Real good news. Welcome back Groucho.. :)Quote:
Originally Posted by NOV
I too have read this in DT, R-R.....very touching. :cry:Quote:
Originally Posted by raaja_rasigan
Printable View
Real good news. Welcome back Groucho.. :)Quote:
Originally Posted by NOV
I too have read this in DT, R-R.....very touching. :cry:Quote:
Originally Posted by raaja_rasigan
அடுத்த வாரம் சன் தொலைக்காட்சி திரைப்பட வரிசையில்
ஏப்ரல் 8 - செவ்வாய் - உயர்ந்த மனிதன்
ஏப்ரல் 11 - வெள்ளி - ஊட்டி வரை உறவு
அன்புடன்
தெய்வ மகன் - கண்ணன்
கண்ணன் - பரிதாபத்திற்கு உரிய அதே சமயம் நம் மனதில் ஒரு பிடிப்பு அந்த பாத்திரத்தின் மேல் ஏற்படுத்தக்கூடிய திரைக்கதை அமைப்பு. சிறுவனாக இருக்கும் போதும் ஆரம்பிக்கும் அந்த கோபமும் ஆவேசமும் கடைசி வரை குறையாது வெளிப்படும். தான் அனாதை இல்லை என்று தெரிந்ததும் பாபா (நாகையா) கொடுத்த டைரி-ஐ புரட்டி பார்க்கும் ஆவேசம், மருத்துவமனையில் டாக்டர்-ஐ மிரட்டும் கோபம், தன் தாய் தந்தையரை தெரிந்து கொள்ள எந்த காரியத்தையும் செய்ய தயாராக இருப்பது இவை அந்த கதாபாத்திரத்தை வலுவாக நிலை நிறுத்தும் களங்கள். அவற்றை நடிகர் திலகம் தன் பாணியில் மெருகேற்றியிருப்பார்.
படத்தின் தலைப்பிற்கேற்ப கதாநாயகன் கண்ணன்தான். முதல் இரண்டு காட்சிகளில் சாதாரணமாக வரும் அவர், அனாதை இல்லத்திலிருந்து வெளியேறி கடைத்தெருவில் திருடனிடம் சண்டை இடும் காட்சியிலிருந்து அந்த Body Language அப்படியே மாறும். டாக்டர் வீட்டிற்கு வரும் அவரை பார்த்ததும் அவர் யார் என்று தெரிந்து கொள்ளும் டாக்டர், அவரை தவிர்க்க முயற்சிக்க,கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்து ஒரு கட்டத்தில் டாக்டரின் கழுத்தை நெரிப்பார். [என் தாய் தந்தையார் யார்னு தெரிஞ்சுக்க நான் எதையும் செய்ய தயங்க மாட்டேன்]. அதற்கு முன் தான் அந்த காலை உதைத்து, முடிகற்றை முன்னால் வந்து விழ,ஆட்காட்டி விரலை சுட்டி " டாக்டர்" என்று கத்துவது.[ தியேட்டர் அலறும் என்பதை சொல்லவே வேண்டாம்].
பிறகு டாக்டர் வீட்டில் அடைக்கலம். அங்கே மாடியில் எப்போதும் சிதாரும் இசையுமாக இருப்பவர் ஒரு நாள் இரவு சொல்லாமல் கொள்ளாமல் தன் தாய் தந்தையரை பார்க்க வீட்டிற்கு போகிறார்.
முதலில் தாய். படுத்திருக்கும் தாயின் கால்களுக்கு பூக்களை அர்ச்சனை செய்து விட்டு கண்ணீர் துளியை காணிக்கையாய் சிந்தும்போது, தாயன்புக்கு ஏங்கும் ஒரு இளைஞனை கண் முன்னே நிறுத்துவார்.
அடுத்து தம்பி அறை. அதில் நுழைபவர் அங்கே மாட்டியிருக்கும் இளம் பெண்ணின் கவர்ச்சி படத்தை பார்த்து விட்டு ஒரு வெட்கம் கலந்த ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார் (இருட்டாக தெரியும் முகத்தில் அந்த இரண்டு கண்கள் மட்டும் வெளிச்சம் உமிழும்). அடுத்து தம்பியின் சுவரில் மாட்டியிருக்கும் புகைப்படத்தின் அழகை ரசிப்பார்,( மாசு மருவில்லாத கன்னத்தை தன் விரல்களால் தடவும் அழகு).
அடுத்து டேபிளின் மேல் இருக்கும் போட்டோ-வை எடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் அணிந்திருக்கும் முழுக்கை சட்டையின் வலது மணிக்கட்டு பாகத்தை வைத்து துடைக்கும் ஸ்டைல் இருக்கிறதே, சூப்பர். தீடீரென்று தம்பி வந்து விட தன்னை பார்த்து திருடன் என்று சத்தம் போட அவனை அணைத்துக்கொண்டு சிரிக்கும் அந்த சிரிப்பு, சத்தம் கேட்டு அனைவரும் வந்து விட தாய்,தந்தை மற்றும் தம்பியை ஒரு சேர பார்க்கும் அந்த நேரம், அந்த முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்.
