கவில்லை போலிருக்கிறது. மறுபடி நிலாவிலேயே ஆரம்பிக்கிறார். இதுவும் நல்ல பாடல்தான். ஆனால் முந்தைய பாடல் போல் இல்லை.
பாடல் வரிகள்:
----------------------
நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும்
மனதிலேகதை பேசுமோ இன்பக் கவி பாடுமோ
இங்குகண்ணோடு கண் சொல்லும் மொழியிலே
தங்கச்சிலை போல உறவாடும் காளை
அழகில் விளையாடும் இவ்வேளை -
என்அழகில் விளையாடும் இவ்வேளை
வானகம் கீழே வையகம் மேலே
மாறுதல் போலவே தோன்றுவதாலே
( நிலவென்ன )
இரு கரை போல தனியாக இருந்தோம்
அக்கறையோடு இங்கே கலந்தோம்
வருமென்று எதிர்பார்க்கும் முன்னே
வரும் மழை போலே நீ வந்தாய் கண்ணே
கவலை அல்லவோ கொண்டு வந்தேன் -
நான்காதல் கதை இங்கே சொல்லித் தந்தேன்
பருவங்கள் ஒன்றாக மகிழும் நிலையில் -
நீலப்பட்டாடை போல் தோன்றும் வானோடு
( நிலவென்ன )
-----------------------------------------------------------------------
காணொளிக் காட்சியைப் பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=X4Pex1fh0zs
அதே படம்தான், அதே பாடலாசிரியர், அதே இசையமைப்பாளர். அதே-ன்னு பெயர் வைத்த ஒருவர் தன் பெயரை வைத்து படம் எடுத்து பாடல் எழுதி இசையமைத்தாரா என்று கேட்காதீர்கள். அதே பாடகர்கள் என்று சொல்வதில் உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.
-
சி.க. சீக்கிரம் வாங்க.
உங்க வீட்டு கணினி நன்றாக உள்ளதா? (காலக் கொடுமை!!!)
வீட்டில் அனைவரும் நலமா? விருந்தினர்கள் மகிழ்ச்சியா?
எனக்குத்தான் ராகங்கள் தெரியாதென்பது உங்களுக்குத் தெரியுமே. நான் சொல்லுகின்ற பாடல்களின் ராகங்களை நீங்கள் சொல்லலாமே.*
-
நிலாப் பாடல் 46: "என் இனிய பொன் நிலாவே"
-----------------------------------------------------------------------
இதுவும் மிகப் புகழ் பெற்ற நிலாப் பாடல்தான். இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணத்தில் முக்கிய இடம் வகிக்கக் கூடியது. ஆம் அவரின் நூறாவது படத்தில் இடம் பெற்ற பாடல். அவரது இருநூறாவது படத்தின் பெயர் "ஆயிரம் நிலவே வா" இதையெல்லாம் பார்க்கும் போது நிலா அவரது படங்களில் பாடல்களில் எவ்வளவு முக்கிய இடம் பெறுகிறது என்பது தெரிகிறது!!! (விட்டால் ஒருவர் இதை வைத்து ஆராய்ச்சி கூட செய்து விடுவார். நமக்கு அது வேண்டாம்.) பிரதாப் போத்தன், ஷோபா நடிப்பில் உருவான பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வந்த அருமையான பாடல்.KJ ஜேசுதாஸ் பாடிய கங்கை அமரனின் பாடல்.இசை இந்த பாடலில் என்னமாக நர்த்தனம் புரிகிறது!!!
பாடல் வரிகள் இதோ:
--------------------------------
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ....
தொடருதே தினம் தினம் ....
(என் இனிய..)
பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே.....
(என் இனிய..)
பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே...
(என் இனிய..)
--------------------------------------------------------------------------------
காணொளிக் காட்சி:
https://www.youtube.com/watch?v=Y8lT9PTwDbs
மூடு பனி
-
ராஜேஷ், கல் நாயக் வந்துட்டேன்.. ஆனா ஃபுல் ஃப்ளெட்ஜா வர்ற கொஞ்சம் டயம் ஆகும்..ஷமிக்கணும் :)
படர்ந்து விரிந்தே பரவுகின்ற பூவாய் (மல்லிகையாய்)
தொடரும் நிலாப்பாக்கள் தூள்..!
சரி சரி வந்ததுக்கு பருவம் கனிந்து ஜெயஸ்ரீன்னு ஒரு பெண்மகள் வந்துட்டாங்க..
பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக..
(ஜெயஸ்ரீ அழகுன்னுசொல்ல முடியாது..ஆனாலும் கொஞ்சம் துருதுரு முகம்..இல்லியோ)
(ஏற்கெனவே போட்டாச்னு நினைக்கறேன்)
https://www.youtube.com/watch?v=dcGlb_CgQEE
இந்த யாரோ எழுதிய கவிதை பற்றி முன்பே எழுதியதாய் நினைவு..இருந்தாலும் என் நினைவிலிருந்து அகெய்ன் ரிபீட்ட்..
