http://i1065.photobucket.com/albums/...psfsdjrxuv.jpg
Printable View
கள்ளம் இல்லை
நெஞ்சில் கபடம் இல்லை
நாம்
பொறுமை கொள்வோம்
அதில்
சத்தியம் உண்டு
காலம் வரும்
நல்ல நேரம் வரும்
இன்ப நாளும் வரும்
அந்த திருநாளை அவர் கொடுப்பார்
யாவரும் உணர்வர்.
HATS OFF KC SI FOR YOUR UNTIRING EFFORTS TO KEEP NT FLAG VERY HIGH ALWAYS
We salute you sir.
"பட்டிக்காடா பட்டணமா".
படம் துவங்கி கொஞ்ச நேரத்தில் வரும் காட்சி.
நடிகர் திலகம்,
மாட்டுவண்டியில் மாமன் மகளை அருகில் அமர்த்திக் கொண்டு வருகிறார்.
தனக்குச் சொந்தமான நிலபுலன்களை மிக ஆர்வமாய்
முறைப்பெண்ணுக்கு காட்டி வருகிறார்.
இடதும்,வலதுமாய்த் திரும்பித்
திரும்பி அந்தப் பக்கங்களில் பரந்து விரிந்திருக்கும் தனது நிலத்தைக் காட்டிச் சொல்கிறார்..
"அ......தோ.. அது வரைக்கும்
அம்ம இடந்தான்".
அந்த "அ...தோ" சும்மா உச்சரிக்கப்பட்ட வார்த்தையல்ல. வெகுதூரம்
வரைக்கும் பரவிக் கிடக்கும்
தனது நிலத்தை சுட்டிக்காட்டும்
பொருட்டு அவர் இழுத்துச்
சொல்லும் அந்த "அ...தோ"-
அவர், நடிப்பை ஒரு செயலாக
அல்ல.. ஒரு தவமாகச் செய்வதன் ஒரு நொடி உதாரணம்.
நடிப்பதற்கென்று வந்து விட்ட
எவனும் தொட்டு விட முடியாத உயரம்..அது.
சகித்துக் கொள்ள முடியாத காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிற இன்றைய நாளில்.. இந்தக் காட்சியைப்
பார்க்கிறேன்.
பாமர ரசிகனாகப்பட்டவன்
போகிறபோக்கில் மறந்து விடச்
சாத்தியமுள்ள ஒரு சிறிய
தமிழ்ச் சொல்லை உச்சரிப்பதில்
கூட கலையைப் பெருமைப்படுத்திய அந்த மகாகலைஞனுக்கு இங்கே
மரியாதையில்லை.
வாரி,வாரிக் கலை வழங்கியவர் வருஷக்கணக்கில் அவமானப்
படுத்தப்படுவது குறித்த
நம் வருத்தம் உணர
ஆளில்லை.
ஆயிற்று..!
ஒரு வாரமோ..
ஒரு மாசமோ..
"இடைஞ்சல்" இல்லாத அகன்று
பரந்த வீதிகளில் சுகமான "போக்குவரத்து" மேற்கொள்ளப்
போகிற நல்லவர்களுக்கும்,
நாளைப் பின்னே அதிநிச்சயமாய் நடக்கவிருந்த
மிகப்பெரிய விபத்துகளில்
இருந்து அதிர்ஷ்டவசமாய்ப்
பிழைத்துக் கொண்ட இனியவர்களுக்கும் நல்வாழ்த்துகளைச் சொல்வோம்.
வாழ்க!
Sent from my GT-S6312 using Tapatalk
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...f5&oe=56C81810
Image from Pesum Padam magazine.
Ungal Nanban was a short film screened during early 60s to bring police closer to the society. Nadigar Thilagam made a Special Appearance in the movie.
செந்தில்வேல்
தங்களுடைய ஒவ்வொரு பதிவுமே சிகரமான பதிவுகளாக வந்து கொண்டுள்ளது. அதில் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் புகுத்தி தங்கள் கருத்தை வெளியிடும் நேர்த்தி, மிகச் சிறப்பாக உள்ளது, தேர்ந்த எழுத்தாளனுடைய உத்தி நன்கு புலப்படுகிறது.
உதாரணத்திற்கு பட்டிக்காடா பட்டணமா பற்றிய பதிவில் தாங்கள் புகுத்தியுள்ள இடைஞ்சல்.
பார் மகளே பார் அவள் பறந்து போனாளே பாடலைப் பற்றிய தங்கள் அலசல் மிகவும் வித்தியாசமாயுள்ளது. காமிரா கோணங்களும் நிழலும் நிஜமும் என ஒவ்வொரு நுணுக்கத்தையும் விடாமல் தாங்கள் எழுதுவதைப் பார்க்கும் போது,,
வாசு சார் ... உங்களுக்கு வாரிசு உருவாயிற்று...என நிச்சயமாக என்னால் கூற முடியும்.
தொடர்ந்து எழுதுங்கள் செந்தில்வேல் சார்.
அதே போல சிவந்த மண் உள்பட பொம்மையின் பக்கங்கள் அந்த நாட்களை எங்கள் நெஞ்சின் பக்கங்களாய்க் கொண்டு சென்று அமர்த்தி விடுகின்றன.
பாராட்டுக்கள்.