chinnakkaNNan: vaathiyaar has to do his job ! :)
It is 'thangak kaiyinaale kaasai aLLi veesunga' and 'maalai ida thedi varum naaLum endha naaLu ' ! :)
Printable View
chinnakkaNNan: vaathiyaar has to do his job ! :)
It is 'thangak kaiyinaale kaasai aLLi veesunga' and 'maalai ida thedi varum naaLum endha naaLu ' ! :)
வாத்தியாரையா :) ஒத்துக்கறேன் ஃபார் தெ ஃபர்ஸ்ட் கரெக்*ஷன்..தங்கக் கையில்..சரி ஈ. இந்த நாலும் என்ன நாலுன்னு லிரிக்ஸ் போட்ட இடத்துல தப்பா எழுதியிருந்தாங்க..அதான் நற நற பண்ணினேன் :)
(கல)கலப்புத் தமிழ் தேனிசை மதுரங்கள் ! Honey spilling HYBRID TAMIL harmonies!!
நம்பர் 1 : நம்பள்கி நிம்பள் மேலே மஜா......சௌகார்பேட்டை செந்(தேள்/ன்) தமிழில் ஒரு தூக்கு தூக்கி கலகலக்கும் பாலையா.....Quote:
உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு அதன் கலப்படமும் இனிமையாக ரசிக்கப் படுவதுதான்! தொலைக்காட்சிகளில் சில பெண் அறிவிப்பாளர்களும் நிகழ்ச்சியாளர்களும் பேசும் லகர ளகர ழகர பேதமற்ற தமிழைக் கேட்கக் கொடுமையாக இருந்தாலும் அதையும் நாம் குழந்தைகளின் மழலைக்கு அப்புறம் கைதட்டி ரசிக்கிறோமே! உல்லம் கொல்லை கொல்லுது போங்க சி க! இதையெல்லாம் கேட்டுக் கேட்டு மரத்(துப் போன)தமிளர்கலாகவே இருக்கிறோமே வாசு ஐயா !!
சுக்வீந்தர் சிங்கு, உதித் நாராயணர்.... தமிழ்சேவையில் நொந்து நெஸ்லே நூடுல்ஸாகி நிற்கிறோமே! பத்தாதற்கு லூஸ் மோகனாரின் காப்புரிமையானஷோக்கான சிங்காரச் சென்னைத் திமிழ் , தெலுங்கு டப்பிங் டோங்கரே தமிழ், ஆங்கிலோ இந்தியர்களின் அலுவலக டமில், சௌகார்பேட்டை ஹிந்தமில், ...தமிங்கிலம்...தங்கிலீஷ்.........நம்ஸின் மச்சான்ஸ் தமிழ், திருக்கோயில் தெருக்கோயிலாகும் மலைத்தமிழு ஈசன் ஈஷனாகும் பாகவதத் தமிழ், வெற்றிலைக் குதப்பும் அம்பாலே பேஷிய தமிழ்..!
எப்படிக்.கேட்டாலும் தமிழ் இனிமையே! கலப்புத் திருமணங்களை வரவேற்கும் நாம் கலப்புத் தமிளுக்கும் ஆலவட்டம் குலுக்குவோமே!!
https://www.youtube.com/watch?v=JQC9do1vrDc
நம்பர் 2 : இன்னா மேன் பொம்பிளே நான்....யாரிந்த லெக்கிங்க்ஸ் போட்ட சட்டைக்காரி!? சாட்டைக்கார சேட்டைக்கார வேட்டைக்காரரேதான்!!
https://www.youtube.com/watch?v=DvvMUixAu20
https://www.youtube.com/watch?v=dE2ED9yYiV4
வாசு சார்
5 எம் ஆர் ஆர் வாசுவும் 3 சச்சுவும் ஒரு நாகேஷூம்... (ஹை.... ஒரு படத்துக்கு டைட்டில் கிடைச்சிடுச்சே) தூள் கிளப்பும்
நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார்...
சூப்பர் சாங்...
