http://i60.tinypic.com/hx7iu9.jpg
Printable View
நம் மக்கள் திலகம் அவர்கள் துவக்கிய அ.இ.அ.தி.மு.க. வில் இணைந்த முதல் நாடாளுமன்ற உறுபினராக எஸ். டி. எஸ். என்கின்ற எஸ். டி. சோமசுந்தரம் அவர்கள் திகழ்ந்தாலும், பின்னர் நம் இதய தெய்வத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் "நமது கழகம்" என்ற தனிக்கட்சி கண்டு, சட்டமன்ற பொது தேர்தலில், தனது சொந்த தொகுதியான பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு, புரட்சித்தலைவரின் வேட்பாளர் திரு. பி. என். ராமசந்திரன் அவர்களிடம் டெபாசிட் தொகையை பறிகொடுத்த சம்பவம் வருந்ததக்கது. நமது கழகம் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்கள் டெபாசிட் தொகையை பறிகொடுத்தனர். எஸ். டி. எஸ். அவர்கள் பிரிந்து போனதற்கு மிகவும் கவலை கொண்டார் நம் பொன்மனச்செம்மல். எஸ். டி. எஸ். அவர்கள், மக்கள் ஆதரவின்றி தேர்தலில் தோற்று தனது பலவீனத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அவரை மீண்டும் கட்சியில் சேருமாறு அழைத்தவர்தான் நம் மாண்புகள் கொண்ட மன்னவர்.
இதற்கு முன்னர், இதே போன்று, கோவை செழியனும், புலவர் இந்திரகுமாரி, ஜி .ஆர். எட்மன்ட், ஜி. விஸ்வநாதன், முதலானோருடன், தனிக்கட்சி ஆரம்பித்தனர். ஆனால், இவர்கள் தேர்தலை எதிர் நோக்காமலேயே, நம் மக்கள் திலகத்தின் மாண்புகளை உணர்ந்து, வருந்தி, மீண்டும் நம் புரட்சித்தலைவர் அவர்களிடம் அடைக்கலமாயினர்.
இந்த சமயத்தில், இதனை மேற்கோள் காட்டி கூற வேண்டிய அவசியம் என்னவென்றால், நமது எழில் வேந்தன் டாக்டர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் அவர்கள், அ.இ.அ. தி. மு. க. வில் ஒரு தொண்டனையும் இழக்க விரும்பாதவர். Ego மற்றும் கவுரவம் பார்க்காதவர்.
காலத்தை வென்ற காவிய நாயகன் எம். ஜி. ஆர். அவர்களுடன் எஸ். டி. எஸ். இருக்கும், அரிய பதிவுகளை வழங்கிய அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி !
1974ல் கோவை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று, தமிழக சட்டமன்றத்தில், நம் மன்னவன் கண்ட அ. இ. அ. தி. மு. க. சார்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுபினர் என்ற பெருமையை பெற்றவர் திரு. சி. அரங்கநாயகம் (முன்னாள் கல்வி அமைச்சர்) அவர்கள்.
அதே போன்று, அந்த வருடத்தில் நடைபெற்ற புதுவை சட்டமன்ற தேர்தலில், நம் புரட்சித்தலைவரின் அ. இ. அ. தி. மு.க. ஆட்சியை பிடித்து, திரு. ராமசாமி அவர்கள் தலைமையில் மந்திரிசபை அமைத்தது.
1974 பிபரவரி மாத நிகழ்வுகளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி திரு. வினோத் அவர்களே !
சற்றும் சளைக்காமல், 'தின இதழ்', 'கலைமகள்', 'அந்தி மழை' ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமான நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். பற்றிய செய்திகளை பதிவிட்டு வரும் திரு. லோகநாதன் அவர்களுக்கும்,
பேரறிஞர் அண்ணா நினைவு நாளினையொட்டி, பதிவுகள் வழங்கிய திருவாளர்கள் - புதுவை கலியபெருமாள், கலைவேந்தன், சத்யா, திருப்பூர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரியின் அனைத்து பதிவாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள் கலந்த நன்றி !
