-
http://i59.tinypic.com/rjjyvl.jpg
வழக்கமாக கலகலப்பாக பேசியபடி வரும் அவர், அன்று எதையோ தீவிரமாக யோசித்தபடி மவுனமாக இருந்தார். திரைப்பட அரங்கின் வாசலிலேயே மாணவர்கள் ஒன்று திரண்டு கோலாகலமாக அவரை வரவேற்றார்கள்.ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது . எதிர்பார்த்ததற்கும் மேலான வசூல் .
http://i57.tinypic.com/35b8nfd.jpg
-
-
-
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல் முதலாக 1967 தேர்தலில் போட்டியிட்ட பரங்கிமலை
1967 சட்ட சபை தேர்தல் முடிந்து ஒட்டு எண்ணிக்கை நடந்த நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர்
வெற்றி பெறுவாரா? அல்லது தோல்வியை தழுவுவாரா? என்ற விவாதம் தொடங்கியது .மருத்துவமனையில் இருந்து சிகிச்ச்சை பெற்று வரும் புரட்சி நடிகர் எம்ஜிஆர் மீண்டும் பழைய குரலுடன் வருவாரா? அல்லது திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாரா ? என்ற கேள்விகளுடன்
பல கட்சி பிரமுகர்களும் , திரைப்பட ரசிகர்களும் தங்களுடைய வாதங்களை கூறி கொண்டு வந்தார்கள் .
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே இருந்த டீ கடையில் , பல இடங்களில் இருந்த திமுக மன்றங்களில் ,ரசிகர்களும் , மக்களும் குழுமியிருந்தார்கள் .அன்றைய காலத்தில் வானொலியில்
மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது .ஒட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்ற செய்தி கிடைத்தவுடன் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களும் பொது மக்களும் ஆரவாரத்துடன் தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள் .
பிற்பகல் 12 மணி அளவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பரங்கிமலை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதியை விட 3000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார் என்ற செய்தி வானொலியில் வந்தவுடன் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை .பட்டாசுகள் வெடித்தும் , இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள் .பின்னர் ஒட்டு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றிலும் மக்கள் திலகத்தின் வாக்குகள் வித்தியாசம் முன்னேறி கொண்டே வந்தது .இரவு 10 மணியளவில் மக்கள் திலகம் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தை கடந்து முன்னேறி கொண்டு வந்தார் . நள்ளிரவில் அதிகார பூர்வமாக தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (27,674) மக்கள் திலகம் எம்ஜிஆர் வெற்றி என்ற செய்தியினை கேட்டதும் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை மறக்க முடியாத நாள் ..என்னை போன்றே தமிழகமெங்கும் இருந்த எம்ஜிஆர் ரசிகர்கள் மக்கள் திலகத்தின் வெற்றியை குதூகலத்துடன் கொண்டாடினார்கள் .
-
1967 தேர்தல் முடிவுகள் வெளிவந்து திமுக தலைவர் பேரறிஞர் அண்ணாவின் அரசு அமைந்த நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மருத்துவமனையில் வெற்றி வீரராக சட்ட மன்ற உறுப்பினாராகஇருந்தார் . தாய்க்கு தலைமகன் படம் தமிழகமெங்கும் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்தது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் பூர்ண குணமடைந்த பின்னர் அரசகட்டளை , காவல்காரன் படங்களில் நடித்தார் .1966ல் தயாரிப்பில் இருந்த ஒரு தாய் மக்கள் , புதிய பூமி , குடியிருந்த கோயில் , குமரிகோட்டம் , ரகசிய போலீஸ் 115,அடிமைப்பெண் ,அன்னமிடகை படங்களின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது .மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு தொடர்ந்து விருந்து படைக்க மக்கள் திலகம்
தயாரானார் .
-
நமது கழகத்திற்கு அதிமுக என்ற பெயரை
வைத்தவர் யார் தெரியுமா?
