ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
Printable View
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
செந்தில் சார் - இந்த ஒரு பாடல் உங்கள் எண்ணிக்கை முழுவதையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்று - எதிர்காலத்தில் செந்தில் என்பவர் மதுரகான திரியில் வருவார் - திறமையில் ஒன்று , இரண்டு என்று விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் அவரும் ஒருவர் என்று எண்ணியோ, என்னவோ அன்றே நடிகர் திலகம் இந்த பாடலை உங்களுக்காக பாடி உள்ளார் .
https://youtu.be/YofxxvjzSLM
வாசு - நான்கு சுவர்கள் - பாலாவின் பாடல் - அன்றே நான்கு சுவர்களுக்குள் அடங்காமல் பட்டி தொட்டியெல்லாம் அலறிய பாடல் - நடையா ? இது நடையா என்ற பாடலைப்போல மிகவும் பிரபலமான பாடல் ... இந்த பாடல் உங்கள் வரிசையில் வரக்கூடம் என்று யூகித்தேன் - கண்ணை திறந்து பார்க்கும் முன் பதிவு செய்து விட்டீர்கள் - மிகவும் நன்றி .
எட்டு வகைத் திருமகளும் ஒட்டு மொத்தமாக அரண்மனையில் குடிபுகுந்தாஆஆஆஅர்....
மனோரமாவுக்காக பி.சுசீலா குரல் கொடுக்க ஒய்.ஜி.எம்முக்கு எஸ்.பி.பி... பாலூட்டி வளர்த்த கிளி
https://www.youtube.com/watch?v=wKBFpO1mL1A
மீண்டும் மீண்டும் விவசாயிகள் தற்கொலை என்ற ஒரே ஆயுதத்தையே உபயோகித்து வருகின்றனர் . தெலுங்கானாவில் நேற்று பல இடங்களில் தற்கொலையின் மொத்த எண்ணிக்கை பத்து - மனம் உருகியதில் உதித்த கவிதை இது ( படித்ததில் பிடித்த ஒன்று )
நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....
உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....
பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....
சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....
விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....
நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....
கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....
ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....
நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....
iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....
விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?
விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _
-உண்மை இன்று புரியாது.
https://www.youtube.com/watch?v=i7wZg2jW2ag
ஏழெட்டு பெண்கள் எந்தன் பக்கம்
ஈரெட்டு வயதினில் நிற்கும்
மான் வண்ணமென தேன் கிண்ணமென
வேறே ஏது சொர்க்கம்----பதிலுக்கு பதில்
https://youtu.be/K6BG05uMXHk
மதுண்ணா! ரவி சார்!
மாலை வணக்கம். இன்று மார்னிங் ஷிப்ட். அதான் வரமுடியல.
மது சார் , முன்பு கருக்குள் கரு பதிவுகள் போடும் போது பல பாடல்கள் சேர்த்து வைத்தேன் - அதில் பல என்னிடம் சொல்லிக்கொள்ளாமல் நெய்வேலி பக்கம் சென்று விட்டன - இன்றும் இந்த நிலைமை தொடர்கிறது - பாருங்கள் பெட்டியில் பூட்டிவைத்து , நாளை போடலாம் என்று நினைத்த பாடல் என்னிடம் " போய் வருகிறேன் " என்று ஒரு வார்த்தை கூட சொல்லிக்கொள்ளாமல் உங்களிடம் தஞ்சம் புகுந்து விட்டதே !!! நன்றி சார் - இந்த பாடலின் விளக்கம் நாளை தருகிறேன் , என் பாணியில் .....
From KalyaaNam PaNNip Paar
Yezhumalai AaNdavane VenkataramaNaa.....
http://www.youtube.com/watch?v=jnKdguYYMug
ரவி ஜி..
ஆஹா... மன்னித்து விடவும். மு.கொ. தனமாக பதிந்து விட்டேனா ? இனிமேல் கொஞ்சம் வெயிட் செய்யுறேன்... இப்போது வெயிட் செய்வது உங்கள் அழகான விளக்கத்துக்காகவும் தான்..!