http://www.maalaimalar.com/2012/04/3...an-sivaji.html
Printable View
81 ஆண்டு தமிழ் திரை வரலாற்றில் ஒரு பழைய படம் மறு வெளியீட்டில் ௦ 50 நாட்கள் ஓடுவது ( ஷிப்டிங் செய்யாமல்) என்பது இதுவே முதல் முறை.
கர்ணன் 14 திரைகளில் ( release print - 10 , shifting -4 ) 50 நாள் என்ற சாதனையை செய்யவிருக்கிறது.
பழைய படங்களையே திரையிடாத Multiplex திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, அந்த அரங்குகளில் பெரும்பான்மையாக படம் பார்க்கும் இளைஞர்களையும் சென்றடைந்து, 4 multiplex அரங்குகளில் 50 நாட்கள் ஓடும் முதல் பழைய படமும் இது தான்.
ஏறக்குறைய தமிழகத்தின் எல்லா சென்டர்களிலும் முந்தைய மறு வெளியீட்டு சாதனைகள் அனைத்தையும் கர்ணன் மிஞ்சி விட்டது.
இந்த சாதனை இன்னும் , 50 நாட்களைக் கடந்தும், தொடரும் என்பதை சத்யம், எஸ்கேப் வளாகங்களின் ரிசர்வேஷன் நிலவரங்கள் நமக்கு காட்டுகின்றன. நாளை மாலை 6 . 40 மணி காட்சிக்கு வெறும் 10 டிக்கட்டுகள் மட்டுமே மீதம் உள்ளன. எஸ்கேப் வளாகத்தில் மதிய காட்சிக்கும் 80% டிக்கட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டு விட்டன.
இது தவிர -ஏதோ இந்த வாரம் வெளியான புதிய படம் போல- ஒரு Special show வேறு Studio 5 அரங்கில் நாளை காலை 9 .10 மணிக்கு உள்ளது.
வேறு சில இணைய தளங்களில் கர்ணன் வெற்றியை குறித்து சந்தேகம் (!!!) தெரிவிப்பவர்கள் இந்த விபரங்கள் அனைத்தையும் சத்யம் வளாக இணைய தளமான http://www.thecinema.in ல் சரி பார்த்துக் கொள்ளலாம்.
ஆற்றி விட்டார்..! தங்களின் ஆனந்தமான பாராட்டுக்கு அற்புத நன்றிகள் !
வாசு சாரின் விரிவுரை இதோ:
அன்பு பம்மலார் சார்,
அடை மழை பொழிவது போல ஆவண மழை பொழிகிறதே! மிரட்சியிளிருந்து மீள முடியவில்லை.
'உலகம் பலவிதம்' என்று காட்டிய தாங்கள் ஒரு தனிவிதம். (ஆவணங்களின் அரசர் என்பதைத்தான் அப்படி சொன்னேன்)
பொற்கைப் பாண்டியர் (தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை) பொல்லாதவராய் காட்சி தருகிறார்.
'பேசும் தெய்வ'த்தின் பேரழகான அந்த போஸ் பேச்சே வரவிடாமல் திக்கித் திணற வைக்கிறது. கிரேட்!
'சுமதி என் சுந்தரி' விளம்பரம் சும்மா 'கில்லி'
'பிராப்தம்' விளம்பரம் பிரமாதம். நேத்துப் பறிச்ச ரோஜாவானாலும் வாழ்நாள் முழுதும் வாசம் வீசுமே! தங்கள் பதிவுகள் எப்போதும் தொடர்கதைதான்...முடிவே இல்லாதது.
'சங்கிலி'த் தொடராய் பதிவுகள் இட்டு, 'இமைகள்' கொட்டாமல் அவற்றைப் பார்க்கவைத்து, வீரபாண்டியனின் சாதனைகளை வீறுநடை போட்டு எடுத்துரைக்கும் ஆவண பீஷ்மரே! அள்ளித் தந்த புதையலுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.
வம்பு நண்பர் sorry அன்பு நண்பர் கோபால் சார்பில் விரிவுரை ஆற்ற முடியாவிட்டாலும் சிற்றுரையாவது ஆற்ற முடிந்ததே! அதுவரையில் சந்தோஷமே!
பதிவுகளில் மறக்காமல் என்னை ஞாபகம் வைத்திருக்கும் கோபால் சாருக்கு நன்றி கூறிக் கொள்வதோடு, கவிதை நடையில் வாழ்த்து சொல்ல ஆசைதான். ஆனால் நமக்கு க(வி)தை எழுத வராதே! (ச்சும்மா...ஹி... ஹி...ஹி...)
அன்புடன்,
வாசுதேவன்.
தங்களின் இனிய பதிவுக்கு இதமான நன்றிகள், வாசு சார்..!
Thanks Ragavendra sir,
For publishing KARNAN full movie
நான் அனுப்புவது கடிதம் அல்ல, உள்ளம் ...
சூப்பர் சாங், சூப்பர் வாய்ஸ், சூப்பர் லிரிக்ஸ், சூப்பர் மியூசிக்,
ஒன்லி சூப்பர் சிவாஜி ஸ்டைல் கிங்
http://youtu.be/eXbPX5wr6bQ
படம் - பேசும் தெய்வம்
குரல் - சௌந்தர்ராஜன்
இசை - கே.வி.மகாதேவன்
வரிகள் - வாலி
சம்பூர்ண ராமாயணம் படத்திலிருந்து அருமையான பாடல் பாதுகையே துணையாகும்
http://youtu.be/tQpzP5edcSk
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
சம்பூர்ண ராமாயணம்
[14.4.1958 - 14.4.2012] : 55வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 7.4.1958
http://i1110.photobucket.com/albums/...GEDC5710-1.jpg
'கூட்டம் அலைமோதும்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 28.4.1958
http://i1110.photobucket.com/albums/...GEDC5711-1.jpg
நான்காவது வார விளம்பரம் : சுதேசமித்ரன் : 5.5.1958
http://i1110.photobucket.com/albums/...GEDC5712-1.jpg
குறிப்பு:
அ. சினிமா பார்க்கும் பழக்கமே இல்லாத மூதறிஞர் ராஜாஜி அவர்கள், இக்காவியத்தைக் கண்டு களித்ததோடு மட்டுமல்லாமல், 'பரதனாக வாழ்ந்து காட்டியுள்ள ஸ்ரீ சிவாஜி கணேசனுக்கு என்னுடைய நல்லாசிகள்' என்று நடிகர் திலகத்தின் நடிப்பை வியந்து பாராட்டி ஆசி கூறினார்.
ஆ. இக்காவியம் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய அரங்குகள்:
1. மதுரை - ஸ்ரீதேவி - 165 நாட்கள்
2. திருச்சி - சென்ட்ரல் - 100 நாட்கள்
3. சேலம் - ஓரியண்டல் - 100 நாட்கள்
4. கோவை - டைமண்ட் - 100 நாட்கள்
[100வது நாள் விளம்பரம் கிடைத்தவுடன் இடுகை செய்யப்படும்].
இ. சிங்காரச் சென்னையில் இக்காவியம் 'சித்ரா'வில் 55 நாட்களும், 'பிராட்வே', 'காமதேனு', 'சயானி' ஆகிய அரங்குகளில் முறையே ஒவ்வொன்றிலும் 61 நாட்களும் ஓடி நல்ல வெற்றி பெற்றது.
ஈ. மேலும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 55 நாட்கள் ஓடிய இக்காவியம், 1958-ம் வருடத்தின் ஒரு சூப்பர்ஹிட் காவியம்.
பக்தியுடன்,
பம்மலார்.