KANNADA WEEKLY MAGAZINE '' SUDHA'' 1984.
http://i42.tinypic.com/qyvhp3.jpg
Printable View
KANNADA WEEKLY MAGAZINE '' SUDHA'' 1984.
http://i42.tinypic.com/qyvhp3.jpg
இனியநண்பர் திருகலியபெருமாள்
உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி .மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் உங்களின் கற்பனை வளத்தில் உயிர் பெற்று
நம் மக்கள் திலகம் மீண்டும் நம்முடன் வாழ்வது போல்உணர்வு
ஏற்படுகிறது . நன்றி
5,000 பதிவுகள் என்ற பெரிய சாதனையைப்படைத்த அருமை நண்பர் வினோத் (எஸ்வீ) அவர்களுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் எதாவது விஷயம் சார்ந்த பதிவுகளாக இருக்குமேயன்றி என்றைக்கும் வெட்டிப்பதிவுகளாக இருந்ததில்லை. அந்த வகையில் தங்கள் பதிவுகளை விசேஷ கவனம் கொடுத்துப் படிப்பவன் நான்.
தங்களைப்போலவே நானும் அடிக்கடி சென்று பார்வையிட்ட மக்கள்திலகத்தின் நினைவு இல்லம் பற்றிய தங்களின் பதிவு வெகு அருமை. அந்த நினைவு இல்லத்தைப் பார்த்து, இதுபோல் நம் அபிமான நட்சத்திரத்துக்கும் ஒரு நினைவு இல்லம் அமைந்தால் எப்படியிருக்கும் என்ற ஆசையில் நான் எழுதப்போய், சரமாரி அடிவிழுந்தது தங்களுக்கும் தெரிந்திருக்கும். (மக்கள் திலகத்தின் ரசிகர்கள் நடிகர்திலகத்தின் திரியையும், நடிகர்திலகத்தின் ரசிகர்கள் மக்கள் திலகத்தின் திரியையும் தவறாது படிப்பது வழக்கம்).
தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...
நமது மக்கள் திலகம் திரியினை தொடர்ந்து பார்வையிடும் அன்பு நண்பர் கலைவேந்தன் எம்.ஜி. ஆர். பக்தர்கள் அமைப்பினைச் சார்ந்த திரு. ஏ. எஸ். கலைமணி அவர்கள், "தல ரசிகன்" என்ற பெயரில் பொய்யான தகவல்களை உளறிய ஒரு நபருக்கு மட்டுமல்லாமல், இந்த திரியினில் பதிவிடுவோரும், பார்வையிடுவோரும் அறியுமாறு மேலும் சில உண்மைத்தகவல்களை தெரிவிக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பியதால் கீழ்க்கண்ட கூடுதல் தகவல்களை பதிவிட கடமைப்பட்டுள்ளேன் :
முதலாவதாக, " மாடி வீட்டு ஏழை " படத்திற்கான காட்சிகள் ஒன்றிரண்டு மட்டுமே படம் பிடிக்கப்பட்டன.
இரண்டாவதாக, படத்தில் நடிக்க கதா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள். அவர் சரியாக நடிக்க வில்லை என்ற காரணத்துக்காக படத்திலிருந்து விலக்கப்பட்டிருக்க முடியாது. வேறு தனிப்பட்ட காரணங்களாக இருக்க வாய்ப்புண்டு.
மூன்றாவதாக நடிகர் சந்திரபாபு தனது சொந்தப் பணத்தில் படம் எடுக்க வில்லை. நிதியுதவி அளித்த ஒரு முதலீட்டாளர் அளித்த பணத்தில் தான் படம் எடுத்தார்.
இது குறித்து, நடிகர் சந்திரபாபுவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ரவீந்திரன் என்பவர் தெரிவித்த கீழ்க்கண்ட தகவல் :
"மாடி வீட்டு ஏழை" படத்துக்கு நிதியுதவி செய்த முதலீட்டுதாரரின் குடும்பத்தாருடன் சந்திரபாபு கொண்ட தொடர்பினால், அந்த முதலீட்டுதாரர் குடும்பத்தில் ஒரு பூகம்பமே நிகழ்ந்தது. விஷயம், நமது பொன்மனச்செம்மல் அவர்களிடம் பஞ்சாயத்துக்கு வந்த போது, சந்திரபாபுவை கண்டித்தார். சந்திரபாபு அதை அலட்சியபடுத்தியதின் விளைவே - ஒன்றிரண்டு காட்சிகளுடன் எடுக்கப்பட்ட "மாடி வீட்டு ஏழை" திரைப்படம் கைவிடப்பட்டது.