அனகாபுத்தூர் ராமலிங்கம் ...
1969 இல் பேரறிஞர் அண்ணாவின்
மறைவுக்குப்பின் நாவலர்
நெடுஞ்செலியன்தான்
திராவிட முன்னேற்றக் கழகதிற்கு தலைமை
வகித்திருக்க வேண்டும்.. ஆனால்
கருணாநிதி
புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின்
காலில்
விழுந்து கெஞ்சியதால் புரட்சி தலைவர்
எம்ஜியார்
அவர்களுக்கு இருந்த கட்சியின்
செல்வாக்கால்
கருணாநிதி திமுக தலைவராகவும்
தமிழ்நாட்டின்
முதல்வராகவும் ஆனார்.
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதுதான்
கருணாநிதிக்கு கைவந்த கலையாயிற்றே ...
கட்சியை தன் குடும்ப சொத்தாக மாற்ற
முயன்ற
கருணாநிதிக்கு புரட்சி தலைவர் எம்ஜியார்
முட்டுக்கட்டை போட்டார் .. அதன்
விளைவு
கட்சியின் பொருளாளராக இருந்த புரட்சி
தலைவர்
எம்.ஜி.ஆர். 1972 இல் கட்சியிலிருந்து
நீக்கப்பட்டார்.
புதிய கட்சி தொடங்க புரட்சி தலைவர்
எம்ஜியார்
விரும்பவில்லை .. அரசியலை விட்டு
விலகியிருந்து திரைப்படங்களில்
நடிப்பதையே
விரும்பினார் .. ஆனால் ரசிகர்கள் அவரை
விடவில்லை .. பேரறிஞர் அண்ணாவின்
கட்சியை
கொடியவர்களிடம் இருந்து மீட்டு மக்களை
காக்கும் வல்லமை புரட்சி தலைவர்
எம்ஜியார்
அவர்களுக்கு மட்டுமே உண்டு என
பெரும்பாலான திமுக தொண்டர்களும்
மற்றும்
ரசிகர்களும் புரட்சி தலைவர் எம்ஜியார்
பின்னே
அணி திரண்டனர் ..
புரட்சி தலைவர் எம்ஜியார் அரசியல் கட்சி
பெயர்
அறிவிக்கும் முன்னே அனகாபுத்தூர்
ராமலிங்கம்
என்ற ஒரு ரசிகர் "அதிமுக" என்ற பெயரில்
கட்சி
எம்ஜியாரால் தொடங்கப்பட்டுள்ளதாக
பதிவும்
செய்துவிட்டார் ..
இதையறிந்த எம்.ஜி.ஆர் அப்போது
அனகாபுத்தூர்
ராமலிங்கம் என்ற ‘ஒரு சாதாரணத்
தொண்டன்
தொடங்கிய கட்சியில் என்னை நான்
மகிழ்ச்சியோடு இணைத்து கொள்கிறேன்"
என
அறிவித்தார் ...
பிற்காலத்தில் ராமலிங்கத்துக்கு மேல்சபை
உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும்
அளித்தும்
கவுரவித்தார்...
இப்படி நாட்டு மக்கள் எண்ணம் எதுவோ
அதையே
தன் வண்ணமாக கொண்டு வாழ்ந்து மக்கள்
மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தான் நம்
பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர்
எம்ஜியார்
அவர்கள்...
கருணாநிதி போல் தன் வீட்டு மக்களுக்காக
பல
வண்ணம் கொண்ட பகல்வேஷ
வேடதாரியாய்
புரட்சிதலைவர் எம்ஜியார் வாழ்ந்ததே
இல்லை ...
அதனால்தானே கவியரசு கண்ணதாசன்
அன்றே சொன்னார்...
எம்ஜியார் ஒரு மணக்கும் சந்தனம் .
கருணாநிதி ஒரு நாற்றமடிக்கும் சாக்கடை
என்று !!!!
courtesy net
-
-
-