கர்நாடக மாநிலம், பெங்களூர் நகரில் நேற்றைய தினம் "அண்ணா நினைவு நாள்" அனுஷ்டிக்கப்பட்டு, அது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்ட வரதகுமார் சுந்தராமன் எனப்படும் திரு. சி. எஸ். குமார் அவர்களுக்கும் நன்றி !
திரு.செல்வகுமார் சார். நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. தலைவர் யாரையும் தானாக ஒதுக்கியதில்லை. அவர்களது நடவடிக்கைகளே காரணம். வெளிப்படையாக பார்த்தால் தலைவர் ஒதுக்கியது போலத் தெரியும். அதற்கான காரணத்தை, அவர்களது தவறையும் தலைவர் கூற மாட்டார். ஆனால், யாரையும் இழக்க விரும்பாதவர் தலைவர்.
ஒருமுறை முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். புதுக்கோட்டையில் கழகத்தை சேர்ந்த 2 பேர் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டனர். இதை அறிந்து தலைவர் திருநாவுக்கரசரிடம் (அப்போது அவர் திருநாவுக்கரசு) விசாரித்துள்ளார். உள்ளூர் பிரச்னைகள் காரணமாக அவர்கள் விலகியதாகவும் அதனால், கட்சிக்கு பாதிப்பில்லை என்றும் தலைவரிடம் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இருந்தாலும் சமாதானமடையாமல் அவர்கள் மீண்டும் கட்சிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கச் சொல்லி அவர்கள் கட்சியில் மீண்டும் இணைந்த பிறகே தலைவர் திருப்தியடைந்திருக்கிறார். இப்படி ஒரு தொண்டனைக் கூட இழக்க விரும்பாதவர்...
‘அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை’
என்று பாடிய நம் தலைவர். நன்றி
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
புதுவைத் தேர்தல்
1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் பாண்டிச்சேரியிலும், தமிழகத்தில் கோவையிலும் இடைத்தேர்தல்கள் நடக்கவிருந்தன.
அரசியல் கட்சிகள் புதிய அணிகளாகப்பிரிந்து தத்தமது வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் முனைந்து நின்றன. திண்டுக்கல் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸிலும், இந்திரா காங்கிரஸிலும் மறு சிந்தனை ஏற்பட்டது. தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க. வளருவதை இரு காங்கிரஸ் கட்சிகளுமே விரும்பவில்லை. அதனால் பிரதமர் இந்திராகாந்தியின் சார்பில் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியமும், மரகதம் சந்திரசேகரும் காமராஜரைச் சந்தித்துப் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வந்தார்கள்.
பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் ஸ்தாபன காங்கிரஸ் 16 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 14 இடங்களிலும், பாண்டி நாடாளுமன்றத் தொகுதியில் இந்திரா காங்கிரஸ் போட்டியிடுவதென்றும், கோவை பாராளுமன்றத் தொகுதியிலும், கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதியிலும் ஸ்தாபன காங்கிரஸ் போட்டியிடுவதென்றும் முடிவு செய்தார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியில் அதுவரை இருந்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, கோவை பாராளுமன்றத் தொகுதி விஷயமாக ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தனியாகப் போட்டியிட்டது.
அ.தி.மு.க.வும் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்கட்சியும் கூட்டணி அமைத்துக்கொண்டு போட்டியிட்டன. அதன்படி பாண்டி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகள் கோவை மேற்குச் சட்டமன்றத் தொகுதி ஆகியவை அ.தி.மு.க.வுக்கும்; இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியையும், பாண்டி சட்டமன்றத் தொகுதிகள் ஏழையும் விட்டுக்கொடுப்பதென்றும்; மற்றொரு கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சிக்குப் பாண்டி சட்டமன்றத் தொகுதி ஒன்றை விட்டுக் கொடுப்பதென்றும் முடிவாயிற்று!.
தி.மு.க. பாண்டி சட்டமன்றத் தொகுதிகள் 20லும், கோவை சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டது. புதுவை சட்டமன்றத் தொகுதிகள் ஐந்திலும், கோவை நாடாளுமன்றத் தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்டது.
தொண்டர்களே துணை!
