வாத்தியாரையா..
எனக்கும் "ராமி" என்றுதான் கேட்குது.. ( அப்போதான் மாமிக்கு பொருந்தும் )
Printable View
வாத்தியாரையா..
எனக்கும் "ராமி" என்றுதான் கேட்குது.. ( அப்போதான் மாமிக்கு பொருந்தும் )
கலைச்செல்வியின் நடனத்தை ரசிக்கும் நடிகர் திலகம்
தர்மம் எங்கே என்று கேட்கும் ஜானகியும், ஈஸ்வரியும்
நான்கு காலமும் உனதாக
https://www.youtube.com/watch?v=OF1use05M2Q
Madhu sir
error regretted on 4 and corrected towards 6!
thank u for being vigilant while I slipped to sleep!
senthil
Number 5
அதிகம் பயன்படுத்தாத எண் ஐந்தே !
பரிசு என்ற படத்தில் வரும் இப்பாடலில் ஐந்து ரூபாய் என்ற வரி விதி(தை)க்கப் படுகிறது!
https://www.youtube.com/watch?v=iIk2f_tOHuA
மற்ற படங்கள் நினைவுக்கு எட்டவில்லை !!
எண்ணங்களை வண்ணங்களாக்கும் எண்களின் அணிவகுப்பில் மதுர கானங்கள் !!
எண் 6
சுவைகள் ஆறு ! முருகக் கடவுளுக்குத் தலைகள் ஆறு! கண்டங்கள் ஆறு!
ஆறு என்ற எண்ணை எண்ணியதும் எள் என்பதற்கு முன்னே எண்ணையாக மனதில் நிறைந்து வழியும் கீதம் ஆண்டவனின் கட்டளைகளை நடிகர்திலகம் உருவகப்படுத்தி அற்புதமாக வரிசைப்படுத்திய ஆறு மனமே ஆறு அமுத கீதம்தான் !!
https://www.youtube.com/watch?v=LTwHc4UBbM0
From Andhaman Kaidhi (1952)
anju roobaa nottai konjam minne maathi michamille kaasu michamille........ by T.V.Rathinam
http://www.youtube.com/watch?v=vQj7yKnmGFY
...
ராசா மகனில் எஸ்.பி.பி., ஜானகி பாடும் "அஞ்சு கஜம் காஞ்சிப்பட்டு"
https://www.youtube.com/watch?v=eS2sWQR81Kk
சி.செ.. என்ன இப்படிச் சொல்லிப்புட்டீஹ..
*
அஞ்சு வச்சு ஆஞ்ச் சோட பாட் ரொம்ப ஃபேமஸாச்சே.. திரைப்பாடல்ல வராட்டியும்..
*
(வலையில் எடுத்த விளக்கம்)
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்
- இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.
இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.
முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவன் அனுமன் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது. (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.
*
ஸோ இத்தகைய சிறப்புப் பெற்ற அஞ்சுக்கு பாட்டேஇல்லையா..கொஞ்சம் மது மது செய்து பார்த்ததில்…
*
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்
*
மரபுப் பாடல் சார்லி சாப்ளினில்
*
சும்மா… பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா
அவளும் நானும் சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா (முற்றிலும் மாச்சீர்களால் ஆன எழுசீர் விருத்த வரியாக்கும்!)
பையன் ஒருத்தன் சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா
அவனும் நானும் சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா…
*
வெள்ளி மலை மன்னவா ஆ
அஞ்செழுத்தும் எந்தன் நெஞ்செழுத்தல்லவா?
ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா?
அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா?
அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா?
*
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
*
அஞ்சு விரல் பட்டால் என்ன
அஞ்சுகத்தை தொட்டால் என்ன
*
பஞ்சவர்ணகிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பாடல் கேட்டேன்..
*
அஞ்சு வருஷங்கள் முந்திப் பொறந்தாலும்
அண்ணனும் என்னாட்டம்- அந்தப்
பஞ்சு மனசுல பத்தும் நெருப்பாக
அண்ணி இங்கே வரட்டும்..
*
சரி என்ன பாட் போடலாம்..என்னைப் பத்தியே போடலாம்..
மனசுருக்கணும் மனசிருக்கணும்
பச்சப்புள்ளையாட்டம்..
https://youtu.be/5E7uLrswsMc
தொட்டி ஜெயாவில் அச்சு வெல்ல கரும்பே அஞ்சு மணி அரும்பே
https://www.youtube.com/watch?v=IKSeOKGx1EU
காலையில் முக நூலில் எழுதியது
**
சுற்றி மலைகளுடன் சூழ்ந்திருக்கும் வாழ்க்கையாய்
முற்றும் அழகுத்தீ மூட்டிடும் – நித்தமும்
கண்கள் விரிக்கின்ற காட்சி எழிலது
என்றுமே கூடுமா மே..
செல்லாதே என்றால் சிரித்தே வழுக்கியே
நில்லாது தொண்டைக்குள் நேராகத் - துள்ளியே
பல்சுவையாய்ச் சென்றங்கே பாங்காய் மயக்கிடும்
அல்வாதான் ஓமானில் ஆம்..
(ஓமானி அல்வா.. வாவ் நன்னாயிட்டு இருக்கும்..ம்ம் நான் இப்போ சாப்பிடறதில்லை!)
*
சரி இதுக்கு என்ன பாட் போடலாம்னு யோசிச்சா உன் சமையலறையில் பாட் தான்..இந்தப் பொற்ப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சது..
ஆனா அதுல கடைகள்லாம் வருது..படப் பாட் இல்லை..
https://youtu.be/ZOrM8S0AeBI
எந்தந்த இடத்துல என்னெல்லாம் சாப்பிட்டிருக்கீங்கன்னு சொல்லுங்க நண்பர்களே..