-
திருவண்ணாமலை நகரில் கடந்த 19/7/2017 புதனன்று நகர எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா மிக சிறப்பாகவும் ,விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது . அது பற்றிய செய்தி தொகுப்பு நண்பர்களின் பார்வைக்கு .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவண்ணாமலை , அண்ணாமலையார் கோவில் வாயில் அருகில் 4 குதிரைகள் பூட்டிய அலங்கார ஜீப்பில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவப்படம் மலர்களால் அலங்கார தோரணங்களால், அ.தி.மு.க. கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு புறப்பட தயாராக இருந்தது . அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு. தமிழ் மகன் உசேன் மற்றும் நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு.கலீல் பாட்சா மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் புரட்சி தலைவர் படத்திற்கு ஆரத்தி எடுத்தனர் .
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு.தமிழ் மகன் உசேன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.எஸ்.ஆர்.தர்மலிங்கம், நகர அ.தி.மு.க. செயலாளர் திரு. செல்வம் , நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு.கலீல் பாட்சா மற்றும் நகர அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் , எம்.ஜி.ஆர். பக்தர்கள் /தொண்டர்கள் ஆகியோர் தலைமையில் சுமார் 10 மணியளவில் மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் புறப்பட்டது . வழி நெடுகிலும் பட்டாசுகள் , வாணவேடிக்கைகள் வெடித்த வண்ணம் இருந்தன .ஊர்வலம் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கொள்கை பாடல்கள் ஒலித்த வண்ணம் இருந்தன .
அலங்கார ரதத்திற்கு முன்பு அனைவரும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்தனர் . ஊர்வலம் ரெட்டி திருமண மண்டபத்தை வந்தடைய சுமார் 90 நிமிடங்கள் ஆகியது .ஊர்வலம் செல்லும் பாதைகளில் காவல்துறையினர் ஆங்காங்கே போக்குவரத்தில் மாற்றம் செய்து உதவினர் நிகழ்ச்சி நடைபெறும் ரெட்டி திருமண மண்டபம் அமைந்துள்ள சாலையின் இருபுறமும் அ. தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருந்தன .
ரெட்டி திருமண மண்டபத்தை ஊர்வலம் சென்றடைந்ததும் ,திரு.தமிழ் மகன் உசேன் ,திரு.எஸ். ஆர். தர்மலிங்கம்,திரு. செல்வம் ஆகியோருடன் திரு. கலீல் பாட்சா சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தி, நிகழ்ச்சிகள் பற்றி விவரித்தார் .
விழாவிற்கு,சென்னை,திருச்சி, கோவை, பெங்களூரு வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். மதுரையில் இருந்து திரு. தமிழ் நேசன் தலைமையில் சுமார் 15 பேர் வேனில் வந்திருந்தனர்
பின்பு பிற்பகல் 1 மணியளவில் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நகர எம்.ஜி.ஆர்.மன்றத்தின் சார்பாக உணவளிக்கப்பட்டது .
மாலை 4 மணியளவில் சர்வ மத (இந்து , கிறிஸ்து ,முஸ்லீம் )பிரார்த்தனை நடத்தப்பட்டது . மேடை அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன . மேடையில் இந்து கிறிஸ்து,முஸ்லீம் வேடங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.உருவ படங்கள்
வைக்கப்பட்டு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன .
பின்பு , தின இதழ் புகழ் திரு.சிரஞ்சீவி அனீஸ் உருவாக்கிய எம்.ஜி.ஆர். கீதம்
ஒலித்தகடு மேடையில் உள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது . எம்.ஜி.ஆர். கீதம் இசைக்கப்பட்டது .
நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் திரு. கலீல் பாட்சாவிற்கு , திரு.தமிழ் மகன் உசேன் பொன்னாடை அணிவித்தார் .
பின்னர் இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் , திரு.எம்.ஜி.ஆர். ரவி ஆகியோர் திரு. கலீல் பாட்சாவை பாராட்டியும், புரட்சி தலைவர் எம்.ஜி..ஆர் அவர்களுக்கு புகழஞ்சலியும் செலுத்தினர் .அதை ஏற்றுக் கொண்டு,திரு.கலீல் பாட்சா அனைவரையும் வரவேற்று , நிகழ்ச்சி நிரல் பற்றி எடுத்துரைத்தார் . அப்போது
மதுரை திரு.தமிழ் நேசன் , திரு.கலீல்பாட்சாவிற்கு பொன்னாடை அணிவித்து
வாழ்த்துக்கள் தெரிவித்தார் .அவரை தொடர்ந்து திரு.கா. நா. பழனி,பெங்களூரு
திரு. கலீல் பாட்சாவை பாராட்டியும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா
சிறப்படையவும், வெற்றியடையவும் வாழ்த்தி பேசினார் .
