Thanks Raghavendra! I have not spent much time in NT's website but I will pretty soon. :-)Quote:
Originally Posted by RAGHAVENDRA
Printable View
Thanks Raghavendra! I have not spent much time in NT's website but I will pretty soon. :-)Quote:
Originally Posted by RAGHAVENDRA
Murali sir,
A very nostalgic & excellent trip down memory lane !
Thoroughly enjoying the series though am not able to spend more time in the hub.
Amazing opening show info's about Thiruvilayadal, Ooty varai uravu, iru malargal, raja.....(thalayil paper vizhuvadhu, poo mari pozhivadhu pola irukkum !!!) - adhu oru thani sugam.
Madurai maanagaril mattume indha thiruvizha kolam matrum galatta endral, moththa tamizhnadum eppadi irundhirukkum ???
நடிகர் திலகத்தின் காவிய பயணத்தில் ஒன்றாக பயணித்து காலத்தால் மறக்க முடியாத கலை வடிவங்களில் நடிகர் திலகத்தோடு இணைந்து மிளிர்ந்த மாபெரும் நடிகர் நாகேஷ் மறைந்தார் .
:cry: நடிகர் திலகம் ரசிகர்கள் அவர் நினைவைப் போற்றுவோம். :(
கேள்வி : சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே?
நாகேஷ்: அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான்.
ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது..."ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.
மறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் "ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு foot கூட - ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே வாஇகக்ணு; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.
அதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ; அவர் சீன்னு வரும்போது அது யாராராயிருந்தாலும் சரி, அவர் மிதிச்சுத் தள்ளுவாரு. அதே சமயத்தில் அவரை விட நல்லா யாராவது பண்ணினாங்கன்னா அதை மதிக்கத் தெரிஞ்ச ஒரே ஆள், என்னைப் பொறுத்தவரைக்கும் சிவாஜி கணேசன் அவர்கள்தான்.
http://radiospathy.blogspot.com/2009...g-post_31.html
:bow:
Rakesh,
Where is the need for asking my permission? All sorts of discussions are the highlight of this thread and as many would point out that this is the thread everyone likes.
In fact I love to read such comparisons. Somewhere down the line in the late 70s, I lost interest in Hollywood flicks[though for no specific reason] and therefore such write ups interest me.
Yes, you are right. the intro scene in Raja was something special. Even after 9 years, in 1981 when it was re- released, we used to wait [I was watching the movie for the 10th time] with bated breath for that moment and when the theatre explodes my day was made.
Thanks Mohan. As I told tac, the experience of having watched the opening shows are still vivid in memory. My satisfying moment is when I am told that everybody enjoys the writing.
ஜோ, நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. நடிகர் திலகத்தின் படங்களில் நாகேஷ் அடைந்த முக்கியத்துவம் அதிகமானது. தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதியுள்ள நாகேஷ் அதில் திருவிளையாடல் பற்றி சொல்லும் போது நீங்கள் எழுதியுள்ள விஷயங்களை தவிர வேறொன்றும் சொல்கிறார். நடிகர் திலகம் ஏபிஎன்னிடம் "இந்த பய இருக்கானே, அவன் நல்ல பண்ணுவான். ஆனால் டப்பிங்க்லே சரியா பேச மாட்டான். இந்த ஸினுக்கு அவன் டப்பிங் பேசும் போது நீ கூடவே இரு" என்றாராம். நடிகர் திலகம் மறைந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு ராஜ் டிவி நடத்திய இமயத்திற்கு அஞ்சலி நிகழ்ச்சியில் நாகேஷ் சொன்னது "ஆயிரம் படத்திலே நடிச்சிருக்கேன். ஆனால் இந்த ஒரு படத்தை தான் எங்கே போனாலும் சொல்றாங்க". அது போலவே சவடால் வைத்தி. மறக்கவே முடியாது. இந்த படங்களின் மூலமாக அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
அன்புடன்
காலம் உள்ளவரை கலைஞனுக்கு அழிவி்ல்லை. அப்படி காலத்தை வென்ற கலைஞனாக நடிகர் திலகத்துடன் இணைந்து விட்ட நாகேஷின் உடலுக்கு மட்டும் தான் இங்கு மரணம். உள்ளமும் உயிரும் தமிழ் மக்களின் நெஞ்சில் என்றும் சிரஞ்சீவியாய் நிலைத்திருக்கும்.
