-
the hindu - 3.4.2016
former admk misiter thiru r.m. Veerappan interview
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். திரைத்துறையிலும் அரசியலிலும் எம்ஜிஆரின் நிழலாக இருந்தவர். அரசியல்வாதி, அமைச்சர், சினிமா தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஆர்.எம்.வீரப்பன். திறமை யான நிர்வாகி என்று பலராலும் பாராட்டப்பட்ட இவர், அரசியலில் உச்சத்தையும் அதல பாதாளத்தையும் பார்த்த பழுத்த அனுப வசாலி. எம்ஜிஆர் கழகத்தின் தலைவராக இருக்கும் ஆர்.எம்.வீரப்பனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். அன்றைய அரசியல், இன்றைய அரசியலின் போக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம் என பல விஷயங்களை முன்வைத்தோம். அவரது விரிவான பேட்டியில் இருந்து..
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் நீங்கள். திராவிட இயக்கத்தோடு உங்களுக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி?
பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகைக்கு முகவராக இருந்தேன். பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டு அவருடன் பயணம் செய்தபோது பயணச் செலவு, புத்தகங்கள் விற்ற பணம் ஆகியவற்றை கணக்கு எழுதி மீதி இருந்த 1,100 ரூபாயை பெரியாரிடம் கொடுத்தேன். அந்த காலத்தில் அது பெரிய தொகை. என்னை ஏற, இறங்க பார்த்த பெரியார், ஈரோட்டுக்கு அழைத்தார். அதை ஏற்று அங்கு சென்று பணியாற்றினேன்.
நாடகத்தின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக கே.ஆர்.ராமசாமியின் நாடகக் கம்பெனியில் சேர விரும்பினேன். பெரியாரிடம், என் பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு தஞ்சாவூர் சென்று நாடகக் கம்பெனியில் போய் சேர்ந்துவிட்டேன். கே.ஆர். ராமசாமியின் நாடகக் கம்பெனிக்காக அண்ணா எழுதிய ‘ஓர் இரவு’ நாடகத்தை நான்தான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவிடம் இருந்து வாங்கி வந்தேன். அண்ணா அடிக்கடி தஞ்சாவூர் வருவார். அப்போது அவரிடம் நெருக்கம் உண்டானது. பின்னர், எம்ஜிஆரோடு தொடர்பு ஏற்பட்டு அவரோடு இணைந்தேன்.
அன்றைய அரசியலுக்கும் இப்போதைய அரசியலுக்கும் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்?
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், போன்றவர்கள் நெறிசார்ந்த அரசியல் நடத்தினர். காமராஜர் கடும் உழைப்பாளி. அண்ணா மனிதநேயம் மிக்கவர். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர். தன் கட்சித் தொண்டர்களை சகோதர பாசத்தோடு ‘தம்பி’ என்று அழைத்த தலைவர் அண்ணா.
எம்ஜிஆர் சிறந்த மனிதாபிமானி. கொடை உள்ளம் கொண்டவர்.
நீங்கள் எம்ஜிஆரோடு நெருக்கமாக இருந்தவர். இப்போது, விஜயகாந்தை கறுப்பு எம்ஜிஆர் என்று கூறுகிறார்களே, அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எம்ஜிஆர் மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகர். திமுகவில் சேர்ந்து அக்கட்சிக்காக உழைத்து படங்களில் திமுக கொடியையும் சின்னத்தையும் காட்டி மக்கள் மனதில் பதிய வைத்தார். ஒருமுறை திருநெல்வேலி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எம்ஜிஆரின் 2248 என்ற பதிவு எண் கொண்ட பிளைமவுத் காரில் அண்ணா சென்றார். முன் சீட்டில் அண்ணாவும் பின் சீட்டில் எம்ஜிஆரும் அமர்ந்திருந்தனர். கோவில்பட்டியில் டீ குடிப்பதற்காக ஒரு கடை முன்பு கார் நின்றது. காரையும் காரில் பறந்து கொண்டிருந்த திமுக கொடியையும் பார்த்த மக்கள், உள்ளே அண்ணா இருப்பதை அறியாமல் ‘எம்ஜிஆர் கொடி... எம்ஜிஆர் கொடி..’ என்று கோஷமிட்டு காரை சூழ்ந்துகொண்டனர்.