திரு. தமிழ் மகன் உசேனுக்கு , திரு. எம்.ஜி.ஆர். ரவி பொன்னாடை போர்த்தினார் .
மறைந்த திரு.வேலூர் மாறன் (முதுபெரும் எம்.ஜி.ஆர். பக்தர் ) மனைவிக்கு
திரு. தமிழ் மகன் உசேன் பொன்னாடை அணிவித்து , நினைவு பரிசு வழங்கினார் .
பின்னர், திரு.பீர்முகமது (திருநெல்வேலி ), திரு.புதூர்மணி , திரு.பன்னீர் செல்வம்
ஆகிய கழக முக்கிய பிரமுகர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,மக்கள் தலைவராக
செல்வாக்கு மிக்க தலைவராக வளர்ந்து அ தி. மு.க. வை தோற்றுவித்த விதம் குறித்து பாராட்டி பேசினார்கள் .
அடுத்து புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் கம்பு சண்டை, சிலம்பாட்டம் ஆகியன மேடையில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடத்தி காட்டப்பட்டன
பின்னர் சிறிய வெள்ளித்திரையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த சில முக்கிய காட்சிகள், பாடல்கள், சண்டை காட்சிகள் ,கொள்கை பாடல்கள் ஆகியன
நிகழ்ச்சிக்கு இடையே அவ்வப்போது ரசிகர்களை/பக்தர்களை உற்சாகப்படுத்தும் வகையில் காண்பிக்கப்பட்டன .
இடையில் பொன்மனம் திரு.சிவகுமார் திரு.எம்.ஜி.ஆர். வல்லரசு (பெங்களூரு )
ஆகியோர் தங்கள் பங்கிற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெருமைகளை உரைத்தனர் . அடுத்து , நகர எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் தயாரான சிறப்பு மலரை திரு.கலீல் பாட்சா ,திரு. தமிழ் மகன் உசேனிடம் அளித்து வெளியிட வைத்தார் .
பின்னர் திரு.மேகநாதன் தலைமையில் மலேசிய இசை குழுவினர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கொள்கை மற்றும் காதல் பாடல்களை பாடி ரசிகர்களை
பரவசப்படுத்தினர் .இடையில் திரு.எம்.ஜி.ஆர். மணிக்கு , திரு. தமிழ் மகன் உசேன்
பொன்னாடை அணிவித்து , நினைவு பரிசு வழங்கினார் . மலேசியாவில் இருந்து வந்த திரு. சுரேஷ் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., வேட்டைக்காரன் (உன்னை அறிந்தால் ), படகோட்டி (கொடுத்ததெல்லாம் ) ஒப்பனையில் ரசிகர்கள், பக்தர்களிடையே உலா வந்து பாடல்களுக்கு ஏற்றார் போல் நடித்து, பாவனை செய்து கைதட்டல்கள் வாங்கினார் .
இரவு 9 மணியளவில் அமைச்சர் திரு. சேவூர் ராமச்சந்திரன் விழாவிற்கு வந்தார் .
மலேசியா இசை கலைஞர்கள் திரு.மேகநாதன் உள்பட அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி , நினைவுப்பரிசு வழங்கினார் .திரு.சேவூர் ராமச்சந்திரன்
அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேனும் , திரு. தமிழ் மகன் உசேனுக்கு, திரு. சேவூர் ராமச்சந்திரனும் பொன்னாடைகள் போர்த்தி , நினைவு பரிசு வழங்கி கொண்டனர். அருகில் இருந்து திரு. கலீல் பாட்சா இதற்கு உதவினார் .
