நல்லவேளை நீங்களே இப்போது சொல்லிவிட்டீர்கள். நான் தேடிப் பார்த்துவிட்டு இந்த செய்தியை பின்பு சொல்லியிருப்பேன். நன்றி.*
Printable View
நல்லவேளை நீங்களே இப்போது சொல்லிவிட்டீர்கள். நான் தேடிப் பார்த்துவிட்டு இந்த செய்தியை பின்பு சொல்லியிருப்பேன். நன்றி.*
நீங்கள் தேடிப் பார்த்து சிரமப்படக் கூடாது என்றுதான் நானே சொல்லிவிட்டேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இன்று முத்துசாமி தீட்சிதரின் பிறந்த நாள் என்று கூறியிருந்தேன். இதையொட்டி, நான் சமீபத்தில் படித்து ரசித்த ஒரு கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். கட்டுரையின் இணையதள இணைப்பையும் கொடுத்துள்ளேன். இசைக்கு மருத்துவ குணம் இருக்கிறதோ இல்லையோ, மனம் அமைதியடையும். அந்த அனுபவம் எனக்கே உண்டு. நம் எல்லாருக்கும் இருக்கலாம்.
----------------------------------
http://www.dinamani.com/weekly_suppl...playVideo=true
இசைக்கு மருத்துவ குணம் உண்டு!
By - சாருகேசி
மியூசிக் தெரபி பற்றி மியூசிக் அகடமி உட்பட இப்போது பல மேடைகளில் பல ஆய்வுச் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன. என்ன ராகம் பாடினால் என்ன நோய் குணமாகும் என்றெல்லாம் ஆராய்ச்சிகளின் மூலம் வெளிப்பட்டதை எடுத்துச் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட கீர்த்தனையைப் பாடக் கேட்டு, வேண்டிய பலன் அடைந்ததாக யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. சென்ற வாரம், சரசுவதி வாக்கேயகார அறக்கட்டளை ஆதரவில் டாக்டர் ஆர். ஆஷா, முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகள் பற்றி "தீபனம்' என்ற தலைப்பில் பேசும்போது, இரண்டு நிகழ்ச்சிகளை நினவுகூர்ந்தார்.
""நான் சங்கீதம் கற்றுக் கொண்ட கர்நாடக இசைப் பாடகி சீதா நாராயணனிடம் ஒரு பெண்மணியும் வந்து கற்றுக் கொண்டிருந்தார். ஒரு நாள் சீதா நாராயணன், "பிருஹஸ்பதே' என்ற அடாணா ராகக் கீர்த்தனையைச் சொல்லிக் கொடுக்கக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வந்துகொண்டிருந்தது. அவர் எதற்காக அழுகிறார் என்று தெரியவில்லை. பாடல் முடிந்ததும் அவர் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார். பின்னர் சில நாள் கழித்து அவர் வந்த போதும், அந்தப் பாடலைக் கேட்டு அவர் கண்களில் நீர் திரண்டு வழிந்தது. ஆறு மாதங்கள் போல ஆயிற்று. அவர் மீண்டும் தரிசனத்துக்காக வந்தபோது அவர் கையில் ஓர் அழகான குழந்தை இருந்தது. அவரும் மகிழ்ச்சியுடன் இருந்தார். அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததை எண்ணி அவர் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். அந்தக் கீர்த்தனையில் "புத்ரகாரக தீன பந்தோ' என்று சரணத்தில் ஒரு வரி வருகிறது. (புத்திர பாக்கியத்தை அளிப்பவர்) அந்தப் பாடலைப் பாடியபடி வேண்டிக் கொண்டிருந்திருக்கிறார் அந்தப் பெண்மணி. அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது.
இன்னொரு பெண்மணிக்கும் இதே போலப் பிள்ளையில்லாக் குறை. அவர் "ஹரிஹரி புத்ரம் ஸாஸ்தாரம் சதா பஜேஹம்' என்ற பாடலை என் குரு வீணைக் கலைஞர் கல்பகம் சுவாமிநாதன் வாசித்துப் பாடக் கேட்டார். அதில் அநுபல்லவியில் வருகிற "தீன ஜன பலப் ப்ரதம்' (எளியவர்களின் விருப்பங்களை அருளுபவர்) என்ற வரி வருகிறது. அவருக்கும் அந்தப் பாடலால் குழந்தை பாக்கியம் கிடைத்தது'' என்றார்.
