Hi TA, I am good. In Sri Lanka these days for holidays.
//excuse the digs
Printable View
Rajini daughters could very well be his first enemies. They want to exploit on Rajini's superstardom. Rajini should be really careful with them.
/digression
Good to know Roshan.
/end digression
Hmm. Namakku avar thalaivar. Avar, avar nalan mattume mukkiyam. But avar avangalukku appa illaya. Help pannathaan ninaipparu. Pasangala purinju nanthukitta paravalla.
RAJINI AMITHABACHAN RECENT MET
http://www.accesskollywood.com/photo...chan-met01.jpg
http://a7.sphotos.ak.fbcdn.net/hphot...55309067_n.jpg
பாலகிருஷ்ணா,விஜயசாந்தி நடித்த "ரவுடி இன்ஸ்பெக்டர்" தெலுங்கு படம் தமிழில் "ஆட்டோ ராணி "என்ற பெயரில் டப் செய்யப்பட்டு சுமாரான வெற்றியும் பெற்றது.
பி.கோபால் இயக்கிய இந்த படத்தின் பூஜைக்கு தலைமை ஏற்றவர்கள் ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால். அப்போது எடுக்கப்பட்ட படம் உங்களுக்காக.
“சூப்பர் ஸ்டார் படம் பார்க்கும் ஸ்டைல் எப்படி?” — ஃபோர் பிரேம்ஸ் கல்யாணம் அவர்களுடன் ஒரு சந்திப்பு – PART 1
நாம் : “ரஜினி சாரை நீங்கள் முதலில் சந்தித்தது எப்போது?”
திரு.கல்யாணம் : “1984 இல் ‘கங்குவா’ பட ரிலீசப்போ தான். அப்போ நான் ஆனந்த் தியேட்டர்ல மானேஜரா இருந்தேன். அவரோட ஸ்பெஷாலிட்டியே அவரோட வேகம் தான். காரை வேகமா ஓட்டிகிட்டு வந்தார். “டிக்கட் இருக்கா?”ன்னு கேட்டார். படம் அப்போ ஃபுல்லாயிடுச்சு. So, “இல்லே!”ன்னு சொன்னேன். உடனே, எந்த வேகத்துல கார்ல வந்தாரோ, அதே வேகத்துல – ரிவர்ஸிலயே – திரும்பிட்டாரு. சினிமால ஸ்டண்ட் சீன்ல பார்க்குற மாதிரி இருந்திச்சு… அது தான் ரஜினி சார். அந்த ஸ்பீட் தான் ரஜினி சார்!”
திரு.கல்யாணம் : “அந்த ஸ்பீட்லயே நல்லா உயரத்துக்கு போயிட்டாரு. அந்த ஸ்பீடை பார்த்துட்டு நானும் மேலே வந்துட்டேன்!”
நாம் : “அதாவது அவரோட வேகத்தை பார்த்து நீங்க இன்ஸ்பைர் ஆகிட்டீங்க?”
திரு.கல்யாணம் : “ஆமாம்!”
நாம் : “ஸ்பீட்னு நீங்க எதை சொல்றீங்க? அவரோட PHYSICAL மூவ்மென்ட்ஸையா? இல்லே செயலாற்றுவதையா?”
திரு.கல்யாணம் : “எல்லாத்தையும் தான். அவரோட PHYSICAL மூவ்மெண்ட்ஸ், பேசுறது, நடக்கிறது, டிஸைட் பண்றது எல்லாமே தான்!”
நாம் : “எத்தனையோ படம் அவர் இங்க ஃபோர் பிரேம்ஸ்ல பார்த்திருப்பாரு. அவர் மூவி பார்க்குற ஸ்டைல் எப்படி?”
திரு.கல்யாணம் : “படம் 6.30 க்கு ஸ்டார்ட் ஆகுதுன்னு வெச்சிக்கோங்க கரெக்டா 6.20 க்கெல்லாம் உள்ளே இருப்பாரு. தான் விருப்பப் பட்ட படங்கள் தான் பார்ப்பாரு. பார்க்கனும்னு நினைச்சா பார்த்துடுவாரு!”
நாம் : “நான் என்ன கேட்கிறேன்னா நாங்க இப்போ ஒரு படம் பார்க்கிறோம்னா நல்லா ஜாலியா கைதட்டி விசிலடிச்சி ரசிச்சு பார்ப்போம். அவர் அந்த மாதிரி….?”