அதை டாக்டரிடம் போய் பாட்டாக வெளிப்படுத்தும் விதம். பாடலின் நடுவே வேக வேகமாக படி ஏறிவிட்டு அதே வேகத்தில் இறங்குவார். ஆரவாரம் அலை மோதும் (இதையே 10 வருடம் கழித்து திரிசூலத்திலும் செய்திருப்பார்). ஒவ்வொருவரை பற்றியும் பாடலில் சொல்லும்போது அந்த முகத்தில் வந்து போகும் உணர்ச்சிகள். கை அசைப்புகள். "விதி எனு நதி ஒரு பக்கமாகவே ஓடுகிறது" எனும்போது அந்த இடது கை மட்டுமே சைகை காட்டும். "தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே" என்ற வரியின்போது காமிரா லோ ஆங்கிளிலிருந்து அவரை பார்க்க இரண்டு கைகளையுமே தலைக்கு மேல் தூக்கி உள்ளங்கைகள் தரையை பார்க்க ஒரு போஸ் கொடுப்பார். கேட்க வேண்டுமா கைதட்டலுக்கு.
அடுத்து தாயை கோவிலில் வைத்து பார்க்கும் காட்சி. தூணுக்கு பின்னால் மறைந்து நின்று பார்க்கும் அந்த கண்கள் அதில் தெரியும் அந்த உணர்ச்சிகள் [ " என் வயிறெல்லாம் என்னவோ செய்யுதே" என்று பண்டரிபாய் சொல்லும் வசனம் படம் பார்க்கும் எல்லோருக்குமே பொருந்தும்).
இதற்கு நடுவில் டாக்டரின் பெண் தன் இசையால் ஈர்க்கப்பட்டு மாடிக்கு வந்து பேச அதுவரை வாழ்க்கையில் அனுபவித்திராத ஒரு உணர்வு - ஒரு பெண்ணின் சிநேகம். அது மனதுக்குள் திறக்கும் ஜன்னல். தன் முகத்தை எங்கே பார்த்துவிடுவாளோ என்று மறைத்து கொண்டு, அவள் சென்றவுடன் ஓடி சென்று அவள் நின்ற அந்த பால்கனி கைப்பிடியை பிடித்து முழங்காலிட்டு அவள் சென்ற திசையையே பார்த்து சிரிப்பாரே, கிளாஸ்.
தந்தை கொடுத்த பிளாங் செக்கை டாக்டர் கொண்டு கொடுக்கும் காட்சியிலும் அந்த பாத்திரத்தின் சிறப்பு தன்மை வெளிப்படும். எனக்கு தெரியாம வெளியே போறே என்று சொல்லும் டாக்டரிடம் " இந்த கிளியை யாரும் பிடிக்கவும் முடியாது! புரிஞ்சிக்கவும் முடியாது" என்பார். அதற்கு டாக்டர் " பிடிக்க முடியாது-னு சொல்லு ஒத்துகிறேன். ஆனால் புரிஞ்சுக்க முடியாது-னு சொல்லாதே! உங்கப்பா உன்னை புரிஞ்சிக்கிட்டார்" என்கிறபோது " என்ன சொல்றீங்க டாக்டர்"-னு கேட்டு விட்டு உடனே அதற்கான பதிலையும் சொல்வார்." கோவிலிலே எங்கம்மாவை பார்த்தேன். எதையுமே கணக்கு போட்டு பார்க்கிற எங்கப்பவோட வியாபார புத்தி இதையும் முடிச்சு போட்டு கண்டு பிடிச்சிருக்கும்" என்பார்.
டாக்டர் " என்ன கண்ணா இன்னிக்கு நல்ல டிரஸ் போட்டிருக்கே"
கண்ணன் " உடல் தான் வெள்ளையா இல்லை. உடையாவது வெள்ளையாக இருக்கட்டுமே-னு தான்" .
அழகா இல்லாத ஆண்களை பெண்கள் விரும்புவார்களா என்று கேட்கும் கண்ணனிடம் டாக்டர் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒதேல்லோ நாடகத்தை பற்றி சொல்ல, அவர் கையை பற்றி கொண்டிருக்கும் கண்ணன் இரும்பு பிடியாய் இறுக்க, வலி தாங்காமல் கையை உருவிக்கொண்டு " ஆமாம், இதெல்லாம் நீ ஏன் கேட்கிறே?" என்று வினவ, கண்ணன் " மண்ணை தோண்டி தங்கம் இருக்கா வைரம் இருக்கா-னு தேடற மாதிரி இதயங்களை தோண்டி அன்பு இருக்கா பாசம் இருக்கா-னு பார்க்க தோணுது டாக்டர்" என்று சொல்லிவிட்டு சிரிக்கும் அந்த சிரிப்பு!