அது மட்டுமல்ல, "கமலாம்பிகாயாம் பக்திம் கரோமி' என்ற சஹானா ராகப் பாடலும் "சங்கரம் அபிராமி மனோகரம்' என்ற மனோகரி ராகப் பாடலும் நோய்களைத் தீர்க்குமாம். குறிப்பாக "சங்கரம் அபிராமி' என்ற பாடல் காலசம்ஹார மூர்த்தியாகிய திருக்கடையூர் ஈசனைப் பற்றி அமைந்திருப்பதால், ""இந்தப் பாடலைப் பாடுபவர்களுக்கு மரண பயமும் போகும்'' என்றார் ஆஷா.
இந்த சந்தர்ப்பத்தில் முத்துசாமி தீட்சிதரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கலாம்:
முத்துசாமி தீட்சிதரின் சீடன் தம்பியப்பன் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு புரோகிதரை அணுகித் தனக்குப் பரிகாரம் செய்ய வேண்டினான். அவர், ""உனக்கு குரு, சனி முதலிய கிரகங்கள் பலகீனமாக இருக்கின்றன. நீ வேதம் அறியாததால் வேத சம்பந்தமான பரிகாரமும் செய்ய இயலாது'' என்று அவர் மறுத்துவிட்டார். தம்பியப்பன் தன் குரு முத்துசாமி தீட்சிதரிடம் சென்றான். அவர் சீடனுக்கு தாயம் அளித்து, சனி, குரு ஆகிய கிரகங்களின் மீது பாடல்கள் இயற்றி, அவற்றைத் தினமும் பாடச் சொல்லி வருமாறு கூறினார் முத்துசாமி தீட்சிதர். அதன்படியே அவன் பாடிவர, அவன் வயிற்று வலி தீர்ந்தது.
""இசை எல்லாருக்கும் பொது. எந்த வேத சாரங்கள் அடங்கிய கீர்த்தனையானாலும் அதைப் பாடிப் பயன் பெறலாம்'' என்று தீட்சிதர் கூறினார். தம்பியப்பன் தன்னிடம் நோய் குணமாக வந்தவர்களிடம் நவகிரக கீர்த்தனைகளைப் பாடி அவற்றைத் தீர்த்து வைத்தான் என்பது திருவாரூரில் எல்லோரும் அறிந்த சரித்திரம்.
ஆர்.ஆஷா உரையில் இன்னும் சில அபூர்வமான தகவல்கள் இருந்தன. ஆனால் அவை மிகுந்த ஆராய்ச்சி செய்து தரப்பட்ட வேறு சில செய்திகள்.
இசை மூலம் நோய் குணமாகும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். கைக்கெட்டாமல் தள்ளிப் போகும் உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது தெரியுமா? காயக சிகாமணி என்றும், முதன்முதலில் இசையில் டாக்டரேட் பட்டம் பெற்றவர் என்றும் அறியப்பட்ட ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் சகோதரர் வழிப் பேத்தியும், எர்ணாகுளம் மகாராஜா இசைக்கல்லூரிப் பேராசிரியையும் ஆன ஜெயலட்சுமி ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்ட நிகழ்ச்சியை இங்கே மீண்டும் நினைத்துப் பார்க்கத் தூண்டியது. (தினமணி ஞாயிறு கொண்டாட்டம் 9.9.2007).
ஜெயலட்சுமி தன் உரையில் அன்று சொன்னார்: ""திருவனந்தபுரம் இசைக் கல்லூயில் ஓர் ஆசிரியைக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பிரமோஷன் கிடைக்கவில்லை. என் தகப்பனார் 13 வயதிலிருந்தே அம்பாளைப் பூஜை செய்துகொண்டு வருபவர். அவள், ""சார் என்ன காரணமோ தெரியவில்லை. எனக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை'' என்று சொல்லி வருத்தப்பட்டாள். என் தங்கை மீது சில சமயம் சாமுண்டீசுவரி வருவாள். அன்றைக்கு அவள் அந்த ஆசிரியையைப் பார்த்து, சுபபந்துவராளியில் முத்தையா பாகவதர் இயற்றிய "மனோன்மணி மந்தஹாசினி மஞ்சுபாஷிணி' என்ற கீர்த்தனையை 11 நாட்களுக்குப் பாடச் சொன்னாள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். மனோன்மணி பாடலைப் பாட ஆரம்பித்த ஏழு நாட்களிலேயே அந்த ஆசிரியைக்கு பிரமோஷன் கிடைத்துவிட்டது''.
இசைக்கு நோய் தீர்க்கும் குணம் மட்டுமல்ல, கை நழுவிப் போகும் பதவி உயர்வுகளும் கூடக் கிடைக்கும் என்பதும் ஒரு செய்தி.
---------------
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இரண்டு அருமையான இசையரசி பாடல்கள்
இணைந்த துருவங்கள் திரையிலிருந்து
https://www.youtube.com/watch?v=NeMxKdorxvY
https://www.youtube.com/watch?v=jOxSr23qi4c
ஹாய் குட்மார்னிங்க்.. கல் நாயக், ராஜேஷ், கலை வேந்தன்..