திரு.கல்யாணம் : “லாஸ்ட் கிளாஸ் ஆடியன்ஸ் மாதிரி படத்தை ரசிப்பாரு”
நாம் : “Oh……!!!!!!!!!”
திரு.கல்யாணம் : “எஸ்… கடைசி கிளாஸ் ஆடியன்ஸ் மாதிரி படங்களை ரசிப்பாரு!”
நாம் : “அவர் படத்தையா இல்லே மத்தவங்க படத்தையா?” சற்று சந்தேகத்தோடு கேட்டோம்.
திரு.கல்யாணம் : “அவர் படத்தை விட மத்தவங்க படத்தை தான் அதிகம் ரசிப்பாரு அவர். ரொம்ப மைன்யூட்டா ரசிப்பாரு. சின்ன சின்ன விஷயத்தை கூட நோட் பண்ணுவாரு. படத்துல நடிச்ச நடிகர்கள், வொர்க் பண்ண டைரக்டர்கள் கூட மறந்துபோகிற விஷயத்தை அவர் கரெக்டா ஞாபகம் வெச்சிருப்பாரு. “இந்த சீன் இப்படி இருந்திச்சு”. “இந்த சீனை இப்படி பண்ணியிருக்கலாம், அப்படி பண்ணியிருக்கலாம்” அப்படின்னு டிப்ஸ் கொடுப்பாரு. இண்டர்வல் வரைக்கும் பார்த்தா போதும், அதுக்கப்புறம் மீதியை அவரே சொல்லிடுவாரு!”
திரு.கல்யாணம் : “இதெல்லாம் எல்லாருக்கும் வராது… ஒரு படத்தோட ப்ரீவியூவப்போ நடந்தது இது. படத்தோட இன்டர்வெல்க்கு முன்னாலயே சரியா பண்ண சீன்லாம் எது, தப்பா பண்ண சீன்லாம் எது அப்படின்னு இப்படின்னு டைரக்டர்கிட்டே இவர் விளக்கம் சொல்லி புட்டு புட்டு வெச்சதும் டைரக்டர் ஆடிப்போயிட்டாரு. அவர் இதை எதிர்பார்க்கலே. ஏதோ கூப்பிட்டாங்க… படம் பார்க்க வந்தோமா போனோமான்னு இல்லாம… ரொம்ப இன்வால்வ் ஆகி பார்த்தது அவங்க எதிர்பாராதது.”
கலைஞர்களுக்கு பாராட்டு அப்புறம் தான் சாப்பாடு
நாம் : “சார் நிறைய பேரை அவர் படம் பார்த்துட்டு பாராட்டியிருக்காரு. அதை ப……….” நாம் சொல்லி வாய் மூடுமுன் கல்யாணம் பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
திரு.கல்யாணம் : “படம் பார்த்துட்டு போகும்போதே தன்னோட அசிஸ்டென்ட் மூலமா படத்தோட டைரக்டர் ஃபோன் நம்பர், காமிரா மேன் ஃபோன் நம்பர், வசனகர்த்தா ஃபோன் நம்பர், இதெல்லாம் வாங்கிட்டு போய்டுவார். கார்லய ஃபோன் பண்ணி சம்பந்தப்பட்டவங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பாரு. படத்துல ரொம்ப இன்வால்வ் ஆயிட்டாருன்னா சில சமயம் லிப்ட்ல இருந்து இறங்கும் போதே, “எல்லா டெக்னீஷியன்ஸ் நம்பரும் வாங்கிக்கோங்க” அப்படின்னு அசிஸ்டென்ட் கிட்டே சொல்லிட்டு போய்டுவார். வீட்டுக்கு போனதும் சம்பந்தப்பட்ட நபர்கள் கிட்டே பேசி வாழ்த்து சொல்லிட்டு அப்புறம் தான் சாப்பிடவே போவாரு”.
படத்துல ரொம்ப இன்வால்வ் ஆயிட்டாருன்னா சில சமயம் லிப்ட்ல இருந்து இறங்கும் போதே, “எல்லா டெக்னீஷியன்ஸ் நம்பரும் வாங்கிக்கோங்க” அப்படின்னு அசிஸ்டென்ட் கிட்டே சொல்லிட்டு போய்டுவார். வீட்டுக்கு போனதும் சம்பந்தப்பட்ட நபர்கள் கிட்டே பேசி வாழ்த்து சொல்லிட்டு அப்புறம் தான் சாப்பிடவே போவாரு
நாம் : “வெரி குட். படத்தை கஷ்டப்பட்டு எடுத்து ரிலீஸ் பண்ணி திக்கு திக்குன்னு வெயிட் பண்ணிக்கிட்டுருக்கிறவங்களுக்கு தான் அதோட அருமை தெரியும்!”
