http://i58.tinypic.com/e7l65g.jpg
ஆல்பட் அரங்கும் முன் சாலையில் பட்டாசு வெடிக்கும் காட்சி.
Printable View
http://i58.tinypic.com/e7l65g.jpg
ஆல்பட் அரங்கும் முன் சாலையில் பட்டாசு வெடிக்கும் காட்சி.
http://i1170.photobucket.com/albums/...ps29aa4638.jpg
உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்கு குணம் ;
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் -
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா ....."
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது !
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து
திருடன் என்றே உதைக்குது !
காலநிலையை மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது -
புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலை பிடிச்சி ஆட்டுது -
வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு
காசை தேடி பூட்டுது -
ஆனால் காதோரம் நரச்ச முடி
கதை முடிவை காட்டுது !
புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா !
சென்னை - 26-Jun-2014
ஆயிரத்தில் ஒருவன் மார்ச் 14ல் வெளியாகி, ஜூன் 22, 2014 அன்று வெற்றிகரமான 101வது நாளை சென்னை சத்யம், ஆல்பட் திரையரங்குகளில் கண்டிருக்கிறது. 1965ல் வெளியாகி, 48 வருடங்களில் பலமுறை தமிழகமெங்கும் திரையிடப்பட்டு, தொலைக்காட்சிகளில் பலமுறை ஒளிபரப்பாகியும் டிஜிட்டல் வடிவம் பெற்று திரைக்கு வந்த பின், சென்னை நகரில் பல்வேறு புதிய படங்களை எதிர்கொண்டு ?ஆயிரத்தில் ஒருவன்? அரங்கு நிறைந்த காட்சிகளுடன் 101வது நாளைக் கண்டு, தொடர்ந்து 150 நாட்களைக் கடந்து செல்லும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆல்பட் திரையரங்கு முழுவதும் எம்.ஜி.ஆர். பக்தர்களின் டிஜிட்டல் பேனர்கள் ஆக்ரமித்திருந்தது. தமிழகமெங்குமிருந்தும் ரசிகர்கள் இந்த 101வது நாளைக் காண திரண்டு வந்திருந்தனர். 10 ஆயிரம் சரவெடி, அபிஷேகங்கள், ஊர்வலம் என்று எழும்பூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது.
நடிகர் மயில்சாமி 101 கிலோ மல்லிகைப்பூ கொண்டு வந்து பூக்கடை சக்தியின் உதவியால் எம்.ஜி.ஆர் உருவம் கண்ட இடங்களிலெல்லாம் மலர் அபிஷேகம் செய்து, திரையரங்கினுள் திரையை நோக்கி, ரசிகர்களை நோக்கி தூவினர். இயக்குனர் பி.வாசு, கவிஞர் கண்ணதாசன் புதல்வர் அண்ணாதுரை, ஆயிரத்தில் ஒருவன் வசனமெழுதிய ஆர்.கே. சண்முகம், இதயக்கனி ஆசிரியர் எஸ். விஜயன், திரைப்படக் கலைஞர்களின் நிர்வாகி கிரி, எம்.ஜி. சக்ரபாணியின் பேரன் பிரதீப் பாலு என்று ஏராளமானோர் வந்திருந்தனர். படம் திரையிட்டது முதல் இறுதி வரை ஆரவாரம், கற்பூர ஆரத்தி, கை தட்டல், மலர் தூவல் என்று அரங்கமே அதிர்ந்தது.
http://i1170.photobucket.com/albums/...ps7b19211d.jpg
courtesy idayagani emagazine
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=dZpW...ature=youtu.be
மக்கள் திலகத்தின் மந்திரிகுமாரி , புதிய பூமி படங்களின் வீடியோ , கருத்துக்களை வெளியிட்ட நண்பர்களுக்கு நன்றி .
திரு தெனாலி அவர்களின் வீடியோ - மக்கள் திலகத்தின் படங்களின் டைட்டில் காட்சிகளின் தொகுப்பு அருமை .ஆயிரத்தில் ஒருவனின் 100 வது நாள் படங்கள் பதிவுகள் அருமை .
1968ல் சென்னை பிராட்வேயில் வெளியான ஒளிவிளக்கு - இந்த அரங்கில் எத்தனை முறை மறுவெளியீடுகள் என்று
கணக்கிட்டால் அநேகமாக 46 ஆண்டுகளில் 25 வாரங்கள் மேல் வந்து இருக்கும் என்று .நினைக்கிறேன் .
மக்கள் திலகத்தின் 100 வது படம் மறு வெளியீட்டில் ஓடியது போல் உலகில் வேறு எந்த படமும் இப்படி ஓடி இருக்காது .