வாஸந்தி எழுதி ஜனனம் என குறு நாவல் இலவச இணைப்பாய் ஆனந்த விகடனோடு வந்தது.. மாருதி ஓவியம் ..கஷ்கு முஷ்கு கன்னம் கொண்டு பெரீய்ய நதி போல அகலக் கண்கள் கொண்டு அழகழகாய் வண்ணப் புடவைகளுடன் இருக்கும் பெண்ணின் ஓவியங்கள்..கதையின் ஹீரோயின் கதைப்படி ஒரிஸ்ஸாவிலோ ஏதோ ஒரு வடமானிலத்திலோ சுற்றுலா போவதற்காக பஸ்ஸில் வர...பஸ் சாலையில் வந்துக் கொண்டிருக்கும் போதே எங்கிட்டிருந்தோ இருக்கும் நதியில் வெள்ளமேற்பட்டு ஜோவென ஏறி ஏறி பாலத்தில் ஏறி பஸ்ஸை அடித்துக் கொண்டு சென்று விட..பஸ்ஸில் வந்த அனைவரும் மரிக்க ஹீரோயின் மட்டும் பிழைத்து அருகில் இருந்த தமிழ் பேசும் ஹீரோவின் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிறார்..
இளம் டாக்டர், பிரம்மச்சாரி, ஒரே ஒரு அம்மா ஒரு ஹாஸ்பிடல் என மக்களுக்கு சேவை செய்யும் ஹீரோ கிருஷ்ணகுமார்னு வெச்சுக்கலாமா.. இந்தப் பெண்ணைப் பார்க்க அந்தப் பெண் ஒரு பெரிய படகு விடக்கூடிய அளவிற்கு அகண்ட கண்கள் கொய்ங்க் கொய்ங்க் என விழித்து மிக அரதப் பழசான கேள்வி - நான் எங்க இருக்கேன்.. கரெக்ட்.. அந்தப் பெண்ணுக்கு அம்னீஷியா..
டாக்டர் மெல்ல மெல்ல அந்தப் பெண்ணைக் குணப்படுத்தி அவளது அழகு, அறிவு, அடக்கம் , அன்பு, அலங்காரமற்ற எளிமை, அணிவகுத்து மறுபடி மறுபடி பார்க்கத் தூண்டும் எழில் , அளவான பேச்சு என ஏகப் பட்ட “அ” க்களால் கவரப் பட்டு மனதைப் பறிகொடுத்து.. ஹாய் கவிதா ( டாக்டரே அவளுக்குச் சூட்டிய பெயர்) நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளட்டுமா எனக் கேட்க இளம் கவிதையின் முகத்தில் தயக்கம் ப்ளஸ் கண்களில் சோகம்..
ஓஹ்.. டாக்டர்.. நான்.. ஒரு அனாதை..பெயர் தெரியாது ஊர் தெரியாது..என்னைத் தேடி யாரும் வரவில்லை எனில் நான் தேவை இல்லை என்று தானே அர்த்தம்.. நான் ஒரு பாவப் பட்டவள் கிருஷ்..
ஓ கவி.. நோ.. ஒரு கவிதை அழக்கூடாது..இந்த பார் டிவில விகேர் விளம்பரத்துல சொல்ற மாதிரி உனக்கு நாங்க இருக்கோம் நான் என் அம்மா இந்த ஹாஸ்பிடல் உனக்கு ஓக்கேயா
கவிதை மலர்ந்து சிரிக்க கூடவே விதியும் சிரித்தது..
விதி ஒரு ஆடவன் ரூபத்தில்..கவிதாவின் புகைப்படத்தை வைத்து டாக்டர் கிருஷிடம் வந்து..”டாக்டர்..என் பெயர் ராஜ்.. இந்தப் பெண் பற்றி உங்களுக்குத் தெரியுமா:
கிருஷ்ஷிடம் பதற்றம் :ஏன்..:
:ஏனெனில் இவள் என் மனைவி.. ப்ரில்லியண்ட் கேர்ள்..ஷ்யாமி.. நான் அயல் நாடு போயிருந்தேன். இவள் ஏதோ சுற்றுலா போவதாகச் சொல்லியிருந்தாள்.. எனில் நான் இன்று தான் வந்தேனாக்கும்..
யோவ்.. தேடவே இல்லியா..
