https://scontent.fyto1-2.fna.fbcdn.n...4c&oe=5ECA290C
Printable View
சவாலே சமாளி நடிகர் திலகத்திற்கு 150வது படம் அந்தப்படத்தின் வெளியீட்டின் போது ஒரு பெரிய மாநாடு திருச்சியில் நடந்தது 1971 அல்லது 72 என்று நினைக்கிறேன் அதில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ஒரு பெரிய ஊர்வலம் நடத்தினார்கள் அந்த ஊர்வலம் ஒரு இடத்தை கிடைப்பதற்கு குறைந்தது 8 மணி நேரம் ஆயிற்று நடிகர் திலகம் மேடையில் நின்று அனைத்து ரசிகர்களுக்கும் கையாட்டி கொண்டிருந்தார் அந்த விழாவில் நடிகர்திலகம் நடித்த படங்களிலிருந்து பல படங்களைத் தொகுத்து ஒரு மலர் வெளியிட்டிருந்தார்கள் அந்த மாதிரி நடிகர்திலகம் நடித்த படங்களின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடிகர் திலகம் விமர்சனம் செய்திருந்தார் பொக்கிஷமான புத்தகம் அது அன்று மதுரையில் இருந்து திருச்சிக்கு நடிகர்திலகம் ரசிகர்களுக்காக ஒரு தனி ரயிலை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கி இருந்தது நானும் சவாலே சமாளி படத்தை மதுரையில்தான் முதல் தடவையாகப் பார்த்தேன் பிறகு தொடர்ந்து 50 தடவைகளுக்கு மேலாக திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன் இப்போதும் தொலைக்காட்சிகளில் பார்த்து ரசிக்கிறேன் மறக்கமுடியாத படமாகும் அந்த நினைவுகளை மறக்க முடியாதவை
Thanks whatsapp fri....
இதைப் படித்துவிட்டு மேலே உள்ளதை படியுங்கள்.
Savithri Kannan
அட இவ்வளவு பெரிய நடிப்புலக மாமேதைக்கு கொஞ்சம் கூட நடிக்கத் தெரியவில்லையே என்று நான் பல முறை வியந்திருக்கிறேன்!
என்ன செய்வது? நடிகர் திலகம் சிவாஜியை நான் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு போதும் பார்த்ததில்லையே !
தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியை சிவாஜி தொடங்கிய நாள்! அன்று காந்தி ,காமராஜர் சிலைகளுக்கெல்லாம் மாலைகள் போட்டுவிட்டு,இறுதியாக பெரியார் திடலில் உள்ள பெரியார் சமாதிக்கு வந்தார்.பெரியார் சமாதியில் மலர்வளையத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் வைத்துவிட்டு,மூன்றுமுறை சுற்றி வளம் வந்தவர், கண்கலங்க கட்சிக்காரர்களைப் பார்த்து, கை கூப்பி, ’’நான் சித்த நேரம் தனியாக இங்க உட்காந்து இருந்துட்டு வாறேன். நீங்க எல்லாரும் இங்கிருந்து போங்க...’’ என்றார்.
எல்லோரும் அங்கிருந்து நகர்ந்துவிட, சிவாஜி மட்டும் மிக மெல்லிய வெளிச்சத்தில் தனியே சுமார் 10 நிமிடங்கள் அமர்ந்தார். அதை 20 அடித் தொலைவில் இருந்து போட்டோ எடுத்துவிட்டு, அமைதியாக தொலைவில் இருந்து அவரை கவனித்தேன். அமர்ந்து ,ஆழ்ந்த சிந்தனைவயப்பட்டவராய்,கண்களில் திரண்டு வந்த துளிகளை அவ்வப்போது துடைத்துக் கொண்டார்.
இறுதியில் நீண்ட ஒரு பெரு மூச்சுவிட்ட வண்ணம் எழுந்து, மீண்டும் பெரியார் சமாதியை வணங்கிவிட்டு, மிகத் தளர்ந்த நடையோடு அங்கிருந்து வெளியேறினார் !
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...3b&oe=5EC8EC58
Thanks Isai inban