Ada paavigala :lol:
Printable View
Kaadhal nOya kaNdu pidichEngaradhai thaan loveria hua-nu Saarug gaan padathulO copy kottinArE north indies vALLu? dubbing aimed at TV market?
What is Yemandees character name in Indhi?
IIRC Guru Shishyan was the debut movie for Gouthami right ? :p
Most of this is true :ashamed:
ஐஸ்வர்யா Vs செளந்தர்யா!
ரஜினி குடும்பக் குழப்ப மேளா
நமது நிருபர்
'சுமைதாங்கியே சுமையானதே... எந்தன் நிம்மதி போனதே... மனம் வாடுதே...’ - 'அண்ணாமலை’யில் மனம் வெதும்பி ரஜினி பாடும் இந்தப் பாட்டுதான் தற்போது ரஜினியின் நிஜ மனநிலையும் என்கிறார்கள், ரஜினிக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள். ஆனால், நம்பத்தான் முடியவில்லை. ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா அஸ்வின் இருவருக்கும் இடையில் கடும் பனிப்போராம்!
காதல் மோதல், கடன் சிக்கல் என மகள்களைச் சுற்றிப் படர்ந்த சிக்கல் முடிச்சுக்களை லாகவமாக அவிழ்த்த ரஜினியால், தன்னை முதலீடாகவைத்து அவர்கள் சினிமாவில் நடத்தும் யுத்தத்தைத்தான் பொறுக்க முடியவில்லை என்கிறார்கள். 'அப்படி எல்லாம் இருக்காதுங்க... பெரிய இடத்துல சின்ன பிரச்னைன்னாலும் ஊதிப் பெருசாக்கக் கூடாது!’ என்று நாம் சமாதானம் சொன்னால், சில வருடங்களுக்கு முன் பிருந்தே தொடர் சங்கிலிச் சம்பவங்களைப் பட்டியலிடுகிறார்கள்!
''ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் முடிந்து திருமண ஏற்பாடுகள் நடந்த சமயம் ரஜினி 'சந்திரமுகி’ படப்பிடிப்பில் இருந்தார். அப்போது ரஜினி குரு ஸ்தானத்தில்வைத்து மதிக்கும் அந்த சினிமாவுலகப் பிதாமகர் ரஜினியைச் சந்தித்தார். அப்போது அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, 'எதுக்கு இப்படி ஒரு ஸ்டார் ஆனோம்னு தினமும் நினைச்சு நினைச்சுக் கஷ்டப்படுறேன். பேசாம பழைய மாதிரி கண்டக்டரா இருந்தா, ரொம்ப நிம்மதியா சந்தோ ஷமா இருந்திருப்பேன்’ என்று கண் கலங் கினார் ரஜினி. அவரைச் சமாதானப்படுத் தவே முடியவில்லை அவரால்!
சௌந்தர்யா ஆக்கர் ஸ்டுடியோஸ் ஆரம்பிச்சு, அனிமேஷன் வேலைகள் பண்ணிட்டு இருந்தாங்க. நிறுவனத்துக்குப் பெரிய பிராண்ட் இமேஜ் உண்டாக்குறதுக்காகத் தன் அப்பா ரஜினியை வெச்சே 'சுல்தான் தி வாரியர்’ பட வேலைகளை ஆரம்பிச்சாங்க. ஆனா, தயாரிப்பாளர், தியேட்டர்காரங்க, ரசிகர்கள்னு எல்லாருக் கும் பிடிக்கிற மாதிரி படம் பண்ணணும்னு நினைக்கிறவர் ரஜினி. தன் வழக்க மான பாணியில் இருந்து வெளிய வந்து படம் பண்றதுக்கு ரொம்பவே யோசிப்பார். அதனாலேயே பரிசோதனை முயற்சியா ஆரம்பிச்ச 'சுல்தான் தி வாரியர்’ அனிமேஷன் படத்தில் நடிக்க அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் இல்லை. ஆனாலும், சௌந்தர்யாவுக்காகச் சம்மதிச்சார். ஆனா, என்னென்னவோ நடந்து கடன், வட்டி, கோர்ட், கேஸ்னு ஆச்சு. அந்தப் படம் பாதி யிலேயே நின்னுடுச்சு.
தொடர்ந்து 'கோவா’ பட விவகாரத்திலும் லதாம்மா, சௌந்தர்யா ரெண்டு பேர் மீதும் பிடிவாரன்ட் போடுற அளவுக்கு விஷயம் போனப்ப, ரஜினி நொறுங்கிப் போயிட்டார். 'அனிமேஷனும் வேணாம்... சினிமா தயாரிப் பும் வேணாம். பேசாம கல்யாணத்தைப் பண்ணிட்டு செட்டிலாயிடு’னு சொல்லித்தான் சௌந்தர்யாவுக்கு நல்லபடியாக் கல்யாணத்தை முடிச்சுவெச்சார் ரஜினி.