சந்திரபாபுவின் சொந்த சகோதரர் ஒருவர் பல மாதங்களுக்கு முன்பு கலைஞர் தொலைக்கட்சியில் தெரிவித்த தகவல் வருமாறு :
"ஒரு கிருஸ்துமஸ் திருநாளன்று, நடிகர் சந்திரபாபு பட வாய்ப்புக்கள் இன்றி சோகத்தில் தனிமையில் வாடிய போது, மக்கள் திலகம் அவர்கள் தன் உதவியாளர் மறைந்த குஞ்சப்பன் அவர்கள் மூலம், ஒரு பெரிய பார்சலை நடிகர் சந்திரபாபுவுக்கு கொடுத்தனுப்பினார். பொன்மனசெம்மலின் வாழ்த்துக்களுடன் கூடிய அந்த கிருஸ்துமஸ் தின அன்பளிப்பாகிய பெரிய பார்சலை பிரித்து பார்த்ததில் புத்தாடையுடன், கேக் மற்றும் இனிப்புக்களுடன், பெருமளவு ரொக்கத் தொகையும் காணப்பட்டது.
சந்திரபாபு, அந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அடைந்த இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அன்றையை கிறிஸ்துமஸ் தினமே, சில மணி நேரம் கழித்து, தயாரிப்பாளர் - இயக்குனர் ராமண்ணா அவர்கள், சந்திரபாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது "பறக்கும் பாவை" படத்துக்கு, சின்னவர் (எம். ஜி. ஆர்.) சிபாரிசின் பேரில் அவரை ஒப்பந்தம் செய்யவிருப்பதாகவும், அதற்கு சம்பளமாக, சின்னவரின் ஏற்பாட்டின்படி ரூபாய் ஒரு லட்சம் (இத்தொகை அந்த கால கட்டத்தில் மிகப்பெரிய தொகை) தரவிருப்பதாகவும் கூறி, மேலும் அவரை இன்ப அதிர்ச்சி அடைய வைத்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள்திலகம் பகுதி 4 திரியினில், பக்கம் 285ல் கடந்த 01-03-13 அன்று பதிவிடப்பட்ட "இன்னா செய்தாரை ஒறுத்தல்" பகுதியில் இடம் பெற்ற நடிகர் சந்திரபாபு சம்பந்தபட்ட செய்தியினை மீண்டும் பார்வையாளர்கள் கவனத்துக்கு
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - தொடர்ச்சி (பாகம் 5)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முன்பு இந்த தலைப்பில் நடிகை டி.வி. குமுதினி, இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன், கவியரசர் கண்ணதாசன் மற்றும் நடிகை பானுமதி ஆகியோருக்கு மக்கள் திலகம் உதவிய நிகழ்ச்சியினைப் பற்றி குறிப்பிட்டு, இத்திரியில் வெளியிட்டு, பார்வையிடுவோரின் கவனத்துக்கு கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு நமது மக்கள் திலகம் உதவிய சம்பவம் ஒன்றினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
================================================== ==== ===============
நடிகர் சந்திரபாபு ஷீலா என்கின்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார். மணமான சில நாட்களில், கணவன் - மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், மணமாவதற்கு முன்பு தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை சந்திரபாபு கூறியிருக்கிறார். அந்த பெண்ணும், மணமாவதற்கு முன்பு தனக்கும் இரண்டொரு இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். வந்தது கோபம் சந்திரபாபுவுக்கு மூர்க்கனாக மாறி அந்த பெண்மணியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டார். ஷீலா என்கின்ற அந்த பெண்மணியும் எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்க வில்லை. இரவு நேரம். என்ன செய்வதென்று அறியாத ஷீலா தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இருந்தாலும் சந்திரபாபு அவர்கள் அதிகமாக மதிக்கும் இயக்குனர் சுப்பிரமணியம் (நாடோடி மன்னன் - இயக்குனர் மேற்பார்வை) அவர்களை தொடர்பு கொண்டு தனது முடிவை சொல்லி அழுதிருக்கிறார். அவர் உடனே ஒரு ஆளை அனுப்பி ஷீலாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து "எல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம், முதலில் நீ தூங்கு" என்று சமாதனம் செய்தார். மறுநாள் சந்திரபாபுவை அழைத்து எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்திருக்கிறார் சந்திரபாபு இணங்கவில்லை. சுப்பிரமணியம் தொடர்ந்து வற்புறுத்தவே, நீங்கள் வற்புறுத்தினால் நான்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறியிருக்கிறார். வேறு வழியின்றி, இயக்குனர் சுப்ரமணியம் அவர்கள் ஷீலாவிடம் "நடந்ததை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்குவதை தவிர உனக்கு வேறு வழியில்லை. லண்டனில் உள்ள உன் அன்னைக்கு செய்தி அனுப்புகிறேன். அவர்கள் வந்து அழைத்துப்போகும் வரை நீ இங்கேயே என் மக்களோடு மக்களாக இருக்கலாம் என்று கூறி சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து ஷீலாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். அந்த ஒரு மாத காலமும் இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினர் ஷீலாவை கண் போலக் காத்தார்கள்.