செளக்கியமா..
கல் நாயக்,
பெரிய புலவர்கள் அளவுக்கு எழுத நான் இன்னும் முயற்சி செய்ய, கற்றுக் கொள்ள வேண்டும்.. முன் ஜென்மத்தில் அப்படி என்றால் இ.ஜென்மத்தில் கொஞ்சம் சாயலாவது இருக்கவேண்டுமே..
அப்புறம் ராஜா..(கொஞ்சம் யோசிக்கணும்) பாடல் போட்ட்து.. எஸ்.. அது ச்சும்மா. கல்யாண்குமார் நா தேவிகாவும் பூ.ஜெ. தானே..
//எங்க ரெண்டு பேருக்கும் தனியா இங்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. // இதை நினைத்து நேற்று இரவும் சிரித்துக் கொண்டிருந்தேன்.. ம்ம் ஹிட்ஸ் பார்க்கறதில்லையா க்ல் நாயக்..மக்கள்ஸ் ஆர்வமா படிக்கறாங்க வாட்ச் பண்ணிக்கிட்டிருக்காங்க நம்மை..
ராஜேஷ் உங்கள் பாடல்களை மெல்லத் தான் கேட்க இயலும் ..வீ.கம்ப் வெள்ளி தான் கொடுத்து சரி செய்யணும்..
கலை வேந்தன்
இணையக் கட்டுரையைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.. ராகங்கள் பற்றி வெகு கொஞ்சம் தான் தெரியும் மீன்ஸ் அவற்றின் பெயர்கள் மட்டுமே..
அடாணா – யார் தருவார் இந்த அரியாசனம், வருகிறாள் உனைத் தேடி
மனோகரி என்று தேடினால் கிடைக்கவில்லை.. கெளரி மனோகரியும் மனோகரியும் ஒன்றா (ஹையா கோபால வரவழைக்கச் சான்ஸ்)
எனில் கெளரிமனோகரி யில் அமைந்த பாடல்கள் எனப் போடப் பட்டிருப்பவை (கண்ணா நீ ரொம்ப உஷார்ப்பா) சோலைப்பூவில் மாலைத் தென்றல், பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்.
சஹானா – இந்த வீணைக்குத் தெரியாது, எண்ணமெல்லாம் ஓர் இட்த்தையே நாடுதே..
சுப பந்து வராளி.. உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்,வைகறையில் வைகைக்கரையில்,ஆயிரம் தாமரை மொட்டுக்களே..
எனில் இன்று என்ன பாட் போடலாம்..
ரயில் சினேகம் சீரியல் பாட்..வெகு அழகான பாடல்..வைரமுத்து.. இந்த வீணைக்குத்தெரியாது அதைச் செய்தவன் யாரென்று – சஹானா ராகம்
https://youtu.be/RmCNuf2JuoQ
சுப பந்துவராளியில் மோகன் இன் பயணங்கள் முடிவதில்லை.. வைகறையில் வைகைக்கரையில்...
https://youtu.be/Oh7o1uFfdUo
ராஜேஷ்,
வித்தியாசமான பாடல்கள். இரண்டும் அருமை. நன்றி.
கலைவேந்தன்,
இசைக்கு மருத்துவ குணம் உண்டு என்ற கட்டுரையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இளையராஜாவின் திருவாசகம் கேட்டு நோய் குணமானதாக ஒரு தகவல் உண்டு.
சி.க.,
மத்தவங்க பாத்துகிட்டு இருக்காங்க. பங்கெடுக்கிறது இல்லைன்னுதான் நானும் சொல்றேன். அதுதான் பயமா இருக்கு. பேய் பிசாசும் இப்பிடிதானே!!! நம்மை பார்த்துக்கொண்டுதானே இருக்கும். (எப்பிடி எல்லாரையும் கலந்துக்க வைக்க ஒரு வாய்ப்பு?)
நீண்ட நாட்களுக்கு பிறகு ரயில் ஸ்நேஹம் பாடல். அருமை. வைகறையில் வைகை கரையில் சோகமாக இருக்கிறது. சுப பந்துவராளி ராகம் என்றால் பொதுவாக சோகத்திற்கு போடுவார்களா?
நிலாப் பாடல் 47: "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா"
----------------------------------------------------------------------------
குறைந்த இசைக் கருவிகளைக் கொண்டு ராஜா இசையைமைத்த பாடல். 80-களில் மிகவே பிரபலம். எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட். ஓவியக் கல்லூரியில் படித்த கதிர் இயக்குனராக அறிமுகம். முரளி காதல் சொல்லா கல்லூரி மாணவனாக நிற்க இதுவே அச்சாரம். ஹீரா பாடலைக் கேட்டு ரசிப்பதாக வந்த அருமையான காதல் பாடல்.