இதுக்கு நடுவில் ஐஸ்வர்யா, செல்வராகவன்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டராகி, அடுத்தடுத்த வருஷத்தில் தனியா ஒரு படம் இயக்குவதற்கான வேலைகளைப் பண்ணிட்டு இருந் தாங்க. அப்போதான் 'ராணா’ பட வேலைகள் தொடங்குச்சு. பட விளம்பரத்தில் தயாரிப் பாளர்னு சௌந்தர்யா பேர் இடம் பிடிச்சது. ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் இல்லை. மறுபடி ஏதேதோ பிரச்னைகள். 'ராணா’ பட பூஜையை தனுஷ் புறக்கணிச்சுட்டார்னு சொல்வாங்க. அப்போ யாருமே எதிர் பார்க்காம ரஜினிக்கே உடல்நிலை மோசமாகி, சிங்கப்பூர் வரை போய் சிகிச்சை எடுத்துட்டு வந்தார். மருத்துவமனை, ஓய்வுனு இருந்த ரஜினி இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு வந்திருக்கார்.
இதுக்கு இடையிலேயே ஐஸ்வர்யா '3’ படக் கதையை அப்பாகிட்ட சொல்லி, இயக்குநராவதற்கு அனுமதி வாங்கினாங்க. படத்தை தனுஷே சொந்தமா தயாரிச்சு நடிக்கிறார்னு தகவல் வந்தது. நடுநடுவுல 'என்னை ரஜினியின் மாப்பிள்ளையாகப் பார்க்காதீர் கள்’னு தனுஷ் பேச ஆரம்பிச்சார்.
தனுஷ§க்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே குழப்பம் எனப் பேச்சு வந்தது. ஆனாலும் '3’ பட வேலைகள் பரபரப்பாக நடந்தன. 'ஒய் திஸ் கொல வெறி’ பாட்டு உலக மகா ஹிட் அடித்தது.
இது எல்லாமும் சேர்ந்து சௌந்தர்யாவின் மனசுல மறுபடியும் இயக்குநர் ஆசையை விதைச்சது. 'அப்பா நானும் என்னை நிருபிக்கணும். அதுக்கு நீங்கதான் எனக்கு உதவணும்’னு வேண்டிக் கேட்டு ரஜினியின் சம்மதம் வாங்கினார் சௌந்தர்யா. 'சௌந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான்’னு விளம்பரம் வந்தது. தேங்கித் தேங்கி நின்ன வேலைகள் விறுவிறுன்னு வேகம் பிடிச்சு, சட்டுனு வெளிநாட்டுக்குப் படப்பிடிப்புக்குப் பறந்தது 'கோச்சடையான்’ யூனிட்.
அதே சமயம் '3’ படம் வெளியானது. சேனல் சேனலா '3’ பட புரொமோஷனுக்காக தனுஷ§ம் ஐஸ்வர்யாவும் பேசிக்கிட்டு இருக்க, திடீர்னு 'மேக்கிங் ஆஃப் கோச்சடையான்’ வீடியோ வெளியாகி பரபரப்பாச்சு. பொதுவா, தனது எந்தப் படம்பற்றியும் ரிலீஸுக்கு முன்னாடி ஒரு வார்த்தைகூடப் பேசாத http://www.vikatan.com/av/2012/04/nj...mages/p12b.jpgரஜினி, 'கோச்சடையான்’ படம்பற்றிப் பேசினார். லண்டன்ல 'கோச்சடையான்’ பிரஸ்மீட்டும் நடந்தது. '3’-ல் இருந்து விலகி மீடியாவின் கவனம் 'கோச்சடை யான்’ மேல் மையம்கொண்டது. '3’ பட சிறப்பு நிகழ்ச்சிகளை நிறுத்தி 'கோச்சடையான் ஸ்பெஷல்’னு எல்லா சேனல்களும் அலற ஆரம்பித்தன.
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த ஐஸ்வர்யா, 'கோச்சடையான் புரொமோஷனுக்கு இப்போ என்னப்பா அவசரம்? '3’ படம்பத்தி நல்ல செய்திகள் கிளம்புறதுக்கு முன்னாடி நீங்களே அது திசை திரும்பக் காரணமா இருக்கலாமா?’னு போன்ல ரஜினிகிட்ட மனம் திறந்து அழுதிருக்காங்க. அப்புறம் ரஜினி, ஐஸ்வர்யா, சௌந்தர்யா மூணு பேருக்கும் இடையில என்ன நடந்துச்சுனு தெரியலை. ரஜினி உடனடியா லண்டன் ஷூட்டிங்கை முடிச்சுக்கிட்டு சென்னை திரும்பிட்டார். 'நானும் உங்களைப் போல ரஜினி சார் ரசிகன். நான் அவருடைய வாரிசாக முடியாது’னு சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் தனுஷ் சொல்றதுலகூட அர்த்தம் இருக்கு.
எந்தப் பிரச்னையையும் சட்டுனு சமாளிச்சு வந்திருவார் ரஜினி. இதுல இருந்தும் அப்படியே மீண்டு வருவார் சூப்பர் ஸ்டார்!'' என்று முடித்தார்கள் அவர்கள்!
Transalation, s'il vous plait?
kid,
rajiniya dhooratthula nikka vechu rendu ponnungalum yaaru modha thodrom pakkaalmnu race velayaadraanga...
idhunga vandhu thodura madhiriyum theriyala avar oru orama pOi ukkaaravum mudiyala...
sumaithaangiyae.... sumaiyaanadhae....
endhan nimmadhee.... pOnadhae...
manam vaadudhae...
iru pen puraaaa..........
Thanks.
Do this for next week's article on Dhanush/Selvraghavan/Kasturi Raaja, and win a free CD.
http://www.losttwenty.com/wp-content...11/free_cd.gif