நடிகர் திலகத்துடன் நாகேஷ் இணைந்த திரைப் படங்கள்
1. நான் வணங்கும் தெய்வம்
2. குங்குமம்
3. ரத்த திலகம்
4. அன்னை இல்லம்
5. பச்சை விளக்கு
6. புதிய பறவை
7. முரடன் முத்து
8. நவராத்திரி
9. பழநி
10.அன்புக்கரங்கள்
11.சாந்தி
12.திருவிளையாடல்
13.நீலவானம்
14.மோட்டார் சுந்தரம் பிள்ளை
15.சரஸ்வதி சபதம்
16.செல்வம்
17.கந்தன் கருணை
18.பேசும் தெய்வம்
19.தங்கை
20.பாலாடை
21.திருவருட்செல்வர்
22.இரு மலர்கள்
23.ஊட்டி வரை உறவு
24.திருமால் பெருமை
25.கலாட்டா கல்யாணம்
26.என் தம்பி
27.தில்லானா மோகனாம்பாள்
28.எங்க ஊர் ராஜா
29.தங்க சுரங்கம்
30.காவல் தெய்வம்
31.அஞ்சல் பெட்டி 520
32.தெய்வ மகன்
33.திருடன்
34.சிவந்த மண்
35.வியட்நாம் வீடு
36.எங்கிருந்தோ வந்தாள்
37.சொர்க்கம்
38.இரு துருவம்
39.தங்கைக்காக
40.குலமா குணமா
41.பிராப்தம்
42.சுமதி என் சுந்தரி
43.சவாலே சமாளி
44.தேனும் பாலும்
45.மூன்று தெய்வங்கள்
46.பாபு
47.தர்மம் எங்கே
48.வசந்த மாளிகை
49.கௌரவம்
50.எங்கள் தங்க ராஜா
51.மன்னவன் வந்தானடி
52.டாக்டர் சிவா.
53.உனக்காக நான்
54.சத்யம்
55.உத்தமன்
56.சித்ரா பௌர்ணமி
57.இளைய தலைமுறை
58.நாம் பிறந்த மண்
59.தியாகம்
60.அமர காவியம்
61.கல்தூண்
62.மாடி வீட்டு ஏழை
63.படிக்காதவன்
64.நட்சத்திரம்
Good List Raghavendhar sir...
we have Nagesh in Dheepam also (driver Raheem Bhai).
The list clearly shows, when 'thEgAi' Srinivasan started to join with NT again from Anna oru kOyil, Nagesh was slowly sidened. From that onwards 'thEngAi' acted in almost all NT films, particularly in main rolls.
அந்த நாள் ஞாபகம்
அதன் பிறகு ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. ஒவ்வொரு ஸ்டைல் போஸிற்கும் ஆரவாரம். ஹோட்டல் ரூமில் டென்னிஸ் ராக்கெட்-ஐ கொடுக்க செல்லும் போது வரும் கிண்டல், நீ வர வேண்டும் பாடலில் வரும் விளையாட்டுகள், ஏர்போர்ட்-ல் போலீஸ் அழைத்து செல்ல அங்கே வைத்து தான் சிவாஜி ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்பது தெரிய வரும் அழகான ட்விஸ்ட் இவை எல்லாமே ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. மேஜர் கொடுக்கும் சிகரெட் லைட்டர் கேமரா, மைக்ரோபோன் போன்றவை அன்று ஒரு புதுமையாக இருந்தது.