பின்னர், அண்ணாவிடம் ஒரு நண்பர் இதுபற்றி குறைபட்டபோது, ‘‘புரியாமல் பேசறீங்களே. இவ்வளவு பாப்புலாரிட்டியும் எம்ஜிஆர் மூலம் திமுகவுக்குத்தானே வருது? லாபம் கட்சிக்குத்தானே’’ என்றார்.
1967-ல் அண்ணா தலைமையில் திமுக வெற்றி பெற்றபோது தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று எம்ஜிஆர் கூறியதால் அவரை சிறுசேமிப்புத் துறை தலைவராக நியமித்தார். அந்த அளவுக்கு அண்ணாவிடமும் மக்களிடமும் செல்வாக்கு பெற்றவராக எம்ஜிஆர் விளங்கினார்.
நான் தயாரித்த ‘ரிக் ஷாக்காரன்’ படத்தின் மூலம் எம்ஜிஆருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்ற ‘பாரத்’ விருது கிடைத்தது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் அவரது சேவைகளுக்காக ‘பாரத ரத்னா’ பட்டமும் வழங்கப்பட்டது. இந்த இரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே நடிகர் எம்ஜிஆர் தான். எம்ஜிஆருக்கு யாருமே நிகராக முடியாது. விஜயகாந்த்தை கறுப்பு எம்ஜிஆர் என்று அவர்களாக சொல்லிக் கொள்கிறார்களே தவிர, அவர் எம்ஜிஆர் ஆக முடியாது.
‘‘எம்ஜிஆர் புரியாமல் பேசியதை மக்கள் ஏற்கவில் லையா? அதுபோல விஜயகாந்த் பேசுவதையும் மக்கள் ஏற்பார்கள்’ என்று பொதுக்கூட்டம் ஒன்றில் பிரேமலதா பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது பற்றி?
எம்ஜிஆருக்கு தொண்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் குரல் பாதிக்கப்பட்டது. என்றாலும் கடுமையான பயிற்சிகள் எடுத்துக்கொண்டு பெருமளவில் பேச்சுத் திறனை பெற்றார். அதன் பிறகும் பல படங்களில் நடித்து அவை வெற்றிகரமாக ஓடின. 1971-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்தார். பின்னர், தனியாக கட்சி தொடங்கி கூட்டங்களில் பேசி 3 முறை ஆட்சியை பிடித்தார். அவரது பேச்சை புரிந்துகொண்டுதான் மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்து வெற்றி பெறச் செய்தனர். எம்ஜிஆருக்கு ஏற்பட்ட குரல் பாதிப்பையும் விஜயகாந்த் பேசுவதையும் ஒப்பிடக்கூடாது.
-
கடந்த 30/03/2016 (புதன்கிழமை ) அன்று காலை 8 மணி அளவில் , திருவள்ளூர்
துளசி அரங்கில் , 25ம் ஆண்டு துவக்க விழாவில் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"குடும்பத்தலைவன் " திரைப்படம் இலவசமாக காண்பிக்கப்பட்டது.
அது பற்றிய சுவரொட்டி விளம்பரம் நண்பர்களின் பார்வைக்கு
கடந்த 25 ஆண்டு காலமாக ,திருவள்ளூர் துளசி அரங்கில் ஆண்டு விழாவின்போது
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படம் இலவசமாக திரையிடப்படுவது
வழக்கமாக அரங்க நிர்வாகிகள் கடைபிடித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது .
தகவல் மற்றும் சுவரொட்டி உதவி :ஓட்டேரி திரு.பாண்டியன் .
http://i66.tinypic.com/1z3mbsw.jpg
http://i66.tinypic.com/2jbpk5v.jpg
-
-
-
சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் படங்கள் ஒளிபரப்பு
நேற்று (02/04/2016) காலை 11 மணிக்கு நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த
"பாக்தாத் திருடன் "
http://i63.tinypic.com/2dv0s50.jpg
-
இன்று காலை 11 மணிக்கு (03/04/2016) மக்கள் திலகம் எம்.ஜி;ஆர். நடித்த
"கண்ணன் என் காதலன் "
http://i63.tinypic.com/2j5bcw4.jpg
-
இன்று இரவு 7 மணிக்கு நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "மன்னாதி மன்னன் "
http://i64.tinypic.com/rk1m6q.jpg
-
-
இன்று (03/04/2016) சன் டிவியில் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பான " நட்சத்திர
சங்கமம் " நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றி நடிகர் /நடிகைகள்
புகழாரம் .
