http://i61.tinypic.com/2vxrul4.jpg
Printable View
என்னுடைய 9000 பதிவுகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு ரவிச்சந்திரன் , திரு சுஹராம் , திரு கார்த்திக் , திரு ரூப்குமார் , திரு கலிய பெருமாள் , திரு செந்தில் , திரு ரவிகிரண்
மற்றும் அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த திரு சி.எஸ்.குமார் , திரு ரவி -ஹைதராபாத் , திரு பேராசிரியர் செல்வகுமார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள் .
ரவிசந்திரன் சார்
புலவர் புலமைபித்தன் அவர்கள் வெளியிட இருக்கும் மக்கள் திலகத்தின் புத்தக வெளியீட்டு விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் . மக்கள் திலகத்துடன் புலமை பித்தனின் நிழற் படங்கள் அருமை .
சரிகம நிறுவனத்தார் வெளியிட்டுள்ள் மக்கள் திலகத்தின் பாடல்கள் அட்டை பட தோற்றங்கள் மனதை கொள்ளை
அடிக்கிறது . தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்களின் அட்டைப்பட பதிவுகள் கண்ணுக்கு விருந்து . நன்றி திரு தெனாலி .
சத்யம் அரங்கில் நேற்று மாலை காட்சி அரங்கு நிறைந்த '' chart '' -பதிவிட்ட திரு சைலேஷ் - நன்றி சார் .
நேற்று இரவு நல்ல நேரம் படம் பார்த்த பொழுது நான் ரசித்த சில காட்சிகள் .
அறிமுக காட்சியில் எம்ஜிஆரின் ஓட்டமும் , யானைகளுடன் கால்பந்து விளயாடும் அழகே அழகு .
கே.ஆர் .விஜயாவுடன் செய்யும் கிண்டல் - மற்றும் பாடல் காட்சிகள் .
தேங்காய் ஸ்ரீனிவாசன் மக்கள் திலகத்தை பார்த்து ''இது அங்கமா இல்லை தங்கமா '' என்று கூறுமிடம் .அந்த இடத்தில எம்ஜிஆரின் ஸ்டைல் சூப்பர் .
யானையை விலை பேச வரும் மேஜரிடம் எம்ஜிஆர் பேசும் உணர்சிகரமான காட்சி .
பெண் பார்க்க போகும் முன் கண்ணாடி முன் நின்று பேசும் ஒத்திகை காட்சி
அசோகனிடம் எம்ஜிஆர் பெண் பார்க்கும் இடத்தில திணறும் காட்சி .
புதுமையான முறையில் படமாக்கப்பட்ட நீ தொட்டால் ...ஊஞ்சல் பாடல் .
ஓடி ஓடி உழைக்கணும் - எம்ஜிஆரின் இளமை தோற்றம் - சுறுசுறுப்பான நடனம் - சூப்பர்.
ஜாஸ்டினுடன் மோதும் சண்டை காட்சி .
http://i57.tinypic.com/2ikusl4.jpg
யானைகளிடம் மக்கள் திலகம் காட்டும் பரிவு காட்சி - யானை இறந்த பின் நடித்த சோக காட்சி .
மொத்தத்தில் மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் படம் முழுவதும் அருமையாக இருந்தது .