விமானத்தில் கொச்சி செல்லும் போது வருவார் இரண்டாவது சந்திரபாபு. அவர் பேசும் ஒரு வசனத்திற்கு மட்டும் பலத்த எதிர்ப்பு கூக்குரல்கள் எழுந்தன [நீரும் நெருப்பும்]. கொச்சி ஏர்போர்டில் போலீஸ், டைரியை சோதனையிட அதில் இருக்கும் நீளமான சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே நடிகர் திலகம் போலீசிற்கு ஆஃபர் செய்யும் இடம் செம கிளாப்ஸ்.
நான் முன்பே சொன்னது போல படம் விறு விறு. ஆகவே சிவாஜியை கட்டி வைத்து பாலாஜி கேள்வி கேட்கும் இடம், மயிலாப்பூரில் சென்று செக் பண்ணுவது என்று படம் படு ஸ்பீட். இந்த நேரத்தில் பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். அதுவரை தமிழ் சினிமாவில் வராத முறையில் கார்கள் செல்லும் போது இசை+ பின்னணி குரல் ஒலித்த விதம் ரசிகர்ளை வெகுவாகவே கவர்ந்தது. மெல்லிசை மன்னர் பிரமாதப்படுத்தியிருந்தார்
ஆனால் தியேட்டரே எழுந்து ஆடியது ரந்தாவா சண்டைக்காட்சியின் போதுதான். அதிலும் நடிகர் திலகம் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சிகரெட்டை கடைசி பப் எடுத்துவிட்டு கீழே போட்டு நசுக்கி விட்டு "நான் எப்பவும் கடன் வச்சுகிறதிலே" என்று ஆரம்பிக்கும் போது சேரில் எழுந்து நிற்க ஆரம்பித்த மக்கள் சண்டை முடிந்து தான் கீழே இறங்கினார்கள்.
அதன் பிறகு சிவாஜி ரங்கராவ் சந்திப்பு பிறகு பத்மா கண்ணாவின் கண்களை கொண்டு வா டான்ஸ் எல்லாம் கொஞ்சம் அமைதி. மறுபடியும் கவர்ச்சி வில்லன் கண்ணனோடு சண்டை காட்சி வர சூடு பிடித்தது. அதிலும் கண்ணன் மாற்று முகாமை சேர்ந்தவர் என்பதால் சூடு + கோஷங்கள் அதிகமாகவே ஒலித்தது. அது முடிந்து கல்யாண பொண்ணு பாடல். மறுபடியும் ஸ்டாண்ட் அப் ஆன் த பெஞ்ச். பெரியவர்களுக்கே மறைக்கும். எனக்கு சுத்தம். நான் என் கஸினிடம் "என்ன இது ஆ ஊ -ன்னா சேர் மேல ஏறிறாங்க" என்று கேட்க அவன் ரொம்ப சிம்பிளா "ஓபனிங் ஷோ-ன்னா அப்படிதான் இருக்கும்" என்றான். பாட்டோடு இன்டெர்வல். வெளியில் வருகிறோம். அடுத்த ஷோவிற்கு அப்போதே வரிசை நிற்கிறது. படம் ஓஹோ என்று இங்கிருந்து சொல்ல வெளியே சர வெடிகள் தெருவையே ஒரு வழி ஆக்கியது.
இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்தது. நடிகர் திலகத்தை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று ஜெஜெ சொல்வதற்கு ஏற்ப பாலாஜி செயல்படுவார். பிறகு அந்த கோவில் நகைகளை கொள்ளை அடிக்கும் திட்டத்தை பாலாஜி போடுவார். சிறிது நேரத்திற்கு சிவாஜி இல்லாமலே காட்சிகள் ஓடும். கங்கையிலே ஒடமில்லையோ பாடல் காட்சியில் எல்லாம் தியேட்டர் அமைதியாகவே இருந்தது. அந்த காட்சியின் முடிவில் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிகர் திலகம் தோன்றிய போது மறுபடியும் தியேட்டரில் பயங்கர ஆரவாரம்.