From fb about makkal thilagam - THIRU CHNADRA HASAN
பரமக்குடி mgr ரசிகமன்றக் கூட்டம்......... அதில் பெரிய க்யூவில் நின்று ஒரு பத்து எம்ஜிஆர் மன்ற தலவர்கள், பத்து செயலாளர்கள், பத்து பொருளாளர்களுக்கு பின்னால் மெதுவாக ஊர்ந்து தலைவருக்கு மாலை போட்டு விட்டு வந்து முதல் வரிசை முக்கியஸ்தர்களுடன் உட்கார்ந்தேன். இன்னுமொரு அரைமணி நேரம் மற்ற நூற்றுக்கும் மேலான ரஸிகர்கள் மாலைபோட்டு முடிக்கும்வரை காத்திருந்தது எனக்கே பொறுமையை சோதிப்பதாக இருந்ததது. இன்று அதை நினைக்கும்போது ஓரளவு அந்த தலைவரின் பொறுமையும் அவர் வெற்றிக்கும் ஒரு 5% காராணம் புரிந்தது.
மேடையில் ஒருவர் வரவேற்புரை பேசும்போது மக்கள் திலகம் அருகில் எனக்கு தெரிந்த திமுக பிரமுகர் சுப. தங்கவேலன் தவிர யாருமில்லை. ஒரளவு கட்சிக்குள் உள்ள கசமுசாக்கள் எனக்கு தெரிந்தும்கூட அதில் எவ்வளவு ஆழம் இருக்கும் என்று புரியவில்லை.
ஒன்று மட்டும் புரிந்தது சாருஹாஸன் என்ற கட்சி வக்கீல் யார் என்று எம்ஜிஆர் அவர்கள் சுப தங்கவேலனிடம் கேடபதையும் அவர் “வெள்ளை பாண்டு சட்டையுடன் ஷூ அணிந்து கழுத்தை முடிய வக்கீல் அணியும் வெள்ளை காலருடன் இருப்பவர்!” என்று அடையாளம் காட்டுவதும் 15 வருடம் வக்கீலாக குப்பை கொட்டியவனுக்கு புரியாமலா போகும்?
பொதுக்கூட்டம் நடக்கும் போதே சுப எழுந்து வந்து என்னை அழைத்துப்போய் தான் இருந்த நாற்காலியில் உட்கார வைக்கவும் அடுத்தவர் நகர்ந்து அவருக்கு இடம் கொடுக்கவும்...... ஒவ்வொருவராக அடுத்த சேருக்கு மாற............. கடைசி ஆள் நாற்காலியை இழந்து எழுந்து நிற்கவேண்டிய நிலமை ஏற்பட்டது.
மரியாதையாக தலைவரை வணங்கி உட்கார்ந்தவனிடம் தலைவர் “கமல் இங்கேயா? இல்லை சென்னையிலா?”
...அதற்கு நான் விடை அளித்ததும் சிறிது இடைவெளி கொடுத்துவிட்டு உங்க அப்பா இங்கேதானே இருக்கிறார்?
“ஆமாம் நாங்கள் ஒரே விட்டில்தான் இருக்கிறோம்.”
பிஃபோர் இண்டிபென்டன்ஸ். உங்கப்பாவும் நானும் விடுதலை போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தோம் அடிக்கடி சந்திப்போம்.”
“ஆனந்த ஜோதி சூட்டிங் பெரும் பகுதி நம்ம தோட்டத்தில் நடந்தது கமல் அப்போ குழந்தை.
அன்று முதல் நான் ஒரு எம்ஜிஆர் விசிறியாகிவிட்டேன்.
கூட்டம் முடிந்து வீட்டுக்கு போனவன் அவரை மறந்து தூங்க மணி 12.30 ஆகிவிட்டது.
எம்ஜிஆரின் படங்களில் நாட்டுப்பற்று இல்லாத படமே இல்லை என்று கூறிவிடலாம். காந்தி,ஏசு, புத்தர், அண்ணா மீது பெரும் ஈடுபாடுடையவராக தமது படங்களில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சித்தரித்துள்ளார் மக்கள் திலகம்.
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை என்று புலவர் புலமைப்பித்தனின் வரிகளால் தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
நம்நாடு, நேற்று இன்றுநாளை, இதயக்கனி, போன்ற அரசியல் தூக்கலான படங்களில் எம்ஜிஆரின் அரசியல் எதிர்காலமும் எழுதப்பட்டு விட்டது. குறிப்பாக அவரது நான் ஆணையிட்டால் பாட்டும்தான்.