திண்டுக்கல் தேர்தலைப் போலவே, இந்தத் தேர்தலிலும் அண்ண தி.மு.க. கூட்டணி மத்திய, மாநில ஆளுங்கட்சிகளையும், அவற்றின் கூட்டணிக் கட்சிகளையும் எதிர்த்துப் போட்டியிட்டது. புதிதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருந்தது. திண்டுக்கல்லில் தனித்தனியாகப் போட்டியிட்ட இரு காங்கிரஸ் கட்சிகளும் சேர்ந்து ஒரே அணியாய் போட்டியிட்டன. பிரதமர் இந்திரா காந்தியும், பெருந்தலைவர் காமராஜரும் பாண்டியிலும், காரைக்கால் மற்றும் கோவையிலும் ஒரே மேடையில் சேர்ந்து பேசினார்கள். மத்திய,மாநில அமைச்சர்கள் பெருமளவில் முகாமிட்டுப் பிராசாரமும் செய்தனர்.
ஆனால், புரட்சித் தலைவர் அவர்கள் ஏழைத் தொண்டர்களின் துணையையும், மக்களின் ஆதவையும் மட்டுமே நம்பி களத்தில் குதித்தார். பாண்டியிலும் கோவையிலும் ஒரு தொகுதியைக்கூட விட்டு விடாமல் எல்லா இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்தார்.
1974 – ஆம் ஆண்டு பிப்ரவரி 24 – ஆம் தேதியன்று புதுவையிலும் கோவையிலும் வாக்குப் பதிவு நடந்தது. 26 ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
கோவை பாராளுமன்றத் தொகுதியில் அண்ணா தி.மு.க. கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பார்வதி கிருஷ்ணனும், கோவை மேற்குச் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். அரங்கநாயகமும் வெற்றி பெற்றனர்.
புதுவை பாராளுமன்றத் தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பாலாபழனூர் வெற்றிப் பெற்றார். புதுவை சட்ட மன்றத் தொகுதிகளில் அண்ணா தி.மு.க. 12 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதியிலும் வெற்றி பெற்றன. அண்ணா தி.மு.க. கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் காமிசெட்டி ஏனாம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இரு காங்கிரஸ் கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்டபோதிலும், அவ்விரண்டும் சேர்ந்து 12 தொகுதிகளில்தான் வெற்றிப்பெற்றன. அதற்கு முன்னர் புதுவைச் சட்டமன்றத்தில் கூட்டணி ஆட்சி நடத்திக்கொண்டிருந்த தி.மு.க.வும் (2 ஆவது இடம்) மார்க்சிஸ்ட் கட்சியும் (முதலிடம்) சேர்ந்து மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
புரட்சித்தலைவரின் அண்ணா தி.மு.க. தன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு புதுவையில் ஆட்சியில் அமர்ந்து, திண்டுக்கல் தேர்தலில் 6 மாதக் குழந்தையாக இருந்த அ.தி.மு.க. புதுவைத் தேர்லின்போது ஒன்றரை வயதுக் குழந்தையாகத்தான் இருந்தது. என்றாலும், மாநில ஆட்சியைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
கவர்ச்சியா; அனுதாபமா, அரசியலா?
திண்டுக்கல் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றி வெறும் சினிமாக் கவர்ச்சியாலும், எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு ஏற்பட்ட திடீர் அனுதாபத்தாலும் கிட்டிய தற்காலிக வெற்றி என்று அரசியல் வித்தகர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால் அவர்கள் புதுவை, கோவைத் தேர்தல் வெற்றிகளுக்கு என்ன காரணம் கூறுவது என்று அறியாமல் திகைத்தனர்.
திண்டுக்கல் தேர்தல் வெற்றி, புதுவைத் தேர்தலுக்குக் கட்டியம் கூறிய முன்னோடி வெற்றியாகும். புதுவைத் தேர்தல் வெற்றி, தமிழகத்தில் புரட்சித்தலைவர் படைக்கவிருக்கும் புதிய சரித்திரச் சாதனைக்குக்கட்டியம் கூறும் வெற்றியாகும் என்பதை அப்பொழுதும் பலர் புரிந்து கொள்ளவில்லை!
1974 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதியன்று புதுவையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அரசு முதன் முதலில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. புரட்சித்தலைவரின் ஆசியோடு எஸ்.ராமசாமி புதுவை மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார்!
நாடும் ஏடும் பாராட்டின!
