இனிய நண்பர் திரு குமார் சார்
நீரும் நெருப்பும் - நல்ல நேரம் படத்தை பற்றிய தங்களின் இரத்தின சுருக்க பதிவுகள் அருமை . எனக்கும் நீரும் நெருப்பும் படம் மிகவும் பிடிக்கும் . 1971 சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் முதல் நாள் முதல் சிறப்பு காட்சி ரசிகர்களோடு ரசிகர்களாக மக்கள் திலகத்துடன் பார்த்து மகிழ்ந்த அனுபவம் என்னுடைய வாழ் நாளில் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன் .
நாளைய முரசு தொலைகாட்சியின் படமான நவரத்தினம் - தகவலுக்கு நன்றி .