அமைச்சர் திரு.சேவூர் ராமச்சந்திரன் மற்றும் திரு.தமிழ் மகன் உசேன் ஆகியோர் தலைமையில் ,திரு.கலீல் பாட்சா முன்னிலையில் சுமார் 100 பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது .அதன்பின் , நகர அ.தி.மு.க. செயலாளர்,திரு.செல்வம் ,மாவட்ட செயலாளர் திரு. எஸ். ஆர்.தர்மலிங்கம் ,
திரு.தமிழ் மகன் உசேன், ஆகியோர் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்து
தன் வயது மூப்பையும் மீறி , பல சிரமங்களுக்கு இடையில் விழாவை வெற்றி பெற செய்த திரு. கலீல் பாட்சாவை பாராட்டியும் , அ தி. மு.க. தோன்றிய காலத்தில் இருந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கடந்து வந்த சோதனைகளையும்,
வெற்றி பெற்று நிகரற்ற பல சாதனைகளையும் செய்து மக்களின் மனதில்
நீக்கமற , நிறைந்தும் ,மறைந்தும் மறையாமல் வாழ்கிறார் எம்.ஜி.ஆர். அவரது
இடத்தை நிரப்ப இனி யாராலும்,எந்த கொம்பனாலும் முடியாது என்று புகழஞ்சலி செலுத்தினர் .
இறுதியாக அமைச்சர் திரு. சேவூர் ராமச்சந்திரன் , திரு. கலீல் பாட்சாவின் வேண்டுகோளின்படி திருவண்ணாமலையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலை
நிறுவ விரைவில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கரடு முரடான பாதையில் கடும் சிரமத்தோடு, பல எதிர்ப்புகள், பிரச்னைகள், எதிர்க்கட்சிகள், அரசியல் சூழ்நிலைகள் , போராட்டங்கள் இடையே , போராடி, இறுதியில், படங்களில் கிளைமாக்சில் வெற்றி பெறுவது போல நிலையான வெற்றி பெற்றார்., நாமெல்லாம் இன்று சுகவாசிகளாகவும் ,மென்மையான பாதையில் செல்கிறோம் என்று சொன்னால் அதற்கு காரணம் அந்த மக்கள் சக்தி பெற்ற மகான் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் கடின உழைப்பும் , தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவும்.தான். இந்த தொண்டர்படை இருக்கும் வரையில் அ தி.மு.க. என்னும் இரும்புக்கோட்டையை அசைக்க யாராலும் முடியாது. என்று பேசினார் .
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு,சென்னை சார்பாக
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை வெற்றிகரமாக நடத்திய திரு.கலீல் பாட்சாவிற்கு திரு.பாண்டியராஜ் மற்றும் திரு.ஆர். லோகநாதன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலை நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்த அமைச்சர் திரு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களுக்கு திரு. ஆர். லோகநாதன் பொன்னாடை அணிவித்து
வாழ்த்து தெரிவித்தார் . இறுதியில் திரு.கா.நா. பழனி , திரு.கலீல் பாட்சாவிற்கு
பொன்னாடை , தொப்பி, மற்றும் மணிமாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் .
பின்னர் வெளியூரில் இருந்து வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும், நன்றி தெரிவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி , நினைவு பரிசு வழங்கப்பட்டது .
இரவு 11.30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது .
.
-
இன்று (03/08/2017) பிறந்த நாள் காணும் திரு.கா.நா. பழனி (பெங்களூரு) அவர்கள்
எல்லா நலமும், வளமும் பெற்று இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க என
வாழ்த்துகிறேன்
http://i280.photobucket.com/albums/k...psuzop4coq.jpg
அன்புடன்
ஆர். லோகநாதன்.
-
நாளை (04/08/2017) வெள்ளி முதல் சென்னை மகாலட்சுமியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நேற்று இன்று நாளை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i280.photobucket.com/albums/k...psz2nrumyz.jpg
-
-
-
-
திருவண்ணாமலை நகரில்,கடந்த 19/7/17 அன்று நகரமக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.மன்றம் சார்பில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i280.photobucket.com/albums/k...ps84bvol8m.jpg
-
அண்ணாமலையார் கோயில் வாயிலில் ஊர்வலம் புறப்பட தயார் .
http://i280.photobucket.com/albums/k...psn7cnbipi.jpg
-
-
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு.தமிழ் மகன் உசேன், மாவட்ட செயலாளர் திரு.எஸ். ஆர். தர்மலிங்கம் ,நகர செயலாளர் திரு. செல்வம் ,நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு. கலீல் பாட்சா மற்றும் முக்கிய அ.தி.மு. க.பிரமுகர்கள் ,தொண்டர்கள் , பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள ஊர்வலம் புறப்பட தயார் நிலையில் .
http://i280.photobucket.com/albums/k...ps0gncjgbj.jpg