அன்பு நண்பர்களே,
இறையருளாலும் நண்பர்களின் நல்வாழ்த்துக்களினாலும் உடல் நலம் தேறி வருகிறேன். அன்புடன் என் நலம் விசாரித்த அன்புத் தம்பிகள் வினோத், பெங்களூர் குமார் மற்றும் ஷைலேஷ் பாபு சாருக்கு என் உளமார்ந்த நன்றி.
ராகவேந்திரன்
Printable View
அன்பு நண்பர்களே,
இறையருளாலும் நண்பர்களின் நல்வாழ்த்துக்களினாலும் உடல் நலம் தேறி வருகிறேன். அன்புடன் என் நலம் விசாரித்த அன்புத் தம்பிகள் வினோத், பெங்களூர் குமார் மற்றும் ஷைலேஷ் பாபு சாருக்கு என் உளமார்ந்த நன்றி.
ராகவேந்திரன்
மறக்க முடியாத தமிழ் புத்தாண்டு - 1972
மக்கள் திலகத்தின் ''ராமன் தேடிய சீதை '' வெளியான நேரத்தில் மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம்'' படம் 5 வது வாரம் திரையிட்ட 39 திரை அரங்கிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது .திரை உலகம் - திரைச்செய்தி சிறப்பு மலர்கள் வெளியிட்டிருந்தார்கள் .
ராமன் தேடிய சீதை படத்திற்கும் திரை உலகம் -திரைச்செய்தி சிறப்பு மலர்கள் வெளியிட்டிருந்தார்கள் .
முரசொலி - தென்னகம் - மாலைமுரசு பத்திரிகைகளில் ராமன் தேடிய சீதை படத்திற்கு சிறப்பு செய்திகள் மற்றும் படங்கள் ,கட்டுரைகள் வெளியிட்டிருந்தார்கள்.
ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த படம் .ஜெயாவிற்கு அதிக முக்கியவத்துவம் இடம் பெற்றதாலும் , நீரும் நெருப்பும் படத்தை போல ஜெயாவின் ஆக்கிரமிப்பு ரசிகர்களுக்கு அதிருப்தி
அளித்தது .தனிப்பட்ட முறையில் மக்கள் திலகத்தை விமர்சனம் செய்ததாலும் ரசிகர்கள் ஆதரவு
எதிர் பார்த்த அளவிற்கு இல்லாததாலும் படம் பிரமாண்ட வெற்றி பெறாமல் சுமாரான வெற்றி பெற்றது . இருந்தாலும் இராமாயணம் நிகழ்ந்த மண்ணில் இந்த ராமனுக்கு மிகப்பெரிய வெற்றி
கிடைத்தது .
ராமன் தேடிய சீதை - சுமாரான வெற்றி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக அன்று இருந்தாலும் இன்று ராமன் தேடிய சீதை - [எம்ஜிஆர் - ஜெயலலிதா ] அரசியலில் வெற்றி மேல் வெற்றி பெறுவதுமிகவும் பொருத்தமாக உள்ளது .
WELL PLANNED IN 1968- KANAVAN BY THIS SONG JAYA EXPRESS HER DESIRE .- IT IS TRUE NOW.
http://youtu.be/DGbaT54OoRg
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்: ஏப்.13-1930
http://youtu.be/tUEB_61rhZI
அன்புள்ள திரு .வினோத்
உங்களுக்கும் மற்ற MT திரியின் எல்லா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ( one day in advance) - ஆயிரத்தில் ஒரு சந்தோஷம் மட்டும் இல்லாமல் , ஆயிரமும் சந்தோஷமாக எல்லோருக்கும் அமைய இந்த இனிய வருடம் வழி தரட்டும்
அன்புடன் ரவி
http://i60.tinypic.com/20h3gv6.jpg
இன்றைய மாலை மலர் நாழிதழில் வெளியான செய்தி
மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும்,
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவனாம்
அற்புத காவியநாயகன் எம்.ஜி.ஆர் - வரலாற்று நாயகன்.
13-4-2014 இன்று மாலை சன்News தொலைக்காட்சியில் அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் நடிகர்களின் பங்கு எந்த நிலையில் உள்ளது என்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசியவர்கள் ந்மது வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவனாம் அற்புத காவியநாயகன் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்களையும், அவருடைய அரசியல் மற்றும் மக்கள் நல நோக்கத்தையும் மேற்கோள் காட்டி புகழ்ந்து பேசினார்கள்.
http://i57.tinypic.com/j81r8l.jpg
http://i125.photobucket.com/albums/p...pse53b5b4a.jpg
Nadodi movie 2nd week ad in English.