பாரதி தாசன் தான் ஆ.த.அ.சி யின் வசனகர்த்தாவா.. நான் அறியாத ஒன்று..அந்தக் காலத்தில் தேவியில் ரீரன்னில் முழுப்படத்தையும் பார்த்திருக்கிறேன்..கிட்டத்தட்ட 3.20 மணி நேரம்.. சகோதரவாஞசையும் ஜீவகாருண்யமும் பூண்டு சன்னியாசியின் மந்திரக் கோலை அபகரித்தவன் இருக்கின்றானா இறந்து விட்டானா அவன் யார்.. மண்ணுலகில் பெண்ணாகப் பிறந்து ஆண்வேடம் பூண்டு ஒரு பெண்ணை மணந்து அவளை அபகரித்த சன்னியாசியை விரட்டியவள் இருக்கின்றாளா அவள் யார்.. சுதா மதி என்ன கதி என மூன்று கேள்விகள்..இண்ட்ரஸ்டிங்க் மூவி..கொஞ்சம் எடிட் செய்திருந்தால் இந்தக்காலத்துக்கு நன்றாக இருக்கும்.. ஜெயில் எடிட்டட் வெர்ஷன் போட்டார்கள்.. நன்றாக இருந்தது..
அதுவும் கடைசிப் போர்ஷனில் சில பல ராஜகுமாரிகள் முதலில் ஹீரோவுடன் இழைந்து அசடு வழிவதும், ஹீரோ கேள்வி கேட்ட பிறகுகொதித்து ஏசுவதும் சிறப்பான வசனங்கள்..