Originally Posted by
vasudevan31355
ராகவேந்திரன் சார்,
கொன்னுட்டீங்க. என்ன பேனர்கள்! என்ன போஸ்! என்ன வாசகங்கள்! என்ன ஒரு வெறித்தனம்! நடிப்புக்கு நம் கடவுள் திலகம் என்றால் ரசிகர்களில் நம்மவர்கள் திலகம் அன்றோ! இரண்டு நாளாக தூக்கம் கெட்டுப் போனது. மாளிகையின் வாயிலில் வந்து மகிழ அனைவரும் ரெடி.
எங்கள் கடலூரில் நியூசினிமா திரையரங்கத்தில் வெளியாகிறது. சும்மா அதகளம் தான்.
நாளை கடலூர் முடித்துவிட்டு அப்படியே பாண்டி புறப்படுகிறோம். அடுத்தநாள் சென்னை...
சிரமேற்கொண்டு அந்தந்த ஊர்களின் அட்டகாசமான பேனர்களை உடனுக்குடன் எங்கள் உள்ளம் மகிழ பதிவு செய்யும் தங்கள் தேனீ போன்ற சுறுசுறுப்பும், உழைப்பும் வியக்க வைக்கிறது. கலக்குங்கள் சார்! நன்றி!