Originally Posted by
jaisankar68
கலை என்பது கலைக்காகவா அல்லது மக்களுக்காகவா
பட்டிமன்றத் தலைப்பு. ஆனால் வழக்கமாக பட்டிமன்றங்களில் இதுவும் சரி அதுவும் சரி என்ற பாணியில் பதில்வரும். ஆனால் இந்த தலைப்பில் மட்டும் எந்தக் கலைவடிவமும் மக்களுக்காகவே என்பது தான் உள்ளபூர்வமான உறுதியான உண்மையாக இருக்க முடியும்.
அப்படிப் பட்ட கலை வடிவங்களில் மிக மிக முக்கியமானதாகிவிட்ட ஒன்று திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு நூற்றாண்டு விழா.
கலையை மக்களுக்காக பயன்படுத்திய, ஒரே கலைஞன் உலக அளவில் மக்கள் திலகம் மட்டுமே. தனது எல்லாப் படங்களிலும் இந்த நியதியிலிருந்து வழுவாத ஒரே நடிகர் மக்கள் திலகம் மட்டுமே. தனது ஒவ்வொரு படத்தையும் பாடமாக வகுத்துத் தந்தவர் அவர் மட்டுமே. கருத்து சொல்வது எங்கள் வேலையல்ல என்று ஒதுங்குபவர்கள் மத்தியில் அழுபவர்கள் சிரிக்க வேண்டும். சிரிப்பவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே தனது திரையுலக வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மக்கள் திலகம். ஈகையின் அவசியம், நேர்மையின் மாண்பு, உழைப்பின் உயர்வு, கண்ணியத்தின் சிறப்பு, கடமையின் முக்கியத்துவம். மனிதாபிமானத்தின் மகத்துவம், பெண்மையின் சிறப்பு, வீரத்தின் சிறப்பு, இப்படி உயர் ஒழுக்க நெறிகளை தன் திரைப்படங்களின் வாயிலாகவும் தன் வாழ்க்கை முறையின் மூலமாகவும் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டியாகக் காணும் ஒப்பற்ற நடிகர், தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். பொது வாழ்விலும், திரை வாழ்விலும் தவறுக்கு இடம் கொடாத தன்னலம் கருதா தலைவர் அவர். இந்த நூற்றாண்டு விழாவில் அவரை போற்றுவோம். அவர் இல்லாத விழா நிலவில்லாத வானம். உயிரில்லா உடல். மழை பொழியாத மேகம். பயன் இல்லாத வார்த்தை. மக்கள் திலகத்தின் மகத்துவத்தை உணராதவர்களை உணரச் செய்வோம்.
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.