புதுவை – கோவைத் தேர்தல்களில் புரட்சித்தலைவரின் அ.தி.மு.க. பெற்ற மகத்தான வெற்றிகளைத் தமிழக மக்கள் மட்டுமன்றி அகில இந்திய மக்களும் வியந்து பாராட்டினார்கள். அகில இந்தியப் பத்திரிகைகளெல்லாம் புரட்சித்தலைவரின் அரசியல் சாதனையைப் போட்டியிட்டுக் கொண்டு பாராட்டின. அவற்றுள் சில வருமாறு!
தற்காலிக வெற்றியல்ல!
”திண்டுக்கல்லில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி, ஏதோ எதிர்பாராத விதமாய்ப் பெற்ற தற்காலிக வெற்றி அல்ல என்பது புதுவையில் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இந்தத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான எம்.ஜி.ஆர். தாம் ஒரு மகத்தான மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர் என்பதைத் தம் கட்சிக்குப்பெருமளவில் வாக்குகளைத் திரட்டியதன்மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டார்!”
- இந்து நாளேடு
சாதாரணமாக எண்ணிவிட முடியாது!
”தேர்தலுக்கு முன்பு அரசியல் களத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வலுவான ஓர் அரசியல் சக்தியாகக் கருதப்படவில்லை, ஆனால், இனிமேல் அண்ணா தி.மு.கழகத்தைப் பற்றி யாரும் அவ்வளவு சாதாரணமாக எண்ணிவிட முடியாது!”
- இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு
பெருமிதப்படும் வெற்றி
”இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் பெருமிதம் கொள்ளலாம். மக்கள் ஆதரவு தனக்கே என்று அக்கட்சி கூறிக் கொண்டு வந்த கருத்து ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டு விட்டது என அது பெருமைப்படலாம். – இது அனைவரின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியதாகும் என்பதில் சந்தேகம் இல்லை!”
- ‘மெயில்’ நாளேடு
உறுதிப்படுத்துகிறது!
‘திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது மக்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சில மாதங்களுக்கு முன்னர்த் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி தெளிவுபடுத்தியது.
இப்பொழுது புதுவை, கோவை நாடாளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தோல்வியடைந்திருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது!”
- டைம்ஸ் ஆப் இந்தியா
தேசிய விளைவுகள்
”புதுவை மாநிலத் தேர்தல் முடிவு பிராந்திய ரீதியில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கூட குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் ஆதரவு உறுதியாக உள்ளது என்பதைத்தான் கோவை நாடாளுமன்றத் தேர்தலும் உறுதிப்படுத்துகின்றது!”
- இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு
மகத்தான வெற்றி
”புதுவைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணி பெற்றுள்ள வெற்றி உண்மையிலேயே மகத்தானதாகும். மக்கள் சக்தி எந்தப் பக்கம் சாய்கிறது என்பதை ஆளுங்கட்சிக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துவது ஆகும்!”
-ஸ்டேட்ஸ்மேன்’ நாளேடு
நல்ல சக்தி – புதிய தொடக்கம்!
”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தி.மு.க. வின் இறுதிக் கால கட்டத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய தொரு தொடக்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தமிழ்நாட்டில் அடுத்து வரும் சட்டமன்றத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நல்லதோர் அரசியல் சக்தியாகத் திகழும் என்பது இதிலிருந்து தெளிவாகப்புரிகிறது!”
- ‘பேட்ரியட்’ நாளேடு
நிலைத்து நிற்கும்!
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஒருமாபெரும் அரசியல் கட்சி, தமிழகத்தில் சக்தி மிக்க அரசியல் கட்சி என்பதை அனைவரும் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.
அண்ணா தி.மு.க. அடைந்துள்ள முன்னேற்றம், கண்டுள்ள விரைவான வளர்ச்சி, அது ஈட்டியுள்ள வெற்றிகள் ஆகியனவெல்லாம் ஏதோ திடீரென்று கிட்டியவை என்று இனியும் கருத முடியாது. அதன் நிலையான தன்மையைப் புறக்கணித்து விடவும் முடியாது!”
-டெக்கான் ஹெரால்டு’ நாளேடு
புதுவை காட்டும் உண்மை!
