-
1977 தமிழக சட்ட சபை தேர்தல் ஒரு கண்ணோட்டம் .
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அதிமுக இயக்கம் சந்தித்த தமிழக சட்ட சபை தேர்தல் களம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மறக்க முடியாத சரித்திர சாதனைகளை நேரில் பார்த்து , வெற்றியைஅனுபவித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது .
நான்கு முனை போட்டி.
அதிமுக மற்றும் இடது சாரி கட்சி
திமுக
காங் மற்றும் வலதுசாரி கட்சி
ஜனதா
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன்னுடய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் . தேர்தல் பிரசாரங்கள் நள்ளிரவு மற்றும் தொடர்ந்து விடியற்காலை வரை
எம்ஜிஆர் மக்களை சந்தித்து ஒட்டு வேட்டையாடினார் ..
எதிரணியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றி வழக்கம் போல் தரமின்றி வசை மாரி பொழிந்தார்கள் .நடிகர் கட்சி , அரிதாரம் பூசிய தலைவர் என்றும் கிண்டல் செய்தார்கள் .எம்ஜிஆர் இவர்களை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய வெற்றி ஒன்றே குறிகோளாக மக்கள் சந்தித்து ஆதரவு கோரினார் .
தேர்தல் முடிந்து ஒட்டு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரத்தில் எம்ஜிஆர் அலை என்னவென்று அரசியல் விமர்சகர்கள் , பத்திரிகைகள் , எம்ஜிஆரை தவறாக கணித்தவர்கள் எல்லோரும் எம்ஜிஆர் யார் என்று புரிந்து கொண்டார்கள் .எம்ஜிஆரின் வெற்றியை ஜீரணிக்க முடியாத ஒரு சில பரிதாபத்திற்குரியவர்கள் வேதனை தீயில் நொந்து போனார்கள் .எம்ஜிஆரின் வெற்றி ஒரு வரலாறாக மாறி இன்று வரை சரித்திரமாக தொடர்ந்து வருவது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு அன்றும் பெருமை . இன்றும் பெருமை . நாளையும் பெருமை .
-
நம்பிக் கெட்டவர் இல்லை…
“IMPACT OF MGR FILMS” என்ற நூலின் தான் மட்டும் நல்லவனாக மாறுவதோடு, தனது கடமை முடிந்துவிடுவாதக எண்ணாமல் இந்த நாட்டிலுள்ள, ஏன் உலகத்தில் பல பாகங்களிலும் வாழ்கின்ற லட்சோப லட்ச மக்களையும, நல்லவர்களாக, பண்பாளர்களா, உண்மைக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்களாக, தாயன்றபு கொண்டவர்களாக, பிறருக்கு உதவ வேண்உடம் என்கிற இரக்க சிந்தனைமிக்கவர்களாக மாற்றுவதற்கு, தான் தொடர்பு கொண்டிருக்கும் திரைப்படம் என்கிற மாபெரும் சக்தியை முழுமையாகப் பயன்படுத்திய அகில உலகெங்கிலும் ஒரே மாமேதை உண்டென்று கூறினால், அது நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரது திரைப்ட வாழ்க்கையினை சற்று எண்ணிப் பார்க்கும்பொழுது அவர் எந்த ஒரு திரைபடத்திலும் தன்னை ஒரு கொடியவனாகவோ? அல்லது பிறருக்கு தீங்கு செய்பவனாகவோ, கற்பழிப்பவனாகவோ, நீதிக்கும் நேர்மைக்கும், புறம்பானவனாகவோ நடித்தில்லை.
ஒரு நடிகன் என்பவன் இயக்குநர் ஏற்படுத்தித் தருகின்ற் எந்த ஒரு பாத்திரமானாலும் அதில் நடிப்பதுதானே நியாயம். அதைவிடுத்து தான் நடித்த பாத்திரங்கள் அனைத்திலும் நல்லவனாகவும், பண்பாளனாகவும் மட்டுமே இருக்கின்ற கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க ஒப்புக்கொள்வதற்குக் காரணம் என்ன?
