ஒரு கலை ரசிகனின் காத்திருப்பு
இணைய நண்பர் திரு சிவாஜி ரசிகன் என்னும் திரு ராஜ்குமார் (சேலம்) அவர்களின் கருத்து :
ஒரு கலை ரசிகனின் காத்திருப்பு
நட்சத்திரங்கள் இடையே
அபூர்வமாக தோன்றிய
துருவ நட்சத்திரம் நீ...
அரிதாரம் பூசவே
அவதாரம் எடுத்தாயோ நீ ?
உண்மை.... உண்மை....
அவதாரங்கள்
அரிதாய் தான் நிகழ்கின்றன !
அரிதாய் நிகழ்ந்த இந்த அவதாரம் எடுக்க
எத்துனை நாட்கள் தவம இருந்தாய் ?
யாரிடம் பெற்று வந்தாய் இந்த வரத்தை ?
நடிகனாய் நீ அவதரித்ததால்
பல அவதாரங்கள் மீண்டும் அவதரித்தன -
வெண் திரையில்....
பட்டியல் இட்டால் பக்கம் போதாது..
கதாபாத்திரங்களின் தன்மையை
உன் நடையிலேயே காட்டியவன் அல்லவா நீ ?
நடிப்பால் நவரசங்களை காட்டியவனே...
துடிக்கும் உன் கண்னசைவும்
எங்களுக்கு
ஓராயிரம் கதை சொல்லுமே ...
எங்கே சென்றன அந்த கண்கள் இன்று ?
இன்னும் ஓராயிரம் அவதாரங்களை
உன் மூலம் தரிசிக்க காத்திருந்தோமே ...
அதற்குள் ஏன் சிறகுகள் விரித்துப் பறந்தாய் ?
சூரக்கோட்டை சிங்கமே !
உன்
நடிப்பு பசிக்கு தீனி போட
இளம் இயக்குனர்கள் பலர்
இங்கு
விருந்தோடு காத்திருக்கிறார்கள்...
நீ
எப்போது வரப்போகிறாய் ?
எப்படி அவதரிக்க போகிறாய் ?
திலகம் இழந்த வெள்ளித்திரை
இன்னும் அப்படியே தான்
இருக்கிறது...
நீ விட்டு சென்ற
சிம்மாசனம் இன்னும்
காலியாகத்தான் இருக்கிறது...
நீ
எப்போது வரப்போகிறாய் ?
எப்படி அவதரிக்க போகிறாய் ?
காத்திருக்கிறேன்...
- சிவாஜி ரசிகன் என்னும் ராஜ்குமார்
அன்பு சிவாஜி நெஞ்சங்களே, ரத்த சம்பந்தமில்லாத எண்ணிவிடக்கூடிய இழப்புகளில் மிகவும் வருத்தப்பட வைத்த இழப்பு இவருடையது. அவர் இறந்தபோது ஒரு வாரம் 'சன்' டிவியில் அவரின் படங்களை கொத்தாக தினமும் போட்டபோது, ஒரு வாரம் வேலைபோனாலும் பரவாயில்லை என்று கருதி விடுப்பு எடுத்து பார்த்தது நினைவுக்கு வருகிறது. சிறுவயதில் எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்து இவரின் நடிப்பால், என் உறவினர் ஒருவரால் மாற்றப்பட்டேன். நான் மிக அதிகமாக ரசித்துப்பார்த்த படம் "உத்தமபுத்திரன்" - எத்தனை முறை பார்த்தேன் என்று நினைவில் இல்லை. எனக்குத் தெரிந்து இவர் ஒருவர்தான் இரு வேடங்களில் தனித்தனியான தன்மை கொண்டு இரு பரிமாணங்களை கொடுத்தவர். இப்போது இரு வேடங்களில் நடிப்போர் ஒருவர் பேண்டும், வேட்டியும் கட்டி வித்தியாசப்படுத்துகிறார்கள்.
ஏற்கனவே பல இழைகளில் கொடுத்திருந்தாலும், பார்க்க பார்க சலிக்காத அவரின் நடிப்பாற்றலால் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தை மீண்டும் உங்களுக்கு இதோ, ஒரே நேர்கோட்டில் புகைப்படக்கருவி மாறாத காட்சியை பாருங்கள், :
http://www.youtube.com/watch?v=vAE6xvRMn34
அவர் இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டி (ஏற்கனவே கொடுத்ததுதான்)
http://www.youtube.com/watch?v=Xi-dI...eature=related
யார் இப்பொழுது தமிழை இவர்போல் துல்லியமாக உச்சரிக்கிறார்கள்? அவர் காலத்திலேயே வாழ்ந்து, ரசிக்கவைத்த ஆண்டவனுக்கு நன்றி.