You will ! because there is no other go !
Printable View
Thanks for all your compliments Vasu Sir, Ragavendrean Sir, Adiram sir, Goldstar (Satish) Sir, K C Sekar Sir , Subramaniam Ramajayam sir
Your words acts as a morale booster for youngster like me
May Day greetings to the Symbol of Labour - Nadigar Thilagam Sivaji Ganesan and Wedding Day Greetings
http://sphotos-d.ak.fbcdn.net/hphoto...72067557_n.jpg
http://sphotos-c.ak.fbcdn.net/hphoto...25065148_n.jpg
courtesy: Anand Pandurangan in Facebook
என் விருப்பம்
மிகவும் வித்தியாசமான பாடல். அதே சமயம் இலங்கை வானொலியில் மிக மிக பிரபலமான பாடல். குறிப்பாக எந்தன் இன்பம் உந்தனுக்கு சொந்தமே என்ற வரிகளாலேயே இந்தப் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.
பாக்கியவதி திரைப்படத்தில் ஏ.எம்.ராஜா, டி.வி.ரத்தினம், எஸ்.சி.கிருஷ்ணன் குரல்களில் ஒலிக்கும் இப்பாடல் மிகவும் இனிமையாக மெலோடியாக துவங்கும். நடிகர் திலகத்திற்கு ஏ.எம்.ராஜா பாடிய மிக அபூர்வமான சில பாடல்களில் இதுவும் ஒன்று. ஒரு சரணம் முடிந்த வுடனேயே எம்.என்.ராஜம் வேகமாக படிகளில் இறங்கி, தன் நடனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை கவனிக்க வேண்டும். அதே சமயம் தன் காதலனான நடிகர் திலகமும் தன் மேல் கோபித்துக் கொள்ளக் கூடாது என்கிற நிலைமை. எம்.என்.ராஜமே கதி என்று இருக்கும் சோமுவான நடிகர் திலகத்தைத் திருத்த நண்பன் தங்கவேலு அங்கே வருகிறார். அவருடைய திட்டப் படி எம்.என்.ராஜம் கவனம் தங்கவேலு பக்கம் திரும்புகிறது. இதனை கவனிக்கும் நடிகர் திலகம் கோபித்துக் கொள்கிறார்.
இத்தனையும் ஒரே பாடலில் ஏற்படும் சூழ்நிலைகள். பிரசாத் அவர்களின் திறமை வாய்ந்த இயக்கத்திற்கு இது ஒரு சான்று.
இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் முக பாவங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் சாந்தமாக காதல் பிரதிபலிக்கும் கண்களுடன் காணப் படுவார். பின்னர் எம்.என்.ராஜம் அவர்களின் நாட்டியத்தின் போது தங்கவேலு வந்த வுடனேயே அவருடைய நடனமும் வேகமும் கண்டு நடிகர் திலகத்தின் முகத்தில் காணப் படும் கோபம் ... மறக்க முடியாத காட்சியாக விளங்குகிறது.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
http://youtu.be/cSJ-jbu_SxU