மனதளவிலும், செயலளவிலும் தன்னை பண்பாளனாகவும், நல்லவனகாவும், முழுமையாக நம்பி, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்து, அதையே பழக்கமாக கொண்ட ஒரே காரணத்தினால், கற்பனைக்குக் கூட தனது எண்ணத்திற்கும் செயலுக்கும் மாறுபட்டவனாக சித்தரிக்க அவர் மனம் இடம்தரவில்லை.” இப்படிச் சொல்கிறது அந்த நூல்.
courtesy - net
-
impact of mgr films’ என்ற நூலில் நாகேஷ், ‘தயவு செய்து எம்.ஜி.ஆர் அவர்களை உள்ளூர் பெரியவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். அவர் வரலாறு பரங்கிமலை பக்கம் உலவினாலும், இமய மலையைத் தாண்டியது. உலகப் பெரியோர்களின் வாழ்க்கையோடு ஒப்புநோக்கத் தகுந்தது.
ஒரு நெப்போலியனோடு ஒப்பிட்டுப் பாருங்கள், நிலவரம் புரியும். ஒரு ஆபிரகாம் லிங்கனோடு இணைத்துப் பாருங்கள், அருமை தெரியும். ஒரு சர்ச்சிலோடு வைத்து சர்ச்சை செய்யுங்கள், டாண், டாண் என்று தேவன் கோயில் மணியோசைபோல் புரட்சித் தலைவரின் புத்திசாலித்தனம் தெளிவாகப் புரிந்துவிடும். ஒரு நேருஜியுடன் நிறுத்திப்பாருங்கள், பிறகுதான் நம் வணக்கத்திற்குரிய ராஜீவ்காந்தி அவர்கள், நம் முதல்வரிடம் ஏன் இவ்வளவு பிரியம் வைத்திருந்தார் என்று புரியும். “சக்கரவர்த்தித் திருமகன்” எழுதிய மீதறிஞர் ராஜாஜியின் பக்கத்தில டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களை இணைத்துப் பாருங்கள். பிறகுதான் அந்த நூலில் வரும் ராமச்சந்திர மூர்த்தியின் கல்யாண குணங்களில் அநேகம் இந்த (எம்.ஜி. ராமச்சந்திர மூர்த்தியிடம் இருப்பதும் நமக்குப் புரியவரும்’ என்று சொல்லி இருக்கிறார்.
எனவே நம் வள்ளல் மானுட வடிவில் வந்த அவதார புருஷனே!
-
1977ல் பொதுத் தேர்தலில் நம் வள்ளல் அருப்புக்கோட்டையில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். ஆனால் அந்த தொகுதிக்கு எளிமையும், மகளுக்குத் தொண்டாற்றும் கடமை உணர்வும் கொண்ட பஞ்சவர்ணம் என்பவருக்குத்தான்சீட் கிடைக்கும், என்ற நம்பிக்கையில் வள்ளலின் கட்சியைச் சார்ந்ததவர்களே எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். வள்ளலே நின்றவுடன் கட்சிக்கார்ர்கள் முதல், பஞ்சவர்ணம் வரை, எவரும் எந்த வருத்தத்தையும் காட்டிக்கொள்ளாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர. ஆனால்.. மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கும் பஞ்சவர்ணம், தனக்க்உ எப்படியும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தது, நம் வள்ளலுக்கும் தெரியும்.