வட்டமான நிலாவே இங்கு பொட்டு வைத்து வந்ததாக கவிஞர் வாலி சொல்லுகிறார். வட்டப் பொட்டு என்று ஏனோ சொல்லவில்லை. K.J. ஜேசுதாஸ் பாடியுள்ளார்.
பாட்டு வரிகள் இதோ:
-------------------------------------------------------------
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்
(பொட்டு..)
ஆராத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்
(பொட்டு..)
எப்போது சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காற்று பனிக்காற்று
வினா தாள் போல் இங்கே கனா காணும் காலை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
போனாள் இங்கு எந்நாளோ
(பொட்டு..)
-----------------------------------------------------------
காணொளிக் காட்சி:
https://www.youtube.com/watch?v=4oIx-V3H9dA
இதயம் தொடும் இப்பாடல் இதயத்திலிருந்து வந்தது.
//சுப பந்துவராளி ராகம் என்றால் பொதுவாக சோகத்திற்கு போடுவார்களா?// தெரியவில்லை கல் நாயக்..
நேற்று ரெண்டு விஷயங்கள்..
உணவு.. புளிக்காய்ச்சல் போட்ட இடியாப்பம் - புளிசேவை வீட்டில் டின்னர்..ஏன் சொல்கிறேன் - புளியோதரை ரெஸிப்பி நம் நெய்வேலி வாசு தேவன்
முன்பு கொடுத்திருந்தார் எனக்கு.. மிக நன்றாக வந்திருந்தது.. நன்றி வாசு சார்.
இரண்டாவது: கம்ப் இல்லை எனில் புத்தகம் படித்தேன்.. மிஸ்டர் வேதாந்தம் - தேவன் .. ஏழு மணிக்கு ஆரம்பித்து டக்டக டக என ஒருமணி வரை படித்தும்முடித்துவிட்டேன்(600 பக்கங்கள்) வாசிக்க ஆரம்பித்த போது நினைவில் வரவில்லை..பட்ட் வெகு சின்ன வயதில் படித்த நினைவு வந்தது.. என்னா நடை.. என்ன எழுத்து.. 1950 இல் எழுதப் பட்ட நாவல் என நினைக்கிறேன்.. இன்னும் பல காலங்கள் கடந்தும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும் நாவல்..
என்ன ஒரு மயக்கம் தரவைக்கும் எழுத்து.. வெகு சீரியஸ் நாவலில் விரவி வரும் நகைச்சுவை..44 வயதிலேயே காலமானாராம் தேவன்.. ம்ம்
ஸோ...
ஒரு பாட் போட்டுக்கலாம்..
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உனை விரும்பினேன் உயிரே..
https://youtu.be/tykuE76lv9w
பொட் வைத் வட் நிலா எனக்குப் பிடிக்கும் கல் நாயக்..ஆனால் என்னவோ படம் வந்த புதிதில் எல்லாரும் ஓ ஆ என்று ஹீராவின் அழகைப் பற்றிச் சொல்வார்கள்..எனக்கென்னவோ அவ்வளவு அழகாய்த் தெரியவில்லை.. பிற்கால ப் படங்களில் சற்றே இளைத்து கொஞ்சம் அழகாகி இருப்பார் என நினைக்கிறேன்..
சி.க.,
புத்தகம் படிக்கிறேன் என்று பொறாமையை கிளப்புகிறீர்களே. என்னால் இப்பொழுதெல்லாம் கதைப் புத்தகம் மட்டுமல்ல எந்த புத்தகமும் படிக்கமுடிவதில்லை. அதிக பட்சம் நாளிதழ்கள் மட்டுமே. ஆனால் பரவாயில்லை, உங்களிடம்தான் எல்லாம் கேட்டுக் கொள்கிறேனே. கொஞ்சம் சுருக்கமா மிஸ்டர் வேதாந்தம் கதையை சொல்லிடுங்க. யார் கிட்டயும் சொல்லிட மாட்டேன். தேவன், இவர் தானே துப்பறியும் சாம்பு கதைகளை எழுதியவர். அருமையாக இருக்கும். நான் படக் கதைகளாக படித்திருக்கிறேன்.
'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்' பாடல் எனக்கும் பிடித்தது. 'நானே ராஜா, நானே மந்திரி' படத்தில் இதுமட்டும்தான் பிடித்தது.
நடிகை ஹீரா 'திருடா, திருடா' போன்ற படங்களில் நடித்த பின்பு என்ன ஆனார்?