”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்தில் தி.மு.க.வின் மீதுள்ள லஞ்ச ஊழல் குற்றச் சாட்டுக்களைக்கூறிப் பிரச்சாரம் செய்தது. அண்ணா தி.மு.க. மக்களிடம் பிடிப்பும் அபிமானமும் கொண்ட கட்சியாக விளங்குகிறது.
புதுவை மாநிலத் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. வின் மீது மக்கள் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தங்கள் அதிருப்தியையும் கோபத்தையும் காட்டியிருக்கிறார்கள் என்பதே புதுவை தேர்தலை முடிவுகள் காட்டும் உண்மையாகும்.!”
- நேஷனல் ஹெரால்ட்’ நாளேடு
இவ்வாறு சென்னை, பெங்களூர், பம்பாய், டில்லி, கல்கத்தா, லக்னோ முதலிய நகரங்களிலிருந்து வெளிவரும் பெரிய தேசிய நாளேடுகளெல்லாம் சரித்திர நாயகன் எம்.ஜி.ஆரின் சாதனையை பாராட்டி வாழ்த்தின. ஆனால் அவரோ அப்பொழுதும் அமைதியாகவே இருந்தார். அடுத்த பணிகளிலேயே கவனத்தைச் செலுத்தினார்.
சாதனைகள்
போராட்டமே வாழ்க்கை
முதல் போராட்டம்
புதிய கட்சி உதயம்
சட்டசபைப் புரட்சி
புரட்சிப்பூமியில் எம்.ஜி.ஆர்
புதுவைத் தேர்தல்
மொரீஷியஸ் தீவின் அழைப்பு
கழகப் பெயர் மாற்றம்
புதிய கூட்டணி உதயம்
முதல்வர் பதவி
தமிழுக்குச் சிறப்பு
Courtesy Net
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மொரீஷியஸ் தீவின் அழைப்பு
பாண்டி-கோவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் கட்சிப் பணிகளிலும், கலைத்துறைப்பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
மொரீஷியஸ் தீவு இந்துமகா சமுத்திரத்தில் பசிபிக் கடலும் அரபிக்கடலும் சேரும் இடத்தில் ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ளது. சென்னை நகரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்தத் தீவு நாடு சுமார் 6 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. அங்கு 4 இலட்சம் பேர் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவுக்குத் தமிழர்களும் இருக்கின்றனர். சுதந்திரக்குடியரசு நாடான மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக ராம்கூலம் என்னும் இந்திய வமிசா வழியைச் சேர்ந்தவரே இருந்து கொண்டிருந்தார். மொரீஷியஸிலுள்ள 12 அமைச்சர்களுள் ஏ. செட்டியார் என்னும் தமிழரும் ஒருவர்.
அரசுப் பொறுப்பில் இல்லாதவருக்கு அழைப்பு
ஏ.செட்டியார் புரட்சித் தலைவரின் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். புரட்சித் தலைவரை மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தின விழா விசேஷ விருந்தினராக அழைத்துச் சென்று உபசரித்து அனுப்ப வேண்டுமென்பது அவர் விருப்பம்; பிரதமர் ராம்கூலமும் அதை ஏற்று, அதிகாரப் பூர்வமாக அழைப்பு விடுத்தார். அழைப்புக்கடிதத்தை எடுத்துக் கொண்டு 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் அமைச்சர் ஏ.செட்டியார் சென்னைக்கு வந்து புரட்சித் தலைவரிடம் அழைப்பைக்கொடுத்து அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தினார். புரட்சித் தலைவரும் அன்பழைப்பை ஏற்றுக் கொண்டார்.
எந்த ஓர் அரசுப் பொறுப்பிலும் இல்லாத புரட்சித் தலைவரை ஒரு குடியரசு நாட்டின் பிரதமர் தம் நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததும், அந்த அழைப்பை எடுத்துக்கொண்டு ஓர் அமைச்சரே நேரில் வந்து கொடுத்ததும் மிகவும் வியப்புக்குரிய செய்தியாகும்.
புரட்சித் தலைவரின் புகழ் கடல் கடந்த நாடுகளில்கூட எந்த அளவு பரவியிருக்கிறது என்பதையே அந்த அழைப்பு சுட்டிக் காட்டியது.
அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு 1974 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் புரட்சித்தலைவர் மொரீஷியஸ் நாட்டுக்குப் புறப்பட்டார்.