தந்தையை போலவே வேறு ஒரு குணாதிசியமும் காட்டுவார். தன்னை சந்திக்க வரும் சங்கரிடம் "பையன்-னு தெரிஞ்சுமா சுட்டிங்க" ? என டாக்டர் கேட்க இல்லை என்பதை ஒரு முக சுளிவிலே காட்டுவார் தந்தை. அதே முகபாவத்தை தந்தையை பார்க்க வரும் கண்ணனும் வெளிப்படுத்துவார். முதல் குழந்தை ஆண் குழந்தைனா பெத்தவங்க ரொம்ப அன்பு செலுத்துவாங்களாமே என்று மகன் கேட்க, உண்மைதான் என்று தந்தை சொல்ல முன்பு தந்தை காண்பித்த அதே முகபாவத்தை காண்பித்து "இல்லை பொய்" என்பார்.
ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த ஸ்டைல், அந்த முக பாவம் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. சுருக்கமாக சொன்னால் ஒரு அசாதாரண நடிப்பு, நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.
அடுத்து விஜய்
அன்புடன்
Dear Murali Sir, " Ullam kavarndha Kannan".. :)
When Kannan meets the doctor for the first time and comes to know about his parents and the reason why he was rejected, the following dialogues & performance will be simply superb.
" Doctor, enna pethavanga enna vendamnu sonnadukku vera eadho kaaranam irrukkumnu ninaichen, aana, Poohh.., Doctor, idhudhaana ???..."
Superb scene....pls continue sir.
டியர் முரளி,
தெய்வமகன் கண்ணனைப்பற்றிய ஆய்வு அருமை. மூன்றுமே ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்றாலும், தய் தந்தை இருந்தும் அனாதைபோல பாசத்துக்கு ஏங்கும் கண்ணன் பாத்திரம் நம்மை கொஞ்சம் அதிகமாகவே கலங்க வைக்கும்.
கண்ணனைப்பற்றி நீங்கள் எழுதும்போது, தந்தையிடம் செக்கை திருப்பிக்கொடுக்கச் செல்லுமிடத்தில் பேசும் ஆழமான வசனங்களைக் குறிப்பிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். குறிப்பாக அந்த இடத்தில் என்னைக்கவர்ந்த வசனம்....
"அப்பா, என்னுடைய இந்த அவலட்சணத்துக்கு காரணமே நீங்கதான்னு தெரிஞ்சும் ஏம்ப்பா என்னை வெறுத்தீங்க?. உங்க அப்பாவும் உங்களை அப்படித்தான் வெறுத்தாரா?... இல்லை.. சத்தியமா இல்லை. ஏன்னா, உங்க அப்பா ஏழை. அவருக்கு இதயம் இருந்தது, அதுல இரக்கம் இருந்தது. ஆனா எங்க அப்பா பணக்காரர். அவர்கிட்டே இரும்புபெட்டி மட்டும்தான் இருக்கு".
பலே ஆருர்தாஸ்...
Dear Mr.Murali
I have not seen Deiva Magan fully - only in bits and pieces. Am enjoying your posts nevertheless.
Thanks Prabhu.
Mohan, கண்ணன் கதாபாத்திரத்தின் சிறப்பை சொல்ல வேண்டுமென்றால் அவர் வரும் எல்லா காட்சிகளையும் வசனங்களையும் எழுத வேண்டும். அது கடினம். அதனால் தான் சில காட்சிகளை சுருக்க வேண்டியதாகிவிட்டது.
சாரதா,
சரியான கேள்வி. நீங்கள் கவனித்தால் சங்கர் பற்றி எழுதும்போதும் அந்த காட்சியை நான் குறிப்பிடவில்லை. அதை தவிர்த்துதான் எழுதினேன். விஜய் முடியட்டும்.
அன்புடன்
I dont want to miss this movie, one of my favorite. Somehow the movie name has the similarity to my physique :wink:Quote:
Originally Posted by Murali Srinivas
Btw Good going Murali sir...! :)
Y'day in Vijay TV, "Rasigan Express" programme, some of the fans of various actors were invited to the studio.
One Ms. Girija, an ardent and die-hard fan of NT was introduced. She is above 50 and has never been married. She watches only NT films and has never seen any other films, other TV programs etc. She has got a huge collection of NT posters, clippings, VCD's, DVD's and other info's related to NT. She used to vist NT regularly on his birthday and never once did she reveal to him about her collections and craze. Her daily routine work is to keep watching NT films!!!
Amazing lady.
I was shell shocked while seeing this :shock: :omg: I also spoke with Murli sir who was in chennai hubbers' meet and touched on this. As usual, Murli sir knew about Ms.Girija already and he started giving more information also. :D (eppadi sir ithellam :) )Quote:
Originally Posted by rangan_08
Ippadi ellam fans irukaangala :o Ms.Girija also says that she doesn't watch serials and any other films. :oops:
Die-Hard fan ! :)