From net
ரயில் கிளம்பியதும் மின்விசிறிகளும் விளக்குகளும் உயிர்கொண்டன. உடனே ஒல்லி ஆள் பாட்டுபோட ஆரம்பித்தார். முதல்பாட்டு ‘குறைதீர்க்கும் வினாயகனே’ அடுத்தபாட்டு ‘நான் செத்துப்பிழைச்சவண்டா!’ பயங்கரக் கைதட்டல், விசில் ஒலி. ஒரு ஒல்லி மனிதர் எழுந்து கைகளை விரித்து லேசாக ஆட மற்றவர்கள் கைதட்டிச்சிரித்தார்க்ள். அடுத்தபாடல் ‘ஒன்றும் அறியாத பெண்ணோ’ வந்தபோது அனைவரும் அமர்ந்து அதன் ஓங்கிய இசைக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அழுத்தமான குரலில் டிஎம்.எஸ் ‘கள்ளும் வெண்மை பாலும் வெண்மை பருகிப்பார்த்தால் தெரியும் உண்மை’ என்றார்.
எனக்கு எப்போதுமே பிடித்த ‘நீல நயனங்களில்…’ .அவ்வளவு நீளமான நீலம். பாடல்களைப்போட்ட ஒல்லிமனிதர் இருக்கையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு கண்களை மூடி சுட்டுவிரலால் காற்றில் தாளம்போட்டு தன்னை மறந்து இருந்தார். அவரது தேர்வில் ஒரு நயம் இருந்தது. பாட்டுகளை சகட்டுமேனிக்குக் கேட்பவரல்ல. எப்போதாவது தற்செயலாக மட்டும் பாட்டு கேட்பவர்கள்தான் சலித்துப்போன பாட்டுக்களை வைத்திருப்பார்கள். ’காதுகொடுத்துக் கேட்டேன் ‘ ‘டிக் டிக் டிக்’ போன்ற பாட்டுகள். அந்தவகை ஒன்றுகூட அவரிடமில்லை.
வந்துகொண்டே இருந்தவை கேட்டுக்கேட்டு சலிக்காத பாட்டுக்கள். காலத்தை வென்றவை. அவை அனேகமாக இன்னிசைமெட்டுக்கள். ‘பாடும்போது நான் தென்றல்காற்று’ ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி’ ’விழியே கதை எழுது’ ’பூமழைதூவி வசந்தங்கள் வாழ்த்த‘. எல்லாவற்றுடனும் எம்ஜியாரின் முகம் இருந்தது. அங்கே கசக்கி கிழித்து சுருட்டி வீசப்பட்ட எளியமனிதர்களுடன் அவரும் இருப்பதுபோலத் தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் அப்போது அவரை அங்கே உணர்வதுபோல.
. ஆனால் இப்போது எம்ஜிஆரின் முகம் மனதுக்கு மிக நெருக்கமானவராக இருந்தது.
எம்ஜிஆர் சிரித்துக்கொண்டு மட்டுமே நினைவில் எழுந்தார். சரிதான் என்று கண்ணடித்தார். துள்ளி ஓடினார். கைவீசிச்சுழன்றாடினார். துன்பமே அற்றவராக இருந்தார். அவர் பாடல்களில் எப்போதுமே ஓர் உற்சாகம் இருந்தது. காதல்பாடல்களின் இன்னிசையில்கூட பிரியத்துடன் துக்கம் கலந்திருப்பதில்லை. இந்தவாழ்க்கை, இதன் சேறும் அழுக்கும் குப்பையும் கூளமுமாகக்கூட, மகத்தானதுதான் என்று அவை சொல்கின்றனவா என்ன?
எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் சலிப்பே வராது .
பொன்மனச்செம்மலை பூவிழிக் கண்ணனை நிருத்திய நாயகர் அமரர் எம்ஜிஆர் தன்னை.ஏற்கனவே பலதடவைகள் அவரைப்பற்றி எழுதியிருந்தாலும் அவரின் பெருமைகள் எடுக்க எடுக்க வற்றாத அமுதசுரபி போன்றது அள்ளி அள்ளி அவரின் புகழை பருகி மயங்குவது எம் ஜி ஆர் இரசிகர்களுக்கு என்றும் திகட்டாத தேன் போன்றதே, அவரின் உள்ளத்து இனிமை நற்செயல்களே மக்களை அவர்பால் மயங்க வைத்தது. அதன் பிறகே அழகு ஆட்டம் பாட்டு எல்லாம் ,
அவரைப்போலவே அவர் காலத்தில் அழகிய நாயகர்கள் இருந்தார்கள் ஆடினார்கள் பாடினார்கள் யாராலும் அமரர் எம் ஜி ஆர் போல் ஆக முடியவில்லை அது தர்மத்தின் தீர்ப்பு காரணம் இயல்பாகவே உள்ளத்தில் நல்ல உள்ளம் அவருக்கு அமைந்துவிட்டதே.