டபக்குன்னு நினைவுக்கு வருவது இச்சுத்தா இச்சுத்தா.. உன்னிகிட்ட உன்னிகிட்ட சொல்லப்போறேன் பார் பாடகர்.. அப்புறம் காதல் பிசாசே (எனக்கு ரொம்பப் பிடித்தபாடல்+பிக்சரைசேஷன்) ஆனா ஏதோ செளக்கியம் பருவா இல்லைம்பார் பாடகர்..ம்ம்
உங்களோட
கருவிழி செவ்வல்லிப் பூவாக மாறும்
கனியிதழ் வெண்முல்லை வண்ணத்தைக் கூடும் பாட் கேட்டுக்கிட்டு இருக்கேன்..ம்ம் தாங்க்ஸ்.. :) ஏவிஎம் ராஜன் தான் கொஞ்சம் டைஜஸ்ட் பண்ண எக்காலத்திலும் கஷ்டம்..:)
HYBRID TAMIZH! (கல)கலப்புத் தமிழ் தேனிசை மதுரங்கள் !
இரண்டாமிடம் ஆச்சிக்கே ! சென்னை செந்தமிழ்ப் பெருமை......
வா வாத்திர்யாரே ஊட்டாண்டே .....ஜாம்பஜார் ஜக்குவுடன்!!
https://www.youtube.com/watch?v=oiqJrRG1b7s
தில்லாலங்கடி டப்பாங்குத்து ஆட்டம்....
[url]https://www.youtube.com/watch?v=YDUzDwY2Bs0
முத்துக்குளிக்க வாரீயளா ?!
[url]https://www.youtube.com/watch?v=gidiDoDCddg
காதல் மன்னர் ரசித்து மகிழ்ந்த மொட்டை மாடி மதுர கீதங்கள் !!
Quote:
காற்றோட்டமான மொட்டை மாடிகள் இரவு நேரங்களிலும் மாலைப் பொழுதுகளிலும் மேகங்கள் நட்சத்திரங்கள் குளிர் நிலவு தென்றல் காற்று பின்னணியில் ரம்மியமான சூழலை உருவாக்கி மனதின் ரணங்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது!!
இப்பின்னணியில் காதல்நாயகியரின் மனதை வருடும் மயிலிறகான பாடல்களை ரசித்து மகிழ்ந்திடும் காதல் மன்னர் மச்சக்காரரே !!
மொட்டை மாடி 1 : மாலைப் பொழுதின் மயக்கத்தில்....
https://www.youtube.com/watch?v=qKjzzxsZSvE
மொட்டைமாடி 2 : கண்களை அயர வைக்கும் கான இரவு!!
https://www.youtube.com/watch?v=XupZjuPB_fU
தனிமையிலே இனிமை காண முடியுமா தங்கச்சிலை அருகிலிருக்கையில் மொட்டைமாடியும் ஒன்பதாம் மேக அடுக்கே !
[url]https://www.youtube.com/watch?v=T5MraWlvo84
From Pudhaiyal(1957)
Hello my dear rani (rami?) engammaa unakku maami....
http://www.youtube.com/watch?v=idf8w48auRE
செந்தில் சார்....
ஆடி முடிஞ்சு போச்சு... இனிமேல் தள்ளுபடி கிடையாது.. அதனால்... நாலு குணம் என்று நார்மலாக சொல்லப்பட்டாலும் ராமன் தேடிய சீதையின் குணங்கள் ஆறுதான்... நாலு இல்லே :)
"ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை - அது
யாரோ எவரோ ராமன் தேடிய சீதை"
"பொறுமையிலே பூமகளாய்
பேரழகில் திருமகளாய்
பசியில் அமுதளிக்கும் அன்னையுமாய்
காதல் அரவணைப்பில் கணிகையுமாய்
ஊழியத்தில் பணிப் பெண்ணாய்
அறிவை உரைப்பதிலே அமைச்சனுமாய்
வாழுகின்ற பெண் எவளோ
அவளே வளமார்ந்த குலமகளாம்"
இவைதான் அந்த ஆறு குணங்கள்.
லிங்கில் கிடைப்பது "நல்லது கண்ணே" பாடல்... ஆனால் எண் இடம் பெறுவது "திருவளர்செல்வியோ" பாடலில்... அதனால் அந்த லிங்க் இங்கே.
இதை ஆறு மனமே ஆறு என்று அங்கே சேர்த்து விடுங்கோ...
https://www.youtube.com/watch?v=HM8yBZ-Ya3M