திரு.கல்யாணம் : “சில சமயம் நம்பர் தப்பாயிடும். உடனே எனக்கு ஃபோனடிப்பாரு. என்ன… என்ன… நம்பர் தப்பா கொடுத்துடீங்க?” அப்படின்னு சொல்லி சரியான நம்பர் கேட்டு வாங்கி சம்பந்தப்பட்ட டெக்னீஷியன்ஸ் கிட்டே பேசாம அடுத்த வேலை பார்க்கமாட்டாரு.”
நாம் : “சில சமயம் சிலர் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மூவீஸ் எடுத்து சில படைப்பாளிகள் பிரமிப்பு ஏற்படுத்தியிருப்பாங்க. அப்படிப்பட்ட சூழ்நிலைகள்ல படம் பார்த்துக்கிட்டுருக்கும் போதே யாருக்காவது ஃபோன் பண்ணி வாழ்த்து சொன்ன சம்பவம் ஏதாவது உண்டா?”
திரு.கல்யாணம் : “படம் பார்த்துக்கிட்டுருக்கும்போது, அந்தப் படத்தோட டைரக்டரோ, புரொட்யூசரோ, நடிகரோ – படம் சம்பந்தப்பட்ட யாரும் – உள்ளே இருக்கக்கூடாதும்பார். ‘வந்தீங்களா… விஷ் பண்ணீங்களா…. கிளம்புங்க கிளம்புங்க’ன்னு சொல்லி அவங்க எல்லாரையும் பேக் பண்ணி அனுப்பிச்சுடுவாரு”
படம் பார்த்துக்கிட்டுருக்கும்போது, அந்தப் படத்தோட டைரக்டரோ, புரொட்யூசரோ, நடிகரோ – படம் சம்பந்தப்பட்ட யாரும் – உள்ளே இருக்கக்கூடாதும்பார்.
நாம்: “என்ன காரணம் சார் அதுக்கு?”
திரு.கல்யாணம் : “ஃப்ரீனெஸ் தான். அதாவது சுதந்திரத்துக்காக. அவங்க கூட இருந்தா சரியா ரசிக்க முடியாது. இவர் சிரிச்சா ஒரு அர்த்தம் சிரிக்கலேன்னா ஒரு அர்த்தம். இப்படி அவங்களா கற்பனை பண்ணிக்குவாங்க. 100 க்கு 90% படம் பார்க்கும்போது அவரை ரிசீவ் பண்ண வர்றவங்களை சந்தோஷப்படுத்தி, ‘நீங்க கிளம்புங்க’ன்னு சொல்லி கிளம்ப வெச்சிடுவாரு. அதனால முக்கால்வாசி நானே எல்லாரையும் எஸ்கேப் பண்ண வெச்சிடுவேன். ‘ரஜினி சார் படம் பார்க்குறாரு. கூட நாமளும் உக்காந்து படம் பார்க்கலாம்னு நினைச்சா நடக்காது’”
நொறுக்குத் தீனிக்கு நோ!
நாம்: “பிரேக்ல என்ன சாப்பிடுவாரு?”
திரு.கல்யாணம் : “அவர் இந்த நொறுக்குத் தீனி இதெல்லாம் தொடவே மாட்டாரு. பெரும்பாலும் க்ரீன் டீ, லெமன் டீ, மல்லி காபி இது தான். சில சமயம் பிஸ்கெட். அவ்ளோ தான் அவரோட ஐட்டம்”
நாம் : “ஸோ, ரொம்ப டயட் கான்சியஸா இருப்பாரு தலைவர்?”
திரு.கல்யாணம் : “ஆமாம்…. மல்லி காபி கொடுத்து பழக்கப்படுத்தினது நான் தான். ‘எந்திரன்’ ஷூட்டிங் செட்ல கூட, மல்லி காபி கல்யான் சார் கொடுப்பாரு எனக்கு. அதே மாதிரி வேனும்பார். சக்ஸ்சேனா கூட என்கிட்டே சொன்னாரு, “என்ன நீ எல்லாரையும் கெடுத்து வெச்சிருக்கே. இப்போ மல்லி காபி ரஜினி சார் கேட்குறாரு. நான் எங்கே அதுக்கு போறது?” அப்படின்னு கோவிச்சிக்கிட்டாரு.
