http://i59.tinypic.com/1pt7h2.jpg
Printable View
சொல்லாலே அளப்பரிய எம்.ஜி.யாரைப் பாடு
சொன்னவழி சென்றிடவே அன்னவரை நாடு
எல்லோரும் போற்றுகின்ற எம்.ஜி.யாரைத் தேடு
எந்நாளும் அவர்புகழைப் பாடிப் பாடி ஆடு
சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
- புரட்சித்தலைவர்
http://i62.tinypic.com/1z53n9v.jpg
எனது 1,000 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்கள்...
திரு. சிவாஜி செந்தில் அவர்கள்
திரு.ஐதராபாத் ரவி அவர்கள்
திரு.யுகேஷ் பாபு அவர்கள் (தலைவரின் அருமையான படத்துக்கு நன்றி)
திரு.எம்ஜிஆர் பாஸ்கரன் அவர்கள் (3வது பார்ட்டே இப்போதுதான் படித்து முடிக்கிறீர்களா? ஏன்)
திரு.வினோத் அவர்கள் (காட்சியின் வீடியோ பதிவுக்கு நன்றி. தலைவர் பேசுவது போன்ற உங்கள் கற்பனை அருமை சார்)
பேராசரியர் திரு.செல்வகுமார் அவர்கள்
திரு.சைலேஷ் பாசு அவர்கள் (வீடியோ பதிவுக்கு நன்றி)
திருப்பூர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள்
திரு.லோகநாதன் அவர்கள் (ஆயிரத்தில் ஒருவன் பேனருக்கு நன்றி)
திரு.சி.எஸ்.குமார் அவர்கள்
திரு.சுஹராம் அவர்கள்
ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். மானசீகமாக வாழ்த்து தெரிவித்த அன்புள்ளங்களுக்கும் நன்றிகள். ஆயிரக்கணக்கில் பதிவுகள் இட்டிருக்கும் ஜாம்பவான்கள் 1,000 பதிவிட்ட என்னை பெருந்தன்மையோடு வாழ்த்தியிருப்பது என்னை மேலும் ஊக்கப்படுத்தவே என்பதை உணர்கிறேன். தங்களின் வாழ்த்துக்களோடு தலைவர் புகழ் பாடும் பணியில் தொடர்கிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.சிவாஜி செந்தில் சார்,
தாமதத்துக்கு மன்னிக்கவும். கடந்த சில நாட்களாக அலுவல்கள் காரணமாக திரிக்கு வரவில்லை. நேற்று நீண்ட பதிவு நேரத்தை விழுங்கிவிட்டது. இன்றுதான் பொறுமையாக பதிவுகளை பார்த்தேன்.
மணி விழா காணும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் நீளாயுள், நிறைசெல்வம், நிம்மதியுடன் நலமும் பெற்று வாழ இறைஞ்சுகிறேன். தங்களுக்கு அந்தப் பணிதான் ஓய்வே தவிர இங்கல்ல. அலுவல்களை முடித்துக் கொண்டு விரைவில் திரிக்கு வந்து அனைவரையும் மகிழ்விக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்பு சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு,
தேடி வந்த மாப்பிள்ளை படத்தை நீங்கள் முதல் நாள் பார்த்த அனுபவம் சுவையாக இருந்தது. அதில் என்னை மிகவும் கவர்ந்தது மேலே உள்ள பகுதி. உடல் வலு இல்லாததால் கூட்டத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட நண்பரைப் பார்த்து ஏமாற்றத்தோடு பரிதாபப்பட்டதோடு நின்று விடாமல் ஆளுக்கு கொஞ்சம் கைக்காசை போட்டு பிளாக்கில் டிக்கெட் வாங்கி அவரையும் உங்களோடு படம் பார்க்க கூட்டிச் சென்றபோது ‘சாதனை படைத்தது போன்ற உணர்வு’ என்று கூறியிருக்கிறீர்களே.
நிச்சயம் இந்த ஒற்றுமையும் உதவும் மனப்பான்மையும் நமது சாதனை. ரத்தத்தின் ரத்தங்களுக்கு அதுதான் மிகப்பெரிய பலம். தலைவரின் ஆசியால் இந்த சாதனையும் பலமும் என்றென்றும் தொடர வேண்டும். தொடரும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்