Thank you Saradhaa for the beautiful updates
Printable View
Thank you Saradhaa for the beautiful updates
'அரசியின் கணவர் ஜஸ்டிஸ் கார்த்திகேயன் சுட்டுக்கொலை'
என்னென்னமோ நடந்து விட்டது. அரசியை சந்தித்துப்பேசியபின்னர், விஸ்வநாதன், அரசியின் கணவர் கார்த்திகேயனுக்கு போன் செய்து தனியிடத்துக்கு வரவழைத்துப் பேசுகிறார். விஸ்வநாதன் யாரென்றே தெரியாத கார்த்திகேயன், அவரை சந்தித்தபோது அரசி பற்றி அவருக்கே தெரியாத பல விஷயங்களை விஸ்வநாதன் சொல்கிறார். அதிர்ச்சியிலிருக்கும் கார்த்திகேயனுக்கு, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக தனது பிரம்மாஸ்திரமான 'செல்வியின் அப்பா நான்தான்' என்ற குண்டை தூக்கிப்போட்டு அவரை நிலைகுலைய வைக்கிறார். அதிர்ச்சியில் வீடு திரும்பும் ஜஸ்டிஸ், வீட்டில் யாருடனும் பேசவிரும்பவில்லை.
மனைவியைத் தனியாக அழைத்துச்செல்லும் அவர் விவரம் கேட்பதற்குள், அரசி முந்திக்கொண்டு தனது நிலையைச்சொல்லி, யாருடைய யோசனையையும் கேட்காமல் நான் நடந்ததுதான் நடந்த அனைத்துக்கும் காரணம் என்று கூறி பாவ மன்னிப்பு கேட்கும் விதமாக உருகி பேச அதில் கரைந்து போன கார்த்திகேயன், தான் விளக்கம் கேட்க அது நேரமல்ல என்று உணர்கிறார்.
ஜி.ஜே.யை தன் இடத்திற்கு வரவழைக்கும் விஸ்வநாதன் (இவர் தலைமறைவாக அல்லவா இருந்தார்?. பின் எப்படி?), ஜி.ஜே.யின் கடந்தகால புரட்டுக்களையும் தவறுகளையும் புட்டு புட்டு வைக்க, ஜி.ஜே.அதிர்ந்து போகிறார். இவரிடமும் ஒரு பிரம்மாஸ்திரமாக, நல்லதம்பியை அவரிடம் அனுப்பியதே தான்தான் என்ற குண்டை வீசி நிலைகுலைய அடிக்கிறார். இனி தன்னோடு சேர்ந்து தனக்கு விசுவாசமாக நடந்தால் அவரது குறுக்கு வழி முன்னேற்றத்துக்கு தான் கியாரண்டி என்று விஸ்வநாதன் உறுதியளிக்கிறார்.
அரசியின் கணவர் கார்த்திகேயனைக் கொன்றுவிடவேண்டும் என்று தீவிரமாக இருக்கும் சிங்கபெருமாள், அந்தப்பழி அரசியின் மீதே விழும் வண்ணம் அரசியின் துப்பாக்கியையே திருடி (??????????????) அதைக்கொண்டு அரசியின் கணவர் ஜஸ்டிஸ் கார்த்திகேயனை தன் ஆள் மூலம் கடற்கரையில் சுட்டுக்கொன்று விடுகிறார். (அரசியின் பிடிவாதம் மற்றும் திமிரினால் உண்டான முதல் பலி. சிங்கபெருமாள் மகனை கலை கொன்றது யாருக்கும் தெரியாது. பார்த்த இருவரும்கூட அதை மறைக்க தயாராக இருந்தனர். ஆனால் வலிய வந்து தன் மகள்தான் கொன்றாள் என்று பிரகடனப்படுத்தி, சிங்கபெருமாளுக்கு தெரிய வைத்து கலையரசியை பைத்தியமாக்கி, இப்போது கணவரையும் கொன்று விட்டார்).
கொலையைக்கண்டுபிடித்த லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரசி வீட்டில், டி.ஜி.பி.செந்தமிழரசியைக் கைது செய்ய வருகிறார். அத்துடன் துப்பாக்கியையும் கேட்க, அதை எடுத்து வர அரசி உள்ளே போகிறார். (அது அங்கே இருந்தால்தானே).
