Quote:
வானவில்லின் வண்ணக் கற்றைகள் ஏழு VIBGYOR ! ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் !உலக அதிசயங்கள் ஏழு !ஸ்வரங்கள் ஏழு ச ரி க ம ப த நி! உலகில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்களாமே!
மந்திரவாதியின் உயிர் ஏழுகடல் ஏழுமலை தாண்டி ஒரு குகைக்குள் தொங்கிக் கொண்டிருக்கும் வவ்வாலின் தலையில் இருக்குமாமே!
ஏழு எல்லோராலும் விரும்பப் படும் ஒற்றர்திலகம் ஜேம்ஸ் பாண்டின் தொழில்ரீதியான அடையாளக் குறியீட்டு எண் OO7!
இரண்டு கண்களோடு மூன்றாவதான ஞானக்கண் போல மனிதரின் ஆறாவது அறிவையும் தாண்டி ESP புலனறிவான ஏழாவது அறிவே அவரை புகழுச்சிக்கு
இட்டுச்செல்கிறது!!