(அனைவரும் சிரிக்கிறோம்)
அவர் இந்த நொறுக்குத் தீனி இதெல்லாம் தொடவே மாட்டாரு. பெரும்பாலும் க்ரீன் டீ, லெமன் டீ, மல்லி காபி இது தான்.
நாம்: “சார்… அவர் படம் பார்க்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஏதாச்சும் இருக்கா?”
(யோசிக்கிறார்….)
சுவாரஸ்யமான சம்பவம்
நாம் : “அதாவது உங்களோட ப்ரீவ்யூ தியேட்டர் வரலாற்றுல ரஜினி சார் படம் பார்க்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம்…? நிச்சயமா இருக்கும்… அதைப் பத்தி?”
திரு.கல்யாணம் : “படையப்பா படத்தோட ப்ரீவ்யூ ஷோவப்போ…. 6 வது ரீல் ஒடும்போது படம் பிரேக் ஆயிடுச்சு. எலி மெஷினுக்குள்ளே புகுந்து ஏதோ வயரை கடிச்சி படம் ஓடிக்கிட்டுருக்கும்போதே ஆடியோ கட்டாயிடிச்சு. சர்வீஸ் என்ஜினீயரை கூப்பிட்டா அவர் சிட்டிக்கு வெளியே எங்கேயே 30 கி.மீ. தூரத்துல இருந்தாரு. அவரை உடனே வரச்சொன்னோம். அவர் 20 நிமிஷத்துல தியேட்டருக்கு வந்துட்டாரு. அந்த 20 நிமிஷ பிரேக்ல ரஜினி எந்த வித டென்ஷனும் இல்லாம ரொம்ப கூலா இருந்தாரு. வேறா யாராவது இருந்தா அதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியாது. ஆனா அவர் அலட்டிக்கவேயில்லே. ரொம்ப டென்ஷனா எல்லாம் இருந்தாங்க. ஆனா அவர் எல்லார் கிட்டயும் கலகலப்பா பேசி, ஜோக் அடிச்சிகிட்டு இருந்தார். அந்த 25 நிமிஷம் போனதே தெரியலே அவரால. வேற யாராவது அவர் இடத்துல இருந்திருந்தா சத்தம் போட்டிருப்பாங்க. “என்ன தியேட்டர் வெச்சிருக்கான் இவன்?” அது இதுன்னு. ஆனா ரஜினி சார் கூலா இருந்தாரு. இது யாராலயும் முடியாது. அந்த அரை மணிநேரமும் ஒருத்தர் விடாம எல்லார் கிட்டயும் பேசி அந்த சிச்சுவேஷனை அழகா ஹாண்டில் பண்ணினாரு.”
அந்த 20 நிமிஷ பிரேக்ல ரஜினி எந்த வித டென்ஷனும் இல்லாம ரொம்ப கூலா இருந்தாரு. வேறா யாராவது இருந்தா அதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியாது. ஆனா அவர் அலட்டிக்கவேயில்லே. ரொம்ப டென்ஷனா எல்லாம் இருந்தாங்க. ஆனா அவர் எல்லார் கிட்டயும் கலகலப்பா பேசி, ஜோக் அடிச்சிகிட்டு இருந்தார்.
திரு.கல்யாணம் : “அடுத்து ஏதோ படம் பார்க்கும் போது மேடம் கூட சொன்னாங்க “படம் பாதியில கட்டாச்சு… படையப்பா சூப்பர் ஹிட். அதே மாதிரி இதையும் பண்ணுங்க கல்யாணம் படம் சூப்பர் ஹிட்டாகும்” அப்படின்னு.”
நாம் சற்று சந்தேகத்தோடு “உண்மையா இல்லே சும்மா தமாஷுக்கு சொல்றாரா” என்ற அர்த்தத்தில் பார்க்க…. எங்கள் பார்வையின் அர்த்தம் புரிந்தவர்….
திரு.கல்யாணம் : “சும்மா காமெடிக்கு தான் சொன்னங்க. சீரியஸா இல்லே… நீங்க வேற…”
நாம் : “ரஜினி சார் டாட்டர் சௌந்தர்யா கல்யாணத்துல நீங்க தான் முன்னே நின்னு எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டீங்க…. அவரோட 60 ஆம் கல்யாணத்துக்கு வந்தீங்க…. இப்படி எல்லாத்துலயும் நீங்க தான் ஃபர்ஸ்ட். இப்படி அவரோட ஒரு குடும்ப உறுப்பினர் போல நீங்க மாறியது எப்படி?”