Thanks you Saradhaa for the turning point update.
keep up
I guess Selvi will come to the rescue and prove her mother innocent.
Saradhaa
your update is missing here
update.. pls..
i hvn't watched this serial for over a yr.. iam shocked to hear the karthikeyan is killed.. he was the only sensible character in this dman serial.. avarum poyitarrraaa.. :cry:
Kalaiyarasi asked Uthai's help for Arasi case.
So Uthai appealed for Arasi's case & got bailed out.
But still Uthai thinks his father was murdered by Arasi.
Kalaiyarasi strongly beleifs ARasi is innocent.
GJ got 1 company from Visvanath
shuffled all the staffs
appointed new PA - and "vazhiyiraan"
Visvanath some or other hooked Uthai to manage his office lawyer.
everything is GJ cunning plan.
Visvanath also appointed a lady sec to Uthai (?)...
அரசிக்கும் நல்லவனாக, விஸ்வநாதனுக்கும் நல்லவனாக 'பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டிவரும்' விலாங்கு மீன் ஜி.ஜே.வுக்கு வருகிறது ஆப்பு.
ஜி.ஜே.யினால் அடிபட்ட புலி நல்லதம்பி, விஸ்வநாதனுக்காக ஜி.ஜே.யை மன்னித்து நட்பு பாராட்டுவது போல் நடித்தாலும், அவனுக்குள் ஜி.ஜே.யின் மேலுள்ள வெறுப்பு, நெருப்பாக இன்னும் தகித்துக் கொண்டுதானிருக்கிறது. ஒவ்வொருமுறை விஸ்வநாத் ஜி;ஜே.வுக்கு சலுகைகளை அள்ளி அள்ளி கொடுக்கும்போது குமுறிக்கொண்டு இருந்த நல்லதம்பிக்கு, இப்போது ஜி.ஜே.யை உயிர் போகாமல் அதே சமயம் தட்டி வைக்கும் அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. தன் மனைவியின் அப்பா என்ற உரிமையில் ஓவராக விஸ்வநாத்தை ஆட்டிவைக்க நினைத்த ஜி.ஜே. பாடு இனி திண்டாட்டம் தான். தன் பெயரைச்சொல்லித்தான் ஜி.ஜே. இத்தனை சலுகைகளையும் விஸ்வநாத்திடம் இருந்து அடைந்து வருகிறான் என்பது 'எல்லாம் வல்ல' செல்விக்கு இன்னும் தெரியாதது ஆச்சரியம்தான். தோற்றத்தில் தன் தங்கையைப்போல் தோற்றமளிக்கும் டாக்டர் சரோஜினியிடம் 'அம்மா பாசப்பாட்டு' பாடவே செல்விக்கு நேரம் சரியாக இருக்கிறது. அந்த டாக்டரம்மாவும் ஆஸ்பத்திரிக்கு போனோமா, நோயாளிகளைப் பார்த்தோமா, ஆபரேஷன்களை செய்தோமா என்றில்லாமல் யாரோ ஒருத்திக்கு தன் கணவன் பெற்ற பெண் மேல் பாசத்தைப்பொழிந்துகொண்டு இருக்கிறாள்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு..?.
நல்லதம்பி எப்போது ஜி.ஜே.வுக்கு எதிராக தன் சித்து விளையாட்டை துவங்கப்போகிறான் என்பதை அறிய ஆவலாக இருக்கிறது. ஆம், கோலங்களில் எப்படி ஆதித்யா வரும் சீன்கள் உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் தருமோ அதுபோல், இனி அரசியில் நல்லதம்பி வரும் சீன்கள் நன்றாக இருக்கும் (என்று நம்புவோம். சமுத்ரகனி சொதப்பல் கனியாகாமல் இருந்தால்சரி).
vishvanathan udhayidam assisdent aaga irukum pennidam udhayin anaithu movement-aiyum watchseyya solgiran visu. she collected something and passed to him. udhai gave some question to arasi. question-kku answer panna koduthadhai vishu
vidam sollivittal udai assisdent.
Udai'a junior and G.J's P.A are sisters. And the doctor who gave the postmortem report is also working with them.
All three of them seem to be working together to hide the real murderer. They sent someone to kill the gun dealer in the jail.