இல்லீங்க.. ஷ்யாமி ஒரு அனாதைப் பெண்..என் வீட்டிலும் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு.. எனில் இவளைத் தேட யாரும் இல்லை.. டிராவல் ஏஜன்ஸியில் கேட்டதில் அவர்கள் எனக்கு டெலிக்ராம் அனுப்பியதாகச் சொன்னார்கள்..அவர்கள் அனுப்பிய இடத்திலிருந்து நான் வேறு இடம் சென்றிருந்தேன்..எனிவே வந்தால் அதிரிச்சி தேடி அலைந்து ஊரில் சிலர் ஒரு பெண் இந்தஹாஸ்பிடலில் சேர்ந்திருப்பதாகவும் சொன்னார்கள்.. எனில்..
கிருஷ் என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி..பின் மனதை ஒரு நிலைப் படுத்தி கவிதாவைப் பற்றி ராஜிடம் “ அந்தப் பெண்ணுக்கு கவிதா எனப் பெயர் வைத்திருக்கிறேன்..அவளுக்கு எல்லாம் மறந்துவிட்டது..உடல் நிலையும் இப்போது தான் தேறியிருக்கிறாள்.. நான் அறிமுகம் செய்கிறேன் பாருங்கள் “ எனச் சொல்லி ராஜிடம் அறிமுகம் செய்ய கவிதாவின் விழிகளில் நிச்சலனம்.. “டாக்டர் ..யாரிவர்”
ராஜ் நொறுங்கிப் போகிறான்.. பின் சில பல சம்பவங்களில் கவிதா மொத்தமாய் அவனை மறந்ததும் கிருஷ்ஷிடம் முழு மனதைக் கொடுத்திருப்பதும் கிருஷ்ஷின் நல்ல குணமும் தெரிய்வர விலகி விடுகிறான்..
இது வாஸந்தியின் கதை..அதையே யாரோ எழுதிய கவிதையாக ஸ்ரீதர் (என நினைக்கிறேன்) எடுத்திருப்பார்..பட் டாக்டர் அந்தப் பெண்(ஜெயஸ்ரீ)ணின் கணவனிடமே ஒப்படைப்பதாக முடித்திருப்பார்..
இந்தக் கதையையே மறுபடியும் பாக்யராஜ் வீட்ல விசேஷங்களில் ஆரத் தழுவியிருப்பார்..
நல்ல படம் என நினைவு வந்து.. இடுகையும் நீண்ட தாகப் போய்விட்டது.. :)
-
ஹாய் சி.க.,
இந்த யாரோ எழுதிய கவிதை படத்தையும், மனிதனின் மறுபக்கம் படத்தையும் நான் குழப்பிக்கொண்டுவிட்டேன். மனிதனின் மறுபக்கம் சிவகுமாரின் 150வது படம். அதிலும் ஜெயஸ்ரீ நடித்திருப்பார். இந்த படத்தின் கதையும் நீங்கள் சொல்லும் கதையும் வித்தியாசம் இருக்கிறதே என்று பார்த்தேன். பின்புதான் தெரிந்தது. நீங்கள் சொன்ன பாடல் நன்றாகவே இருக்கிறது. நான் கேட்டதே இல்லை. ஏன் படம் பார்த்ததேனோ என்னவோ தெரியவில்லை.
https://www.youtube.com/watch?v=yEayiPak0-I
அப்புறம் நீங்கள் சொன்ன கதை 'நினைவே இல்லையா நித்யா?' என்று மாலைமதியில் படித்ததாக ஞாபகம். எழுத்தாளர் பெயர் நினைவில் இல்லை. (வாஸந்தி என்று நீங்கள் சொல்வதால் ஏற்றுக் கொள்கிறேன்.அது வேறு கதை என்று நீங்கள் நினைத்தால் சொல்லுங்கள்.) இந்த கதைக்குப் பின்தான் 'நினைவெல்லாம் நித்யா' என்று ஸ்ரீதர் படம் எடுத்து வெளியிட்டார். அந்த படத்தின் கதை வேறு.
-
கல் நாயக், மனிதனின் மறுபக்கம் பற்றி முன்னால் எழுதியிருந்தேன்..
இல்லை.. நினைவே இல்லையா நித்யா வேறு.. அது எழுதியவர் ஒரு பெண் எழுத்தாளர் தான்.. சிவசங்கரியோ இந்துமதியோ என நினைக்கிறேன்.. கதை - படித்திருக்கிறேன் சுத்தமாக மறந்து விட்டது.. இந்த ஜனனம் ஐயாம் வெரிமச் ஷ்யூர்.. நான்கு வாரங்களாக இலவச இணைப்பாக வந்தது விகடனில்.. நினைவெல்லாம் நித்யா - பாடல்கள் ஸ்வீட்.. காட்சியமைப்பு நற நற :)
-
ஹை.. கூகுளிட்டதில் நி.இ.நி... இந்துமதியின் கதையாம் :) கண்ணா வ்ல்லாரை சாப்பிடாமலே உனக்கு இன்னா ஞாபகசக்தி.. .
-
வாவ் சி.க. கலக்கிட்டீங்க!!!