அடிமை பட்டியலில் நானும்தான்... ஏதுக்கு அழைத்தாய் என அவர் கேட்கும் போது தமிழை இனிமையாக்கத்தானம்மா அழைத்தோம் என சொல்வது எவ்வளவு பொருத்தமாக இருக்கும்...
Printable View
எஸ்வி சார்
குட் morning
நேற்று உங்களை பற்றி தமிழ் ஹிந்து உலகம் சுற்றும் வாலிபன் பதிவில் படித்தேன் .நமது திரியிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது
வாழ்த்துகள்
ஹீரோ கதாநாயகியை கேலி செய்யும் பாடல்
'ராஜா கண்ணு போதாதடி '
'இரவில் வந்த குருவிகளா '
எனக்குத் தெரிந்து.. நான் வளர்ந்த (குக்)கிராமப் பகுதியில் ஒரு படம் அதிகநாட்கள் ஓடியது என்றால் 'செண்பகமே செண்பகமே'. 42 நாட்கள் ஓடியது. அப்படியென்ன இந்தப் படத்தில் விசேஷம் என்றால் ராஜாவின் பாடல்கள், ராமராஜன்-ரேகா-விஸ்வம் நடிப்பில் சலிப்படையாமல் செல்லும் திரைக்கதை, நகைச்சுவை காட்சிகள். குறிப்பாக ராமராஜனின் அப்பாவாக விஸ்வம் தனது இயல்பான நடிப்பினால் ஒரு முற்றிலும் எதிர்பாராத பாத்திரமாக வலம்வருவார். மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த அந்தக் கொட்டகைக்கு மாட்டு வண்டியில் குடும்பமாக இரவுக் காட்சிக்கு சென்றுவந்தோம்.
https://www.youtube.com/watch?v=4LzuaKB96cc
'மஞ்சப் போடி தேய்க்கையிலே' - சீம்லஸ் என்பார்களே! அதன் அருஞ்சொற்பொருளாக ராஜா கொடுத்திருக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களில் இதுவும் ஒன்று. கங்கை அமரன் வரிகளில் எதுகை மோனை ஓசைநயம் இப்பாடலுக்கு அணி சேர்க்கும். கொள்ளை கொள்ளும் ரேகாவின் அழகு. "தேனாறு உன்னுதடு வந்ததென்ன" (@3.06-3.10) என்ற அந்த வரிகளில் திரைமுழுதும் வியாபித்திருக்கும் ரேகாவின் முகத்திற்கு ஈடு எது? கடலோர கவிதையில் என்னுள் மொட்டுவிட்டு மலர ஆரம்பித்த அந்த ரசிப்பூ தொடர்ந்து நான்கைந்து வருடங்களுக்கு மணம் வீசிக் கொண்டெ இருந்தது.
மஞ்சப்பொடி தேய்க்கையில என் நெஞ்ச தொட்டு தேய்ச்ச புள்ள
தண்ணி தொட்ட பாகம் எல்லாம் இந்த கண்ணன் தொடும் காலம் எப்போ
கண்ணுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள
குத்தால சாரலுக்கு யோகமடி
குண்டுமல்லி பூவுக்கொரு நேரமடி
விட்டாக்கா ஏறுதடி பாரமடி
தொட்டு தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி
ஒன்னோட கையாக நானும் மாறி
பொன்னோட பூவோட கூடி
கண்ணாடி பாராத காயம் தேடி
கண்ணே நான் தெம்மாங்கு பாடி
ஒன்னாச்சேர வந்தா போதும்
ஏறும் மோகம் தானா தீரும்
மொட்டான மொட்டு ஒன்னு பூத்ததென்ன
பூவுக்குள்ள தேனு வந்து சேர்ந்ததென்ன
தேனாறு உன் உதடு வந்ததென்ன
தேன் எடுத்து நான் அருந்த நேரம் என்ன
ஒன்னோட பூமேனி ஓடும் தேரு
எப்போது ஊர்கோலம் கூறு
பன்னீரு பூவாக தூவும்போது
பஞ்சாங்கம் நாளென்ன கூறு
கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்
நடைக்கு ஓய்வே கிடையாது. தபேலா ஆரம்பிக்கும் போதே அது எங்கிருந்து ஆரம்பித்தது இப்படி பாய்ந்து வருகிறது என்ற கேள்வி எழும். மெலடி நாயகனுக்கு. தபேலா கல்யாணம் செய்தும் அப்பாவினால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கும் அவனது காதல் பசி.. மறைபொருளாக காமம் இந்த இரண்டையும் இணைக்கும் ஒரு பாஸ் கிடாராக. முதல் இடையிசையில் வயலின் கற்றைகளால் அலங்கரிப்பு அருமை. குடையில்லாமல் திடிரென பெய்யும் மழையில் மாட்டிக்கொண்டு நனைந்துவிடுவோமே..அதுபோன்ற ஒரு பாடல் இது.. மழை வந்ததும் தெரியாது, நின்றதும் தெரியாது..அதுபோல பாடல் ஆரம்பித்ததும் தெரியாது, முடிந்ததும் தெரியாது. மழை உடலை நனைத்துவிடுவதுபோல, நான்கு நிமிடத்தில் நமது மனம் இப்பாடலில் கரைந்துவிடுகிறது.
வணக்கம் கிருஷ்ணா சார். உங்களுக்கு ஒரு பாடல் இதோ வரப் போகிறது. ரெடி.
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 1
ஹீரோ கதாநாயகியை கேலி செய்யும் பாடல்
இதோ அகிலம் புகழும் நடிகர் திலகம் அழகின் உச்சமாக படு ஸ்லிம்மாக அழகு சுந்தரி பத்மப்ரியாவை துரத்தி கலாய்க்கும் அற்புத பாடல்.
'வைர நெஞ்சம்' படத்தில்.
'ஹே ஹே மை ஸ்வீட்டி
என் பிரியத்துக்குரியவளே
இளம் பெண்களில் புதியவளே
நல்ல பருவத்தில் இளையவளே
என் பழக்கத்திற்கினியவளே'
http://www.youtube.com/watch?v=eMoGq0RyxWg&feature=player_detailpage
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 2
நடிகர் திலகத்தின் இன்னொரு கேலி கொஞ்சும் பாடல். அண்ணியாருடன். கார்த்திக் சார் இல்லாமல் போய் விட்டாரே.
http://www.youtube.com/watch?v=oSOv4hTHdo0&feature=player_detailpage
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 3
'திருடன்' படத்தில் ஆன் வேடம் போட்ட கே.ஆர்.விஜயாவைப் புரிந்து கொண்டு தலைவர் பாடும் கேலிப் பாடல்
'பழனியப்பன் பழனியம்மாவான்
மாறிப் போனா மை டியர் ஆனான்
பாக்கும் போது ஆம்பிளையனான்
பழகும் போது பொம்பளையானான்'
செம ரகளை.
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 4
'எங்க ஊர் ராஜா' திரைப்படத்தில் நடிகர் திலகம் ஜெயலலிதாவை போட்டுத் தாக்கும் பாடல். நீச்சல் குளத்தில் ஜெயா குளிக்க, அவர் உடைகளை எடுத்துக் கொண்டு கலாட்டா செய்யும் கண்ணனாக.
'என்னடிப் பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ'
'நீ ஒரு பெண் பிள்ளை
நான் ஒரு ஆண் பிள்ளை
வென்றவர் யாரடியோ?'
என்னா ஒரு கெத்து! செம டீஸிங் சாங்.
http://www.youtube.com/watch?v=JuP8eusOzsA&feature=player_detailpage