ஆதாரம் : வலம்புரி சோமநாதன் எழுதிய "தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்பிரமணியம்" என்ற நூல்.
நாகரீகம் கருதி சந்திரபாபுவின் வேறு சில நடவடிக்கைகள் பற்றி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.
================================================== ==============================
சந்திரபாபுவின் இது போன்ற நடவடிக்கைகள் பிடிக்காமல், நமது பொன்மனச்செம்மல் அவர்களுக்கும், - சந்திரபாபுவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், சந்திரபாபுவின் சொந்தப் படமாகிய "மாடி வீட்டு ஏழை" என்ற படத்தில் தொடர்ந்து நடிக்க தயக்கம் காட்டி வந்தார் நம் எழில் வேந்தன் எம் ஜி ஆர். அவர்கள். அதற்குள், நமது மக்கள் திலகத்தின் வளர்ச்சியிலும், புகழிலும், பொறாமை கொண்ட சிலர், உண்மை நிலவரத்தை திரித்து, தமிழ் திரைப்பட உலகில் வதந்திகளை உலாவ விட்டனர். இதில் சந்திரபாபுவின் பங்கு பெருமளவு உண்டு.
ஆனால் இவற்றையெல்லம் மறந்து விட்டு, சந்திரபாபு அவர்கள் படங்கள் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு, பறக்கும் பாவை, அடிமைப்பெண், கண்ணன் என் காதலன் போன்ற தனது படங்களில் தொடர் வாய்ப்புக்கள் அளித்து உதவினார். அடிமைப்பெண் படத்துக்காக நடிக - நடிகையர் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அப்போது சந்திரபாபுவும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். ஜெய்ப்பூரில் அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டும் கூட, சென்னை திரும்பும் வரை அவருக்கு, சம்பளம் போக தினசரி ஒரு பெரும் தொகை வழங்கி, அவரை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டார் நம் புரட்சித் தலைவர் அவர்கள்.
.
http://i50.tinypic.com/2qi2p86.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
================================================== ==============================[/B]
மக்கள்திலகம் பகுதி 4 திரியினில், 07-03-13 அன்று, பக்கம் 299ல் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களால் பதிவிடப்பட்ட, நடிகர் சந்திரபாபு சம்பந்தபட்ட மற்றொரு செய்தி மீண்டும் பார்வையாளர்கள் கவனத்துக்கு :
சந்திரபாபுவைப் பற்றிய மேலும் ஒரு தகவல்
கவியரசர் கண்ணதாசன் கூறியது (ஆதாரம் : சித்ரா லட்சுமணன் எழுதிய 80
ஆண்டு கால தமிழ் சினிமா (1931 - 2011)
"எனக்கே நான் இழைத்துக்கொண்ட பெருந்தீமை "கவலை இல்லாத மனிதன்" என்ற
தலைப்பில் படம் எடுக்க துணிந்ததாகும். "சிவகங்கை" சீமையின் நஷ்டத்தை
பாட்டெழுதியே தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். ஆனால் விதி
வலியதாயிற்றே. ஆகவே சந்திரபாபுவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து "கவலை
இல்லாத மனிதன்" படத்தை தொடங்கினேன். அதுவே என் கவலைகளுக்கெல்லாம் தாயாக
அமைந்தது. அன்று சிவாஜி கணேசன் வாங்கிய தொகையை விட அதிகமாக கொடுத்து
சந்திரபாபுவை படத்தின் நாயகனாகப் போட்டேன். அதற்கு பிறகு பேசிய
தொகைக்கும் அதிகமாக அவர் பணம் கேட்ட போதும் கொடுத்தேன். ஆனால்,
அதற்கும் பிறகு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் என்னை வேதனைப்
படுத்தினார் சந்திரபாபு.