திரு.கல்யாணம் : “இதைப் பத்தி என்ன சொல்றது. அவரை என்னோட குடும்ப உறுப்பினர் மாதிரி நான் நினைக்கிறேன். அவரும் அப்படியே என்னை நினைக்கிறார். தட்ஸ் ஆல்!”
திரு.கல்யாணம் : “ஆனந்த் தியேட்டர் உமாபதி சார் கூட என்கிட்டே ஒரு தடவை சொன்னாரு… “எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்க நான் பெற்ற பிள்ளைகள் அப்படினா நீ நான் பெறாத மகன்” அப்படின்னார். ஏன்னா நான் அப்படி நடந்துகிட்டேன்”
பாபா – எப்படியிருக்கு ரெஸ்பான்ஸ்னு கேட்டாரு
நாம் : “அவரோட படத்தை பத்தி உங்க கிட்டே அபிப்ராயம் கேட்பாரா… நீங்க என்ன சொல்லுவீங்க?”
திரு.கல்யாணம் : “என்ன சொன்னாங்க எல்லாரும்னு என்கிட்டே கேட்பாரு… “சூப்பர்”ன்னு சொன்னாங்க நான் சொல்லுவேன். அவ்ளோ தான். ஒரே வார்த்தைல படத்தோட ரிசலட்டை சொல்லிடுவேன்”
திரு.கல்யாணம் : “பாபா படத்தப்போ மட்டும் எப்படியிருக்கு ரெஸ்பான்ஸ்னு கேட்டாரு. “டிவைடா இருக்கு”ன்னு சொன்னேன்”
http://onlysuperstar.com/?p=14399
ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!
தலைப்பைப் படிச்சதும் எங்க ‘ரஜினியும், நானும்’ன்னு எழுதி, சூப்பர்ஸ்டாரும் என் நண்பர்ன்னு சொல்லிடுவேனோன்னு பயந்துட்டீங்கதானே...! இல்லீங்க. அதுல ஒரு விஷயம் என்னன்னா... ரஜினிகாந்த்தை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். ஆனா பாவம்... அவருக்குத் தான் என்னைத் தெரியாது. ஹி... ஹி....
1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன். உங்களுக்கு ரஜினியைப் பிடிக்கும், தொடர்ந்து படிக்க விருப்பம்னா இன்னும் சில பகுதிகள் வெளியிட உத்தேசம்!
இப்போ... உங்ககூட இன்றைய சூப்பர் ஸ்டாரான அன்றைய ரஜினிகாந்த் பேசுகிறார்:
நான் முதன்முதலா நடிச்ச ‘அபூர்வ ராகங்கள்’ படம் ஒரு வருஷம், ஒண்ணரை வருஷம் கழிச்சுத்தான் *பெங்களூர் பக்கம் வரும். நண்பர்கள்கிட்ட கொஞ்சம் ‘ரீல்’ விடலாம்னு நினைச்சேன்.
எனக்கு ஒரு கெட்ட பழக்கம். தெரிந்த விஷயத்தைக் கொஞ்சம் எக்ஸாஜரேட் பண்ணிச் சொல்லுவது. எதுக்குன்னா Only to attract, not to cheat them.
‘‘படத்தில் முதல்ல இருந்து கடைசி வரை நான்தான் First Hero’’ன்னு அங்க உள்ளவங்களை ‘ப்ளீஸ்’ பண்ணுவதற்காகச் *சொன்னேன். என்னுடைய துரதிர்ஷ்டம், ‘அபூர்வ ராகங்கள்’ படத்தை சீக்கிரமா ரிலீஸ் பண்ணிட்டாங்க. நண்பர்களுக்கு ஆர்வம், பரபரப்பு! *எனக்கோ பயம், தர்ம சங்கடம்!
என்னை வரவேற்க ஏற்பாடுகள் நடந்தது. எப்படி? பலூன்களோட... மிட்டாய்களோட...
திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஒண்ணா, ரெண்டா... நாலு டிசைன்ஸ்! ஒரு டிசைன்லகூட என் படம் இல்லை. சொல்லியிருக்கிறதோ மெயின் ரோலு - போஸ்டரிலோ முகம் இல்லை. அங்க மறுபடி ஒரு ‘ரீல்’ விட்டேன். ‘‘நட்சத்திரம்னாதான் போஸ்டர்ல போடுவாங்க. புதுமுகத்தை எப்படிப் போடுவாங்க?’’ -அப்படி ஒரு சமாளிப்பு.