தேர்தலில் வள்ளல் வெற்றி பெறுகிறார். முதல்வர் ஆகிறார். நன்றி அறிவிப்பு கூட்டத்துக்கு வள்ளல் அருப்புக் கோட்டைகு வருகிறார். பஞ்சவர்ணம், அங்கே, கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறார். கட்டுக்கடங்காத லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் வள்ளல் மைக்கைப் பிடித்து,
“நீங்களெல்லாம் ஏன்-எதிர்க்கட்சிகள் கூட, சென்னை கோட்டையில் அமர்ந்திருக்கும் இந்த ராமச்சந்திரனை, அருப்புக் கோட்டை தொகுதியில் இனி பார்க்க முடியுமா? இவரால் இந்தத் தொகுதிக்கு என்ன விமோசனம் பிறக்கப் போகிறது! அவசர தேவைக்கு எப்படி பார்க்க முடியும்? என்றெல்லாம் நினைக்கலாம். எதிர்க்கட்சிகள் விமரிசனமே செய்யலாம். அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டாம். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ராமச்சந்திரனை இனி இங்கே இருக்கிற உங்கள் அனைபை பெற்றிருக்கும் பஞ்சவர்ணம் வடிவில் பார்க்கலாம். இனி அவரிடம் உங்கள் குறைகளைச் சொல்லலாம். கோரிக்கைகளை வைக்கலாம். அதையெல்லாம் உடனடியாக தீர்த்து, வைப்பேன். நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து போகிறேன். என்று வள்ளல் சொன்னவுடன் கூட்டமே ஆர்ப்பரிக்கிறது.
விழிகளில் வேதனையை தேக்கி வைத்திருந்த பஞ்சவர்ணத்தின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது. இனி அருப்புக்கோட்டைக்கு இவர்தான் எம்.எல்.ஏ. என்று சொல்லும் அளவுக்கு நம் வளல் பஞ்சவர்ணத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.
-
உலக வரலாற்றில் அதிக விஷயங்களில மற்றவர்களுக்கு தன்னை ஒரு ரோல் மாடலாகவே பின்பற்றும்படி வாழ்ந்து காட்டிய வரலாற்று நாயகன் நம் வள்ளல் பெருமகன்தான்.
நிறத்தில், நேர்மையில், குணத்தில், கொள்கையில், ழைப்பில், உண்மையில், வீரத்தில், விவேகத்தில்,தாயப்பாசத்தில், தர்மத்தில் இப்படி அனைத்திலும் புடம்போட்ட தங்கமாக ஜொலித்தவர் நம் வள்ளல்.
அதேபோல், தான் சார்ந்திருந்த திரைப்பட துறையில் கதையில், வசனத்தில் பாடலில் இசையில், சண்டைக்காட்சியில், காதல் காட்சியில், உடையில் ஸ்டைலில், எடிட்டிங்கில், ஒளிப்பதிவில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர் நம் வள்ளல். அதனால் தான் இன்றைக்கு, வள்ளல் படத்தில் வரும் பாடல் போல் இருக்க வேண்டும், வள்ளல் படம் போல ஒரு நல்ல கருத்தை வலியுறுத்துகிற கதை இருக்க வேண்டும் என்று இன்னும் கலையுலக ஜாம்பவான்கள் உதாரணம் காட்டிச் சொல்லும் அளவுக்கு சினிமாவை கையாண்டவர் நம் வள்ளல்.
அடுத்து, தான் காலடி எடுத்து வைத்த அரசியலில், எல்லாத் தரப்பு மக்களையும், குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழே அதிகம் வாழும் மக்களை எப்படி மேம்படுத்துவது? என்று சூத்திரம் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் நம் வள்ளல். அதனால்தான் பொருளாதார மேதைகளாகட்டும், பொலிட்டிகள் மேதைகளாகட்டும், நம் வள்ளலின் ஆட்சியை மட்டுமே, இன்றும் ரோல் மாடலாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு (14.04.2016) முதல்
கோவை
டிலைட் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின்
மாபெரும் வெற்றிக்காவியம்
மதுரை வீரன்
திரையிடப்படவுள்ளதாக
தகவல்.
நன்றி - திரு ஹரிதாஸ் - கோவை.
-
-
-
இன்று (05/04/2016) பிற்பகல் 2 மணிக்கு புது யுகம் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர்
.எம்.ஜி.ஆர். நடித்த "முகராசி " ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/10zd3dz.jpg
-