http://www.youtube.com/watch?v=G-mHj...ature=youtu.be
Printable View
திரு.எஸ்.வி.சார் அவர்களுக்கு,
மக்கள் திலகம் திரியின் 12ம் பாகத்தை கலைவேந்தன் துவக்கி வைப்பார் என்று, என்ன திடீரென இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டீர்கள்? இந்த அறிவிப்பின் மூலம் நீங்களும் அதற்கு லைக், தேங்க்ஸ் போட்ட திரு. சைலேஷ் பாசு அவர்களும் காட்டும் அன்புக்கு நன்றி. திரியில் என்னைவிட மூத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தொடங்கட்டும். நான் மகிழ்ச்சியோடு பங்களிப்பு செய்கிறேன்.
திரியின் பாகத்தை தொடங்குவது எல்லாம் பெரிய பொறுப்பு. ஏதோ அடக்கத்துக்காக சொல்லவில்லை. இங்கே நண்பர்கள் பதிவிடும் ஆவணங்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாக மட்டுமல்ல, மலைப்பாகவும் இருக்கிறது. இதுபோன்ற ஆவணங்கள் என்னிடம் இல்லை. என்னிடம் உள்ள புத்தகங்கள் மற்றும் சில பேப்பர் கட்டிங்குகளில் பல முக்கிய தகவல்கள், ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றை நான் லேசாக மேற்கோள் காட்டி பேசலாமே தவிர, அவற்றை அப்படியே பதிவிடவும் முடியாத நிலைமை (பிரச்னை வேண்டாமே). எல்லாவற்றையும் விட முக்கியமாக, என்னால் தினமும் திரியில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்படும். என் சூழ்நிலை அப்படி. எனவே மறுபரிசீலனை செய்யுமாறு அன்போடு கோருகிறேன்.
ஆடி ஜெயித்தவர் கட்டுரையை பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி. அழகெனும் ஓவியம் இங்கே பாடலை தரவேற்றிய திரு.ரூப் குமார் சாருக்கு நன்றி. அந்தப் பாடலில் நான் குறிப்பிட்ட காட்சியை முதல் முறையாக பார்த்ததாக கூறியிருக்கிறீர்கள். நன்றி. தலைவர் படங்களை எத்தனை முறை பார்த்தாலும் புதிது புதிதாக கிடைத்துக் கொண்டே இருக்கும். இதனால், அவரது படங்களை நாம் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதுப்படங்கள்தான். முக்கியமாக குறிப்பிட வேண்டியது 1976 ஜனவரி 17 அன்று தலைவர் 59 வயதை பூர்த்தி செய்து விட்டார். ஊருக்கு உழைப்பவன் படம் வெளியானபோது அவருக்கு 60 வயது நடந்து கொண்டிருந்தது. அந்த வயதில் இப்படி இளமையாக, அழகாக ஒரு மனிதன் இருக்க முடியுமா? என்று இன்னமும் எனக்கு வியப்பே. இதே வியப்பு எல்லாருக்கும் இருக்கலாம். காரணம், நாம் எல்லாருமே தினமும் கண்ணாடியை பார்த்துக் கொள்கிறவர்கள்தானே? நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் கலைவேந்தன் சார்
மக்கள் திலகத்தின் புகழ் பாடுவதிலும் , அவருடைய பெருமைகளை அழகாக பதிவிட்டு மக்கள் திலகம் எம்ஜிஆர்
திரிக்கு பெருமை சேர்த்து வரும் தாங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 12 துவக்குவதற்கு பொருத்தமானவர் .
இதில்மாற்று கருத்து கிடையாது . உங்களின் வரவு திரிக்கு புது பொலிவை தந்துள்ளது .உங்களின் வெளியூர் பயணங்கள் மற்றும் அலுவல் பணி சுமை நன்கறிவேன் . உங்களால் முடிந்த அளவிற்கு , நேரம் கிடைக்கும் போது பதிவிடவும் .
மக்கள் திலகத்தின் பேரழகை பற்றி மிகவும் ரசித்து எழுதி இருக்கிறீர்கள் .நான் பல முறை அரசியல் மேடைகளிலும் .
வெளிப்புற படபிடிப்பிலும் , ராமாவரம் தோட்டத்திலும் பெங்களூர் தாஜ் ஓட்டலிலும் அவரை நேரில் பார்த்து
ஒவ்வொரு முறையும் பரவசமடைந்தேன் ,. மக்கள் திலகத்தின் கச்சிதமான உடற்கட்டு , ரோஸ் நிறம் , புன்னகை
மின்னல் வேக நடை -நேரில் பார்த்ததால் மறக்க முடியாத மனம் கவர்ந்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் . அந்த வகையில் என்னை போன்ற நண்பர்கள் சிலர் அவரை பார்த்ததில் கொடுத்து வைத்தவர்கள் .
கலை சிற்பி மக்கள் திலகத்தின் நடிப்பில் மயங்கினேன் .
மக்கள் திலகத்தின் வீரதீர செயல்களில் மனதை பறி கொடுத்தேன்
மக்கள் திலகத்தின் மனித நேயத்தில் தெய்வமாக பார்க்கிறேன் .
மக்கள் திலகத்தின் அரசியல் ஆளுமைகளை கண்டு வியந்து நின்றேன் .
கலைவேந்தன் சார்
நேரம் கிடைத்தால் காஞ்சித்தலைவன் - படகோட்டி - வேட்டைக்காரன் படங்களை பாருங்கள் . மக்கள் திலகத்தின்
பேரழகும் , உடற்கட்டும் கண்டு வியந்து போவீர்கள் . இந்திரன் படைத்த சந்திரன் யார் என்றல் அது நம் மக்கள் திலகம் எம்.ஜி .ராமச்சந்திரன் என்றால் அது மிகையல்ல .
மன மகிழ்வோடு நீங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாகம் -12 துவக்கி பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துகிறேன் .
Thaayin Madiyil
http://www.youtube.com/watch?v=WjAdvDushW4
However, this one song I have not seen for more time now for reasons known to everyone over here. The song goes like this: எத்தனை செல்வங்கள் வந்தாலுமே......
http://www.youtube.com/watch?v=4xhZ94jOBhQ
Some video images from Thadam Pathithavargal program.
http://i125.photobucket.com/albums/p...pse0cef198.jpg
http://i125.photobucket.com/albums/p...psb4ac621d.jpg
Nadodi Mannan scene.
MGR style from Nadodi Mannan.
http://i125.photobucket.com/albums/p...ps7bdded32.jpg
http://i125.photobucket.com/albums/p...ps44ac7a2a.jpg
என்றும் வாகை சூடியே பழக்கப்பட்ட நம் தலைவர் வெற்றி மாலையுடன்.
http://i125.photobucket.com/albums/p...psc1d883ee.jpg
திருடாதே படத்தில் இருந்து.