மார்ச் 15 ஆம் தேதியன்று மொரீஷியஸ் நாட்டின் குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட அயல் நாட்டு விருந்தினர்கள் மிகச் சிலருள் புரட்சித் தலைவரும் ஒருவர்;அவருக்கு மொரீஷியஸ் பிரதமர் ராம்கூலம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து, தம் அருகிலேயே அமரவைத்துக் கொண்டார்; சகல அரசு மரியாதைகளையும் அளித்துக் கௌரவித்தார்!
குடியரசு தின விழா முடிந்ததும் பிரதமர் அளித்த விருந்திலும் புரட்சித்தலைவர் கலந்துகொண்டார்.
மறுநாள் அந்த நாட்டின் ஒரே துறைமுக நகரான ‘போர்ட்லூயி’க்குச் சென்ற புரட்சித் தலைவர். அங்கு கரும்பாலைகளில் பணியாற்றும் தமிழர்கள் வாழும் பகுதிக்குச் சென்றார். தமிழ் நாட்டின் தானைத் தலைவரைத் தமிழர்கள் பேரார்வத்தோடு வரவேற்று உபசரித்தனர்.
மக்களின் மனங்கவர்ந்தவர்!
புரட்சித் தலைவர், அவர்களுடைய தொழில் நிலவரம், குடும்ப நிலவரம், வாழ்க்கை முதலியவற்றை மிகுந்த அக்கறையோடு விசாரித்தார். அதனால், இவருக்குத்தான் நம் மீது எவ்வளவு அன்பு! என்று மொரீஷியஸ் தமிழர்கள் மனம் நெகிழ்ந்தார்கள்.
ஒரே ஒரு நகரசபை, ஒரே ஒரு துறைமுகம். ஒரே ஒரு விவசாயக் கல்லூரி, ஒரே ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, 2 ஏரிகள், 3 வங்கிகள், 8 நாளேடுகள், 56 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றம், தெற்கு வடக்காக சுமார் 60 கிலோமீட்டர், கிழக்கு மேற்காக சுமார் 40 கிலோ மீட்டர் எனப் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஆகியவற்றை மட்டுமே கொண்ட அந்தச் சின்னஞ்சிறு நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புரட்சித் தலைவருக்கு அதிக நாள்கள் ஆகவில்லை.
கடல் நடுவே பச்சைக் கம்பளத்தை விரித்தாற்போன்று அமைந்திருந்த அந்த அழகிய தீவையும், அந்தத் தீவு மக்கள் தம்மீது காட்டிய அன்பையும் புரட்சித்தலைவரால் மறக்கவே முடியவில்லை.
மொரீஷியஸ் தீவின் பாரம்பரிய மொழியின் பெயர் ‘கிரியோல்’ என்பதாகும். அந்த மொழியில் பாடப்பட்ட ஒரு நாட்டுப் பாடல் புரட்சித் தலைவரை மிகவும் கவர்ந்தது. அந்த நாட்டின் அழகையும், அதன் மீது அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள அன்பையும் விளக்கும் அந்தப் பாடல் வருமாறு;
”லில மொரிரீஸ் மோ ஜொலி பெய்
மோ பா பு ட்ரூவே என் பிளி ஜொலி
சி ஜாமே மோ கித் துவம்மூவாலே
ப ஜோதி ப தாமே முவா ரெட் வனே”
இதன் பொருள்; ”மொரிஷியஸ் மிக அழகான தீவு; இதைவிட அழகான தீவை உலகில் வேறெங்கும் காண முடியாது. இந்தத் தீவை விட்டு நான் ஒருபோதும் அகல மாட்டேன். அப்படியே அகன்றாலும், அகிலம் முழுவதும் சென்றாலும் என்றேனும் ஒருநாள் மீண்டும் இங்கேயேதான் திரும்பி வருவேன்!”
இவ்வளவு தேசபக்தியுள்ள மொரீஷியஸ் நாட்டு மக்களிடமிருந்து பிரியா விடைப்பெற்றுக்கொண்டு 1974 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் பாரிஸ் நகருக்குச் சென்றுவிட்டுத் தாயகம் திரும்பினார், புரட்சித்தலைவர்.
Courtesy Net
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்