வீராதி வீரர்களை கலை விற்பன்னர்களை அறிவுச்சுடர்களை ஆற்றல் மிகு மறவர்களை தமிழுலகம் சந்தித்திருக்கின்றது. வாடிய பயிர்களைக்கண்டு வாடினேன் என்ற வள்ளலாரின் மனிதாபிமானத்தை ஒத்து தனது உழைப்பில் ஈட்டிய செல்வங்கள் அத்தனையையும் வாடியவர்களுக்கு வழங்கி வள்ளல் என்று மக்களால் போற்றப்பட்டவர், மனிதாபிமானத்துக்கு மகத்தானவர் என்று எம்ஜிஆர் மூலமே
தமிழுலகம் கண்டு கொண்டது என்றால் மறுப்பவர்களுண்டோ மேதினியில்.
இலங்கையில் 1983 ம் ஆண்டு தமிழர்கள் அரசியல் இன்னல்களை சந்தித்து உயிர்களை உடமைகளை இழந்து வாடி வருந்தியபோது பெருந் தொகைப்பணத்தை ஈழத்தமிழர் துயர் துடைக்க வழங்கிய வள்ளல் மேலும் பல சந்தர்ப்பங்களில் தனது பாரிய பொருளாதார உதவிகளை மக்களுக்காக பாதுகாப்புக்காக நல்கினார்.
அந்த நல்ல உள்ளம் கொண்ட செம்மல் நம்மைவிட்டு நெடுந்தூரம் சென்றது தமிழர்களின் பெருவாழ்வுக்கு வந்து விழுந்த தடைக்கல்லே . வெறுமனே திரையில் பணத்துக்காக ஒரு கொள்கையின்றி நெறி முறையின்றி நடித்து விட்டு வண்டி நகர்த்தியவரல்ல அமரர் எம் ஜி ஆர்,
ஆடும் கூத்தும் பாடும் பாட்டும் நாட்டு மக்களுக்கு நல்ல படிப்பினையை தரவேண்டும் என்று அதற்காகவே வல்லுனர்களை வைத்து வாழ்க்கையின் நெறிமுறைகளை பண்பாடுகளை கலாச்சார பழக்க வழக்கங்களை மக்கள் இறுகப்பற்றும்படியாக தனது படங்களில் அதிகமாக இருக்கச்செய்தார் மட்டுமின்றி தானும் நீதி நேர்மை தவறாமல் இரக்கம் அன்பு பாசம் கொண்ட உத்தமத் தலைவனாய் வாழ்ந்து காட்டினார்.
எம் ஜிஆரை அவர் வாழுங்காலத்தில் அவமரியாதையாக பேசியவர்களே இன்று அவரை போற்றி மகிழ்கின்றார்கள் என்பதிலிருந்தே அந்த மாமனிதரின் தரம் நிரந்தரமான உயர்ந்த இரகம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
காட்சிகளில் விறுவிறுப்பு ,சவால்களை எதிர்கொண்டு வெல்லும் பாங்கு, சூழ்ச்சி
களை முறியடிக்கும் புத்திசாலித்தனம் , கருத்தாழம் கொண்ட நல்லியல்பை வளர்க்கும் பாடல்கள் , ஆபத்துக்களில் பிறரை காக்கும் வண்ணம் வீரமாய் போராடுங்குணம் போன்ற விடயங்களை மக்களுக்கு எடுத்துக்கூறும் எம் ஜி ஆர் படத்தை கலாரசிகர்கள் பார்க்காமல் இருப்பார்களா. எத்தனை ஆண்டுகள் சென்றாலும் அவரின் புகழ் குன்றாத ஒளிவிளக்காய் ஒளிர்ந்துகொண்டே இருக்கும் வாழ்க அவர் புகழ்.
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி…
பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர்சென்று சேர்வதில்லை …..
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டமாகாது தம்பி…
பட்டோடு பருத்தியை பின்னியெடுத்து உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தார்…
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நம் நாடே இருக்குது தம்பி….
எழுத்தாக்கம்
ம.இரமேசு
i am in albert theater in front of thalaivar movie Aayirathil oruvan 100th day poster
http://i1170.photobucket.com/albums/...psf7a0d49c.jpg