http://i58.tinypic.com/2rylt2v.jpg
Printable View
தலைவரின் 27வது நினைவுநாளை முன்னிட்டு திரியில் சிறப்பு பதிவுகள் இட்ட,
திரு. வினோத் (பெங்களூர் விழா படங்களுக்கு நன்றி சார்)
திரு.செல்வகுமார் (இந்து ஆங்கில கட்டுரையின் தமிழாக்கத்துக்கும் அரிய புகைப்படங்களை பதிவிட்டதற்கும் நன்றி சார் )
திரு.ராமமூர்த்தி (அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலூர் முழுவதும் சுற்றி படம் எடுத்துத் தள்ளி அதை தரவேற்றியுள்ளீர்கள். இப்படி வேலூர் முழுவதும் சுற்றியதற்கும் படங்களை தரவேற்றியதற்கும் எத்தனை மணி நேரம் ஆகியிருக்கும் என்று கணக்கிட்டால் மலைப்பு ஏற்படுகிறது. ஹாட்ஸ் ஆப் சார்.)
திரு.லோகநாதன் (நாளிதழ்களில் வந்த செய்திகளை ஒன்று விடாமல் தரவேற்றியதற்கு நன்றி சார்)
திரு.சைலேஷ்பாசு (பொருத்தமான பதிவுகளுக்கு நன்றி சார் )
திரு.யுகேஷ் பாபு (ஹைகூ கவிதைகள் சூப்பர்)
திரு.ஜி.கிருஷ்ணா (மாலைச் சுடர் கட்டுரை மற்றும் தலைவர் பற்றி பாலச்சந்தர் பற்றிய கட்டுரையை தரவேற்றியதற்கு மிக்க நன்றி சார்)
திரு.கலிய பெருமாள் (நினைவுநாள் போஸ்டர் படங்களுக்கு நன்றி)
திரு.தெனாலிராஜன் (அருமையான கவிதை சார் )
திரு.ரவிச்சந்திரன் (நினைவு நாள் பதிவு, திருப்பூர் குடிநீர் திட்ட துவக்க விழா படங்கள் மட்டுமின்றி கோவை ராயலில் எங்க வீட்டுப் பிள்ளை தகவலுக்கும் நன்றி)
திரு.முத்தையன் அம்மு (புகைப்பட அஞ்சலிக்கு நன்றி)
திரு.வி.பி.சத்யா (ஆதிபராசக்தி ரீ மிக்ஸ் பாடல் சூப்பர்)
திரு. பிரதீப் பாலு (நினைவஞ்சலி புகைப்படங்களுக்கு நன்றி)
திரு.சிவாஜி செந்தில் (தலைவர் பாடல் காட்சி மூலம் உங்கள் அஞ்சலிக்கு நன்றி)
திரு.ரவி கிரண் சூர்யா (உங்கள் கவிதாஞ்சலி அருமை. முதல் கவிதை என்று கூறியிருக்கிறீர்கள். அது தலைவருக்கான புகழஞ்சலியாக அமைந்ததற்கு நன்றி. இன்றிலிருந்து 23வது நாளில் தலைவர் பிறந்த நாள் வருகிறது. அதற்கும் உங்களிடம் இருந்து அருமையான கவிதையை எதிர்பார்க்கிறோம்)
திரு.கேபிஆர். கோவிந்தராஜ் (எம்ஜிஆரின் நாட்டுப்பற்று என்ற அற்புதமான கட்டுரைக்கும் சிக்மகளூரில் தலைவரின் தேர்தல் பிரசார அபூர்வ படத்தையும் பதிவிட்டதற்கு நன்றி)
திரு.எம்.ஜி.ஆர். பாலாஜி (தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறோம்)
திரு.எம்.ஜி.ஆர்.பாஸ்கரன் (தாங்களும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும்)
பேஸ்புக் மூலம் பாராட்டிய திரு.சந்திரன் வீராசாமி அவர்களுக்கும் அதை பதிவிட்ட திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கும் மற்றும் தலைவருக்கு மனப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்