http://i125.photobucket.com/albums/p...ps0157e336.jpg
Printable View
இனிய நண்பர்கள் அனைவருக்கும் நல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
இந்த இனிய நன்னாளில் கடந்த தமிழ் புத்தாண்டு 14.4.2013 தினத்தன்று பெங்களுர் நகரில் நடந்த மக்கள் திலகத்தின்
திரைக் களஞ்சியமான ,மலர் மாலை - 1 விழா பற்றிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களின் சீரிய முயற்சியின் , கடுமையான உழைப்பின் மூலம்
உருவான மக்கள் திலகம் மலர் மாலை -1 சிறப்பான முறையில் 14.4.2013 அன்று பெங்களுர் நகர சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் திரு முனியப்பா தலைமையில் மலர் மாலை வெளியிடப்பட்டது . விழாவில் கர்நாடக
மாநில மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மற்றும் சென்னை - கோவை - சேலம் - புதுவை -மதுரை -திருச்சி -நகர மக்கள் திலகத்தின் ரசிகர்கள் வந்திருந்து சிறப்பித்தார்கள் .
மலர் மாலை வெளியீடு விழா மேடையிலே ரூ 500 விலையான மக்கள் திலகம் மலர் மாலை 100 புத்தகங்கள் விற்பனை ஆகி மாபெரும் சாதனை புரிந்தது. ஓராண்டு நிறைவு அடைந்த நேரத்தில் மலர் மாலை 1000 பிரதிகள்
மேல் விற்பனை ஆகி இருப்பது புத்தக உலகில் புரட்சி யாகும் . ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி .
இனிய நண்பர் திரு பம்மலார் வெளியிட்ட 2014 - ஏப்ரல் - ஜூன் மக்கள் திலகம் காலேண்டர் திரியின் பார்வைக்காக ........
http://i58.tinypic.com/wqppc1.jpg
SWEET MEMORIES- SLIDE SHOW- MALARMALAI -FUNCTION 2013 AT BANGALORE
http://youtu.be/e30Rsdy-Vrw
NADODI - 14.4.1966
http://i57.tinypic.com/25yx91k.jpg
COURTESY- TFM LOVER SIR - THANKS
மக்கள் திலகத்தின் MGRஇன் 'நாடோடி வெற்றிச் சித்திரம்
மெல்லிசை மன்னரின் சூப்பர் ஹிட் பாடல்கள் நிறைந்த திரைக்காவியம்
ஆரம்பமே உலகமெங்கும் ஒரே மொழி என்றிசைக்கும்
நாடு அதை நாடு கடவுள் செய்த பாவம் என்று உணர்ச்சி பூர்வமாகவும்
அன்றொரு நாள் இதே நிலவில் பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே
திரும்பி வா ஒளியே ரஸிக்கத்தானே இந்த அழகென்று அழைக்கும்
ரஸனையோடு கேட்க வைக்கும் பாடல்கள்
அதிலே இந்த 'கண்களினால் காண்பதெலாம் மனதினிலே பார்த்து விட்டேன்
நாடோடி திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டு ஏனோ என்ன காரணத்திற்காகவோ
சேர்த்துக் கொள்ளப்படாத அருமையானதொரு பாடல்
வார்தைகளையும் உணர்வுகளையும் ஆமோதிக்கின்ற குறைந்தபட்ச கருவிகள்
ஹார்மோனியமும் tabla dholak கும் பொருந்தி வருகிற
ஆர்ப்பாட்டமில்லாத இசையை
நெல்லில் மணிபோல் பாலில் நெய்போல்
ஹார்மோனியத்திலிருந்தே
அள்ளி வழங்கும் இசைவள்ளல் மனமே எம் எஸ் வி
பி சுசீலாவின் குரலில்
டி எம் எஸ் முழுதுமாய் ஹம்மிங்க் ,
அனேகமாக டி எம் எஸ் வெறும் ஹா..ஹா வென்கிற
ஒரே ஒரு பாடலும் இதுவாகத்தானிருக்குமோ என்ற எண்ணம்
தன் குரலிலேயே திரைத் திலகங்களை வாழ வைத்த திலகம் TMS !
எழுதிக் கொடுத்தால் அவரவர் குரல்களில் பாடுவது நன்றாகத் தெரிந்த விஷயம்
வரிகளே இல்லாத போதும் கூட வெறும் ஹாஹா..ஹாஹா விலேயே
மக்கள் திலகத்தை கண்முன் கருத்தின் முன் காட்டுகிற அந்த அஸாத்திய..
அதை திறன் என்பதா ?
தமிழ் திரையிசையின் வரப்பிரசாதம் என்பதா ?!
P Susheela மட்டும் என்ன சளைத்தவரா ..முத்து நகையை வாழ வைத்தாய் வரிகளில் ..
இடையை வளைத்து கன்னத்தை விரல்களால் மெல்லவே தட்டி
கண்ணை அகல விரித்து பிடிக்கும் அபிநயம் நன்றாகவே தெரிகிறது
பாடலை எழுதியது யார் ?
..மனசாட்சி என்றே நீ இருந்தாய் என்று கண்ணதாஸனும்
வள்ளல் மனமே பிள்ளை குணமே என்று வாலியே சொல்லியிருந்தாலும்
முத்து நகையை ' அறிந்தது கண்ணதாஸனாகத்தானிருக்கும்
இது போன்ற அரிய அருமை பாடல்களை கேட்டு
ரஸிக்கும் வண்ணம் தந்துதவும்
டாக்டர் சந்தாராம் & கோ சார்ந்த அன்பர்களுக்கும் மிக்க நன்றி
to listen : http://www.esnips.com/doc/0e7bafc0-d...llaam-TFMLover
NaadOdi 1966 ad :
இப்பொழுது நடைபெறுகிறது
சென்னை
பிளாசா
பிராட்வே
உமா
மற்றும் தென்னாடெங்கும்
மக்கள் திலகம்
எம் ஜி ஆர்
சரோஜாதேவி
நடிக்கும்
பத்மினி பிக்சர்ஸ்
நாடோடி
தயாரிப்பு டைரக்க்ஷன் பி ஆர் பந்துலு