Originally Posted by
makkal thilagam mgr
அன்பு சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்கள் அறிவது :
இந்த பட்டியலில், நமது இதய தெய்வம் பாரத ரத்னா மக்கள் திலகம் அவர்களின் துணைவி அன்னை ஜானகி, நாயகியாய் அவருடன் இணைந்த "மருத நாட்டு இளவரசி" காவியத்தில், இடம் பெற்ற அருமையான காதல் பாடல் " நதியே நீராழி அதையே சேர்தல் நாம் சேர்ந்தோம் " என்ற பாடலின் இடையே, நம் மன்னவனைப் போற்றி வரும் அற்புதமான வரிகளாகிய "ஆனந்தக்கடல் நீ ! அதிலொரு மீன் போல் மகிழ்வேன், வாழ்வினில் மாறாப் பிரேமையினால்" (அன்பினால்) என்பது விடுபட்டு விட்டது.
அதே போன்று, "மோகினி" என்ற காவியத்தில், இடம் பெற்ற "வசந்த மாலை நேரம் மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்" என்ற பாடலின் இடையே அன்னை ஜானகி அவர்கள் நம் பொன்மனசெம்மலை நோக்கி பாடும் " காதல் வேகம் போல் இல்லையே - உனது கால்கள் தாவும் வேகம், வேதை கொண்டு வரும் பாதை கண்டு மெலிவாரே வீர விஜயன் (மக்கள் திலகத்தின் கதா பாத்திர பெயர் விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது) காட்டும் நடையிலும், திராட்டிலும் - அந்த ஓட்டம் விரைவு வேணும் , செல்லு செல்லு பரியே " (பரி என்ற சொல்லுக்கு குதிரை என்று பொருள் உண்டு) என்ற வரிகளும், கவனத்தில் கொள்ளத்தக்கது.