நான்கு நாளில் எடுக்க வேண்டிய உச்ச கட்ட காட்சியை நான்கு மணி நேரத்தில்
எடுத்து படத்தை நாங்களே கொலை செய்தோம் என்றால் அதற்கு சந்திரபாபு தான்
காரணம். தன் குணத்தால் தன்னை கெடுத்துக் கொண்ட சந்திரபாபு என்
படத்தையும் கெடுத்தார்.
படத்தின் முக்கியமான காட்சி படமாக்கப் பட வேண்டிய ஒரு தினத்தில், எம்.
ஆர் ராதா, டி.எஸ். பாலையா, ராஜசுலோச்சனா ஆகிய எல்லோரும் படப்பிடிப்பு
தளத்தில் காத்திருக்க, சந்திரபாபு மட்டும் வரவில்லை அவரை அழைப்பதற்காக
நானே அவர் வீடு சென்றேன். அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட தலைக்குனிவு ஆறாத
புண். நான் சந்திரபாபு வீட்டிற்கு சென்ற போது அவர் தூங்குவதாக
சொன்னார்கள். நான் வெளியே சோபாவில் இரண்டு மணி நேரம் காத்திருந்தேன்
பிறகு வேலைக்கார பையனைக் கூப்பிட்டு "சந்திரபாபு எழுந்து விட்டாரா?
என்று கேட்டேன். "அவர் பின்பக்கமாக அப்பொழுதே போய் விட்டாரே" என்றான்
பையன். என் உடல் அவமானத்தால் குன்றியது. கூடவே, படம் என்ன ஆகுமோ,
கடன்காரர்களுக்கு எப்படி பதில் சொல்வது என்ற பயமும் என்னை சூழ்ந்து
கொண்டது.
எந்த வீட்டிலும் போய் நாற்காலியில் காத்து கிடக்க வேண்டிய அவசியம் எனக்கு
வந்தது கிடையாது மந்திரிகளில் கூட முதல் மந்திரியாக இருந்த நண்பர்
கருணாநிதி வீட்டிற்கு மட்டும் தான் போவேன். நான் சென்றவுடன், தன்னை
சந்திக்கும் வாய்ப்பை எப்போதும் எனக்குத் தர கலைஞர் தவறியதில்லை.
================================================== ==============================
தைரியசாலியான நல்ல நடிகர் அஜித்தின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி, அவரது ரசிகன் எனக் கூறிக்கொண்டு, இது போன்ற பித்தலாட்டங்களை தொடரவேண்டாம் என அந்த "தல" ரசிகனுக்கு கூறிக் கொள்கிறோம்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
[B]என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் . [/B]
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
உங்களின் விரிவான பதிவை படித்த பிறகாவது சம்பந்த பட்டவர்கள் உணர்ந்து கொண்டால் ''தலை'' என்ற வார்த்தைக்கு
பொருள் இருக்கும் .27 வயது தலைக்கு அனுபவம் போதாது .
இனிய நண்பர் திரு கார்த்திக் சார்
என்னுடைய பதிவுகளுக்கு வாழ்த்து கூறி பாராட்டிய உங்களுக்கு
என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .
மக்கள் திலகத்தின் நினைவு இல்லம் இல்லம் போல் நடிகர் திலகத்தின் நினைவு மணி மண்டபம் அமைத்து அதில் அவரது
சாதனைகள் -கேடயங்கள் -என்று பார்வைக்கு வைத்து எல்லோரின் கனவையும் நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருப்போம் .