நடிகை சரோஜாதேவி : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களுடன் அவருடைய
நடிப்புக்கு ஏற்ப பல வெற்றிப்படங்களில் ஈடு கொடுத்து நடித்து புகழ் பெற்றேன்.
மனிதராக அவதரித்து , நடித்து பின்,தமிழக முதல்வராகி செல்வாக்கு மிக்க
தலைவராகி, தெய்வமாக ஆகிவிட்டார்.
நடிகை சாரதா : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஒரே படமான
" நினைத்ததை முடிப்பவன் " திரைப்படத்தில் நடித்தேன் . அதில் இடம் பெறும்
"பூமழை தூவி " பாடல் , இன்றும் திருமண நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு ரசிகர்களை
கவர்ந்து வருகிறது . அவருடைய தங்கையாக இந்த படத்தில் நடித்ததை
நான் பெருமையாக கருதுகிறேன் .
நடிகை விஜயகுமாரி : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் பல படங்களில்
ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் என் தம்பி எஸ்.எஸ்.ஆர். மனைவியுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார் .
ஆனால் பல படங்களில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளது எனக்கு கிடைத்த
பாக்கியம் .
நடிகர் வடிவேலு : அன்பே வா திரைப்படத்தில் லவ் பேர்ட்ஸ், தாயை காத்த
தனயன் படத்தில் - காவேரி கரை இருக்கு , நீதிக்கு பின் பாசம் படத்தில் - மானல்லவோ கண்கள் தந்தது , உரிமைக்குரல் படத்தில் - விழியே கதை எழுது
ஆகிய பாடல்களை பாடி, அபிநயம் பிடித்து , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படத்தின்
பாடல்கள் உருவான விதம்,இசைஅமைப்பு . நடித்த விதம் குறித்தும் சிலாகித்து
பேசினார்.
-
மக்கள் திலகத்துடன் இணைந்தும் மற்ற கதா பாத்திரத்தில் நடித்த அந்த கால நடிகைகள் திரளாககலந்து கொண்ட நட்சத்திர சங்கமம் என்ற நிகழ்ச்சியை சன் டிவியில் இன்று ஒளி பரப்பினார்கள்
இன்று நடிகைகளின் தோற்றம் வயதாகிவிட்டதின் விளைவாக உருவத்தில் மாற்றம் இருந்தாலும் உள்ளதால் இளமையாக இருப்பதை காண முடிந்தது . குறிப்பாக நடிகைகள் சரோஜாதேவி -விஜயகுமாரி - சாரதா மூவரும் மக்கள் திலகத்தை பற்றி உயர்வாக குறிப்பிட்ட விதம் எல்லோரையும் மனம் கவர்ந்தது .நடிகைகளை நடிகர் வடிவேலு பேட்டி கண்டு மக்கள் திலகத்தின் பாடல்களை பாடிய விதம் வெகுவாக கவர்ந்தது .
நிகழ்ச்சியை காணும் போது மக்கள் திலகத்துடன் நடித்த கீழ் கண்ட நடிகைகள் இடம் பெற்ற படங்கள் நினைவிற்கு வந்தது . இனிமையான காட்சிகள் பாடல்கள் மறக்க முடியாதது .
எம்.என் ராஜம் - நாடோடி மன்னன்
சரோஜாதேவி - நாடோடி மன்னன்
விஜயகுமாரி - காஞ்சித்தலைவன்
ஜோதிலட்சுமி - பெரிய இடத்து பெண்
ஷீலா - பாசம்
பாரதி - நாடோடி
வாணிஸ்ரீ - கண்ணன் என் காதலன்
லதா - உலகம் சுற்றும் வாலிபன்
ஜெயசித்ரா - நவரத்தினம்
சாரதா - நினைத்ததை முடிப்பவன்
காஞ்சனா - பறக்கும் பாவை
சி ஐ டி சகுந்தலா - இதய வீணை
வெண்ணிற ஆடை நிரமலா - ரகசிய போலீஸ் 115