இதன் பிறகு தான் கதையின் முக்கிய திருப்பமாக மனோகர் வந்து பாலாஜியை சந்திக்கும் காட்சி. உண்மைகளை ஒவ்வொன்றாக மனோகர் உடைத்து கடைசியாக "பாபு, இந்திய மாப்-லே தெற்கு கூர்மையா இருக்கு. தெற்கே இருக்கும் போலிஸாருக்கும் அறிவு கூர்மை" என்று சொல்லும் காட்சியில் பலத்த கைதட்டல். சிவாஜி - பாலாஜி சண்டை, பிறகு பாலாஜியை மேஜரிடம் கூட்டிக் கொண்டு போய் நம்ம சந்தர் என்று அறிமுகப்படுத்துவது, ரங்கராவ் போட்டோவை பார்த்து விட்டு ராஜா இவன்கிட்டே தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒண்ணு இருக்கு" என்று மேஜர் சொன்னவுடன் நடிகர் திலகம் போட்டோவை குத்தும் காட்சிக்கும் ஒரே அப்ளாஸ்.
இதற்கு பிறகு படம் பயங்கர ஸ்பீட். இரண்டில் ஒன்று பாட்டில் ஒவ்வொரு கதவு, ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் நடிகர் திலகம் உள்ளே நுழைய பார்க்க அது ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. அடுத்து கிளைமாக்ஸ். தமிழ் பட வரலாற்றிலே ராஜாவில் வந்தது போல அவ்வளவு நீண்ட கிளைமாக்ஸ் (கிட்டத்தட்ட 20- 25 நிமிடங்கள்) இடம் பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் (இன்று பார்த்தால் கூட) இருக்கும். பணடரிபாயை மனோகர் சாட்டையால் அடிக்க நடிகர் திலகம் கர்சிஃபை பல்லில் கடித்தபடி தொடர்ந்து சிரிப்பார். கண்களில் கண்ணீர் கட்டி நிற்கும். அதை அடக்கி கொண்டு அவர் சிரிக்க சிரிக்க இங்கே தியேட்டரில் ரசிகர்களின் உணர்ச்சி அணை உடைத்து பாய்ந்தது.
படம் முடிய ரசிகர்களுக்கு பயங்கர சந்தோஷம். ஒரே சுரத்தில் அனைவரும் படம் பிடித்திருப்பதாக சொல்ல, வெளியே வருகிறோம். பின் பக்க கேட் வழியாக வர வேண்டும். அந்த இடத்தில் சர வெடிகளை தொடர்ந்து கொளுத்த, நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷங்கள், கைதட்டல், டான்ஸ், ஆரவாரம் என்று கூட்டம் மேலமாசி வீதி முழுக்க ஆடிப்பாடிக்கொண்டே போனது. ஒரு பகுதியினர் முன்பக்க கேட் பக்கம் வந்து அதே போல கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த மூன்று மணி நேர நினைவுகளை அசை போட்டுக்கொண்டே நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
என்னைப் பொருத்த வரை நான் முதலில் சொன்னது போல என்றென்றும் மனதில் சேகரித்து வைத்திருக்கும் சில சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று இந்த அனுபவம். நண்பர் tacinema மூலமாக அதை மீண்டும் இங்கே நினைவு கூற ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது போல மனதில் உள்ள வேறு சில அனுபவங்களை சந்தர்ப்பம் வரும் போது பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
முரளி சார்,
ராஜா திரைப்படத்தை ஓபனிங் ஷோ பார்த்த ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்.
இதேபோல் நீங்கள் பார்த்த நடிகர்திலகத்தின் படங்களிலேயே (வெளியீட்டின் போதாகட்டும்,அல்லது மறுவெளியீட்டின்போதாகட்டும்)தியேட்டரில் அதிக அளவில் அலப்பறை நடந்தது எந்த படத்துக்கு என்பதையும் அந்த அனுபவத்தையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்