ரிலீஸ் தேதி வந்தது. தியேட்டருக்குப் போனாங்க. அங்க வைச்சிருக்கிற போட்டோ கார்டில தேடினாங்க. ஒரே ஒரு போட்டோவில்தான் நான் இருந்தேன்- அதுவும் அவங்க கண்ணில படலை. தியேட்டரில் உட்கார்ந்தாங்க. எப்படி..? பலூனை ஊதிக் கையில வைச்சிக்கிட்டு... நான் திரையில் வந்தவுடன் அதை அடிச்சி, உடைச்சி என்னை வரவேற்க! முதலிலேயே ஸ்வீட் கொடுக்கப்பட்டு விட்டது- பால்கனியில இருககிறவங்களுக்கு. என்னன்னு சொல்லிக்கிட்டு..? ‘‘இந்தப் படத்தில் வர்ற ஹீரோ நம்ம ஃபிரண்டுதான்’’னு...!
படம் ஆரம்பமானது. ‘சிவாஜிராவைக் காணுமே...?’ டைட்டிலில் தேடுறாங்க. அங்க ரஜினிகாந்த்துன்னு இருக்கிறது அவங்களுக்குத் தெரியாது. ‘வருவான், வருவான்’னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க- அடிக்கிறதுக்கு. (பலூனை!)
படம் ஓடிக்கிட்டே இருக்கு. பலூன் காத்தும் போயிகிட்டே இருக்கு. நான் திரையில் வரவே இல்லை. இன்டர்வல் வந்திடுச்சி. வெளியே வந்தாங்க. நான் அப்ப அங்கே இல்லே. பெல் அடிச்சது. உள்ளே போனாங்க. திட்டவட்டமான முடிவு பண்ணிட்டாங்க- ‘நான் படத்திலே இல்*லே’ன்னு! ஆனா படம் நல்லா இருக்கு, பாத்திட்டுப் *போகலாம்னு உட்கார்ந்தாங்க. இப்ப காத்துப் போன பலூன் ஜோபியில இருக்கு. நான் ‘ரீல்’ விட்டது தெரிஞ்சு போச்சு.
இன்டர்வெல் முடிந்து படம் ஆரம்பமானது. அப்போது திரையில்... இரண்டு கேட்டையும் தள்*ளித் திறந்து்கிட்டு ஒருவன் வந்து நின்னான்.ந லோ ஆங்கிளில் ஷாட் (Low Angle Shot). எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தாங்க. எங்கோ பார்த்த முகம் மாதிரி இருந்தது அவங்களுக்கு. கொஞ்சம் நேரம் கழிஞ்ச பிறகு அந்த மனிதன்தான் நான்னு தெரிஞ்சது. எடுத்தாங்க ஜோபில இருந்த பலூனை... ஊதினாங்க காத்தை... அடிச்சாங்க பலூனை..! ‘டப்... டப்... டப்...’
அப்ப திரையில கமலஹாசன் முகம் வந்திருந்தது. கமலோட வரவுக்குக் காத்திரந்து சரியாக, அவுங்க அடிச்சது போல் இருந்தது. எல்லாருக்கும் ஆச்சரியம்... ‘என்னடா கமலஹாசனுக்கு இப்ப பலூனை உடைச்சி வரவேற்கறாங்களே’ன்னு..! அவுங்களுக்கு எப்படித் தெரியும்... எனக்காக அடிச்சாங்கன்னு!
படம் முடிஞ்சது. வீட்டுக்கு வந்தாங்க- என்னை அடிக்க! நான் அங்க இல்லே... ரயில்வே ஸ்டேஷனில் இருந்தேன்- மெட்ராஸுக்கு வருவதற்கு!
http://www.minnalvarigal.blogspot.co...g-post_10.html
:rotfl:
thalaivar tham adikkira style ae thani..
http://a3.sphotos.ak.fbcdn.net/hphot...00604382_n.jpg
'bairavi' rajini
http://www.shotpix.com/images/70830333962608840164.png
http://www.shotpix.com/images/51949397720617091842.png
http://www.shotpix.com/images/53294268029874385418.png
http://www.shotpix.com/images/24693584000686384640.png
http://www.shotpix.com/images/58678820533152341171.png
http://www.shotpix.com/images/07028923372820554055.png
http://www.shotpix.com/images/40454779326157455559.png
vasudevan